Wednesday, July 20, 2011

இப்படியும் உங்கள் பேஸ்புக் கணக்கு ஹக்கிங்(Hacking)செய்யப்படலாம் எச்சரிக்கை

மீண்டும் ஒரே நாளில் இரண்டு பதிவுகள்.இந்தப்பதிவை எழுதவேண்டும் என நேற்று நினைத்தேன் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.




நேற்று எனது நண்பரின் பேஸ்புக் இல் இருந்து எனது பேஸ்புக்கிற்கு ஒரு மேசேஜ் வந்து இருந்தது அதில் ஒரு லிங்(Ling) இனைக்கப்பட்டு இருந்தது அதை நான் கிளிக்செய்தபோது ஒரு பக்கம் ஒப்பின்(open) ஆகி பேஸ்புக்கின் user name,password  கேட்டது நானும் நண்பன் தான் எதோ லிங் அனுப்பி இருக்கின்றான் என்று user name,password கொடுத்தேன் உடனே கூகுள் கணக்கின்  user name,password கேட்டது
உடனே எனக்கு சந்தேகம் வந்துவிடது நண்பனுக்கு போன் செய்து கேட்டேன் மச்சான் என்ன மேசேஜ் சில் ஒரு லிங்(Ling)அணுப்பி இருக்கின்றாய்.அவன் சொன்னான் நான் அனுப்பவில்லைடா நான் எனது பேஸ்புக் திறந்து (open) சில நாட்கள் ஆகின்றது .இப்ப திறந்தால்(open)திறக்கமுடியவில்லை யாரோ ஹக்(Hack) பன்னிட்டாங்க என்றான்.நான் உஷார் ஆகிவிட்டேன் உடனே எனது பேஸ்புக்,password  ஜ மாற்றி விட்டேன்.
Note-பேஸ்புக்கை ஹக்கிங்(Facebook Hacking)என்றால் 
அறியாதவர்களுக்காக ஒரு எளிமையான விளக்கம் பேஸ்புக் ஹக்கிங் என்றால் ஒருவரது பேஸ்புக் கணக்கை முடக்குதல் அல்லது கடவுச்சொல்லை(password)கண்டு அறிதல்
இதில் கவனிக்க படவேண்டிய விடயங்கள்

  1. அவன் ஒரு வேளை தனது கணக்கு ஹக்(Hack)பன்னப்பட்டுள்ளது என்று பொய் சொல்லாம்,ஆனால் அவனது கணக்கு ஹக்கிங்(Hacking) செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது
  2. இப்படி லிங்(Ling)ஒன்று அனுப்பி ஹக்கிங்(Hacking)பன்னுவதற்கு சரியான html பற்றிய அறிவு மற்றும் இனையதளம் வடிவமைப்பில் கில்லாடியாக இருக்கவேண்டும்.ஆனால் எனது நண்பனுக்கு html என்றால் என்ன என்பதே தெரியாது அத்தோடு அவன் எனது நீண்டகால நண்பன் எனவே துளியும் அவன் லிங்(Ling)அனுப்ப சந்தர்ப்பம் இல்லை எனவே அவனது பேஸ்புக் ஹக்கிங்(Hacking) செய்யப்பட்டது உண்மைதான்.
  3. இன்னும் ஒன்று இப்படி லிங்(Ling)அனுப்பி ஹக்கிங் (Hack) பன்னலாம் என்று நான் வாசித்து இருக்கின்றேன் ஆனாலும் நண்பனின் பேஸ்புக்கில் இருந்து வந்ததால் ஜோசிக்காமல் அதை கிளிக்பன்னி user name,password கொடுத்து விட்டேன் நல்லாகாலம் இடையில் நான் உஷார் ஆகி அவனுக்கு போன் பன்னிக்கேட்டது.
  4. எனவே உங்களுக்கும் இப்படி மேசேஜ்சில் லிங் எதாவது வந்தால் உடனே கிளிக்பன்னி  user name,password ஜ கொடுக்க வேண்டாம் நண்பர் இடத்தில் இருந்து வந்தால் அவர்களிடம் அவர்கள்தான் அனுப்பினார்களா என்று முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  5. எமது பேஸ்புக் கணக்கில் இருக்கும் எல்லா நண்பர்களும் எமக்கு தெரிந்தவர்களாக இருக்க மாட்டார்கள் எனவே தெரியாதவர்களின் கணக்கில் இருந்து வரும் மேசேஜ்சில் வரும் லிங்கை(Ling)கிளிக்பன்னவேண்டாம்.
  6. பேஸ்புக்கில் முகத்தை மறைத்து போலிப் பெயர்களில் உலாவருபவர்களை நண்பர்கள் பட்டியலில் சேர்க்காமல் தவிர்துவிடுவது நல்லதாகும்.
  7. எந்தப்பிரச்சனையும் வந்தபின் வருந்துவதைவிட வருமுன் காப்பதே சிறந்தது
அப்படியே உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லிவிட்டுப்போங்க

Post Comment

8 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்..
பகிர்வுக்கு நன்றி...

K.s.s.Rajh said...

நன்றி நண்பரே.

Anonymous said...

///பேஸ்புக்கில் முகத்தை மறைத்து போலிப் பெயர்களில் உலாவருபவர்களை நண்பர்கள் பட்டியலில் சேர்க்காமல் தவிர்துவிடுவது நல்லதாகும்./// இது கண்டிப்பாக செய்யவேண்டியது .

விழிப்பூட்டும் பதிவு .

பாலா said...

இந்த மாதிரி நிறைய தடவை எனக்கு மெயில் வந்திருக்கிறது. எனக்கு பதிவிட தோன்றவில்லை. தங்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே...

K.s.s.Rajh said...

@கந்தசாமி சொன்னது
நன்றி நண்பரே

K.s.s.Rajh said...

@பாலா சொன்னது
நன்றி பாலா அண்ணா

பிரியதர்சினி.மாணிக்கவாசகம் said...

பயன்னுள்ள தகவல்

Anonymous said...

பேஸ்புக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்..நன்றி நண்பரே.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails