Friday, July 01, 2011

சனத் ஜெயசூர்யா இலங்கை கிரிக்கெட்டின் நாயகன் (By-K.s.s.Rajh)




சனத் ஜெயசூர்யா இந்தப்பேரை கேட்டால் ஒரு காலத்தில் எதிரணி வீரர்களுக்கு கலக்கம் தனது அதிரடி ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களை தன்பக்கம் இழுத்த வீரர் இன்று பலர் இவரை வைத்து காமடி பன்னுகின்றார்கள்.கிரிக்கெட் உலகில் தோன்றிய மிகச்சிறந்த துடுப்பாட்டவீரர்களில் சனத்தும் ஒருவர்.


 1989 ல் அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமானர் இவரது முதல் டெஸ்ட் போட்டி 1990-91 காலப்பகுதியில் ஹமில்ரனில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியாகும்.1996 ல் இலங்கை அணி உலகக்கிண்ணத்தை வெல்ல இவரது அதிரடி கலந்த சகலதுறை ஆட்டம் முக்கியமானது ஆரம்பத்தில் மத்திய வரிசையில் துடுப்பெடுத்து ஆடிய சனத் பிறகு ஆரம்பதுடுப்பாட்டவீரராக மாறியபின் தனது அதிரடிதுடுப்பாட்டத்தினால் மிகச்சிறந்த ஆரம்பதுடுப்பாட்ட வீரராக மாறினார் .


எனக்கு கிரிக்கெட்பிடிப்பதற்கு சனத்தின் அதிரடி துடுப்பாட்டமும் ஒரு காரணம். நான் சின்னப் பையனாக இருக்கும் போது சனத்தின் அதிரடிக்காகவே கிரிக்கெட் போட்டிகளை பார்பதுண்டு.2000 ம் ஆண்டு என்று நினைக்கிறேன் இலங்கையில் நடைபெற்ற ஒரு முக்கோணத் தொடர் நியூஸ்லாந்து,இந்தியா, இலங்கை,அணிகள் பங்கு பற்றிய போட்டித்தொடர் நியூஸ்லாந்து அணிக்கு பிளமிங்கும் இந்திய அணிக்கு சவ்ரவ் கங்குலியும் இலங்கை அணிக்கு சனத்தும் தலைமைதாங்கினர் அந்த போட்டித்தொடரில் இறுதிப்போட்டி என நினைக்கின்றேன் இந்தியாவுக்கு எதிராக சனத் 99 ஒட்டங்களைப்பெற்றார் சனத் ஆட்ட்ம் இழக்கும் வரை கங்குலியின் முகத்தில் மகிழ்சியைக்கானவில்லை.அதைவிட 1997 ல் இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற அந்த உலகசாதனை டெஸ்போட்டியில் சனத்தும் ரொசான் மாகாநாமவும் இரண்டாவது விக்கெட்டுக்கு 576 ஒட்டங்களை குவித்தார்கள் இது அப்போது டெஸ்போட்டிகளில் எந்த ஒரு விக்கெட்டுக்குமான அதிகபட்ச இணைப்பாட்ட சாதனை ஆகும்.



அத்ததோடு இலங்கை பெற்ற 952 ஒட்டங்கள் டெஸ்போட்டிகளில் ஒரு இனிங்சில் பெற்ற அதிகூடிய ஒட்டங்களாக இன்றும் உலக சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது(ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஒட்டங்கள்443/இருபது ஒவர்போட்டிகளில்அதிக ஒட்டங்கள் 260 இந்த சாதனைகளும் இலங்கை அணிவசம் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது).சனத் பெற்ற 340 ஒட்டங்கள் இலங்கை வீரர்ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் பெற்ற அதிகூடிய ஒட்டம் ஆகும் இந்த சாதனை நீண்டகாலம் நிலைத்து இருந்தது. பிறகு அந்த எந்த ஒரு விக்கட்டுக்குமான இணைப்பாட்ட சாதனையை மகேல ஜெயவர்தனவும் குமார் சங்கக்காரவும் 3 ஆவது விக்கட்டுக்காக தென்னாபிரிக்காவுக்கு எதிராக 626 ஒட்டங்களைக் குவித்து முறியடித்தார்கள்.(ஆனால் 2 விக்கட்டுக்கான அதிகபட்ட இணைப்பாட்ட சாதனை இன்னும் முறியடிக்கபடவில்லை )இதில் மகேல ஜெயவர்தன 374 ஒட்டங்களை குவித்து சனத்தின் சாதனையை முறியடித்தார்(சனத் அந்த 340 ஒட்டம் பெற்ற உலகசாதனை டெஸ்போட்டியில்தான் மகேல ஜெயவர்தன அறிமுகமானார்என்பது குறிப்பிடத்தக்கது).

 
இந்திய ஜாம்பவானுடன் இலங்கைஅணியின் நாயகன் சனத்
இலங்கை அணியில் தவிர்க முடியாத வீரராக இருந்த சனத் அப்போது ஒரு நாள் போட்டிகளில் உலக சாதனையாக இருந்த சயிட் அன்வரின் 194 ஒட்டங்களை முறியடிக்க ஜெயசூர்யாவுக்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது ஆனால் சனத் இந்தியாவுக்கு எதிராக 189 ஒட்டங்களை பெற்று ஆடிக்கொண்டிருந்த போது கங்குலியின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்ததனால் முறியடிக்க முடியவில்லை. இதில் இன்னும் ஒன்றை குறிப்பிடவேண்டும். 1997ல்சயிட் அன்வர் 194 ஒட்டங்களைப் பெற்று ஆடிக்கொண்டிருக்கும் போதும் 200 ஒட்டங்களை பெற்றுவிடுவார் என்று எல்லோறும் எதிர்பார்து இருக்கும் போது ஒரு பந்தை ஒங்கி அடித்தார் அது கங்குலியின் கையில் கேட்சாக மாறியது குறிப்பிடத்தக்கது.சயிட் அன்வரின் இந்த சாதனை பலகாலம் நிலைத்து இருந்தது பிறகு ஒரு முறை கங்குலி 183 ஒட்டங்களை பெற்று ஆட்டம் இழந்தார் அவராலும் இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை பிறகு பல வீரர்கள் இந்த சாதனைக்கு கிட்ட வந்தாலும் அதை முறியடிக்க முடியவில்லை தோனி கூட ஒரு முறை 183 ஒட்டங்களை பெற்று இருந்த போது இந்தியா வெற்றி பெற்றதனால் அவரால் முறியடிக்க முடியவில்லை சச்சினால் கூட அப்போது முறியடிக்க முடியவில்லை பிறகு 2009 ல் சிம்மாவேயின் Charles Coventry தனது முதலாவது ஒருநாள் சதத்தையே சாதனை சதமாக்கி ஆட்டம் இழக்காமல் 194 ஒட்டங்களை பெற்று சயிட் அன்வரின் சாதனையை சமப்படுத்தினார் ஆனால் அவரால் துரதஸ்டவசமாக முறியடிக்க முடியவில்லை பிறகு 13 வருட அன்வரின் சாதனை சச்சினால் முறியடிக்கவேனும் என்று இருந்துள்ளது போலும் 2010 ல் சச்சின் சயிட் அன்வரின் சாதனையை முறியடித்து 200 ஒட்டங்கள் பெற்றார்


கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த இலங்கை கிரிக்கெட்டின் நாயகன் சனத்தின் கடைசிகால கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு மகிழ்சியாக இல்லை பலமுறை அணியில் இருந்து நீக்கப்பட்டு பிறகு தற்போது இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு.  இங்கிலாந்துக்கு,எதிரான
(29-6-2011)முதலாவது ஒருநாள் போட்டியுடன்சனத் சர்வதேசகிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார்.சனத் 42 வயதுவரை விளையாடாமல் முதலிலேயே ஒய்வு பெற்று இருந்தால் இப்போது அவரை வைத்து பலர் காமடி பன்ன மாட்டார்கள் ஒரு சாதனை நாயகன் அதிரடி மன்னன் தன் கடைசி போட்டியில் பெற்றது வெறும் 2 ஒட்டங்கள் தான்அத்தோடு ஒரு விக்கெட்டையும் விழுத்தினார். ஆனால் உலகப்புகழ் துடுப்பாட்டமேதை பிரட்மன் தனது கடைசி இனிங்சில் ஒட்டம் எதுவும் பெறாமல் தான் ஆட்டம் இழந்தார்.அதற்காக சனத்தை பிரட்மனுடன் ஒப்பிடமுடியாது .ஆனால் சனத் மிகச்சிறந்த ஒரு சகலதுறை வீரர் என்பதிம் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது அத்தோடு சனத் மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சாளர் பல போட்டிகளில் தனது பந்து வீச்சின் மூலம் இலங்கை அணியை வெற்றி பெறவைத்துள்ளார்.முரளி என்ற சுழல் ஜாம்பவானுடன் இணைந்து இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சுக்கு வலு சேர்த்தார்.அதிரடி என்றதும் ஞாபகத்துக்கு வரும் கிரிக்கெட் வீரர்களில் சனத்தும் நிச்சயம் இருப்பார் இலங்கை கிரிக்கெட்டில் சனத் என்றும் மறக்கப்படமுடியாத ஒரு வீரர்.கிரிகெட் உலகில் என்றும் சனத்ஜெயசூர்யாவின் பெயர் நிலைத்து இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

Batting and fielding averages
MatInnsNORunsHSAveBFSR100504s6sCtSt
Tests11018814697334040.07143191059780
ODIs445433181343018932.361472391.21286815002701230
T20Is313036298823.29487129.1504762340
First-class264417331478234038.4929701620
List A556541251610518931.2131821530
Twenty20939262060114*23.951448142.26111227100160
Bowling averages
MatInnsBallsRunsWktsBBIBBMAveEconSR4w5w10
Tests11014081883366985/349/7434.342.4683.5620
ODIs44536814874118713236/296/2936.754.7846.0840
T20Is3124371456193/213/2124.007.3719.5000
First-class2641522167902055/3433.122.6774.220
List A55618167143964136/296/2934.854.7543.91250
Twenty20937512811652644/244/2425.817.7320.0100


Post Comment

2 comments:

பாலா said...

இந்திய கிரிக்கெட் ரசிகனாக முன்பெல்லாம் அவர் எப்போது அவுட் ஆவார் என்று காத்திருப்போம். ஆனால் வேறு அணிகளுடன் ஆடும்போது அவரது ஆட்டத்தை ரசித்ததுண்டு. நீண்ட காலம் ஆடியது சரியல்ல என்பது என் கருத்து. கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒரு நபர் சனத்.

K.s.s.Rajh said...

நன்றி நண்பரே. நீண்ட காலம் ஆடியது சரியல்லதான் கொஞ்சகாலத்திற்கு முன்பே ஒய்வு பெற்று இருக்கவேண்டும்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails