Friday, July 15, 2011

(பகுதி-2)-சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்.

இந்தத்தொடரின் பகுதி-1 படிக்க இங்கே
சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்(பகுதி-1)


இந்தப்பதிவை தொடராக எழுதவேண்டும் என்று நான் முதலில் நினைக்கவில்லை பிறகு தொடராக எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் இதில் முரளியின் முழுகிரிக்கெட் வாழ்க்கையையும் எழுதப்போவது இல்லை சில சாதனைகள் சுவாரஸ்யமான படங்கள் போன்றவர்றை பதிவிடலாம் என்று உள்ளேன் .உங்கள் ஆதரவே எனது இந்தமுயற்சியின் வெற்றி ஆகும்.மறக்காமல் கருத்துரைகளை கூறி என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.



முரளி சிறந்த மனிதர் மட்டும் இல்லை தன்னம்பிக்கை மிக்க ஒரு வீரரும் கூட.
அதற்கு சிறந்த உதாரணம் தான் டெஸ்போட்டிகளில் 792 எடுத்து இருந்த போது இந்திய அணியுடனான டெஸ்ட்தொடர் இலங்கையில் ஆரம்பமாகியது 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் முதல் போட்டியுடன் ஒய்வை அறிவித்தார்.இலங்கையின் காலி மைதானத்தில் இந்தபோட்டி நடை பெற்றது.




என்ன ஒரு தன்நம்பிக்கை பாருங்கள் அத்தோடு முரளியை யாரும் ஒய்வு பெறச்சொல்லி சொல்லவும் மாட்டார்கள் அவர் நினைத்து இருந்தால் 3 போட்டிகளிலும் விளையாடி நிச்சயமாக 8 விக்கெட் எடுத்து 800 விக்கெட் இலக்கை இலகுவாக எட்டி இருக்கலாம்.ஆனால் முரளி தன்மீது இருந்த தன்நம்பிக்கை காரணமாக முதல் போட்டியுடன் ஒய்வை அறிவித்தார்.


தனது கடைசி இனிங்ஸ்சில் துடுப்பெடுத்துஆட செல்லும் முரளிக்கு இந்தியவீரர்கள் மரியாதை செய்தபோது


அதுவும் சேவாக்,சச்சின்,ராவிட்,லக்ஸ்மன்,கம்பீர்,டோனி, போன்ற பலம் பொருந்திய இந்திய துடுப்பாட்ட வரிசைக்கு முன்னால் இப்படி தன்மீது அதிக நம்பிக்கை கொண்டு விளையாடினார்.


சாதனைபுரிய மைதானத்திற்கு வந்த சுழல் சக்கரவர்திக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படுகின்றது


கடைசியில் அந்த போட்டியில் இலங்கை வெற்றி பெறும் நிலையில் இருந்தது. முரளி 799 விக்கெட் எடுத்து விட்டார் இன்னும் ஒரு விக்கெட் எடுக்கவேண்டும் .வழமையாக கட்டில்,மெத்தையுடன் வந்து ஆடுகளத்தில் படுத்து இருந்து இந்திய அணியை காப்பாற்றும் லக்ஸ்மன் வேறு ஆடிக்கொண்டு இருந்தார்.கடைசியில்இந்திய அணியின் ஒரு விக்கெட் மாத்திரமே மிஞ்சி இருந்தது.


மைதானத்திற்கு வந்து முரளியை வாழ்த்தும் இலங்கை ஜனாதிபதி


லக்ஸ்மன் மேல் கோபம்தான் வந்தது ஆனால் அவர் மிகச்சிறப்பான வீரர் தனது அணியை தோல்வியில் இருந்து காப்பாத்த சிறப்பாக துடுப்பெடுத்து ஆடி முரளியை மட்டும் இல்லை எல்லா இலங்கை கிரிகெட் ரசிகர்களையும் சோதித்தார். .ஆனாலும் இலங்கை அணித்தலைவர் சங்கக்கார தொடர்சியாக முரளிக்கு பந்து வீச சந்தர்பம் வழங்கிக்கொண்டு இருந்தார்,இடையில் முரளி சங்காவிடம் சொல்லி தான் போடும் ஒவருக்கு பதிலாக வேறு ஒருவரிடம் பந்து வீச வழங்கினார்.ஒட்டு மொத்த இலங்கையருக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை ஆனால் முரளி தனது வழமையான புன்சிரிப்புடன் எல்லைக்கோட்டின் அருகில் நின்று களத்தடுப்பில் ஈடுபட்டார்.பிறகு அந்த ஓவர் முடிந்ததும் அப்பாடா என்று இருந்தது.சங்ககார உடனே முரளியை அழைத்து அடுத்த ஒவரை வீசுமாறு அழைத்தார்.




முரளியின் சாதனையைக்கான இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருந்தனர் .இலங்கை ஜனாதிபதி கூட மைதானத்தில் அமர்ந்து இருந்து போட்டியை பார்துக்கொண்டு இருந்தார்
.


கடைசியில் முரளியின் 800 விக்கெட் சாதனை நிகழ்ந்தது. பிரக்கன் ஒஜாவின் பேட்டில் பட்ட பந்து அப்படியே மகேல ஜெயவர்தனவின் கைகளில் கேட்சாக மாறியது,ஒட்டு மொத்த இலங்கையரும் தாம் ஒவ்வொறுவரும் சாதனைப்படைத்தை போல துள்ளிக்குதித்தார்கள்.




இந்த போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய அணித்தலைவர் டோனி கூறி இருந்தார் முரளிதரனை 800 விக்கெட் சாதனையை எடுக்கவிடமாட்டோம் என்று.//



இலங்கை அணித்தலைவர் சங்கக்கார கூறி இருந்தார் டெஸ்டை வென்று முரளிக்கு பிரியாவிடை கொடுப்போம் என்று.


சாதனை நாயகனை தோளில் தூக்கி மகிழ்சியை கொண்டாடும் சங்கக்கார மற்றும் இலங்கை வீரர்கள்


கடைசியில் முரளியின் தன்னம்பிக்கையின் முன் டோனியின் கூற்று பலிக்கவில்லை


முரளியின் 800வது விக்கெட் கேட்சை பிடித்த மகேல உடன் முரளி/டெஸ்ட் போட்டிகளில் ஒரு பந்துவீச்சாளருக்கு அதிக கேட்ச் பிடித்த உலகசாதனை மகேலவிடம் தான் உள்ளது.முரளியின் பந்துவீச்சிற்குதான் மகேல அந்த சாதனையை நிகழ்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
.சங்கக்கார சொன்னது தான் நடந்தது.இலங்கை அணி அந்த டெஸ்ட் போட்டியில் வென்று வெற்றியுடன் முரளிக்கு பிரியாவிடை கொடுத்தனர்.


முரளி 800 விக்கெட் எடுத்த அந்தத்தருனம்
(இந்த வீடியோ you tube.தளத்தில் இருந்து பகிரப்பட்டுள்ளது நன்றி you tube.com)




குறிப்பு- கடந்த வருடம் இதே மாதம் 22ம் திகதிதான்(July 22.2010) முரளி 800விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார் கிட்டத்தட்ட 1வருடம் ஆகிவிட்டது.


 ( முரளியுடன் நினைவுகள் தொடரும்....) 


சரி மறக்காமல் உங்கள் வேலையை பார்துவிட்டு போங்க அதாங்க அதான் கருத்துரையை சொல்லிவிட்டு போங்க

Post Comment

4 comments:

பாலா said...

//வழமையாக கட்டில்,மெத்தையுடன் வந்து ஆடுகளத்தில் படுத்து இருந்து இந்திய அணியை காப்பாற்றும் லக்ஸ்மன் வேறு ஆடிக்கொண்டு இருந்தார்.

ஹா ஹா... நல்ல வர்ணனை.


அந்த போட்டியில் நிறைய இந்தியர்கள் இந்தியா வெல்ல வேண்டும் என்பதை விட, முரளி 800 விக்கெட்டுகள் எடுக்கவேண்டும் என்றே நினைத்தார்கள். நல்ல பகிர்வு...

K.s.s.Rajh said...

@ பாலா சொன்னது...அந்த போட்டியில் நிறைய இந்தியர்கள் இந்தியா வெல்ல வேண்டும் என்பதை விட, முரளி 800 விக்கெட்டுகள் எடுக்கவேண்டும் என்றே நினைத்தார்கள். நல்ல பகிர்வு.

நன்றி நண்பரே உண்மையில் முரளிக்கு இந்தியாவில் நிறைய ரசிகர்கள் உள்ளார்கள்.உங்கள் நாட்டு மாப்பிளை அல்லவா.

நிரூபன் said...

முரளி தரனின் இயல்பான - எளிமையான பண்பினை கட்டுரையினூடாக வெளிப்படுத்தியிருக்கிறீங்க. அவரைப் பற்றிய உங்கள் பகிர்வினூடாக்த் தான் ஒரு சில அறியாத தகவல்களை அறிந்து கொண்டேன்.

K.s.s.Rajh said...

நன்றி நண்பரே.உங்களைப்போன்றவர்களின் ஆதரவே இந்தத்தொடரின் வெற்றியாகும்.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails