Tuesday, December 20, 2011

புரியாத மொழி பேசிய பெண்ணுடன் ஒரு நாள்

சில நாட்களுக்கு முன்பு என் நண்பன் ஒருவன் தான் வேலையில் நிற்பதாகவும் ஒரு ரயில் டிக்கெட் புக் செய்து தரும் படி கேட்டுக்கொண்டான்.அதன் படி நானும் ரயில் டிக்கெட் முற்பதிவு செய்ய போயிருந்தேன்.அங்கே சகோதர மொழியைச்சேர்ந்த டிக்கெட் வழங்குனர் ஒருவர் டிக்கெட்டுக்களை வழங்கிக்கொண்டு இருந்தார்.



எனக்கு முன்பு வரிசையில் ஒரு அக்கா நின்று கொண்டு இருந்தார்.பார்த்த உடன் அவரது தோற்றமும் அவரது செயற்பாடுகளும் வெளிநாட்டில் இருந்தது வந்து இருக்கார் என்று உணர்த்தியது.

அவர் டிக்கெட் வழங்குனரிடம் ஆங்கிலத்தில் 3ம் வகுப்பு டிக்கெட் ஒன்று தாங்க என்று கேட்டார். டிக்கெட் வழங்குனரும் 3ம் வகுப்பு டிக்கெட் ஒன்றை கொடுத்தார்.பின்பு டிக்கெட் வழங்குனரிடம் 3ம் வகுப்பு டிக்கெட் வேணாம் 2ம் வகுப்பு டிக்கெட் தாங்க என்று தமிழில் கேட்டார்.அந்த டிக்கெட் வழங்குனருக்கு அவ்வளவு தமிழ் தெரியவில்லை இவர் கேட்டது புரிந்தாலும் அவருக்கு பதில் சொல்ல தெரியவில்லை எனவே அவர் சகோதர மொழியில் ஏன் மாத்துறீங்க என்று கேட்டார்.


அவர் சகோதர மொழியில் கேட்டதுதான் தாமதம் இந்த அக்கா உடனே..நூர்.கிர்.மோர் என்று எதோ ஒரு மொழியில் பேசத்தொடங்கினார்.என்ன மொழி பேசுகின்றார் என்று அவருக்கு பின்னால் நின்ற எனக்கு குழப்பம் அதைவிட அந்த டிக்கெட் வழங்குனருக்கு மகா குழப்பம் அவர் சகோதர மொழியில் இவரிடம் என்ன வேண்டும் உங்களுக்கு நீங்க பேசும் பாசை எனக்கு புரியவில்லை என்றார்.


இந்த அக்காவுக்கு சகோதர மொழி தெரியாது.எனவே டிக்கெட் வழங்குனர் கேட்பது இவருக்கு புரியவில்லை இவர் பேசும் மொழி அங்கே ஒருவருக்கும் புரியவில்லை.

இவருக்கு பின் நின்ற எனக்கு எரிச்சல் தான் வந்தது நான் அந்த அக்காவை பாத்து தமிழில் கேட்டேன் அக்கா நீங்கள் பேசும் மொழி அவருக்கு புரியவில்லை உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் தானே பிறகு ஏன் ஆங்கிலத்தில் பேசலாமே என்றேன் அதற்கு அந்த அக்கா சொனார்.சும்மா இரும் தம்பி அவன் சிங்களத்தில் கதைக்கும் போது நான் எனக்கு தெரிந்த மொழியில் கதைத்தால் என்ன என்று கேட்டார்?

நான் சொன்னே அக்கா அவர் என்ன தனது மொழிப்புலமையையா உங்களிடம் காட்டுகின்றார் அவர் தனது தாய் மொழியில் பேசுகின்றார். நீங்க தான் உங்கள் மொழிப்புலமையை காட்ட எதோ ஒரு மொழியில் பேசுறீங்க.நீங்கள் சொல்வதை ஆங்கிலத்தில் சொனால் அவருக்கு புரியும் இல்லை என்றால் நீங்கள் தமிழிலே சொல்லுங்க அவருக்கு ஒரளவு புரியும் அதை விட்டு விட்டு ஏன் எதோ புரியாத மொழிகள் எல்லாம் பேசுறீங்க என்றேன்.

பின்பு அந்த அக்கா ஆங்கிலத்தில் 3வகுப்பு டிக்கெட்டை மாத்தி 2ம் வகுப்பு டிக்கெட்டை தரும் படி கேட்டார் டிக்கெட் வழங்குனரும் மாத்திக்கொடுத்தார்.

பின்பு அந்த அக்காவிடம் பேசும் போதுதான் தெரிந்தது அவர் பேசியது பிரஞ்ச் என்றும் அவர் 8 வருடங்கள் ப்ரான்சில் இருப்பதாகவும் அவரது சொந்த இடம் யாழ்ப்பாணம் என்றும் சொனார்.தற்போது ஊரிற்கு வந்தாகவும் சொனார்.
அந்த அக்கா சரளமாக ஆங்கிலம் பேசுகின்றார்.அவர் ஆங்கிலத்திலே கதைத்து இருக்கலாம் அவர் தனது மொழிப்புலமையை காட்டமுயன்றதால் என்ன பயன் டிக்கெட் வாங்க வந்திருந்த ஏனையவர்களுக்கும் இடைஞ்சல்தான்.

நண்பர்களே மொழி என்பது எமது தொடர்பாடலுக்குத்தானே.இங்கே குறிப்பிட்ட அந்த அக்கா.சகோதரமொழியை தாய் மொழியாகக்கொண்ட அந்த டிக்கெட் வழங்குனர் சகோதர மொழியில் பேசும் போது இவரும் தொடர்ந்து தனது தாய் மொழி தமிழில் பேசி இருக்கலாம் இல்லை அந்த டிக்கெட் வழங்குனருக்கு புரியும் படி ஆங்கிலத்தில் பேசி இருக்கலாம்.அதை விட்டு விட்டு அவருக்கு போட்டியாக வேறு ஒரு மொழி பேசுவது இவருக்கு கெளரவமாம்.இதை என்ன வென்று சொல்வது.
நண்பர்களே பலமொழிகள் பேசுவது கெளரவம் இல்லை மொழி என்பது தொடர்பாடலுக்குத்தான்.

ஒரு வேளை அந்த அக்கா தமிழில் தொடர்ந்து பேசி இருந்தால் பாராட்டியிருக்கலாம் ஏனைய மொழிக்காரர்கள் தங்கள் தாய் மொழியில் பேசும் போது தமிழர்கள் நாம் தான் தாய் மொழி பேச தயங்குகின்றோம்.

முஸ்கி-படங்களுக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லை படங்கள் நடிகை த்ரிஷாவின் படங்கள் பதிவின் அழகுக்காக சேர்க்கபப்ட்டது.

முஸ்கி-தலைப்பை பாத்துவிட்டு வேற எதுவும் மேட்டர் என்று உள்ளே வந்திருந்தால் சங்கம் பொறுப்பு இல்லை

சகோதரமொழி-சிங்களம்
படங்கள்-கூகுள்
*********************************************************************************


Post Comment

26 comments:

ஆமினா said...

சிலர் இப்படி செய்யும் போது எரிச்சல்தான் வருது. அதே போல் உதவிக்கு போயி நின்றால் உடனே ஆங்கிலத்தில் பேசுவதும் நம்ம நாட்ல மட்டும் தான் நடக்குது :-(

அருமையான பதிவு.

வாழ்த்துகள் தம்பி

Unknown said...

நல்லா சொல்லி இருக்கீங்க மாப்ள!

முத்தரசு said...

சர் தான்....

முத்தரசு said...

//தமிழர்கள் நாம் தான் தை மொழியில் பேச தயங்கிறோம்//

முழுக்க முழுக்க உண்மை

ராஜி said...

//தமிழர்கள் நாம் தான் தை மொழியில் பேச தயங்கிறோம்//
>>>
வெட்ககேடான விஷயம்.

ஆகுலன் said...

இப்படியானவர்களால் தான் எல்லாருக்கும் பிரசனை...

சக்தி கல்வி மையம் said...

திரிஷாவின் படங்களினால் அல்ல மாப்ள உன்னோட எழுத்துனாலதான் பதிவு சிறப்பா இருக்கு..

சி.பி.செந்தில்குமார் said...

தம்பி திரிஷா மட்டும்தான் நினைவில் இருக்கு.பாஷை பிரச்ச்னை நினைவில் இல்லை

Mathuran said...

ம்ம் இப்படியும் சிலர் இருக்கிறார்கள்தான்... என்ன செய்வது??ஒரு சமூகத்தில் பலவகையான மக்கள் இருக்கத்தான் செய்வார்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு பதிவு.

அதை விட படங்கள் சூப்பரோ சூப்பர்.

எந்த மொழி பேசினாலும் ஒருவர் பேசுவது மற்றொருவருக்குப் புரிய வேண்டும், இவர் சொல்ல வந்ததை அதே அர்த்தத்தில் அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் ரொம்பவும் முக்கியம்.

தமிழ்மணம்: 7
இன்ட்லி : 5

அன்புடன் vgk

பால கணேஷ் said...

இப்படியும் சிலர். விந்தைதான். நல்ல விஷயம் பகிர்ந்திருக்கிறீர்கள் ராஜ்.

பிரணவன் said...

தம் தாய் மொழியை மதிக்கத் தெரியாதவன், தம் தாயயை மதிக்க மறந்தவனுக்கு சமமாவான், அருமையான பதிவு சகா. . . வாழ்த்துக்கள். . . .

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!இந்த விடயத்தில் நான் உங்களுடன் மாறுபடுகிறேன்.அந்த சகோதரி முதலில் ஆங்கிலத்தில் பேசி பயணச் சீட்டு வாங்கினார்.பின்னர்,தமிழில் மாற்றித் தருமாறு கேட்டார்.புரியாத பயணச் சீட்டு வழங்குனர் சகோதர மொழியில் பேசினார்!சகோதரிக்கு பிரெஞ்ச் தெரிந்திருந்தது,பேசினார்.இதிலிருந்து ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டிய செய்தி ஒன்று உண்டு.அந்தச் சகோதரி பிரச்சினையை வளர்க்காது உடன்பாட்டுக்கு வந்து விட்டார்!எனக்குத் தெரிந்து,இலங்கையின் எப்பாகத்திலும் தமிழில் பேசி எந்தக் காரியத்தையும் செய்யக் கூடிய காலம் ஒன்று இருந்தது.இப்போது,யாழிலேயே சகோதர மொழி பேசித்தான் காரியங்கள் செய்ய முடியும் என்றாகி விட்டது!அரசமைப்பில் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து என்பதெல்லாம்......................................!

Unknown said...

மொழி என்பது தொடர்பாடல் ஊடகம். நாங்கள் மொழியினால் உணர்ச்சி வச பட்டுவிட்டொம். நல்ல பதிவு.. பொதுமொழியாக எதற்கு மூன்றாம் மொழியை தெரிவுசெய்ய வேண்டும்.. இரண்டில் ஒரு மொழியை பயன்படுத்தலாமே :)

Riyas said...

இப்பொழுது இலங்கையில் எந்தப்பக்கம் போனாலும் சிங்களம் தெரியாமல்.. வாழ்வது கடினமாகி போய்விட்டது.. மாற்றுவது கடினமே!

தனிமரம் said...

சகோதரமொழி என்று போட்டீர்கள் ஒரு போடு தம்பி முதலில் ஒரு பூக்கொத்து உங்களுக்கு!

சில இடங்களில் நம்மொழியை பாவிக்காமல். அருகில் இருப்போரின் உதவியை நாடாமல்.  எல்லாம் தெரியும் என்பதன் வெளிப்பாடுதான் இப்படியான கருத்து வேறுபாடுக்கு காரணமாக இருக்கு மொழிப்பிரயேகம் என்பது நம் கருத்தினை வெளிப்படுத்தும் ஊடகம் மட்டுமே!

தனிமரம் said...

இப்போது திருசா தான் கனவுக்கன்னியோ??? ஹிஸ்ராச்சுக்கு! ஹீ ஹீ

முற்றும் அறிந்த அதிரா said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நானும் தலைப்பைப் பார்த்து என்னவோ ஏதோ என்றுதான் உள்ளே வந்தேன்....:).

திரிஷாவை எதுக்குப் போட்டிருக்கிறீங்க எனக் கேட்க நினைத்தேன் கடசில [முட்டில அதுதான் டிசுக்கியோ ஏதோ? நீங்க மட்டும் தெரியாத மொழியெல்லாம் சொல்லி என்னைக் குழப்புறீங்க கர்ர்ர்ர்ர்:))]..சொல்லிட்டிட்டீங்க.. ஓக்கை ஓக்கை.... கூல் கூல் நானும் கூல்.. டீல்?:)

K.s.s.Rajh said...

////Yoga.S.FR கூறியது...
வணக்கம்,ராஜ்!இந்த விடயத்தில் நான் உங்களுடன் மாறுபடுகிறேன்.அந்த சகோதரி முதலில் ஆங்கிலத்தில் பேசி பயணச் சீட்டு வாங்கினார்.பின்னர்,தமிழில் மாற்றித் தருமாறு கேட்டார்.புரியாத பயணச் சீட்டு வழங்குனர் சகோதர மொழியில் பேசினார்!சகோதரிக்கு பிரெஞ்ச் தெரிந்திருந்தது,பேசினார்.இதிலிருந்து ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டிய செய்தி ஒன்று உண்டு.அந்தச் சகோதரி பிரச்சினையை வளர்க்காது உடன்பாட்டுக்கு வந்து விட்டார்!எனக்குத் தெரிந்து,இலங்கையின் எப்பாகத்திலும் தமிழில் பேசி எந்தக் காரியத்தையும் செய்யக் கூடிய காலம் ஒன்று இருந்தது.இப்போது,யாழிலேயே சகோதர மொழி பேசித்தான் காரியங்கள் செய்ய முடியும் என்றாகி விட்டது!அரசமைப்பில் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து என்பதெல்லாம்////

நீங்கள் சொல்வது சரிதான் ஜயா ஆனால் அந்த அக்கா முதலில் ஆங்கிலத்தில் கேட்டு டிக்கெட்டை பெற்றுக்கொண்டார். பின் அது தமிழ் பிரதேசம் என்பதால் அவரை அறியாமல் அவரின் தாய் மொழி தமிழ் வந்துவிட்டது அதனால் தான் அவர் டிக்கெட்டை மாற்றி தரும் படி தமிழில் கேட்டார் அது டிக்கெட் வழங்குனருக்கு புரிந்தாலும் அவருக்கு தமிழில் பதில் சொல்ல தெரியவில்லை எனவே அவர் அவரது தாய் மொழியில் பதில் சொன்னார்.

அதற்கு அந்த அக்கா முதலில் ஆங்கிலத்தில் கேட்ட மாதிரி ஆங்கிலத்தில் கதைத்து இருக்கலாம் காரணம் பொதுவாக இங்கு ஆங்கிலம் பேச்சுவழக்கில் உள்ள மொழிதான் பலருக்கு புரியும்.

ஏன் டிக்கெட் வழங்குனர் சகோதர மொழி கதைக்கின்றார் என்பதற்காக இவர் ஏன் அங்கே பிரஞ்ச் கதைக்கவேண்டும் அதைத்தான் நான் சுட்டிக்காட்டியிருக்கேன்.

MANO நாஞ்சில் மனோ said...

ஐயோ பாவம் சிங்களன், நொந்து போயிருப்பான்...!!!

Yaathoramani.blogspot.com said...

உங்கள் கருத்து மிகச் சரி
மொழி சொல்ல நினைப்பதை பிறருக்கு
புரிய சொல்வதற்குத்தான்
மேதைத்தன்மையை காட்டுவதற்கில்லை
த.ம 8

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்,
இப் பதிவினை காலையில் படித்தேன்.
ஆனால் மொபைலில் கமெண்ட் போட முடியவில்லை.

வணக்கம் மச்சான் சார், இப்படியும் மனிதர்கள். ஒன்று சமயோசிதமாகப் பிழைக்கத் தெரிய வேண்டும். இல்லையேல் மற்றவர்களுக்கு இடையூறின்றி நடக்க வேண்டும். இப்படியும் மனிதர்கள்.

Mohamed Faaique said...

விடுங்க பாஸ்..அந்த அக்கா 8 வருசம் பிரான்ஸ்’ல இருந்து வந்திருக்கு. நான் பிரான்ஸ்’ல இருந்து வந்திருக்கேன்’னு போர்டு மாட்டிக்கிட்ட்டா திரியலாம். இப்படி ஏதாவது ஒரு வழியில வாண்டட்’ஆ காட்டிக்கிட்டாத்தானே...

சுதா SJ said...

ராஜ் சிலதுகள் இப்படித்தான் இங்கேயும் கொஞ்சம் இப்படி இருக்கிதுவள் :(

சுதா SJ said...

ராஜ் அவர் தமிழில் பேசி இருந்தால் அவர் மொழிப்பற்றை நினைத்து பாராட்டி இருக்கலாம்.. பிரஞ்சு பேசினது அவர் பந்தா வைத்தான் காட்டுது

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails