Friday, December 02, 2011

என்னைக் கவர்ந்த பிரபலங்கள் இந்தவாரம் ஒரு தேசத்தின் சூரியன் யார் அவர்?

பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் நிகரில்லா தலைவர் என்னை மிகவும் கவர்ந்த ஒரு தலைவர்.கியூபாவின் விடுதலைப்போராளி ரியல் ஹீரோ.

50 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட பிடல் காஸ்ட்ரோ சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவினால் சகோதரர்.ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு  தனது பதவியில் இருந்து விலகினார்.பொதுவாக நீண்டகாலம் ஒருவர் நாட்டை ஆளுவது என்பது இலகுவான காரியம் இல்லை அதுவும் மக்கள் மனங்களை வெல்வது அதைவிட கடினம்.பிடல் காஸ்ட்ரோவில் கியூபா மக்கள் வைத்திருக்கும் அன்பும்,மரியாதையும் தான் அவரால் கியூபாவை உலக அரங்கில் பேச வைக்க முடிந்தது.(இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு www.nanparkal.com)

இன்று வரை கியூபா ஒரு கம்யூனிச தேசமாக இருப்பதற்கும் இந்த நிமிடம் வரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம். பிடல் காஸ்ட்ரோ என்ற மனிதர் தான்..(இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு www.nanparkal.com)
ராவுல் காஸ்ட்ரோ & பிடல் காஸ்ட்ரோ
பிடல் காஸ்ட்ரோ சில குறிப்புக்கள்

1926 ஆகஸ்ட்13 – கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு
1945-50 – அவானா பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞராகப் பட்டம் பெறுகிறார். கொலம்பியாவில் புரட்சிகர அரசியலில் ஈடுபாடு கொள்கிறார்.
1952 – நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஜெனரல் குல்ஜெம்சியோ பத்திஸ்தா தலைமையிலான இராணுவக் கவிழ்ப்புக்குப் பின் தேர்தல் நீக்கம் செய்யப்படுகிறது.
1953 –ஜுலை 26 காஸ்ட்ரோ தலைமையில் சாந்தியாகோ டி கியூபாவில் மன்காடா பாசறை மீது நடைபெற்ற தாக்குதல் தோல்வி. காஸ்ட்ரோவும் தம்பி ரவுலும் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். இரண்டாண்கழித்து பொதுமன்னிப்பின் பகுதியாக விடுதலை.
1955 – ஜுலை 26 இயக்கத்தை கட்டுப்பாடுமிக்க கரந்தடிப் படையாகச் சீரமைக்க வேண்டி மெக்சிகோவுக்கு இடம் பெயர்கிறார்.
1956 -டிசம்பர் 2 – கிரான்மா என்ற கப்பலில் காஸ்ட்ரோவும் சிறிய புரட்சிக் குழுவினரும் கியூபா செல்கின்றனர். புரட்சிக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களில் ரவுல், எர்னெஸ்டோ சே குவேரோ உள்ளிட்ட 12 பேர் கரந்தடிப் போர் நடத்துவதற்காக சியரா மேஸ்ட்ரா மலைகளுக்குச் செல்கின்றனர்.
சேகுவரா & பிடல் காஸ்ட்ரே
1959 – காஸ்ட்ரோ தலைமையில் ஒன்பதாயிரம் வீரர் கொண்ட கரந்தடிப் படை அவானாவிற்குள் நுழைய, பத்திஸ்தா வேறு வழியின்றித் தப்பியோடுகிறார். காஸ்ட்ரோ தலைமை அமைச்சராகிறார்.
1960 – குருச்சேவ் தலைமையிலான சோவியத்து ஒன்றியத்தின் நெருக்கமான கூட்டாளியாகிறார். கியூபாவில் அமெரிக்க நலன்கள் அனைத்தையும் இழப்பீடின்றி நாட்டுடைமையாக்குகிறார். கியூபாவுடன் அரசநிலை உறவுகளை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது.
1961 – அமெரிக்க சி.ஐ.ஏ. பயிற்றுவித்த, 1,300 கியூப அகதிகள் அமெரிக்க ஆதரவுடன் பன்றிகள் விரிகுடாவில் நடத்திய படையெடுப்பு தோல்வி. காஸ்ட்ரோவுக்கு கியூப மக்கள் பேராதரவு.
1962 – கியூப ஏவுகணை நெருக்கடியால் அணுவாயுதப் போரின் விளம்பில் உலகம். துருக்கியிலிருந்து அமெரிக்க ஏவுகணைகள் விலக்கிக் கொள்ளப்படுவதற்குப் பதிலாக கியூபாவிலிருந்து ஏவுகணைகளை அகற்ற சோவியத்து நாடு ஒப்புக் கொண்டதால் நெருக்கடி தீர்வு.
1976 – கியூபப் பொதுமைக் கட்சி புதிய சோசலிச அரசமைப்புக்கு ஒப்புதல் அளிக்கிறது. காஸ்ட்ரோ அதிபராகத் தேர்வு.
1976-81 அங்கோலாவிலும் எத்தியோப்பியாவிலும் சோவியத்து ஆதரவுப் படைகளுக்கு கியூபா இராணுவ ஆதரவு.
1980 – அகதி நெருக்கடி – சுமார் 1,25,000 கியூபர்கள் மேரியல் துறைமுகம் வழியாக அமெரிக்காவுக்கு ஓட்டம்.
1991 – சோவியத்து ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் கியூபாவில் கடுமையான நிதி முடை.
1993 – கியூபா மீதான முப்பதாண்டு வணிகத் தடையை இறுக்குகிறது அமெரிக்கா. சரிந்து வரும் பொருளியலுக்கு முட்டுக் கொடுக்க காஸ்ட்ரோ அமெரிக்க டாலரை சட்டமுறைச் செல்லுபடியாக்குகிறார். வரம்புக்குட்பட்ட அளவில் தனியார் தொழில் முனைவை அனுமதிக்கிறார்.
1996 – கியூப அகதிகள் ஓட்டிச் சென்ற அமெரிக்க வானூர்திகள் இரண்டை கியூபா சுட்டு வீழ்த்தியபின் அமெரிக்க வணிகத் தடை நிரந்தரமாக்கப்படுகிறது.
2000 – ஆறு வயதான கியூப அகதி எல்லன் கோன்சாலஸ் புளோரிடாவிலிருந்து தாயகம் திரும்பச் செய்வதற்கான 7 மாத காலப் போராட்டத்தில் காஸ்ட்ரோவுக்கு வெற்றி!
2002 – ‘தீய நாடுகளின்’ அச்சில் கியூபாவையும் சேர்க்கிறது அமெரிக்கா.
2006 – ஜுலை – அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் காஸ்ட்ரோ இடைக்காலப் பொறுப்பை ரவுலிடம் கையளிக்கிறார்.
2008 – பெப்ரவரி 19. பொதுமைக் கட்சி ஏடு கிரான்மாவில் வெளியிடப்பட்ட கடிதத்தில் காஸ்ட்ரோ தமது பதவி விலகளை அறிவிக்கிறார்.
பொதுவாக உலக வரலாறுகளை விரும்பி படிப்பவன் நான் அந்தவகையில் கியூபாவின் வரலாற்றை படித்த போது பிடல் காஸ்ட்ரோ என்னை வெகுவாக கவர்ந்தார்.அதற்காக பிடல் காஸ்ட்ரோவை எனக்கு பிடிக்கும் என்பதால் நான் கம்யூனிசவாதி இல்லை.(இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு www.nanparkal.com)
இந்த 85 வயது ரியல் ஹீரோவை பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் கியூபாவை உலக அரங்கில் பேசவைத்த மிகச்சிறந்த தலைவர் இவரை போல ஒரு தலைவர் இனி உலகில் எப்போது தோன்றுவார்...இவர் வாழும் காலத்தில் வாழ்வதே எமக்கு பெருமைதான்.
குறிப்புக்கள்,படங்கள்-கூகுள்
அடுத்த வாரம் என்னைக்கவர்ந்த ஒரு சினிமா பிரபலம் பற்றி பார்ப்போம் யார் அவர்?காத்திருங்கள்


Post Comment

54 comments:

பால கணேஷ் said...

பிடல் காஸ்ட்ரோவை எனக்கும் பிடிக்கும். அவரைப் பற்றிய தகவல்களை அருமையாகத் திரட்டித் தந்து ரசிக்க வைத்தமைக்கு நன்றி ராஜ். பிடல் காஸ்ட்ரோவை விட ஒருபடி அதிகமாக எனக்கு சே குவேராவைப் பிடிக்கும். அவரைப் பற்றியும் எழுதுங்களேன்...

Yaathoramani.blogspot.com said...

அருமையான பதிவு வருடவாரியாக நிகழ்வுகளைச் சொல்லிப் போனது
புரிந்து கொள்ள ஏதுவாக இருந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3

Mathuran said...

எனக்கும் இவரை பிடிக்கும் ராஜ். நன்றி

அம்பலத்தார் said...

ராஜ் ,கஸ்ரோ என்னையும் கவர்ந்த ஒருவர். எத்தனையோ வெவ்வேற நாடுகளிலும் எத்தனையோ இளைஞர்கள் போராட்ட குணம் மிக்கவர்களாக மாற முன்மாதிரியாக இருந்தவர்.

அம்பலத்தார் said...

ஒரு போராளி , ஒரு நாட்டின் தலைவன், ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கவேண்டுமோ அதற்கெல்லாம் ஒரே உதாரணம் கஸ்ரோ. உலகில் அதிகூடிய நாட்கள் ஒரு நாட்டை ஆண்ட தலையர் அவர்தான் என நினைக்கிறேன்.

மாய உலகம் said...

காஷ்ட்ரோ அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.. பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

Unknown said...

இதுவரை அறிந்திராதா பல தகவல்கள் அருமை..

K.s.s.Rajh said...

@கணேஷ்
////
பிடல் காஸ்ட்ரோவை எனக்கும் பிடிக்கும். அவரைப் பற்றிய தகவல்களை அருமையாகத் திரட்டித் தந்து ரசிக்க வைத்தமைக்கு நன்றி ராஜ். பிடல் காஸ்ட்ரோவை விட ஒருபடி அதிகமாக எனக்கு சே குவேராவைப் பிடிக்கும். அவரைப் பற்றியும் எழுதுங்களேன்..////

நன்றி பாஸ் சேகுவரா பற்றியும் எழுதினால் போச்சு எழுதுவம்

K.s.s.Rajh said...

@ Ramani கூறியது...
அருமையான பதிவு வருடவாரியாக நிகழ்வுகளைச் சொல்லிப் போனது
புரிந்து கொள்ள ஏதுவாக இருந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
எனக்கும் இவரை பிடிக்கும் ராஜ். நன்றி
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
ராஜ் ,கஸ்ரோ என்னையும் கவர்ந்த ஒருவர். எத்தனையோ வெவ்வேற நாடுகளிலும் எத்தனையோ இளைஞர்கள் போராட்ட குணம் மிக்கவர்களாக மாற முன்மாதிரியாக இருந்தவர்////

ஆம் பாஸ் பிடல் காஸ்ட்ரோவின் வரலாறு பலருக்கு முன் மாதிரி

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
ஒரு போராளி , ஒரு நாட்டின் தலைவன், ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கவேண்டுமோ அதற்கெல்லாம் ஒரே உதாரணம் கஸ்ரோ. உலகில் அதிகூடிய நாட்கள் ஒரு நாட்டை ஆண்ட தலையர் அவர்தான் என நினைக்கிறேன்////

ஆம் பாஸ் பிடல் காஸ்ட்ரோ ஒரு சிறந்த தலைவர்

உலகின் அதிகூடிய நாட்கள் ஒரு நாட்டை ஆண்டவர் இவர் தானா என்று சரியாகத்தெரியவில்லை
ஏன் என்றால் மன்னர் ஆட்சியுள்ள பல நாடுகளில் பலர் நீண்டகாலம் ஆட்சி செய்திருக்கின்றனர்.என்று நினைக்கின்றேன் சரியாகத்தெரியவில்லை

K.s.s.Rajh said...

@
மாய உலகம் கூறியது...
காஷ்ட்ரோ அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.. பகிர்வுக்கு பாராட்டுக்கள்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...
இதுவரை அறிந்திராதா பல தகவல்கள் அருமை.////

நன்றி பாஸ்

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!எனக்கும் பிடிக்கும்!"சூரியன்"பிடிக்காதவர்கள் உண்டா?(அயல் நாட்டு சூரியன் பிடிக்காது!)

Mohamed Faaique said...

பிடல் கேஸ்ட்ரோ உண்மையிலேயே வாழும் இரும்பு மனிதர்தான்.
அருமையான, புதிய விடயங்களை தெரிந்து கொண்டேன். பகிவிற்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

உலக பெரியண்ணன் அமெரிக்காவையே ஆட்டி வைத்திருக்கும் பிடல் காஸ்ட்ரோ ரியல் ஹீரோதான்...!!!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

K.s.s.Rajh said...

@Yoga.S.FR

////
வணக்கம்,ராஜ்!எனக்கும் பிடிக்கும்!"சூரியன்"பிடிக்காதவர்கள் உண்டா?(அயல் நாட்டு சூரியன் பிடிக்காது////

ஹா.ஹா.ஹா.ஹா....நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@ Mohamed Faaique கூறியது...
பிடல் கேஸ்ட்ரோ உண்மையிலேயே வாழும் இரும்பு மனிதர்தான்.
அருமையான, புதிய விடயங்களை தெரிந்து கொண்டேன். பகிவிற்கு நன்றி
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
உலக பெரியண்ணன் அமெரிக்காவையே ஆட்டி வைத்திருக்கும் பிடல் காஸ்ட்ரோ ரியல் ஹீரோதான்...!!////

ஆம் பாஸ் அவர் ரியல் ஹீரோதான் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அருமையான பகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
////

நன்றி பாஸ்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

SURYAJEEVA said...

பிடல் காஸ்ட்ரோ பற்றிய அருமையான புத்தகம் மதுரன் எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப் பட்ட ஒரு புத்தகம்... ஒரு முறை தொட்டு விட்டால் கீழே வைக்க முடியாத அளவுக்கு ஒரு சுவாரசியமான புத்தகம்..

"பிடல் காஸ்ட்ரோவை பிடிக்கும் ஆனால் நான் கம்யூனிச வாதி அல்ல'
தோழர், இங்கு யாருமே கம்யூனிஸ்ட் கிடையாது, அனைவரும் பொது உடமை வாதிகள் அவ்வளவே...
ஒருவன் அவ்வளவு எளிதில் கம்யூனிஸ்ட் ஆகி விட முடியாது...

ராஜி said...

பிடல் காஸ்ட்ரோவை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ

பாலா said...

ஒரு நல்ல மனிதரை பற்றி அருமையான பதிவு நண்பரே. எனக்கு பிடித்தவர்களுள் இவரும் ஒருவர்.

Admin said...

அருமையான பதிவு தோழரே..தொடருங்கள..

rajamelaiyur said...

எனக்கும் மிகவும் பிடிக்கும் .. நன்றி தகவல்களுக்கு ...

rajamelaiyur said...

இன்று

நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?

சென்னை பித்தன் said...

காஸ்ட்ரோ பற்றிய சிறப்பான பதிவு.

சுதா SJ said...

காலையிலேயே பஸ்ஸில் போகும் போது படித்துவிட்டேன்.... ஹீ ஹீ...
எனக்கு இவரை ரெம்ப புடிக்கும் பாஸ்...
பதிவு படிக்க சந்தோஷமாய் இருந்திச்சு....
தேங்க்ஸ் ராஜ்.

சுதா SJ said...

யார் அவரை மறந்தாலும் அமெரிக்கா அவரை கடைசி வரை மறக்காது.... ஹா ஹா

சுதா SJ said...

ராஜ் அவரை பற்றிய தகவல்கள் அருமை...
ரெம்ப மினக்கெட்டு தேடி இருக்கீங்க போல.........
ரியலி சூப்பர்

M.R said...

நான அறியாத தகவல்கள் அறியத்தமைக்கு நன்றி நண்பா

த.ம 13

சி.பி.செந்தில்குமார் said...

கம்யுனிஸ வரலாறு ...நல்ல தகவல்

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா தெரியாத தகவல்கள் பல தொகுத்துத் தந்திருக்கிறீங்க ராஜ்... கடின உழைப்பு...

N.H. Narasimma Prasad said...

ஒரு பெரிய தேசிய தலைவரை பற்றிய தகவல் தந்தமைக்கு நன்றி.

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்,

ஹி...ஹி...

நல்லா இருக்கீங்களா?

பிடல் காஸ்ட்ரோ பற்றிய நான் அறியாத பல தகவல்களோடு கூடிய வரலாற்றினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
நீங்கள் இங்கே கரந்தடிப் பயிற்சி பற்றி கூறியதும் எனக்கு அவர் தான் நினைவிற்கு வந்தார்.

நல்ல பதிவு, எமது தேசம் பற்றிய மறைமுகச் சொல்லாடலை இறுதியில் கையாண்டிருப்பது இன்னும் அருமை.
அப்புறமா எங்கள் ஊரில் வாழ்ந்த மகான் பற்றியும் சொல்லியிருக்கலாமே?

K.s.s.Rajh said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@suryajeeva

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ராஜி

நன்றி சகோ

K.s.s.Rajh said...

@பாலா

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@மதுமதி

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@சென்னை பித்தன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்

நன்றி மச்சி

K.s.s.Rajh said...

@M.R

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@சி.பி.செந்தில்குமார்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@athira

நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@நிரூபன்

வாங்க பாஸ் நன்றி பாஸ்

குறையொன்றுமில்லை. said...

பிடல் காஸ்ட்ரோ பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி, ராஜ் நான் பயங்கர டேட்டா எனக்குள் நான் எனும் பதிவில் சொல்லி இருக்கேன் வந்து பாருங்க. நீங்க நல்ல ரசிப்பீங்க.

அம்பாளடியாள் said...

நல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்
பார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி
சகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .

ம.தி.சுதா said...

உண்மையிலேயே அவர் நிஜ ஹிரோ தான்...

நான் பல தடவை வியந்திருக்கிறேன் அவர் அமெிரிக்காவை ஆட்டும் ஆட்டை வைத்தே உணரலாம்...

Daniel said...

please write about Che Guevara

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails