Friday, September 23, 2011

என் உயிர் நீதானே.....மனதை உருக்கும் ஓர் காதல் கதை

இந்தக்கதையில் வரும் பெயர்கள் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.
இது ஈழத்தில் நடந்த கதை.அதே உரைநடையில் வருகின்றது


விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட அந்தக்கிராமத்தில் பெரும்பாலும் மக்களின் வாழ்க்கை விவசாயத்தை சார்ந்தே அமைந்திருக்கும்..அதாவது..அங்கு...பல..ஏக்கர்கணக்கில் விவசாயம் செய்யும் முதலாளிமார்கள்..இருப்பார்கள்..அவர்களது வயல்களில் வேலைசெய்யும்.வேலையாட்கள் பெரும்பாலும் அந்த முதலாளிமார்களின் காணிகளில் குடிசை அமைத்து வாழ்வார்கள்..காலம் காலமாக பல விவசாயிகளின் காணிகளில் அப்படி மக்கள் வாழ்ந்துவருவார்கள்..வேலைதேடி வரும் அனைவருக்கும் அடைக்கலம் கொடுக்கும் கிராமம் யார் வந்தாலும்,,விவசாய நிலங்களில் வேலை செய்து தமது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளக்கூடிய..பூமி.அது.




அப்படித்தான் அந்த கிராமம் தனக்கும் ஒரு இடம் தரும் என்ற நம்பிக்கையில் 2003 ம் ஆண்டு..கையில் 1500 ரூபாய் காசுடனும்,தன்னையே நம்பி வந்த புஸ்பாவுடனும்,சுதன் அண்னையும்..அந்தக்கிராமத்தை நம்பி வந்தார்..
இவர்களின் காதலின் ஆரம்பம் தெரியவில்லை..அதனால் இவர் அந்த அக்காவை கூட்டிக்கொண்டு அந்தக்கிராமத்துக்கு வந்ததில் இருந்து கதை நகர்கின்றது..

எங்கள் வீட்டிற்கு அருகில் 40 ஏக்கர் காணி இருந்தது..அதன் உரிமையாளர் வெளிநாட்டில் இருந்தார் அவரது உறவினர் ஒருவரின் பராமரிப்பில்தான் அந்தக்காணி இருந்தது அந்தக்காணியில்.வயல் நிலங்களில் வேலை செய்யும் வேலையாட்கள் பலரின் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தன..
சுதன் அண்ணையும்,புஸ்பா அக்காவை கூட்டிக்கொண்டு.அந்தக்காணிக்குத்தான் அடைக்கலம் தேடி வந்தார்..ஏன் என்றால் புஸ்பா அக்காவின் குடும்பம்..அந்தக்காணியில் தான் முன்பு இருந்தார்கள்..புஸ்பா அக்காவின் தந்தை இறந்ததும்..அவரது தாய் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு..அந்த மண்ணைவிட்டு போய்விட்டார்..ஆனாலும் அவர்களின் உறவினர்கள் பலர்அந்தக்காணியில் வாழ்ந்துவந்தார்கள்..எனவே சுதன் அண்ணாவும்..அவரது ஊரில் தங்கள் காதலுக்கு அவரது குடும்பமும்.புஸ்பா அக்காவின் குடும்பமும்..எதிர்ப்பு தெரிவித்தால்..புஸ்பா அக்காவின் உறவினர்களாவது ஆதரிப்பார்கள் என்று தான் அங்கே வந்தார்...

ஆனால் புஸ்பா அக்காவின் உறவினர்கள் அவர்களை திட்டி தீர்த்துவிட்டணர்..ஆதரவு தேடி வந்தார்.ஆனால் அவர்களும் தங்கள் காதலை ஏற்றுக்கொள்ளாத படியால் என்ன செய்வது என்று தெரியாமல்...அந்தக்காணியில் இருந்த மரத்தின் கீழே இருவரும் அமர்ந்து இருந்தார்கள்.கையிலோ இருப்பது 1500 ரூபாய் காசு...மாற்று உடுப்களும் இல்லை...23 வயது இளைஞன்,அந்த அக்காவுக்கு 22 வயது வரும்..அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தார்கள்.

ஊரில் ஒரே பேச்சு..அடிபடுகின்றது..வைரமுத்துவின் மகளை(புஸ்பா அக்காவின் தந்தை)சுதன் என்ற ஒருத்தன் கூட்டிக்கொண்டு ஓடி வந்து இருக்கான்..வைரமுத்து ஊரில் வாழ்தபோது கூலிவேலை செய்தாலும் கெளரவமான மனுசன் அவர் செத்ததும் அவரது மனிசி தனது புள்ளைகளை கூட்டிக்கொண்டு வேற ஊருக்கு போய் கஸ்டப்பட்டு உழைச்சு..புள்ளைகளை வளத்தது..ஆனா பாருங்க..எவனோ ஒரு பயல் அதில் ரெண்டாவது பெட்டையை(மகள்) கூட்டிக்கொண்டு இங்க வந்து இருக்கான்.
இதான் ஊரில் எல்லா இடமும் கதைத்துக்கொண்டு இருந்தார்கள்..

எல்லோரும் புஸ்பா அக்காவும்,சுதன் அண்ணாவும் அமர்ந்து இருந்த மரத்தடியில் கூடிவிட்டார்கள்..எங்கள் வீட்டிற்கு அருகில் அந்தக்காணி இருந்ததால்..திடீர் என சனம் கூடிவிட்டதால்..என்ன என்று பார்ப்பதற்கு...அம்மாவும்,அன்ரியும்(அம்மாவின் தங்கை)போனார்கள்,நானும் விடுப்பு பார்க்கும் ஆவலில் அவர்களுடன் போய் இருந்தேன்...

அந்தக்காணியில் இருந்த பலர் எங்களின் வயல்களிலும் வேலை செய்பவர்கள்...அம்மா போனதும்..அம்மாவிடம் வந்து பாருங்க அக்கா.இப்படி வைரமுத்துட பெட்டையை(மகள்)இவன் கூட்டிட்டு வந்து இருக்கான்..என்ன செய்யலாம் என்று கேட்டார்கள்..அம்மா சுதன் அண்ணாவிடன் கேட்டார்.தம்பி..நீங்க...இவளை கூட்டிக்கொண்டு வந்தது அவர்களின் குடும்பத்துக்கு தெரியுமா?சுதன் அண்ணா சொன்னார்..ஆம் அக்கா இவளது குடும்பமும்,எனது குடும்பமும்..எங்களை ஏத்துக்ளை(ஏற்றுக்கொள்ளவில்லை)எக்கேடும் கெட்டு நாசமாப்போங்க என்று மண்ணை அள்ளி தூவி வீசிவிட்டார்கள்(அதாவது ஒரு வரை திட்டுவதற்கு மண்ணை அள்ளி சாபம் விடுவது வழக்கம்)..அதான் நான் ..இங்க இவளது சொந்தக்காரங்க இருப்பதால்..கூட்டிட்டு வந்தேன் இவங்களும் இப்ப என்னை ஆதரிக்கல நான் என்ன செய்வது அக்கா என்று சுதன் அண்ணை அம்மாவிடம் சொன்னார்.

அப்பத்தான் நான் சுதன் அண்ணையை முதன் முதலில் பார்த்தேன்...நல்ல அழகானவராக இருந்தார்.எனக்கு அவரைப்பார்க்க நடிகர் சிறிகாந் ஞாபகம் வந்தது ஏன் என்றால் அந்தக்காலப்பகுதியில்தான் சிறிகாந் அறிமுகம் ஆகியிருந்த காலப்பகுதி....அப்பிள் பெண்னே நீயாரோ....என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த காலம் அது.

ஆனால் புஸ்பா அக்கா அவ்வளவு..பேரழகி இல்லை ஆனாலும் அழகு இல்லை என்று சொல்லமுடியாது.

அம்மா சொன்னார் அதான் அவங்கள் குடும்பம் ஏத்துக்க மாட்டேன் என்று சொல்லிட்டாங்களே..நீங்களும் ஆதரிக்காவிட்டால் எங்க போவாங்க பாவம் எதும் பாத்து செய்யுங்க...அம்மா சொன்னதும் அவர்கள் சொன்னர்கள் நீங்க சொல்வதால் சரி அக்கா..இந்தக்காணியில் இருக்கட்டும்...ஆனால் நாங்கள் இவர்களுடன் பேச்சுவார்த்தை(கதைப்பது)வச்சுக்கொள்ள மாட்டேம்..வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன என்ன லவ்வு வேண்டி கெடக்கு..

அம்மாவும் சொன்னார் சரி காலப்போக்கில் எல்லாம் மாறிடும்..கதைக்காட்டியும் பரவாஇல்லை..சண்டைபிடிக்காமல் இருங்க என்று சொன்னார்..புஸ்பா அக்காவின் உறவினர்களும் ஏற்றுக்கொண்டார்கள்..

சுதன் அண்ணா அம்மாவிடம் வந்து சொன்னார்..அக்கா உங்களை எனக்கு முன்னபின்ன தெரியாது..ஆனாலும் எங்களை ஆதரிக்க சொன்னதுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை உங்களை பார்க்க எனக்கு எனது அம்மாவை பாக்கிற மாதிரி இருக்கு என்றார்.அம்மாவும் சரி...எல்லாம் சரியாகிடும்...தம்பி உனக்கும் என் மகனின் வயசுதான் இருக்கும் போல(என் வயசு இல்லை என் அண்ணாவின் வயசு..நான் அப்ப சின்னப்பையன்)எதோ அந்தப்பிள்ளையை கூட்டி கிட்டு வந்துட்ட ஒழுங்கா வச்சி வாழப்பார்.என்று சொல்லிவிட்டு வந்தார்.

சுதன் அண்னைக்கும்,புஸ்பா.அக்காவுக்கும்..எங்கள் சித்தப்பாவின் காணியில் இருந்த கோயிலில்..கல்யாணம் செய்ய எல்லோரும் முடிவெடுத்து..அன்றே கல்யாணம் நடந்தது...ஒரு மஞ்சள் துண்டை..மஞ்சல் கயிற்றில் இணைத்து.தாலியாக சுதன் அண்ணா.புஸ்பா அக்காவின் கழுத்தில் கட்டினார்.
அந்த 40 ஏக்கர் காணியில் புஸ்பா அக்காவின் உறவினர்களும்..ஒரு சிறிய குடிசை அமைத்து..கொடுத்தார்கள்.......

அதில் சுதன் அண்ணாவும்..புஸ்பா அக்காவும் தங்கள் வாழ்க்கையை துவக்கினார்கள்..ஆனால் கல்யாணம் முடிந்து...தங்க ஒரு இடமும் கிடைத்தால் சரியாகிடுமா?இல்லையே..அடுத்து வாழ்வதற்கு இந்த வாழ்க்கையுடன் போராடுவதற்கு.....வேலை வேனும்..சுதன் அண்ணாவிடம் இருந்த 1500 ரூபா காசைவைத்து எத்தின நாளைக்கு வாழ்கையை ஓட்டுவது..
அடுத்து அடுத்துதான் அவர்களுக்கு சோதனைகள் காத்து இருந்தன.

உனக்காக நானும்
எனக்காக நீயும்
உருவாக்கிய பந்தம்
இந்த காதல்-நீயில்லா
நிமிடங்கள் நரகமாயின
உன்னை காணாத நாட்கள்
கருப்பு நாட்களாயின
உன் ஒரு பார்வையில் சிறைப்பட்ட நான் இன்னும் மீளவில்லை மீளவும் விருப்பம் இல்லை நம் காதல் ஒன்ரே போதும் என் பிறவிப்பயனை அடைந்திடவே 


(சுதன் அண்ணாவின் வாழ்க்கைப்போராட்டம் தொடரும்...)


பிற்குறிப்பு-இந்தக்கதையை மெருகூட்ட மேல உள்ள கவிதையை எழுதித்தந்தவர்..அன்பு நண்பி திவாகினி.


எப்படி தொப்பி நல்லா இருக்கா?..பாஸ் உடன் டூர் போனபோது வாங்கினது.சரி உங்கள் வேலையை மறக்காதீங்க அண்ணாக்களே..ஹி.ஹி..ஹி.ஹி




சகோதரர் தனி மரத்தின் வேண்டு கோளுக்கு அமைவாக இண்ட்லி ஓட்டு அளிப்பதற்கான லிங் இங்கே

Post Comment

49 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்..

நிரூபன் said...

கதை சோகமான நாயகனின் வாழ்க்கையினைச் சுமந்து நகர்கிறது.

ஆரம்பம் அசத்தலாக வந்திருக்கிறது.

இடை நடுவிலிருந்து கதை சொல்லி, மையப் புள்ளிக்குள் நம்மை அழைத்துச் செல்வது சிறப்பாக இருக்கிறது,.

கவிதையினை எழுதித் தந்த திவாகினிக்கு வாழ்த்துக்கள்.

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
இனிய காலை வணக்கம் பாஸ்.///

காலை வணக்கம் பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
கதை சோகமான நாயகனின் வாழ்க்கையினைச் சுமந்து நகர்கிறது.

ஆரம்பம் அசத்தலாக வந்திருக்கிறது.

இடை நடுவிலிருந்து கதை சொல்லி, மையப் புள்ளிக்குள் நம்மை அழைத்துச் செல்வது சிறப்பாக இருக்கிறது,.

கவிதையினை எழுதித் தந்த திவாகினிக்கு வாழ்த்துக்கள்////

தேங்ஸ் பாஸ்.உங்கள் வாழ்த்து அவங்களிடம் போய்ச்சேரட்டும்...

குறையொன்றுமில்லை. said...

கதை ஆரம்பம் நல்லா இருக்கு. வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்றவரின் கதை போல நினைக்கத்தோனுது. தொடருங்க.

Mathuran said...

கதையா.. இருங்க படிச்சிட்டு வாறன்

Mathuran said...

ஆரம்பமேஅசத்தலாக இருக்கிறது... அடுத்தடுத்த பகுதிகளுக்காக வெயிட்டிங்

Unknown said...

ஆரம்பமே அசத்தல். உண்மைக்கதைகள் தான் சுவாரசியமானவை அது எமது மண்ணின் மொழி,எழுத்து நடையில் மேலும் சிறப்பாக இருக்கும்.

காட்டான் said...

வாழ்துக்கள் மாப்பிள கதையை இடையில் இருந்து நகர்த்தி அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்.. அதுவும் மொழிநடை எனக்கு பிடித்துள்ளது.. தொடர்ந்து வருவேன்... இடை இடையே மற்ற பதிவுகளையும் போடுங்கள்.. இனி சுதனும் புஸ்பாவும் எங்களோடு பயணிக்கபோகிறார்கள்...!!

அது சரி மாப்பிள  புஸ்பா,சுதனின் உண்மை பெயரென்ன..? சம்பவம் நடந்த ஊர் பெயரென்ன..!!?? அதையும் சொல்லலாம்தானே..!!!!!!!!!??? ஹி ஹி ஹி ஹி

தனிமரம் said...

நன்றி ராச் முதலில் வேண்டுதலுக்கு செவிமடுத்து ஓட்டுப்பட்டையை இணைத்தற்கு!
நன்றி தோழியின் கவிதைக்கு கவிதையும் ஆட்கொள்ளச் சொல்லியே தவம்கிடக்கு!

தனிமரம் said...

மீண்டும் பாரதிராஜாவின் பரிவாரங்களை யாபகப்படுத்தும் இனிய கிராமிய மணம்கமலும் கதையை சமூகத்தின் நடைமுறை மாந்தர்களை அழகிய மண்வாசனையுடன் கொண்டு வந்திருக்கிறீன்கள்! வாழ்த்துக்கள்!

SURYAJEEVA said...

இன்னிக்கு முஸ்கி புஸ்கி டிஸ்கி எதையும் காணோம்?

தனிமரம் said...

கதையின் பகுதியில் இருந்து கொஞ்சம் வெளியில் வந்து இதைப்பற்றிய என்பார்வையையும் கலக்கின்றேன்.

நீங்கள் சொல்லும் பாத்திரங்களுடன் சிலகாலம் நானும் பழகியிருக்கின்றேன் அதற்காக என் வயதும் அதுவொன்று இடைபோடாதீர்கள்/ஹீ
சமூகத்தின் பார்வையில் சுதனும் புஸ்பாவும் இப்படி பலரை  நானும் பார்த்திருக்கின்றன் இது இவர்களின்(சமூகம்) சார்ந்த  அறியாமையில் தொடர்ந்து இதே பிழையை விடுகின்றார்கள் .ஆசையைத் தாண்டி நல்ல  முடிவு எடுப்பதாக நினைத்து விடும் பிழைகள் அதிகம். கல்வியின் /பொருளாதாரத்தின் சூட்சுமங்கள் தெரியாதவர்கள் இவர்களுக்கு காலாகாலமாக கல்வியும்  சமுக விளிப்புணர்வும் சரியாக போய்ச் சேரவில்லை அதை கொடுப்பதற்கு நல்ல நிறுவனங்கள் தேவை அப்போதுதான் நாளைய சந்ததிசரி ஒளிமயமான பாதையில் போகும் இக்கதையுடன் தொடர்புடைய  இன்னொரு விடயத்தை நிரூபனின் பதிவு ஒன்றில் ஓட்டைவடையும் காரசாரமான விடயத்தை முன்வைத்திருந்தார். 
இது கதையைத் தாண்டிய பின்னூட்டம் பலருக்கு நம் சமூகத்தின் இன்னொரு முகம் தெரிவதற்கு சாத்தியம் குறைவு என்பதால் இங்கு இணைக்கின்றேன் ஏன் எனில் எல்லோரும் எல்லா ஊர்களையும்  அகப்புறம் அறிந்து கொண்டதில்லையே! முற்பட்டதும் இல்லை சிலருடன் தொழில் நிமித்தம் ஏற்பட்ட என் அனுபவங்கள் அந்த வாழ்க்கையின் மாந்தர்களை என் கண்முன்னே உங்கள் பதிவு மீள் கொண்டுவருகின்றது!

/சென்பு நெளியும் என்பதற்காக சில அவலங்களை பார்த்துக் கொண்டு போக முடியாது ராச்  பின்னூட்டம் கதையைப் பாதிக்கும் எனின் தாராளமாக தனிக்கை செய்யளாம்! 
நட்புடன் தனிமரம்!

காந்தி பனங்கூர் said...

காதல் என்றாலே கஷ்டம்னு ஆகிப்போச்சு, இதில் இவங்க வாழ்க்கை மட்டும் விதிவிலக்கா என்ன. சோகமாக ஆரம்பிக்கும் கதை(உண்மை) சுகமாக முடிந்தால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் பாஸ்

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
கதை ஆரம்பம் நல்லா இருக்கு. வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்றவரின் கதை போல நினைக்கத்தோனுது. தொடருங்க////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
கதையா.. இருங்க படிச்சிட்டு வாறன்////

வாங்க

K.s.s.Rajh said...

@ M.Shanmugan கூறியது...
ஆரம்பமே அசத்தல். உண்மைக்கதைகள் தான் சுவாரசியமானவை அது எமது மண்ணின் மொழி,எழுத்து நடையில் மேலும் சிறப்பாக இருக்கும்//////

தேங்ஸ் நண்பா

K.s.s.Rajh said...

@ காட்டான் கூறியது...
வாழ்துக்கள் மாப்பிள கதையை இடையில் இருந்து நகர்த்தி அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்.. அதுவும் மொழிநடை எனக்கு பிடித்துள்ளது.. தொடர்ந்து வருவேன்... இடை இடையே மற்ற பதிவுகளையும் போடுங்கள்.. இனி சுதனும் புஸ்பாவும் எங்களோடு பயணிக்கபோகிறார்கள்...!!

அது சரி மாப்பிள புஸ்பா,சுதனின் உண்மை பெயரென்ன..? சம்பவம் நடந்த ஊர் பெயரென்ன..!!?? அதையும் சொல்லலாம்தானே..!!!!!!!!!??? ஹி ஹி ஹி ஹி.....//////

நன்றி மாமா..ஆனால்..இப்படியான கதைகளில் ஊர்களின் பெயர்களையும் சொல்வதை தவிர்கவேண்டும் என்று சொல்லித்தந்ததே...நீங்களும்,செங்கோவி பாஸ்சும் தான்..ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
நன்றி ராச் முதலில் வேண்டுதலுக்கு செவிமடுத்து ஓட்டுப்பட்டையை இணைத்தற்கு!
நன்றி தோழியின் கவிதைக்கு கவிதையும் ஆட்கொள்ளச் சொல்லியே தவம்கிடக்கு////

நன்றி அண்ணே..ஆமா..கவிதை பத்தி என்ன சொல்லுறீங்க எனக்கு ஒன்னும் புரியலையே...ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
மீண்டும் பாரதிராஜாவின் பரிவாரங்களை யாபகப்படுத்தும் இனிய கிராமிய மணம்கமலும் கதையை சமூகத்தின் நடைமுறை மாந்தர்களை அழகிய மண்வாசனையுடன் கொண்டு வந்திருக்கிறீன்கள்! வாழ்த்துக்கள்/////

தேங்ஸ் அண்ணா

K.s.s.Rajh said...

@
suryajeeva கூறியது...
இன்னிக்கு முஸ்கி புஸ்கி டிஸ்கி எதையும் காணோம்/////

ஹி.ஹி.ஹி.ஹி...தேவை வரவில்லை நண்பா..

K.s.s.Rajh said...

@
காந்தி பனங்கூர் கூறியது...
காதல் என்றாலே கஷ்டம்னு ஆகிப்போச்சு, இதில் இவங்க வாழ்க்கை மட்டும் விதிவிலக்கா என்ன. சோகமாக ஆரம்பிக்கும் கதை(உண்மை) சுகமாக முடிந்தால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் பாஸ்/////

தேங்ஸ்..வெயிட் பன்னுங்க கிளைமாக்ஸ்க்காக.............

K.s.s.Rajh said...

@தனிமரம்

உங்கள் கருத்து சரியானது..பாஸ்..எனது கருத்தும் உங்களுடையது மாதிரித்தான்..ஆனால் நான் இந்தப்பதிவில் இவர்கள் செய்வது சரி என்று எதுவும் சொல்லவில்லை...சொல்லப்போவதும் இல்லை ஏன் என்றால் இது ஒரு உண்மைக்கதை...ஒரு பின் தங்கிய சமூகத்தின்..வாழ்க்கை முறைதான் இதில் அடங்குகின்றது...இந்தக்கதையை.
முழுமையாக வாசித்து முடித்தபின்..உங்கள் கருத்து சரியானது..என...தானாக தெரியவரும்...நான் இந்த சம்பவத்தை எழுதும் நோக்கம்..ஒரு காதல் கதையை பதிவவேண்டும் என்பது இல்லை...இதை..வரும் அத்தியாயங்களில்..தெரிந்துவிடும் பாஸ்..பொறுமையாக வெயிட்பன்னுங்கள்..உங்கள் கருத்துடன் ஒன்றிய சம்பவம்தான் இது..

சென்னை பித்தன் said...

தொடரட்டும் கதை.நானும் தொடர்கிறேன்.

Anonymous said...

இனிய தொடக்கம்... தொடருங்கள்...காதல் கசக்காதய்யா...

Unknown said...

ஓட்டிட்டேன்!

Anonymous said...

கதை சுவாரஸ்யமாக போகுது சார்.

வணக்கம் சாரே நான் பதிவுலகில் காலடி எடுத்துவைத்து இருக்கும் ஒரு குழந்தை எனக்கும்..உங்கள் ஆதரவைத்தாருங்கள்..

செங்கோவி said...

அருமையாக ஆரம்பித்துள்ளீர்கள்..அடுத்து வரும் பகுதிக்கு வெயிட்டிங்.

செங்கோவி said...

அருமையாக ஆரம்பித்துள்ளீர்கள்..அடுத்து வரும் பகுதிக்கு வெயிட்டிங்.

செங்கோவி said...

காட்டான் மாமா உங்களை வம்புல மாட்டணும்னே பேர் - ஊரைக் கேட்கார்..சொல்லிடாதீங்க கிஸ் ராஜா.

கோகுல் said...

எழுத்துநடை அருமை போங்க!கலக்கலான ஆரம்பம்!

பிரணவன் said...

காதல் யாரையும் விட்டுவைக்கவில்லை போல . . . சகா சோகமான கதைக்களமா? . . .நல்ல எழுத்து நடை

நிகழ்வுகள் said...

ஏனுங்கோ பாஸ் உங்க அந்த ஊரில அதுக்கு முன்னாடி யாரும் காதலிச்சது இல்லையா ,இல்லை சிவாஜி mgr படங்களில் காதல் காட்சி வந்தால் எழும்பி ஓடிவிடுவார்களா??

ம்ம் கிராம புறங்கள் இப்படி தான், எல்லாத்துக்கும் கலாசாரம் அது இது எண்டு அலம்புவினம்))

தொடருகிறேன் ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான கிராமிய காதல் கதைய தொடங்கி இருக்கீங்க........... தொடர்கிறேன்..

K.s.s.Rajh said...

சென்னை பித்தன் கூறியது...
தொடரட்டும் கதை.நானும் தொடர்கிறேன்///

நன்றி ஜயா.

K.s.s.Rajh said...

@
ரெவெரி கூறியது...
இனிய தொடக்கம்... தொடருங்கள்...காதல் கசக்காதய்யா..////

தேங்ஸ் நண்பா

K.s.s.Rajh said...

@மைந்தன் சிவா கூறியது...
ஓட்டிட்டேன்////

என்னது ஓடிட்டீங்களா?யார் கூட.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் கூறியது...
கதை சுவாரஸ்யமாக போகுது சார்.

வணக்கம் சாரே நான் பதிவுலகில் காலடி எடுத்துவைத்து இருக்கும் ஒரு குழந்தை எனக்கும்..உங்கள் ஆதரவைத்தாருங்கள்.///

நன்றி சார் உங்களிடம் ஒரு கேள்வி..உண்மையில் நீங்கள் யார்?

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
அருமையாக ஆரம்பித்துள்ளீர்கள்..அடுத்து வரும் பகுதிக்கு வெயிட்டிங்//

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@செங்கோவி கூறியது...
காட்டான் மாமா உங்களை வம்புல மாட்டணும்னே பேர் - ஊரைக் கேட்கார்..சொல்லிடாதீங்க கிஸ் ராஜா///

சிக்குவமா?..............

K.s.s.Rajh said...

கோகுல் கூறியது...
எழுத்துநடை அருமை போங்க!கலக்கலான ஆரம்பம்///

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
பிரணவன் கூறியது...
காதல் யாரையும் விட்டுவைக்கவில்லை போல . . . சகா சோகமான கதைக்களமா? . . .நல்ல எழுத்து நடை///

தேங்ஸ் மச்சி

K.s.s.Rajh said...

@
நிகழ்வுகள் கூறியது...
ஏனுங்கோ பாஸ் உங்க அந்த ஊரில அதுக்கு முன்னாடி யாரும் காதலிச்சது இல்லையா ,இல்லை சிவாஜி mgr படங்களில் காதல் காட்சி வந்தால் எழும்பி ஓடிவிடுவார்களா??

ம்ம் கிராம புறங்கள் இப்படி தான், எல்லாத்துக்கும் கலாசாரம் அது இது எண்டு அலம்புவினம்))

தொடருகிறேன் ..///

ஏனய்யா இப்படி பாயுறீங்க..காதலிச்சு கல்யாணம் செய்தவங்களே காதலை பல இடங்களில் எதிர்க்கின்றனர்...பொறுமையா..அடுத்த பகுதிகளை வாசிங்க..ஒரு பின் தங்கிய..மக்களின் வாழ்கைதான் இந்தக்கதை

K.s.s.Rajh said...

@பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அருமையான கிராமிய காதல் கதைய தொடங்கி இருக்கீங்க........... தொடர்கிறேன்.///

வாங்க தலைவா..அடிக்கடி..வாங்க

M.R said...

tamil manam

indli
voted

M.R said...

உங்களிடமிருந்து வெறும் காதல் கதையாக வருகிறது .

உங்கள் ஊர் பெயர் காதல் தேசமா

ஹா ஹா

அருமையாக உள்ளது நண்பரே
தொடருங்கள்

K.s.s.Rajh said...

@ M.R கூறியது...
tamil manam

indli
voted////

தேங்ஸ் நண்பா

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
உங்களிடமிருந்து வெறும் காதல் கதையாக வருகிறது .

உங்கள் ஊர் பெயர் காதல் தேசமா

ஹா ஹா

அருமையாக உள்ளது நண்பரே
தொடருங்கள்////

தேங்ஸ் தொடர்ந்து வாருங்கள் நண்பா

K.s.s.Rajh said...

@ K.s.s.Rajh கூறியது...
@
M.R கூறியது...
உங்களிடமிருந்து வெறும் காதல் கதையாக வருகிறது .

உங்கள் ஊர் பெயர் காதல் தேசமா

ஹா ஹா////

ஹி.ஹி.ஹி.ஹி.......

சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளே..படைப்ப்புக்கள் ஆகின்றன நண்பா

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails