Friday, December 30, 2011

(பகுதி-3)அன்பைத் தேடும் இதயம்

கலியாண வீடு கலகலப்பாக இருந்தது. காயத்திரி மனதில் கோகுலன் மேல் காதல் அரும்பியிருந்தது ஆனால் அதை சொல்லாமா வேண்டாமா என்று பலவாறு யோசித்து கொண்டு இருந்தாள்.பார்த்த இரண்டு நாளில் காதல் என்றால் ஏற்றுக்கொள்வானா என்ற சந்தேகம்.அவனிடம் காதலை சொல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாள்.

கிளிநொச்சியில் இருந்து கிட்ட தட்ட 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுக்குடியிருப்பு என்ற இடம்தான்.கலியாணம் நடக்கு காயத்திரியின் மாமாவின் மூத்த மகன் இன்பாவுக்கு பெண் எடுத்த இடம் எனவே பெண்வீட்டில் இருந்து ஏதோ கொஞ்சம் பொருற்கள் எடுக்க வேண்டும் யாரையாவது அனுப்ப முடியுமா என்று பெண்ணின் தகப்பன் காயத்திரியின் மாமாவிடம் கேட்க மாமாவும் சதீஸை அனுப்புகின்றேன் சதீசை அனுப்பிவைத்தார் சதீஸுடன் கோகுலனும் கிளம்பத்தயார் ஆனான்.

கோகுலனும் சதீஸுடன் செல்வதை கண்ட காயத்திரி மாமாவிடம் சென்று மாமா நானும் சதீஸுடன் போயிட்டு வாரன் மாமா எனக்கு ஊர் பாக்கனும் என்றாள்.மாமாவும் தன் மகன் சதீஸ்க்குத்தான் காயத்திரியை கட்டிவைப்பது என்ற ஆசையில் இருந்த படியால் சரி போயிட்டு வாம்மா என்றார்.


சதீஸ்,காயத்திரி,கோகுலன் மூவறும் காயத்திரியின் மாமாவின் ஹயஸ்வானில் பயணமாயினர்.கோகுலன் வாகனத்தை செலுத்த காயத்திரியும் சதீஸும் பின் சீட்டில் அமர்ந்து இருந்தனர்.வாகனத்தை செலுத்திக்கொண்டு இருக்கும் போது எதேர்ச்சையாக கண்ணாடியில் பின்னுக்கு இருந்த காயத்திரியை பார்த்தான் கோகுலன் சிகப்பு நிற சுடிதாரில் வானத்தில் இருந்து இறங்கிவந்த தேவதை ஒருத்தி. பின் சீட்டில் அமர்ந்து இருப்பதை போல அவ்வளவு அழகாக தெரிந்தாள் காயத்திரி.
கோகுலன் கண்ணாடியில் அவளை ரசித்த படியே வாகனத்தை செலுத்திக்கொண்டு இருந்தான்.

வானம் செலுத்துவது என்பது ஒரு கலை வாகனம் செலுத்தும் எல்லோறும் திறமையான சாரதிகளாக இருக்க முடியாது.ஆனால் ஒரு சாரதியின் மனதில்  எப்பவும் தன்னை நம்பி பலர் தன்னுடன் பயணிக்கின்றனர்.என்ற உணர்வு இருக்க வேண்டும் அதைவிட வாகனத்தை செலுத்தும் போது கவனம் வேறு எங்கையும் சிதறக்கூடாது.ஆனால் கோகுலனின் கவனம் காயத்திரியின் அழகில் சிதறி இருந்தது.பின் சுதாகரித்து கொண்டவன் தான் வாகனம் செலுத்திக்கொண்டு இருக்கின்றேன் என்ற உணர்வு அப்பதான் அவனுக்கு வந்தது.காயத்திரியை கண்ணாடியில் பார்பதைவிட்டுவிட்டு முழு கவனத்தை வாகனம் செலுத்துவதில் திசை திருப்பினான்.

கிளிநொச்சியில் இருந்து யாழ்பாணம் நோக்கிய வீதியில் கிட்ட தட்ட 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரந்தன் சந்தியில் இருந்து உள்ளோக்கி செல்லும் பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் அவர்கள் வாகனம் செல்லத்தொடங்கியது.அந்த வீதியின் இருகரையிலும் பச்சை பசேல் என்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல் வெளிகளாக இருந்தன.


கோகுலன் ஏசி யை ஆப் செய்துவிட்டு கண்ணாடியை இறக்கிவிடுங்க வடிவாக ஊர் பார்ப்போம் என்றாள் காயத்திரி.

கோகுலனும் கண்ணாடியை இறக்கிவிட்டான்.ஜில் என்ற காற்று உடம்பை வருடி சென்றது.காயத்திரி அந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டே வந்தாள்.நெல் வயல்களை ஒட்டி ஓடும் சின்ன வாய்க்கால்கள்,வெட்டவெளியில் ஆங்காங்கே இருக்கும் மரங்கள்.போன்ற இயற்கையின் அழகு அவளை வெகுவாக கவர்ந்தது.


மெல்லிய தென்றல் காற்று அந்த அழகு மங்கையின் தேகம் எங்கும் முத்தமிட்டு சென்றது அவள் மேனியில் அவள் அனுமதியின்றி படர்ந்த தென்றல் அவளை தன்னுடன் அணைத்துக்கொண்டது.காயத்திரி அருகில் இருந்த சதீஸை பார்த்தாள் அவன் தூங்கிக்கொண்டு இருந்தான்.மெதுவாக பின் சீட்டில் இருந்து எழுந்த காயத்திரி.கோகுலனுக்கு அருகில் இருந்த முன் பக்க சீட்டில் வந்து அமர்ந்து அவனுடன் பேச்சு கொடுத்தாள்

என்ன எதுவும் பேசாம வாரீங்க பின்னுக்கு பாருங்க சதீஸ் எப்படி நித்திரை கொள்ளுறான்.நீங்களும் பேசாம வாரீங்க எனக்கு போர் அடிக்குது உங்களுடன் வந்ததுக்கு பேசாமல் வீட்டிலே நின்று இருக்கலாம்.

கோகுலன் எதுவும் பேசாமல் வாகனத்தை செலுத்திக்கொண்டு இருந்தான்.
மீண்டும் காயத்தி பேச்சை தொடங்கினாள் கோகுலன் நான் உங்களிடம் ஒன்று சொல்லனும் அதை எப்படி சொல்லுறது என்று புரியலை.பயமாக இருக்கு நீங்க திட்டக்கூடாது. அட நான் திட்ட மாட்டேன் சொல்லுங்க என்றான் கோகுலன்

அது வந்து வந்து எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு எனக்கு உங்கள் கூட வாழனும் என்று ஆசையாக இருக்கு என்று சட்டென சொல்லிமுடித்துவிட்டு வேறு பக்கம் பார்வையை திருப்பினாள்.

கோகுலன் அவள் முகத்தை பார்த்தான்.அவள் அழகிய முகம் நாணத்தால் சிவந்து இருந்தது.தேவதை போல ஒரு பெண் அருகில் இருக்கின்றாள் அதுவும் தன்னை காதலிப்பதாக வேறு சொல்கின்றாள்.அந்த காதலை மறுக்க அவன் என்ன துறவியா?இல்லையே அவளிடம் சொனான் காயத்திரி எனக்கும் உங்களை ரொம்ம பிடிச்சிருக்கு எங்க என்னை பாருங்க.

போங்க கோகுல் எனக்கு வெட்கமாக இருக்கு என்று சொல்லிக்கொண்டே அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.அந்த பார்வையில் தொலைந்து போன கோகுலன் சட்டேன பிரேக் போட்டு வாகனத்தை நிறுத்தினான் கோகுலன்.அப்படியே காயத்திரியின் முகத்தை கைகளால் பற்றிக்கொண்டான் காயத்ரி அவனை பார்த்து கேட்டாள் என்ன பண்ண போற? ஒன்றும் செய்யவில்லை உன் அழகை கொஞ்ச நேரம் அருகில் இருந்து ரசிக்கனும் என்று சொல்லிக்கொண்டே அவள் முகம் அருகே தன் முகத்தை கொண்டு சென்றான்.அவனை தள்ளிவிட்ட காயத்திரி. ஜயாவுக்கு முத்தம் கேட்குதோ பார்த்து இரண்டு நாள் அதுக்குள் என் மனசை கெடுத்திட்ட படவா.இப்ப என்ன முத்தத்துக்கு அவசரம் கொஞ்ச நாள் போகட்டும் என்றாள்.பின்னுக்கு பார் சதீஸ் வேற இருக்கின்றான்.

ஓக்கே மேடம் நீங்க தான் எல்லாத்தையும் சொல்லுறீங்க நீங்க எப்ப என்ன சொல்லுறீங்களோ நான் அப்படியே செய்யுறன்.ஓக்கேவா என்று அவள் கன்னத்தில் செல்லமாக தட்டினான்.

கோகுலன் முதலில் நீ ரோட்டை பார்த்து வாகனத்தை ஓட்டு.என்னை அப்பறம் பாக்கலாம் நீ முதல் கண்ணாடியில் என்னை பார்த்தது எல்லாம் எனக்கு தெரியும் அன்று நான் சேலை மாற்றியதை நீ பார்ததில் இருந்து ஒரு மார்கமாக தான் இருக்கு.நான் உன்னை கவனிச்சுகிட்டுதான் இருக்கேன் எனக்கு எப்படி உன்னை பிடித்து போனதோ அதே போல நீயும் என்னை பார்க்கின்றாய் என்று எனக்குத்தெரியும்.

அடிப்பாவி நான் உன்னை பார்பது எப்படி உனக்குத்தெரியும்.

இது என்ன பெரிய ரகசியமோ .நான் மட்டும் இல்லை பொதுவாக பெண்கள் அப்படித்தான். பசங்க எங்களை பார்காத போது நாங்க பார்ப்போம் நீங்க பார்க்கும் போது பார்காதது போல நடிப்போம்.

எது எப்படியோ காயத்திரி என்ற ஒரு தேவதை எனக்கு காதலியாக கிடைச்சது எனக்கு நான் செய்த பாக்கியம் ஆனால் என்னில் உனக்கு என்ன பிடிச்சது இப்படி ஒரு சூப்பர் பிகர் என்னை லவ்வும் அளவுக்கு நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்.என்று சொல்லிக்கொண்டே காயத்திரியை பார்த்தான்.

யார் அழகு நீயா படவா நான் தொலைந்து போனது உன் அழகில் இல்லை உனக்கும் நினைப்புத்தான் நீ பெரிய மன்மதன் என்று.ஆனாலும் உன் கண்களுக்கு ஒரு பவர் இருக்குடா அதை முதன் முதலில் நான் சந்தித்த போதே அதில் தொலைந்து போனேன்.சரி நாங்க இவ்வளவு பேசிகிட்டு இருக்கோம் அங்க பாரு சதீஸ் கும்பகர்ணன் போல தூங்குகின்றான்.என்றாள் காயத்ரி

இருவரும் சதீஸை கேலி செய்து சிரித்தனர்.அப்போது நல்லா சிரிங்க நான் என்ன நித்திரை என்றா நினைக்கிறீங்க நான் எப்பவோ முழிச்சிட்டேன் என்றான் சதீஸ். 
(தொடரும்)

முஸ்கி-இதில் வரும் பாத்திரங்கள் காதல் காட்சிகள்,சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே 

இந்த தொடரின் அடுத்த பகுதி புதுவருடத்தில் வரும் செவ்வாய் கிழமை
(3-1-2012)அன்று வரும்

இந்த தொடரின் முன்னய பகுதிகளை படிக்க
*********************************************************************************
வாசகர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்
*********************************************************************************

Post Comment

23 comments:

ஆகுலன் said...

அண்ணே அருமையா போகுது..
விவரிப்புகள் அருமை..அவ்வ்

அடுத்த பகுதிக்காக..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

Yoga.S. said...

பகல் வணக்கம்,ராஜ்!அருமையான உரை நடை.தொடருங்கள்,தொடர்வேன்!பிறக்கப்போகும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்,முன்கூட்டியே!!!!

K.s.s.Rajh said...

@ஆகுலன்

நன்றி தம்பி இனிய புதிவருட வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..////

வாங்க பாஸ் உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
பகல் வணக்கம்,ராஜ்!அருமையான உரை நடை.தொடருங்கள்,தொடர்வேன்!பிறக்கப்போகும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்,முன்கூட்டியே!!!////

வணக்கம் ஜயா நன்றி உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

தனிமரம் said...

வணக்கம் கிஸ்ராச்! ஹீ ஹீ
அன்பை நல்லாகத்தான் தேடுகின்றீர்கள் காயத்திரி மீது என்பதை பரந்தன் பாதை யோரம் பவனிவரும் வாகனத்தில் என்பதை எழுத்து நடையில் கிறங்கடிக்கின்றீர்கள் தொடருங்கள் முடிந்தளவு பின்னூட்டத்துடன் பின் வருகின்றேன்!

தனிமரம் said...

இயக்கையின் ஊடே பர்ந்தன் கரடிப்போக் வாய்க்கால் நீர் ஓட்டத்தையும் அதில் லாரியில் போவோர் குளிக்கும் முறைகளையும் கொஞ்சம் நயத்துடன் உரைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்! கோமாதாக்கள் சில குளிப்பதையும் சொல்லி இருந்தால் சில மாதக்கள் சிரித்திருப்பினம் ராச் உள்குத்து சரியாக போட்டு இருக்கின்றான் என்று!ஹீ ஹீ

தனிமரம் said...

இயக்கையின் ஊடே பர்ந்தன் கரடிப்போக் வாய்க்கால் நீர் ஓட்டத்தையும் அதில் லாரியில் போவோர் குளிக்கும் முறைகளையும் கொஞ்சம் நயத்துடன் உரைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்! கோமாதாக்கள் சில குளிப்பதையும் சொல்லி இருந்தால் சில மாதக்கள் சிரித்திருப்பினம் ராச் உள்குத்து சரியாக போட்டு இருக்கின்றான் என்று!ஹீ ஹீ

தனிமரம் said...

இயக்கையின் ஊடே பர்ந்தன் கரடிப்போக் வாய்க்கால் நீர் ஓட்டத்தையும் அதில் லாரியில் போவோர் குளிக்கும் முறைகளையும் கொஞ்சம் நயத்துடன் உரைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்! கோமாதாக்கள் சில குளிப்பதையும் சொல்லி இருந்தால் சில மாதக்கள் சிரித்திருப்பினம் ராச் உள்குத்து சரியாக போட்டு இருக்கின்றான் என்று!ஹீ ஹீ

தனிமரம் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்து உறவுகளுக்கும் தித்திக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா!

MANO நாஞ்சில் மனோ said...

தொடர் அருமையான புகைவண்டி பயணம் போல அருமையாக போகிறது யாத்திரை...!!!

ராஜி said...

உங்கள் எழுத்துநடை அருமை. தொடர வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

விவரிப்புகள் நல்லா இருக்கு இயறகை அழகும் நல்லா இருக்கு. தொடருங்கள்.

சுதா SJ said...

பாஸ் சூப்பர்....
ரெம்ப நல்லா இருக்குப்பா......
கிளிநெச்சி * புதுக்குடியிருப்பு என்றதும் என் மனசும் கொஞ்சம் அந்தப்பக்கம் அலை பாயுது...

ராஜ்...
உங்கள் தொடர்களிலேயே இது ரெம்ப வித்தியாசம்...

மச்சி.... ரெம்ப பிஸி..... விரிவான கருத்து தர முடியவில்லை.
அடுத்த பகுதியில் விருவான கருத்துடன் சந்திக்கிறேன்...... பாய்

M.R said...

அருமையான நடை நண்பரே

வடிவாக என்றால் விரைவாகவா நண்பா

த.ம 8

M.R said...

Adance happy new year friend

பிரணவன் said...

சகா இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். . . .

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே எல்லோறுக்கும் மீண்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மீண்டும் புதுவருடத்தில் சந்திப்போம்

Anonymous said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

இன்று என் பதிவு:: இந்த வருசம் வேற ஆக்கள் கிழிச்சவை...

ஓசூர் ராஜன் said...

நல்ல விவரிப்பு! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

முற்றும் அறிந்த அதிரா said...

தொடர் நன்றாகப் போகுது தொடருங்கோ....

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் நண்பா,

தொடர் அருமையாக நகர்கிறது.
இயற்கை வர்ணனைகள், பரந்தன் புதுக்குடியிருப்பு வீதி பற்றி நினைவு மீட்டல்களை உள்ளடக்கி பதிவு அருமையாக நகர்கிறது.’

ஹையஸ் வான் ஓட்டின கோகுலனை நினைக்கையில் ஒரு பக்கம் சிரிப்பும், மறு பக்கம் சில்மிஷ நினைவுகளும் தான் வருகிறது.
குடுத்து வைச்சனீங்க மச்சான் சார்.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails