Saturday, October 22, 2011

(பகுதி-5)எனக்குப்பிடித்த பெண்கள்

நிறைவுப்பகுதி
முன்னைய பகுதிகளை வாசிக்க
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4

41)கல்பனா சாவ்லா


இந்தியாவுக்கு பெருமை சேர்த்த விண்வெளி வீராங்கனை விண்வெளிக்கு சென்று வந்த முதல் இந்திய பெண் 


42)சுசந்திகா ஜெயசிங்க


இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை .இலங்கைக்கு பெருமை சேர்த ஓரு வீராங்கனை.


43)பிரிட்னி பியர்ஸ்
பொப் பாடகி பிரிட்னி பியர்ஸ் இவர்அழகினாலும் கிறங்கடிக்கும் குரலினாலும் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர்.


44)சரன்யா பொண்வண்ணன்


கமலின் சூப்பர் ஹிட் படமான நாயகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி..சில படங்களில் கதாநாயகியாக நடித்தார் பின் இயக்குனர் பொண்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சிரிதுகாலம் சினிமாவில் ஓதுங்கியிருந்தார்.பின் திரும்பவும் நடிக்கவந்து...அம்மா வேடங்கள் 
தன் நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்..அன்மையில் இவர் நடித்த இவரது 100வது படமான தென்மேற்கு பருவக்காற்று படத்தில்..இவருக்கு தேசிய விருது கிடைத்து இவரது திறமைக்குச்சான்று.


45)பெனசீர் பூட்டோ


பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர்.


46)ஷாலினி அஜித்குமார்




தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி புகழ் பெற்றவர்..பேபி ஷாலினி என்றால் ஓரு காலத்தில் புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் எனக்குத்தெரிய குழந்தை நட்சத்திரமாக வேறு எந்த நடிகையும் இவ்வளவு பெரிதாகப்பேசப்படவில்லை.பின் கதாநாயகியாக நடிக்கத்தொடங்கிய பிறகும் கவர்சி காட்டும் நடிகளைகள் மத்தியில் கவர்ச்சியை தூரதூக்கி போட்டுவிட்டு திறமையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை..காதலுக்கு மரியாதை,அலைபாயுதே,கண்ணுக்குள்நிலவு,பிரியாதவரம்வேண்டும்,அமர்க்களம்,போன்ற 5 படங்களில்தான் கதாநாயகியாக நடித்திருக்கின்றார்.இதில் அமர்க்களம் படத்தில் நடித்த போது தலஅஜித்துடன் காதல் மலர்ந்து அவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஓதுங்கிவிட்டார்..தமிழ் சினிமாவில்...சுஹாசினி,ரேவதி வரிசையில் மிகச்சிறந்த நடிகையாக வந்திருக்கவேண்டியவர் இவர் சினிமாவில் இருந்து ஓதுங்கியது அவரது ரசிகர்களுக்கு..கவலைதான்.


47)ஜோதிகா




எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகை..மிகத்திறமையான நடிகை.....இவரும் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஓதுங்கிவிட்டார்..இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கியது இவரது ரசிகர்களுக்கு கவலைதான்


48)த்ரிஷா


சிம்ரனுக்குப்பிறகு நடனத்தில் பட்டைய கிளம்பும் ஓரு நடிகை...எனக்கு இவரது நடனம் மிகவும் பிடிக்கும்...அப்படி போடு..போடு..போடு...கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா,போன்ற பாட்டுகளுக்கு என்னா ஆட்டம் போட்டிருப்பார்..


49)காயத்திரி
பல்வேறு இடப்பெயர்வுகளை எம்மண்ணில் நாங்கள் சந்தித்த போது....1996ல் .புத்துவெட்டுவான் என்னும் ஓரு ஊரில் கொஞ்சகாலம் இருந்தேன்..அப்போது எனக்கு 7 வயசுதான்...அந்தப்பாடசாலையில் எங்கள் வகுப்பில் நான் தான் முதல்மாணவனாக வருவேன் அதனால் ஏனைய வகுப்புமாணவர்கள் ஆசிரியர்கள் எல்லாம் என்னுடன் நல்லமாதிரி.பாடசாலையில் நான் கொஞ்சம் பிரபல்யம்.அப்போது எனக்கு அடுத்த வகுப்பில் காயத்திரி என்ற ஓரு பொண்ணு படித்தாள்..அந்த சின்ன வயதில் மிக அழகாக இருப்பாள் பொம்மைபோல இருப்பாள்...எனக்கு அவள் மீது ஓரு இது...ஹி.ஹி.ஹி.ஹி...பின் கொஞ்சகாலத்தில் அவள் வேற ஊருக்குப்போய்விட்டாள் நாங்களும் சிலவருடங்களின் பின் அந்த ஊரைவிட்டு வந்துவிட்டதனால்...அவளை பற்றிய தகவல்களை அறியமுடியவில்லை இப்போது எங்க இருக்கின்றாளோ தெரியவில்லை இப்ப   அவளைப்பார்த்தால் என்னால் அடையாளம் காணமுடியுமோ எனக்குத்தெரியவில்லை..1998வரை நான் அங்கே இருந்தேன்...12 வருடங்களுக்குப்பிறகு நான் கடந்த வருடம் அந்த ஊருக்குப்போயிருந்தேன் நான் அந்தபாடசாலைக்கும் போயிருந்தேன்...அப்போது அந்தப்பாடசாலையில் படித்த நினைவுகளைவிட காயத்திரிதான் மனதில் வந்தாள்.


50)இவள் யார் என்று தெரியவில்லை
ஆமாம் அதாங்க எதிர்காலத்தில் எனக்கு வரபோகும்...ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.....
ஓருவேளை எனக்கு ஏற்கனவே அறிமுகமானவங்களா..இல்லை..இனிமேல் அறிமுகம் ஆகபோறவங்களா..எனக்கு தெரியவில்லை......இன்னும் 8,9,வருடங்கள் காத்திருக்கவேண்டும்..இதற்கு...இப்பதானே நமக்கு 22..வயசு..30வயசுக்குப்பிறகுதான் திருமணம் செய்யவேண்டும் என்பதில்உறுதியாக இருக்கின்றேன்....ஹி.ஹி.ஹி.ஹி......
(முற்றும்)

Post Comment

63 comments:

தனிமரம் said...

Yar aval koppipodum tholie.

தனிமரம் said...

உங்களுக்குப் பிடித்தவர்கள் பற்றியவர்கள் படம் போட்டீர்கள் ஆனால் அவர்களின் திறமை ,சாதனைகளை இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம் படம் மட்டும் கீறுபவன் ஓவியன் ஓவியத்திற்கு உயிர் கொடுப்பவன் எழத்தாளன் நான் உங்களை எழுத்தாளனாகவே எண்ணுகின்றேன். மீண்டும்  கும்மியில் உங்கள் தனித்துவத்தை இழந்துவிடாதீர்கள்!

தனிமரம் said...

விளையாட்டுச் செய்தியாளர் என்று யாரோ சொன்னார்கள் அவர் எங்கோ போய் விட்டார் பாவம் தேசியத்தின் சொத்தான சுகந்திக்கா ஜெயசிங்க மீது  டாக்குத்தருக்கும், தோனிக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து போராடிச் சாதனை செய்த வீராகனையை சிறப்பிக்கத் தெரியாமல் போய் விட்டாரே என்று கவலையளிக்கின்றது ஒரு வாசகனாக.

பாலா said...

இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடித்ததன் காரணம் இதில் நீங்கள் திரிஷாவை இணைத்திருப்பது. இன்றும் இந்த விஷயத்தில் என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள். இருந்தாலும் திரிஷா மீதான அபிமானம் குறையவில்லை. மற்ற எல்லோருமே என் மனங்கவர்ந்தவர்கள்தான். குறிப்பாக பெனாசிர், ஷாலினி மற்றும் பிரிட்னி ஸ்பியர்ஸ்...

தனிமரம் said...

இலங்கையில் சந்திரிக்காவுக்கு இருக்கும் அரசியல் குடும்ப பாரம் பரியம் பெணாசீர் பூட்டோவுக்கும் இருக்கு இதனை கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்! முன்னதில் சிறு தவறு சகோ!

தனிமரம் said...

இடம் பெயர்வில் பலர் வந்து போவதும் சிலர் கல்லெறிந்து கடந்து போவதும் இயற்கையின் செயல் என்று கூறலாம்!

தமிழ்த்தோட்டம் said...

கலக்குறீங்க

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
Yar aval koppipodum tholie.////

10 வருசத்துக்கு பிறகுதான் அவங்க உங்களுக்கு கோப்பி தரமுடியும்...ஹி.ஹி.ஹி.ஹி..

சம்பத்குமார் said...

அழகான தொகுப்பு நண்பரே..

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
உங்களுக்குப் பிடித்தவர்கள் பற்றியவர்கள் படம் போட்டீர்கள் ஆனால் அவர்களின் திறமை ,சாதனைகளை இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம் படம் மட்டும் கீறுபவன் ஓவியன் ஓவியத்திற்கு உயிர் கொடுப்பவன் எழத்தாளன் நான் உங்களை எழுத்தாளனாகவே எண்ணுகின்றேன். மீண்டும் கும்மியில் உங்கள் தனித்துவத்தை இழந்துவிடாதீர்கள்/////

நன்றி பாஸ் கவனத்தில் எடுக்கின்றேன்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
விளையாட்டுச் செய்தியாளர் என்று யாரோ சொன்னார்கள் அவர் எங்கோ போய் விட்டார் பாவம் தேசியத்தின் சொத்தான சுகந்திக்கா ஜெயசிங்க மீது டாக்குத்தருக்கும், தோனிக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து போராடிச் சாதனை செய்த வீராகனையை சிறப்பிக்கத் தெரியாமல் போய் விட்டாரே என்று கவலையளிக்கின்றது ஒரு வாசகனாக?/////

கண்டிப்பாக போடுறன் பாஸ் அடுத்து என் 100வது பதிவு அது ஓரு கிரிக்கெட் பதிவாக வரவேண்டும் என விரும்புகின்றேன் இது செண்டிமன்ட்...அதற்கு அடுத்த பதிவு நிச்சயம் சுசந்திகா பற்றிய பதிவுதான்..

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
இலங்கையில் சந்துரிக்காவுக்கு இருக்கும் அரசியல் குடும்ப பாரம் பரியம் பெணாசீர் பூட்டோவுக்கும் இருக்கு இதனை கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்////

ஆமா பாஸ் மெருகேற்றியிருக்காலம் பாரம்பரிய அரசியல் பின்னனி கொண்டவர்தான் பெனாசீர் பூட்டோ எனக்கு இவங்களை மிகவும் பிடிக்கும் இவர் பற்றி ஒரு தனிப்பதிவு போட இருக்கின்றேன் அதனால் இதில் போடவில்லை..

ஆமினா said...

பெயர் தெரியாத பெண்ணுக்கு வாழ்த்துக்கள் :-)

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடித்ததன் காரணம் இதில் நீங்கள் திரிஷாவை இணைத்திருப்பது. இன்றும் இந்த விஷயத்தில் என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள். இருந்தாலும் திரிஷா மீதான அபிமானம் குறையவில்லை. மற்ற எல்லோருமே என் மனங்கவர்ந்தவர்கள்தான். குறிப்பாக பெனாசிர், ஷாலினி மற்றும் பிரிட்னி ஸ்பியர்ஸ்/////

ஆமா பாஸ் த்ரிஷாவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்னையும் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள்.....

அட உங்கள் ரசனையும் என்னைப்போலவே இருக்கே

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
இடம் பெயர்வில் பலர் வந்து போவதும் சிலர் கல்லெறிந்து கடந்து போவதும் இயற்கையின் செயல் என்று கூறலாம்////

ஆமா..பாஸ் காலத்தின் கோலம்.....

K.s.s.Rajh said...

@
தமிழ்த்தோட்டம் கூறியது...
கலக்குறீங்க..///

முதல் வருகைக்கு நன்றி தொடர்ந்து வாருங்கள்

M.R said...

ஐம்பது அருமை ,நல்ல எண்ணம்

K.s.s.Rajh said...

@சம்பத்குமார்
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ஆமினா

ஹா.ஹா.ஹா.ஹா..எனக்கும் தெரியவில்லை நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@M.R

நன்றி பாஸ்

Unknown said...

பகிர்வுக்கு நன்றி மாப்ள!

Unknown said...

என்ன கிஸ்ராஜ் இப்பிடி முடிச்சிட்டீங்களே? செலீனா கோமிஸ்,அஞ்சலினா ஜோலி, எல்லாம் வரவில்லை.

Anonymous said...

ஐம்பதாவது 'அவா' தானே ))

Mohamed Faaique said...

யப்பா... உங்க லிஸ்டு முடிஞ்சுதா??? வெறும் 50தானா???

Yoga.S. said...

வணக்கம்.உங்கள் "கனவு" மெய்ப்பட, இறைவன் கருணை கிட்ட வேண்டுகிறேன்!தொகுப்பு அருமை!

SURYAJEEVA said...

அந்த ஐம்பதாவது பொண்ணு யாருன்னே தெரியாதாம், ஆனா இதை போடுறதுக்கு அஞ்சு பதிவு போடுவாராம், அதுவும் தொடரா? என்னவோ போங்க... ஆனா ரசிக்க முடிஞ்சது...

Riyas said...

அப்பாடா முடிஞ்சுதா!

எங்க த்ரிஷாவ கானோமன்னு பார்த்தேன் வந்துட்டா,,

இந்தப்பதிவு பிடிச்சிருக்கு..

இராஜராஜேஸ்வரி said...

வருங்கால வசந்தத்திற்கு வாழ்த்துகள்!.

பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் மச்சான் சார்,

இன்றைய தொகுப்பும் அசத்தல்,
ஒரு டவுட்டு,
அந்த கடைசியில இருக்கிற பெயர் தெரியா ஆள் ஹன்சிகா இல்லைத் தானே..

மைந்தன், மதுரன், ஐடியாமணி ஆகியோர் பொங்கிடுவாங்க...

ஹே,,,ஹே...

K.s.s.Rajh said...

@விக்கியுலகம்
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@M.Shanmugan
////
என்ன கிஸ்ராஜ் இப்பிடி முடிச்சிட்டீங்களே? செலீனா கோமிஸ்,அஞ்சலினா ஜோலி, எல்லாம் வரவில்லை////

100 பேரை குறிப்பிடலாம் என்றுதான் இருந்தேன்..பிறகு 50துடன் நிறுத்தியதால் ஏஞ்சலினா ஜோலியை குறிப்பிடவில்லை..அடுத்த பகுதி வந்திருந்தால் நிச்சயம் ஏஞ்சலைனா ஜோலி இடம் பெற்றிருப்பார்...எதிர்காலத்தில் பார்ப்போம்..தொடர்ந்து எழுதினால் வகைப்படுத்துவோம்.

K.s.s.Rajh said...

@கந்தசாமி.
////ஐம்பதாவது 'அவா' தானே /////

அட போங்க பாஸ்.
(சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)
நிலாவ தூர இருந்து ரசிகலாம் ஆனா அதையே கிட்ட போய் பாக்க என்னால முடியாதே...நான் என்ன பண்ணுவேன்..

ஹி.ஹி.ஹி.ஹி..

K.s.s.Rajh said...

@Mohamed Faaique
/////
யப்பா... உங்க லிஸ்டு முடிஞ்சுதா??? வெறும் 50தானா??////

100தான் குறிப்பிட நினைத்தேன் 50துடன் முடித்துக்கொண்டேன்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
வணக்கம்.உங்கள் "கனவு" மெய்ப்பட, இறைவன் கருணை கிட்ட வேண்டுகிறேன்!தொகுப்பு அருமை////

ஹா.ஹா.ஹா.ஹா நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
suryajeeva கூறியது...
அந்த ஐம்பதாவது பொண்ணு யாருன்னே தெரியாதாம், ஆனா இதை போடுறதுக்கு அஞ்சு பதிவு போடுவாராம், அதுவும் தொடரா? என்னவோ போங்க... ஆனா ரசிக்க முடிஞ்சது./////

ஹா.ஹா.ஹா.ஹா..நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Riyas கூறியது...
அப்பாடா முடிஞ்சுதா!

எங்க த்ரிஷாவ கானோமன்னு பார்த்தேன் வந்துட்டா,,

இந்தப்பதிவு பிடிச்சிருக்கு.////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
இராஜராஜேஸ்வரி கூறியது...
வருங்கால வசந்தத்திற்கு வாழ்த்துகள்!.

பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
இனிய இரவு வணக்கம் மச்சான் சார்,

இன்றைய தொகுப்பும் அசத்தல்,
ஒரு டவுட்டு,
அந்த கடைசியில இருக்கிற பெயர் தெரியா ஆள் ஹன்சிகா இல்லைத் தானே..

மைந்தன், மதுரன், ஐடியாமணி ஆகியோர் பொங்கிடுவாங்க...

ஹே,,,ஹே..////

அட ஹன்சிகா நமக்கு அண்ணி மாதிரி அப்ப அண்ணன் யார் என்று கேட்கக்கூடாது..ஜடியாமணி,மைந்தன் செங்கோவி பாஸ்,மதுரன்..இப்படி பட்டியல் நீளம் ஆனாலும் இபோதைய தகலவலின் படி ஜடியாமணி தான் அண்ணன்..

கோகுல் said...

K.s.s.Rajh கூறியது...
@
நிரூபன் கூறியது...
இனிய இரவு வணக்கம் மச்சான் சார்,

இன்றைய தொகுப்பும் அசத்தல்,
ஒரு டவுட்டு,
அந்த கடைசியில இருக்கிற பெயர் தெரியா ஆள் ஹன்சிகா இல்லைத் தானே..

மைந்தன், மதுரன், ஐடியாமணி ஆகியோர் பொங்கிடுவாங்க...

ஹே,,,ஹே..////

அட ஹன்சிகா நமக்கு அண்ணி மாதிரி அப்ப அண்ணன் யார் என்று கேட்கக்கூடாது..ஜடியாமணி,மைந்தன் செங்கோவி பாஸ்,மதுரன்..இப்படி பட்டியல் நீளம் ஆனாலும் இபோதைய தகலவலின் படி ஜடியாமணி தான் அண்ணன்..
//
போட்டி பலமா இருக்கும் போல!

கோகுல் said...

நீங்க குறிப்பிட்ட ஐம்பது பேரும் ஏதாவது விதத்தில் எல்லோரையும் நிச்சயம் கவர்ந்தவர்களே.
(உங்கள் தனிப்பட்ட விருப்பங்களைத்தவிர)
தேர்ந்தெடுத்து தொகுத்துள்ளீர்கள்!

ஐம்பதாம் இடம் பிடிக்கப்போகும் பெண்மணிக்கு வாழ்த்துக்கள்,

K.s.s.Rajh said...

@கோகுல்

ஆமாம் பலத்த போட்டி பாஸ்

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
நீங்க குறிப்பிட்ட ஐம்பது பேரும் ஏதாவது விதத்தில் எல்லோரையும் நிச்சயம் கவர்ந்தவர்களே.
(உங்கள் தனிப்பட்ட விருப்பங்களைத்தவிர)
தேர்ந்தெடுத்து தொகுத்துள்ளீர்கள்!

ஐம்பதாம் இடம் பிடிக்கப்போகும் பெண்மணிக்கு வாழ்த்துக்கள்/////

நன்றி பாஸ்

விச்சு said...

நீங்கள் கூறியவற்றில் நிறையப் பெண்கள் அனைவரின் உள்ளம் கவர்ந்தவர்கள்.. ஐம்பதாவது நபர் நிச்சயம் உங்கள் உள்ளம் கவர்ந்தவராகவே இருப்பார்.. வாழ்த்துக்கள்..

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி 

நானு இருக்கேன்யா ஹன்சிக்கு போட்டியா??? ஹி ஹி

சென்னை பித்தன் said...

திருமணத்தை ரொம்பத் தள்ளிப் போடாதீங்க.27-28 இல் முடிச்சிடுங்க!

அம்பாளடியாள் said...

நல்ல பிள்ள ஒருத்தரையும் தவறவிடாமல் சொல்லி
உள்ளீர்கள் .நான் இந்த ஐம்பதாவதைச் சேர்த்துத்தான் சொன்னேன் ஹா ஹா ஹா .......வாழ்த்துக்கள் சகோ .
மிக்க நன்றி பகிர்வுக்கு ......

K said...

வணக்கம் மச்சான் சார்! நலமா? இந்தப் பகுதியில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெண்களில் பலர் எனக்கும் பிடித்தவர்கள்!

குறிப்பாக ஸ்ப்ரிட்னி ஸ்பெயர்சை ரொம்ப பிடிக்கும்!

ஹி ஹி ஹி ஹி தமிழ்பெண்களைச் சொல்வதை விட வெள்ளைக்காரிகளைச் சொன்னால் எல்லோரும் மதிப்பாய்ங்களாம்!

K said...

அப்புறம் அந்த 50 வது பொண்ணு! அது யாருன்னு நிஜமாவே தெரியாதா? சரி சரி நம்புறம்! ஹி ஹி ஹி !!

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ராஜ்,
உங்களுக்குப் பிடித்த 50 பெண்களில்... 50 ஆவது பெண்ணைத்தான் எனக்கும் ரொம்பப் பிடித்துவிட்டது:)))).

K.s.s.Rajh said...

@விச்சு

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
வணக்கம் ராசுக்குட்டி

நானு இருக்கேன்யா ஹன்சிக்கு போட்டியா??? ஹி ஹி/////

அப்ப ஹன்சியை இனி நான் மாமி(அத்தை) என்றா கூப்பிடனும்..ஹி.ஹி.ஹி.ஹி..

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
திருமணத்தை ரொம்பத் தள்ளிப் போடாதீங்க.27-28 இல் முடிச்சிடுங்க?/////

ஹா.ஹா.ஹா.ஹா. நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
அம்பாளடியாள் கூறியது...
நல்ல பிள்ள ஒருத்தரையும் தவறவிடாமல் சொல்லி
உள்ளீர்கள் .நான் இந்த ஐம்பதாவதைச் சேர்த்துத்தான் சொன்னேன் ஹா ஹா ஹா .......வாழ்த்துக்கள் சகோ .
மிக்க நன்றி பகிர்வுக்கு ..../////

போங்க மேடம் நானே இன்னும் அவங்களைப்பார்கவில்லை..ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
வணக்கம் மச்சான் சார்! நலமா? இந்தப் பகுதியில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெண்களில் பலர் எனக்கும் பிடித்தவர்கள்!

குறிப்பாக ஸ்ப்ரிட்னி ஸ்பெயர்சை ரொம்ப பிடிக்கும்!

ஹி ஹி ஹி ஹி தமிழ்பெண்களைச் சொல்வதை விட வெள்ளைக்காரிகளைச் சொன்னால் எல்லோரும் மதிப்பாய்ங்களாம்?/////
அதே..அதே...ஆனாலும் பிரிட்னி கிட்ட எதோ இருக்கு..ஹி.ஹி.ஹி.ஹி..

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
அப்புறம் அந்த 50 வது பொண்ணு! அது யாருன்னு நிஜமாவே தெரியாதா? சரி சரி நம்புறம்! ஹி ஹி ஹி !?/////

எனக்கு தெரிஞ்சதுனு பார்த்தால் நிறைய பேர் வருவாங்க மச்சான் சார்..ஹி.ஹி.ஹி.ஹி...........

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
ராஜ்,
உங்களுக்குப் பிடித்த 50 பெண்களில்... 50 ஆவது பெண்ணைத்தான் எனக்கும் ரொம்பப் பிடித்துவிட்டது:))/////

ஹா.ஹா.ஹா.ஹா.நன்றி மேடம்

Unknown said...

உங்களுக்குப் பிடிச்ச பொண்ணுங்க பட்டியல் கொடுத்தீங்க!

ஆனா பாபம்!
உங்களைப் பிடிச்ச பொண்ணு யாருன்னு தெரியல!
முதல்ல இந்த பதிவு அவங்க
கண்ல படாம பாத்துகுங்க!

புலவர் சா இராமாநுசம்

K.s.s.Rajh said...

@புலவர் சா இராமாநுசம்

ஹா.ஹா.ஹா.ஹா.எனக்கும் தெரியவில்லை ஜயா

காந்தி பனங்கூர் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ராஜ்.

மன்னிக்கவும் கொஞ்ச நாளா வலைப்பக்கம் வர முடியல.

ஆமினா said...

தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

வாழ்த்துக்கள்

ஆமினா said...

தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@
காந்தி பனங்கூர் கூறியது...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ராஜ்.

மன்னிக்கவும் கொஞ்ச நாளா வலைப்பக்கம் வர முடியல////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
ஆமினா கூறியது...
தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

வாழ்த்துக்கள்////

நன்றி மேடம்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails