Sunday, September 18, 2011

ஒரு ரசிகனின் மனதில் ராகுல் ராவிட்..

முஸ்கி-பதிவை வாசிக்காமல் காப்பி அடிக்கும் கனவான்களே இது ஒரு கிரிக்கெட் ரசிகனான எனது அனுபவம் மட்டுமே எனவே இதை காப்பி செய்து பல்ப்பு ஆகிவிடாதீங்க.....


ராகுல் ராவிட் இந்தப்பெயர் எனக்கு 2000ம் ஆண்டுகளின் கடைசியில் அறிமுகமானது.ஆனால் இவரது பெயர் தெரியமுதலே நான் இவரது ஆட்டத்தை பார்த்து இருக்கின்றேன்..ஆம் 1996 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தேன் .



7வயது சிறுவனான என் மனதில்..அந்தப்போட்டியில் அறிமுகவீரராக களம் இறங்கிய ஒருவர்..சதம் விளாசினார்..இன்னும் ஒரு அறிமுகவீரராக விளையாடிய ஒருவர்..95 ஒட்டங்களைப்பெற்று..ஆட்டம் இழந்தார்...ரொம்ப கவலையாக இருந்தது..அட 100ரன் அடிக்காமல் அவுட்டாகிவிட்டாரே என்று....அப்போது எனக்குதெரியவில்லை இந்த இரண்டு பேரும்தான் பிற்காலத்தில் இந்திய அணியை தூக்கி நிறுத்தப்போகின்றார்கள் என்று...நான் மட்டும் இல்லை பல ரசிகர்களும் நினைத்து இருக்க மாட்டார்கள்.அவர்களின் பெயர் என்ன வென்று தெரியாமலே அவர்களின் ரசிகன் ஆகிவிட்டேன்..ஆம் அதில் சதம் அடித்தவர்..பிற்காலத்தில் மிகச்சிறந்த இந்தியஅணித்தலைவராக விளங்கிய தாதா கங்குலி,
95 ஒட்டங்களைப்பெற்று ஆட்டம் இழந்தவர்..இந்திய சுவர் ராகுல் ராவிட்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவெடுத்த பதிவு


ராகுல் ராவிட் டெஸ்ட் போட்டிகளுக்குத்தான் லாயக்கு,ஒருநாள் போட்டிகளுக்கு சரிவரமாட்டார் என்று அவரை ஒதுக்கிவைத்து இருந்தார்கள்.ஆனால் 1999 ல் உலகக்கிண்ணப்போட்டிகளில் ராகுல் ராவிட் சூராவளியாய் சுழன்றார்...அந்த தொடரில்421 ஒட்ங்களைக்குவித்து அந்த உலகக்கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்தவீரர் ராவிட்தான்.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவரும் கங்குலியும் இணைந்து எடுத்த 318 ஓட்டங்கள் இன்றுவரை ஒரு நாள் போட்டியில் ஒரு ஜோடி இணையாக எடுத்தஇரண்டாவது இணைப்பட்ட சாதனையாகும்...முதலாவது இணைப்பட்ட சாதனையும் ராகுல் ராவிட் வசம்தான் ஆமாம்..அதேவருடம்.நியூஸீலாந்து அணிக்கு எதிராக அவரும் சச்சினும் இணைந்து  இணையாக 331 ஓட்டங்கள் எடுத்தார்கள்.. இதில் ராகுல்ராவிட் 153 ஒட்டங்களை விளாசினார் இதான் ஒரு நாள் போட்டிகளில் இவரது அதிக பட்ச ஓட்டம் ஆகும்..மேலும் இந்த இணைப்பாட்ட சாதனை..இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை..ஒரு நாள் போட்டிகளில் லாயக்கு இல்லை என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவர்...ஒருநாள் போட்டிகளில் முதல் இரண்டு அதிகபட்ச இணைப்பாட்ட சாதனைக்கும் சொந்தக்காரர்..அதைவிட ஒரு நாள் போட்டிகளில் பத்தாயிரம் ஒட்டங்களைக்கடந்த வீரர்களில் ராகுல் ராவிட்டும் ஒருவர்...இந்திய வீரர்களில் பத்தாயிரம் ஒட்டங்களைக்கடந்த மூன்றாவதுவீரர்..சச்சின்,கங்குலி..ஆகியோர் பத்தாயிரம் ஓட்டங்களைக்கடந்துள்ளனர்..எனபது குறிப்பிடத்தக்கது..



இதுவரை ராகுல் ராவிட் 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 12 சதம், 83 அரைசதங்களுடன் 10,889 ரன்கள் குவித்துள்ளார்..தனது கடைசி ஒரு நாள் போட்டியிலும் 69 ஒட்டங்களைப்பெற்றார்..ராகுல் ராவிட் இந்திய அணியின் மிகசிறந்த கேப்டனும் கூட...கங்குலியின் கேப்டன் பதவிக்கு கிரேக் சப்பல் என்னும் ஒரு பயிற்சியாளர் ஆப்புவைத்தபின்..உபதலைவராக இருந்த ராகுல் ராவிட் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்..சிறந்த கேப்டனாகவும்..திகழ்ந்தார்..பிறகு 2007 உலகக்கிண்ணத்தில் ஏற்பட்ட படுதோல்வியைத்தொடர்ந்து..இந்திய அணி மோசமாக சில தொடர்களில் விளையாடியதால் ராவிட் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவெடுத்த பதிவு


இந்திய அணியின் மும்மூர்த்திகள் ராவிட்,சச்சின்,கங்குலி


கங்குலி கேப்டனாக இருந்தபோது உபதலைவராக இருந்த ராகுல் ராவிட் கங்குலி விளையாடாத போட்டிகளில் ராவிட்தான் பதில் கேப்டனாக செயல்ப்படுவார்..அப்படித்தான்..2004 பாகிஸ்தானுக்கு சென்ற இந்திய அணி..பாகிஸ்தானில் வைத்து தொடரைவென்று சாதனைப்படைத்தது.பாகிஸ்தானில் வைத்து தொடரை வென்ற முதலாவது இந்திய அணித்தலைவராக கங்குலி சாதனைபடைத்தார்..இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கங்குலி விளையாடவில்லை எனவே ராகுல் ராவிட் கேப்டனாக செயல்பட்டார்...இந்தப்போட்டியில்..சச்சின் 194 ஓட்டங்களைப்பெற்று இருந்த போது ராவிட் போட்டியை டிக்கிளேயர் செய்வதாக அறிவித்தார்...இதனால் சச்சின் இரட்டைச்சதம் அடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது...இது பெறும் சர்ச்சையை கிளப்பியது..ஆனால் கங்குலி சொல்லித்தான் ராவிட் டிக்கிளேயர் செய்ததாகவும் கதை பரவியது...ராகுல் ராவிட்டின்...தலமைத்துவத்தில்...கரும்புள்ளியான ஒரு சம்பவம் இதுமட்டும்தான் என்று நினைக்கின்றேன்..மற்றும் படி மிகவும்...அமைதியான அணித்தலைவர் ராகுல் ராவிட்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவெடுத்த பதிவு


ராகுல் ராவிட்டின் டெஸ்ட் சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம் அதை பிறகு வேறு பதிவுகளில் பார்ப்போம்...ஒன்றை மட்டும் சொல்கின்றேன். டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் .(10 நாடுகள்)
சதம் அடித்தமுதல் வீரர் ராவிட்தான்.

இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவெடுத்த பதிவு
எனக்கு கிரிக்கெட் மீது தீராத காதல் வர...முக்கியமான காரணம் கங்குலி...அவரது ஒரு வெறித்தனமான ரசிகன் நான்..இது ஏன் என்று எனக்கே தெரியவில்லை...கிரிக்கெட்டையும் தாண்டி கங்குலியை எனக்கு பலவிடயங்களில் பிடிக்கும்..யாருக்கும் தலைவணங்காத அவரது தலைமைப்பண்பு...இப்படி பல விடயங்கள்...கங்குலிக்கு பிறகு எனக்கு பிடித்தவீரர் என்றால்...நிச்சயம் ராகுல் ராவிட்தான்...

அத்துடன் ராவிட் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்..நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது..வலது கைதுடுப்பாட்டவீரரான நான்...கங்குலியைப்பாத்து இடதுகைதுடுப்பாட்டவீர்ராக மாறினேன்..அதேபோல் ராவிட்டைப்பார்த்துதான் விக்கெட் கீப்பராக விளையாடத்தொடங்கினேன்..இப்பவரைக்கும் நான் கிரிக்கெட் விளையாடுகின்ற போது எங்கள் டீமில் நான் விக்கெட் கீப்பர்தான்....


இந்திய அணியின் ரசிகனாக நான் மாறியதுக்கு காரணம்..மாறியது.....என்று சொல்வதைவிட.....கங்குலியும்..ராவிட்டும் என்னை இந்திய அணியின் ரசிகராக மாற்றினார்கள் என்பது பொருத்தமாக இருக்கும்......இந்திய அணியில் கங்குலி,ராவிட்,சேவாக்,யுவராஜ் சிங்........கைப்...லக்ஸ்மன்,பார்த்தீவ் பட்டேல்..போன்ற வீரர்களை மிகவும் பிடிக்கும் ஆனால் சச்சினை என்னவோ எனக்கு பெரிதாக பிடிப்பது இல்லை...




எனக்கு பிடித்த வீரர்கள்..இந்திய அணியில் விளையாடிய போது நான் ரசித்த இந்திய அணியில் அவர்கள் ஓவ்வொறுவராக ஓய்வு பெறும் போது..இந்திய அணிவிளையாடும் போட்டிகளை பார்க்கவே பிடிப்பது இல்லை.கங்குலி ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் மீதே எனக்கு வெறுப்பு வந்தது.இதுவரை அவரது கடைசிபோட்டியின் வீடியோவை நான் பார்க்கவில்லை...இனி பார்க்கப்போவதும் இல்லை...அப்படித்தான் ராகுல் ராவிட்டின்..கடைசி ஒருநாள் போட்டியான இங்கிலாந்துக்கு எதிரான 5 வது போட்டியைநான் பார்க்கவில்லை இனிபார்க்கப்போவதும் இல்லை
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவெடுத்த பதிவு

மரணம் என்பது இயற்கை அதையாராலும் தவிர்க்கமுடியாது..அப்படி இருந்தும் எமது..நண்பர்களோ இல்லை உறவினர்களோ...இல்லை மனதுக்கு பிடித்தவர்களோ...இறந்தால் மனது வலிக்கின்றது அல்லவா


அதே போல் கிரிக்கெட்டில் வீரர்கள் ஒய்வு பெறுவது என்பது தவிர்க்கமுடியாது...ஆனால்..சிலவீரர்களின் ஓய்வு மனதை மிகவும் பாதிக்கும்,,அப்படித்தான் ராகுல் ராவிட் அண்மைக்காலமாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்தாலும்..மீண்டும் இங்கிலாந்து தொடருக்கு தேர்வுசெய்யப்பட்டு..ஓய்வு பெற்றதும் மிகவும் கவலையாக இருக்கின்றது...15 ஆண்டுகள் இந்திய அணியை தன் தோள்களில் தாங்கிய இந்திய கிரிக்கெட்டின் சுவர்...ஒருநாள் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டார்.....38 வயதான ராகுல் ராவிட் டெஸ்ட் போட்டிகளிலும் இனி..நீண்டகாலம் விளையாடமுடியாது.........சில ஆண்டுகளில்...டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார்..எங்கள் தலமுறை கிரிக்கெட் ரசிககளுக்கு நிச்சயம் ராகுல் ராவிட் போல் ஒரு வீரர் இனிக்கிடைக்கமாட்டார்.........

இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவெடுத்த பதிவு
ராகுல் ராவிட்டுக்கு இணையான ஒரு வீரர் இந்திய அணிக்கு இனி மறு ஜென்மத்தில் ராவிட்மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு...



எங்களுக்கு எல்லாம் ஒரு பெருமை ராகுல் ராவிட்,சச்சின்,கங்குலி,லாரா,பொண்டிங்,ஸ்ரிவோக்,முரளி,ஷேன்வோன்,
போன்ற தலைசிறந்த சாதனையாளர்கள் விளையாடிய காலத்தில் வாழ்ந்து இருக்கின்றோம் என்பது..கிரிக்கெட் ரசிகர்களாக மாபெறும் கெளரவம் ஆகும்.

இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவெடுத்த பதிவு
ராவிட் போன்ற வீரர்களின் ஒய்வு எங்கள் தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் வலியான விடயம்..உங்களை.....ரசிகர்களாக மிகவும் மிஸ்பன்னுகின்றோம்.



அன்புடன்
ஒரு கிரிக்கெட் ரசிகன்


பாஸ் ரொம்ப பீலிங்கா...எழுதி இருகார் நீங்க கருத்துரை,ஓட்டு மறக்காதீங்க அண்ணாக்களே.

Post Comment

43 comments:

Mathuran said...

என்னப்பா தொடர்ந்து கிரிக்கட் பற்றி எழுதினா நாங்க என்ன செய்யிறது

Mathuran said...

திரட்டி ஒன்றிலயும் இணைக்கேல்லயா

செங்கோவி said...

கிரிக்கெட்டா?....ரைட்டு.

கோகுல் said...

இது போன்ற ஜாம்பவான்கள் வாழும் காலத்தில் நாமும் கிரிக்கட்டை ரசிப்பது உண்மையில் கெளரவம்தான்!

டிராவிடை போல கிரிக்கெட்டுக்கு இன்னொருவர் கிடைப்பது கடினமே!

kobiraj said...

உண்மைதான் இவர்கள் விளையாடிய காலத்தில் வாழ்ந்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
என்னப்பா தொடர்ந்து கிரிக்கட் பற்றி எழுதினா நாங்க என்ன செய்யிறது////

போனபதிவு கிரிக்கெட் இல்லையே பாஸ்..விடுங்க அடுத்து ஒரு செம கலாட்டா காமடிப்பதிவு வருது.

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
திரட்டி ஒன்றிலயும் இணைக்கேல்லயா///

இனைச்சாச்சு தமிழ் மணம்தான் பிகு பன்னுது..பார்கின்றேன்

K.s.s.Rajh said...

@ செங்கோவி கூறியது...
கிரிக்கெட்டா?....ரைட்டு///

விடுங்க அடுத்தது செம கலாட்டா பதிவு ஒன்று வருது.....

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
இது போன்ற ஜாம்பவான்கள் வாழும் காலத்தில் நாமும் கிரிக்கட்டை ரசிப்பது உண்மையில் கெளரவம்தான்!

டிராவிடை போல கிரிக்கெட்டுக்கு இன்னொருவர் கிடைப்பது கடினமே////

ஆமாம் பாஸ்

K.s.s.Rajh said...

@
kobiraj கூறியது...
உண்மைதான் இவர்கள் விளையாடிய காலத்தில் வாழ்ந்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்/////

ஆமாம் மச்சி

”தளிர் சுரேஷ்” said...

அருமையாக சொல்லியிருக்கார்! எனக்கு டிராவிட்டின் ஆரம்பகால ஆட்டங்கள் பிடிக்கவில்லை! ஆனால் போக்ப்போக அவர் இந்தியாவின் சுவராக நான் அவரின் ரசிகனானேன்! திறமையான வீரர் என்ன செய்வது எல்லோரும் ஒருநாள் விடைபெற்றுதானே ஆகவேண்டும்!

K.s.s.Rajh said...

@
அருமையாக சொல்லியிருக்கார்! எனக்கு டிராவிட்டின் ஆரம்பகால ஆட்டங்கள் பிடிக்கவில்லை! ஆனால் போக்ப்போக அவர் இந்தியாவின் சுவராக நான் அவரின் ரசிகனானேன்! திறமையான வீரர் என்ன செய்வது எல்லோரும் ஒருநாள் விடைபெற்றுதானே ஆகவேண்டும்////

உண்மைதான் நண்பரே........என்ன செய்வது.........

குறையொன்றுமில்லை. said...

ஆமா, ராகுல் ட்ராவிட் ஒரு திறமையான ஆட்டக்கார்ர்தான்.

ஆகுலன் said...

எனக்கு அவளவா தெரியாது அனாலும் ஆட்டங்கள் பார்த்து இருக்குறேன்...

ம.தி.சுதா said...

எனக்கும் டிராவிட்டை பிடிக்கும் 1999 உலகக் கிண்ணத்தில் இவர் ஆடி ஆட்டத்தை எப்போதும் ரசிக்கலாம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

Anonymous said...

நல்ல பதிவு நண்பா ..நானும் இது தொடர்பாக ஒரு பதிவு எழுதி வைத்திருக்கிறேன் ...பிரசுரிக்கிறேன்..)

Anonymous said...

ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரை அவர் இல்லாவிட்டாலும் பாதிப்பு தெரியாது அனால் டெஸ்ட் போட்டிகளிலே அவரின் இடத்தை நிரப்ப யாரும் இல்லை ...

நிரூபன் said...

வணக்கம் மாப்பு,
வீக்கெண்ட் பிசியாகிட்டேன்,

ட்ராவிட் பற்றிய அசத்தலான பதிவு.

ரசித்தேன்.

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
ஆமா, ராகுல் ட்ராவிட் ஒரு திறமையான ஆட்டக்கார்ர்தான்///

உண்மைதான்..தேங்ஸ் மேடம்.

K.s.s.Rajh said...

@ ♔ம.தி.சுதா♔ கூறியது...
எனக்கும் டிராவிட்டை பிடிக்கும் 1999 உலகக் கிண்ணத்தில் இவர் ஆடி ஆட்டத்தை எப்போதும் ரசிக்கலாம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா////

ஆம் நண்பரே..அந்த உலகக்கிண்ணத்தில் ராவிட்டின் ஆட்டத்தை மறக்க முடியுமா..

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
நல்ல பதிவு நண்பா ..நானும் இது தொடர்பாக ஒரு பதிவு எழுதி வைத்திருக்கிறேன் ...பிரசுரிக்கிறேன்..///
வெளியிடுங்க..வெளியிடுங்க...இதோ வாரன்

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரை அவர் இல்லாவிட்டாலும் பாதிப்பு தெரியாது அனால் டெஸ்ட் போட்டிகளிலே அவரின் இடத்தை நிரப்ப யாரும் இல்லை ///

ஆமாம் மச்சி..ஒரு நாள் போட்டிகளில் தெரியாது...டெஸ்ட் போட்டிகளில் நிச்சயம் ராவிட் ஓய்வு பெற்றால் இந்திய அணிக்கு பாதிப்புதான்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் மாப்பு,
வீக்கெண்ட் பிசியாகிட்டேன்,

ட்ராவிட் பற்றிய அசத்தலான பதிவு.

ரசித்தேன்///

வாங்க..........

Anonymous said...

நமக்கு இந்த கிரிக்கெட் பத்தி ஒரு எலவும் தெரியாதுண்னே..மன்னிசுகோங்க...

இன்னைக்கு..பதிவர்கள்..பலருக்கு பயனுள்ள விடயங்கள் பலதை சொல்லி இருக்கேன் என் பதிவில்

தனிமரம் said...

தனிமரம் அடுத்த பதிவில் சந்திக்கும்!

தனிமரம் said...

தொடர்கதை வரும்போது சரி சார் மெயில் போடுவாரா தனிமரத்திற்கு!

அம்பாளடியாள் said...

கிரிக்கெற் வீரர்களின் சாகசங்களைக் கண்டு ரசிக்கும் கண்களுக்கு
ஒரு தரமான படைப்பு வாழ்த்துக்கள் சகோ .........மிக்க நன்றி
பகிர்வுக்கு .........

Anonymous said...

அருமையான தகவல்

100% Without Investment Data Entry Jobs !

FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

vinakuri said...

டிராவிட் ஒரு சிறந்த ஆட்டக்காரர் தான், ஆனால் அவரது இடத்தை யாராலும் நிரப்பமுடியாது, என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை அந்த இடத்தை ஹோலியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன்.

பிரணவன் said...

டிராவிட் உன்மையிலேயே ஒரு சிறந்த ஆட்டக்காரர். அவரது ஒரு ஒரு நாள் போட்டிக்கான பயணம் முடிவடைந்ததில் எனக்கும் சற்றே வருத்தம் தாம். நல்ல பகிர்வு நன்றி சகா. . .

காட்டான் said...

என்னையா கங்ககுலி வயசு போன பிற்கும் விளையாடோனுமோய்யா நடிகைகள் மட்டும்தானோய்யா உங்களுக்கு புதுசா தேவை..?? ஹி ஹி எனக்கு உந்த விளையாட்டை பற்றி இருக்கிற அறிவு தெரியும்தானெய்யா.. ஓட்டு போட்டிருக்கேன் பாரய்யா..ஹி ஹி

K.s.s.Rajh said...

@
Thanimaram கூறியது...
தொடர்கதை வரும்போது சரி சார் மெயில் போடுவாரா தனிமரத்திற்கு///
கண்டிபா இனி மெயில் அனுப்புறன்..இதுவரை அனுப்பாதற்கு மன்னிக்கவும்...பாஸ்..இனி கலக்குவம்

K.s.s.Rajh said...

@ அம்பாளடியாள் கூறியது...
கிரிக்கெற் வீரர்களின் சாகசங்களைக் கண்டு ரசிக்கும் கண்களுக்கு
ஒரு தரமான படைப்பு வாழ்த்துக்கள் சகோ .........மிக்க நன்றி
பகிர்வுக்கு .......////

தேங்ஸ் மேடம்

K.s.s.Rajh said...

@ Online Works For All கூறியது...
அருமையான தகவல்

100% Without Investment Data Entry Jobs !

FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com//
தேங்ஸ் நண்பரே

K.s.s.Rajh said...

@
vinakuri கூறியது...
டிராவிட் ஒரு சிறந்த ஆட்டக்காரர் தான், ஆனால் அவரது இடத்தை யாராலும் நிரப்பமுடியாது, என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை அந்த இடத்தை ஹோலியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன்////நிச்சயமாக ஒரு நாள் போட்டிகளில் கோலி ராவிட்டின் இடத்தை நிரப்ப தகுதியானவர்..ஆனால் டெஸ்ட்போட்டிகளில்...நிச்சயமாக ராவிட்டின் இடத்தை நிரப்பமுடியாது..

K.s.s.Rajh said...

@
பிரணவன் கூறியது...
டிராவிட் உன்மையிலேயே ஒரு சிறந்த ஆட்டக்காரர். அவரது ஒரு ஒரு நாள் போட்டிக்கான பயணம் முடிவடைந்ததில் எனக்கும் சற்றே வருத்தம் தாம். நல்ல பகிர்வு நன்றி சகா.///

தேங்ஸ் நண்பா

K.s.s.Rajh said...

@ காட்டான் கூறியது...
என்னையா கங்ககுலி வயசு போன பிற்கும் விளையாடோனுமோய்யா நடிகைகள் மட்டும்தானோய்யா உங்களுக்கு புதுசா தேவை..?? ஹி ஹி எனக்கு உந்த விளையாட்டை பற்றி இருக்கிற அறிவு தெரியும்தானெய்யா.. ஓட்டு போட்டிருக்கேன் பாரய்யா..ஹி .ஹி////
ஹி.ஹி.ஹி.ஹி....பின்ன என்ன மாமா..நடிகைகள்...புதுசு..புதுசா வந்தானே நமக்கு...சந்தோசம்.....

காந்தி பனங்கூர் said...

இந்திய அணியின் தடுப்பு சுவர் எல்லோர் மனதிலும் நீங்காதவர். நன்றி நண்பா.

K.s.s.Rajh said...

@
காந்தி பனங்கூர் கூறியது...
இந்திய அணியின் தடுப்பு சுவர் எல்லோர் மனதிலும் நீங்காதவர். நன்றி நண்பா///
தேங்ஸ் பாஸ்

Bala Murugan said...

Nanpare:
Put link to get updates through email

பாலா said...

1996 இல் இவர் ஆடிய முதல் போட்டியில் இருந்து பார்த்து வருகிறேன். அதனால்தான் என்னவோ இவர் விடைபெறும்போது மனம் தாளவில்லை. டிராவிட் இந்திய அணிக்கு பெரும் இழப்பு மட்டுமல்ல, ஈடு கட்ட முடியாது ஒரு இழப்பு.

K.s.s.Rajh said...

///
Bala Murugan கூறியது...
Nanpare:
Put link to get updates through email///

அதில பிரச்சனை கொடுக்குது நண்பா..விரைவில் சரிசெய்கின்றேன்

K.s.s.Rajh said...

//
பாலா கூறியது...
1996 இல் இவர் ஆடிய முதல் போட்டியில் இருந்து பார்த்து வருகிறேன். அதனால்தான் என்னவோ இவர் விடைபெறும்போது மனம் தாளவில்லை. டிராவிட் இந்திய அணிக்கு பெரும் இழப்பு மட்டுமல்ல, ஈடு கட்ட முடியாது ஒரு இழப்பு///

உண்மைதான் நண்பா...

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails