Monday, December 05, 2011

மாத்தியோசி:நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம் அதை ஏன் விமர்சிக்கவேண்டும்?

பதிவர் அகசியம் வலைப்பதிவின் ஓனர் வரோ அண்ணன் ஆரம்பித்த பதிவர்களுக்கிடையில் நட்புறவை மேலும் மேம்படுத்த மாத்தியோசி என்னும் தலைப்பில் ஒரு பதிவரின் தளத்தின் இன்னும் ஒரு பதிவர் ஒரு பதிவெழுதுதல் என்ற செயற்திட்டத்தில் வரோ அண்ணரின் கோரிக்கைக்கு இனங்க நான்,துஷி,மதுரன்,ஆமினா அக்கா,ஆகியோர் இதை ஏற்றுக்கொண்டு பதிவு எழுதினோம் அந்த வகையில் வரோ அண்ணனின் தளத்தில் ஆமினா அக்கா பதிவு ஒன்று எழுதினார்.மதுரனின் தளத்தில் நான் ஒரு பதிவு எழுதினேன் துஷியின் தளத்தில் வரோ அண்ணன் ஒரு பதிவு எழுதினார் அந்த வகையில் இன்று என் தளத்தில் துஷியின் பதிவு பிரசுரமாகின்றது....

முஸ்கி-இந்தப்பதிவை நான் எழுதவில்லை சக பதிவர் நண்பர் துஷ்யந்தன் தான் எழுதினார் எனவே இந்தபதிவுக்கான அனைத்து போற்றல்களும் அவருக்கே போய் சேரட்டும் .
அன்புடன்.
கே.எஸ்.எஸ்.ராஜ்
*********************************************************************************
நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம் அதை ஏன் விமர்சிக்கவேண்டும்?இந்துக்கடவுள்கள் அதிகம் தாக்கப்படுவது ஏன்..? 
மதங்களை தாக்கினால்தான் நீ அறிவாளியாக மதிக்கப்படுவாய் என்று யார் சொன்னார்களோ 
தெரியாது, மதத்தை தாக்குவது குறிப்பாக இந்துமதத்தை தாக்குவதும் விமர்சிப்பதும் இப்போ பேஷன் ஆகிவிட்டது.


கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம். அங்கு போய் நின்று தங்கள் விருப்பு வெறுப்பை அடுத்தவர் மேல் திணிப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. கடவுள் இல்லை என்று சொல்வதில் நியாயம் இருக்கலாம் ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை கொச்சைப்படுத்த எங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை. நமக்கு ஒரு விடயத்தில் நம்பிக்கை இல்லை என்றால் நாங்கள் ஒதுங்குவதுதானே முறை. நமக்கு நம்பிக்கை இல்லாத ஒன்றை இன்னொருத்தர் நம்புகிறார் என்பதற்காக அவரையும் அவர் நம்பும் விடயத்தையும் மிக மோசமாக விமர்சிப்பது என்பது மிக இழிவான செயல் என்று இவர்கள் புத்திக்கு ஏன் உறைப்பது இல்லை..? கழுதைக்கும் மனிதனுக்கும் கல்யாணம் கட்டி வைப்பது போன்ற மதத்தின் பெயரால் அரங்கேறும் சில மூட நம்பிக்கைகளை நாம் எதிர்க்கலாம் அதில் தப்பும் இல்லை. ஆனால் அவற்றையே காரணம் காட்டி மதங்களையும் அந்த மதத்தில் உள்ளவர்கள் நேசிக்கும் கடவுள்களையும் மோசமாக சித்தரிப்பது என்பது விமர்சிப்பவர்களின் ஈன புத்தியையே காட்டிக்கொடுக்கிறது.

இங்கு இந்துக்கடவுள்களை மட்டும் நான் ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால். இப்போது மிக அதிகம் கேவலப்படுத்தப்படுவது இந்துக்கடவுள்களே. சிவன் தலையில் சின்ன வீட்டை ஒளித்து வைத்துள்லாராமே என்று உள்ளூர்களில் சந்துபொந்துகளில் ஆரம்பமாகும் அறிவுஜீவிகள் பேச்சு வெளிநாட்டில் அந்த கடவுள்கள் படங்களை நீச்சல் உடையில் போட்டு கேவலப்படுத்துவது வரை செல்கிறது. இந்துக்கடவுகள் பற்றி பல விமர்சனங்கள் எழும்போதெல்லாம் நானும் தலையை பிச்சுட்டு யோசிச்சு இருக்கேன். இந்துமதங்களில் மட்டும்தான் தவறுகள் நடக்கிறதா?? வேறு மதங்களில் எல்லாம் உத்தம சீலர்கள்தான் இருக்கிறார்களா..?? என்று. தேடிய போது கிடைத்தவிடை என்னவோ பூச்சியம்தான். அப்போ ஏன் இந்துக்கடவுள்களை மட்டும் விமர்சிக்கிறார்கள்..? அங்கேதான் இவர்கள் இந்துமத துவேஷமும் வெட்டி வீரம் சந்தி சிரிக்கின்றது.

நித்தியானதசுவாமி சச்சிதானந்தசுவாமி என்று ஏதோ ஒரு பொறம்போக்கு சாமியார்கள் இந்துமத பெயரை சொல்லி தவறுகள் செய்யும் போது வரிந்து கட்டிக்கொண்டு நரம்பில்லா நாக்கால் இந்துமதத்தை நிர்வாண படுத்தும் இந்த அறிவுஜீவிகளுக்கு மற்ற மதங்களிலும் இப்படித்தான் ஏதோ ஒரு கருப்பு ஆடு தவறு செய்துகொண்டுதான் இருக்கின்றது  என்பது எப்படி தெரியாமல் போகின்றது..??

நித்தியானத்தசுவாமியை மேற்கோள் காட்டி மீடியாவால் இந்துமதம் கதற கதற மானபங்க படுத்திக்கொண்டிருக்கும் போது, 60க்கும் மேற்ப்பட்ட சிறுவர்-சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்துவ பாதிரியார்கள் பற்றிய செய்தி எங்கேயோ ஒரு மூலையில் நாதியற்று அடங்கிப்போனது. இந்துமதத்தை விமர்சிக்கும் நடுநிலைவாதிகளின் உண்மைமுகம் கிழிந்து தொங்குவதன் சிறு உதாரணம்.

வேற்று மதங்களில் தவறுகள் நடக்கும் போது பாராமுகம் காட்டும் இவர்கள் இந்துமத பெயர் சொல்லி ஒரு கருப்பு ஆடு தவறு செய்யும் போது மட்டும் வரிந்துகட்டிக்கொண்டு வருவது ஏன் ?? அவர்களுக்கே தெரியும் இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்  என்று. தங்கள் கோமணங்கள் உருவப்படும் போது கூட சுரணையற்று தன் பங்குக்கு தானும் ரெண்டு மேட்டரை எடுத்துகொடுப்பான் என்றும் அவர்களுக்கு தெரியும். இந்த காலத்தில் பெரிய மனதுடன் தவறுகளை ஒத்துக்கொள்வது கூட எங்களை தாக்கும் எதிரிகளின் ஆயுதங்களை கூர்மையாக்க உதவுகிறது என்பது கசப்பான உண்மை.

இந்துமதத்துக்கு இவ்ளோ வக்காலத்து வாங்கிறானே... இவன் ஒரு இந்துதான் என்று நீங்கள் யாராவது நினைத்தால் என் பதில் "ஆமாம்" என்பதுதான். அடுத்து இப்படியெல்லாம் எழுதுறானே இவன் ஒரு மத பற்றாளன் என்று நீங்கள் நினைத்தால்.. ஜ ஆம் சாரி.. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நான் மதங்களை வெறுக்கிறேன் ஆனால் குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டும் திரும்ப திரும்ப உள்நோக்கம் கொண்டு தாக்குவதை எதிர்க்கிறேன்.

இந்துக்கடவுள்கள் மேல் தீராத காதல் கொண்ட ஒரு சராசரி இந்து குடும்பத்தில் இருந்துதான் நான் வந்தேன்  என்பதை ஒளிவுமறைவு இன்றி ஒத்துகொள்கிறேன்.  சின்னவயசில் குடும்பத்தில் உள்ளோரால் கடவுளுக்காக மனசில் உருவாக்கி வைத்திருந்த உயர்ந்த இடம் காலப்போக்கில் கடவுள் பற்றி அறிவு கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கரந்துபோனதும் உண்மை. ஆனாலும் இப்போதும் நான் கோயிலுக்கு போவேன் ஏன் தெரியுமா? அந்த கோயிலுக்கு வர சொல்லி அழைப்பது என் நேசத்துக்கு உரியவர்கள். எனக்கு அவர்கள் நம்பிக்கை சந்தோஷம் முக்கியம். 

சில நாட்களுக்கு முன்பு கூட உடைந்த ஒரு நட்பால் கவளையில் சோர்ந்து சோர்ந்து இருந்துவிட்டு சாப்பிடாமல் வேலைக்கு போய்விட்டேன். வேலைத்தளத்தில் நிக்கும் போது அம்மாவிடம் இருந்து போன். தம்பி இப்போதுதான் உனக்கு சனிப்பெயர்ச்சி ஆரம்பமாகி இருக்கு அதான் சோர்ந்து சோர்ந்து இருக்க, ஒவ்வொரு சனியும் கோயிலுக்கு போய் எள்ளன்னை எரிச்சா எல்லாம் சரியாகும் என்றாங்க. எனக்கு அந்த நேரத்திலும் அடக்க முடியாத சிரிப்பு. அம்மா.. அப்போ இனி ஏதும் வருத்தம் வந்தாலும் மருந்தெடுக்காம கோயிலுக்கு போயிட்டு மட்டும் இருக்கவா! ..ச்சும்மா இரும்மா எனக்கு நேரமில்லை என்று சொல்லியும் விட்டால்தானே அம்மா, கடைசியில் அவங்க சரிடா..  உனக்காக ஒவ்வொரு சனியும் நான் கோயிலுக்கு போய் எள்ளன்னை எரிக்கிறேன் நீ உன்கையால் ஒருநாள் மட்டும் எரிடா என்று விடாபிடியாக நின்று சம்மதம் வாங்கினாங்க. இப்போ வார சனிக்கிழமை இந்த வேலைப்பளுவின் மத்தியிலும் வேலைக்கு லீவு போட்டு கோயிலுக்கு போறேன். அங்குபோவது கடவுள் மேல் உள்ள அன்பால் அல்ல என் அம்மா மேல் உள்ள பாசத்தால். என் அறிவுஜீவி தனத்தை பயன்படுத்தி அம்மாவிடம் விவாதம் பண்ணியிருக்கலாம். ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை தகர்க்கவோ கொச்சபடுத்தவோ எனக்கு உரிமை இல்லை. அதைவிட காலம் காலமாக அவர்கள் நம்பிவரும் ஒரு விடயத்தை அவர்களிடம் இருந்து புடுங்கி எடுக்க நினைப்பதும்  தகர்க்க நினைப்பதிலும் முடியாத ஒரு காரியம். அப்படியே அதில் வெற்றி பெற்றாலும் அதன் பாதிப்பு மிக பெரிதாய் இருக்கும்..

எந்த மதமும் இன்னொரு மதத்தை கொச்சப்படுத்துவதை ஆதரிக்கவில்லை. தான் சார்ந்த மதத்தை தூக்கி பிடித்துக்கொண்டு இன்னொரு மதத்தை விமர்சிப்பது என்பது "என் பெற்றோர்தான் நல்லம் உன் பெற்றோர் கேவலம் " என்று சொல்லும் ஈன புத்திக்கு சமமானது. உங்களுக்கு கடவுள் நம்பிக்கையில்லையா... அப்படியே இருங்கள் ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை தகர்க்க முற்பட்டு அவர்கள் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள். இல்லை மனிதர்கள் மனங்களில் இருந்து மதங்களை விரட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா ?? சந்தோஷம்.. இது ஆரோக்கியமான எண்ணமே இதற்கு என்னிடமும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒன்று.. மதங்களை விமர்சிப்பது என்பது இந்துமதத்தையும் அதன் கடவுள்களையும் விமர்சிப்பது என்பதுதான் என்றால். முதலில் சுத்தம் செய்யவேண்டியது உங்கள் மனங்களில் இருக்கும் இந்துமத துவேஷ அழுக்குகளைத்தான்.

by-துஷ்யந்தன்
*********************************************************************************
மாத்தி யோசி செயற்திட்டத்தில் 


*********************************************************************************

Post Comment

60 comments:

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

Unknown said...

நல்ல கருத்துக்கள்!
வாழ்விற்கு தேவையான
கருத்துக்கள்!





புலவர் சா இராமாநுசம்

ஆமினா said...

இந்து மதம் மட்டுமா அதிகமா விமர்சிக்கப்படுது :-)

குறிப்பா இணையதளங்களில் எத்தனை பேர் நாத்திகவாதி என போலிமுகத்துடன் இஸ்லாமிய மார்க்கத்தை கண்மூடிகொண்டு விமர்சிக்கிறார்கள் என என்னிடம் கேளுங்கள். பெரிய லிஸ்ட்டே எடுத்துகாமிக்கிறேன் :-)

நிச்சயமாக அவரவர் மத விஷயங்களில் தலையிடுவதற்கு எவ்வித உரிமையும் இல்லை. இது நிச்சயமாக ஒரு மனநோய் தான். அப்படியே விமர்சிப்பதாக இருந்தால் அதற்கான கேள்விகளை முன்வைக்கலாம். அல்லது ஆதாரம் திரட்டி அதன் மூலம் கேள்வி எழுப்பலாம். ஆனால் இந்த வீணர்கள் அப்படி செய்வதை விடுத்து எங்கோ எவனோ செய்யும் ஒரு தவறுக்காக அறியாமைக்காக ஒட்டு மொத்தமாக அவன் பின்பற்றும் மதத்தை கேவலப்படுத்துவது ஈனபிறவிகளின் செயல் தான்.

அருமையான கருத்து சகோ.

Mathuran said...

நல்ல கருத்துக்கள்.

அடுத்தவர் நம்பிக்கையில் தலையிடுவது தவறு.

ஆனால் மூடநம்பிக்கைகளில் தலையிட்டு தடுப்பது தவறு அல்ல

கோகுல் said...

நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அது நமக்குள் வைத்துக்கொள்ள வேணும்.அதை பிறரிடம் திணிப்பதிலும் மாற்றுக்கருத்து கொண்டோரின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் செயல்களும் ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.

நறுக்கென்ற கருத்தை பகிர்ந்த இருவருக்கும் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

சுதா SJ said...

தேங்க்ஸ் ராஜ்... ^_^

பாட்டு ரசிகன் said...

பதிவுலகில் ஒரு புரட்சி...

தெரிந்துக் கொள்ள இந்த பதிவை வாசியுங்கள்..

http://ungaveetupillai.blogspot.com/2011/12/blog-post.html

isaianban said...

மதத்தை விமர்சிப்பது என்பது கூடாதது.
மதத்தை பற்றி புரிந்து கொள்ள சந்தேகங்கள் வேண்டுமானால் கேட்கலாம்..
ஆனால் இப்போது எல்லா மதங்களைப்பற்றியும் விமர்சனம் நடைபெறுகிறது என்பர் விரும்பத்தகாத செயலே..

நல்ல பதிவு நண்பரே...

குறையொன்றுமில்லை. said...

சரியாதான் சொல்லி இருக்கீங்க நமக்கு நம்பிக்கை இல்லையெனில் நாம் ஒதுங்கி போவதுதான் நல்லது.

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!எல்லாப் புகழும் இறைவனுக்கே!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான, கருத்துள்ள, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, அழகான பதிவு. நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

அம்பலத்தார் said...

மதத்தை எதிர்ப்பதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதேயளவிற்கு அதை ஆதரிப்பத்ற்கும் உரிமை இருக்கிறது. அதேநேரத்தில் மதங்களின்பெயரால் இடம்பெறும் இழிசெயல்களையும், மதம்சார்ந்த மூடநம்பிக்கைகளையும் கண்ணியமானமுறையில் விவாதிப்பதிலோ, கருத்துச் சொல்வதிலோ தப்பில்லை. ஆரோக்கியமான முறையில் இவற்றைச் செய்வது வரவேற்கப்படவேண்டியவிடயம்.

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நல்லா இருக்கிறீங்களா?
மாத்தியோசி எனும் நல் முயற்சியின் ஊடாக அருமையான பதிவுகளைப் பகிர்ந்து வழங்குகின்றீர்கள்.

பதிவைப் படித்திட்டு வருகிறேன்.

நிரூபன் said...

அடடா, துஸிக்கு எல்லா இடத்திலையும் பிரச்சினையா, நிரூபன் புலம் பெயர் மக்களை விமர்சிப்பதால் ஒரு பக்கத்தால பிரச்சினை, மறு பக்கத்தால இந்துக் கடவுளர்களை விமர்சிப்பதால் பிரச்சினை..

மச்சி! நீ சவால்களை எதிர் கொள்ள என்றே பிறந்த ஆளைய்யா...

ஹே...ஹே...

நிரூபன் said...

துஸி, அருமையான பதிவினைத் தந்திருக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் மதங்களை, மதம் சார் உணர்வுகளை வெளிப்படுத்த இடமுண்டு. மதங்களை மக்கள் மீது திணிப்பது தான் தவறு. ஆனால் இந்து மதத்தைச் சேர்ந்தோரைத் தேடி வந்து அடிப்போர் உண்மையிலே மனங்களில் அழுக்கு உள்ளோர் தான்!
என்ன செய்ய! எல்லோருக்கும் கண்டதையும் எழுதும் வண்ணம் இப்போது தானே கூகுள் காரன் ப்ரீயா விடுறானே.

காட்டான் said...

வணக்கம் துஷி, வணக்கம் ராசுக்குட்டி!


நல்லதோர் பதிவு "சில" போலி மதசார்பின்மைவாதிகளுக்கும் சேர்த்தே பதில் தந்திருக்கிறீங்க.. எங்கள் வீட்டிலும் இதுதான் நடக்கின்றது... மத நம்பிக்கையும் எனக்கில்லை கோவிலுக்கு நான் செல்வதல்லை.. அதே நேரத்தில் குடும்பத்தவர்களின் விருப்பத்திற்காக அவர்களுடன் கட்டாயம் கோவிலுக்கு சென்று வருவேன்..!! 

வீரமணி போன்றவர்களுக்கு பிள்ளையார் சிலையைதான் உடைக்கமுடியும்.. ஏன்னா அந்த மதத்துக்காரர்தான் இதையும் வேடிக்கை பார்த்து கையை தட்டும் அறிவாலிகள்? திராவிடர்களகக்காரங்கள மாற்று மதங்கள இப்படி விமர்சிக்க சொல்லுங்கோ..!! அதை வெளிநாட்டுபிரச்சனையாக்கி நொங்கெடுத்துவிடுவார்கள்.. என்னை பொறுத்தவரை மூட நம்பிக்கைகள் "எங்கிருந்தாலும்" அதை ஆதரிக்கமாட்டேன்..

அதே நேரத்தில் குட்டுறவனும் முட்டாள் குட்ட குட்ட குனியுறவனும் முட்டாள்!!!

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் மக்கா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

யாருக்கும் துன்பம் இழைக்காமல் அவரவர் தெய்வங்களை அவரவர் வணங்கினால் எந்த பிரச்சினையும் இல்லை...!!!

K.s.s.Rajh said...

@Rathnavel

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@புலவர் சா இராமாநுசம்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ஆமினா

நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@மதுரன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@கோகுல்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@பாட்டு ரசிகன்

எங்கள் பதிவு பற்றி எதும் சொல்லவில்லையே பாஸ்

K.s.s.Rajh said...

@isaianban

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@Lakshmi

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@Yoga.S.FR

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@அம்பலத்தார்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@நிரூபன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@காட்டான்

நன்றி மாம்ஸ்

K.s.s.Rajh said...

@MANO நாஞ்சில் மனோ

நன்றி பாஸ்

சுதா SJ said...

வணக்கம் நண்பா....
பதில் கமெண்ட்ஸ் போட்டதுக்கு ரெம்ப தேங்க்ஸ் பாஸ்...
எனக்கு எக்கு நேரமில்லை....புரிந்துகொண்டமைக்கு தேங்க்ஸ்...சாரி
நன்பேண்டா.....

சுதா SJ said...

யோவ்.... என்னது போற்றல்கள் எல்லாம் துஸிக்கா???
ஆஹா... உங்க எண்ணம் புரியுது பாஸ்.... திட்டினாலும் எல்லாம் துஷிக்குதான் என்று சொல்லாம சொல்லுறீங்க இல்ல??? அவ்வ்வ்வ்

ஹா ஹா

ராஜி said...

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டின்னு ஒரு பழமொழி இந்துக்களில் உண்டு. அதுப்போன்ற கதைதான் இதுவும்

Arun Ambie said...

நல்வாழ்விற்கு தேவையான
நல்ல கருத்துக்கள்!! வாழ்த்துகள்!!

சென்னை பித்தன் said...

நல்ல முயற்சி,நல்ல பகிர்வு.

Anonymous said...

கோகுல் கூறியது...
நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அது நமக்குள் வைத்துக்கொள்ள வேணும்.அதை பிறரிடம் திணிப்பதிலும் மாற்றுக்கருத்து கொண்டோரின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் செயல்களும் ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.

நறுக்கென்ற கருத்தை பகிர்ந்த இருவருக்கும் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.
//
Amen.

செங்கோவி said...

மிகவும் நியாயமான பதிவு...வாழ்த்துகள் துஷ்.

செங்கோவி said...

//யோவ்.... என்னது போற்றல்கள் எல்லாம் துஸிக்கா???//

சொம்பை நெளிச்சா, துஷ் சொம்பு மட்டும் நெளியட்டும்னா...நல்ல ஐடியா கிஸ்ராஜா.

KANA VARO said...

யோவ்! எனக்கு ஐஞ்சு வருசமா சனி உச்சந்தலையில குடிகட்டி படுத்திருக்கு நீ வேற?

KANA VARO said...

எந்த மதம் தாக்கப்பட்டாலும் அது கண்டனத்துக்கு உரியதே!

KANA VARO said...

தன் வலையில மொக்கையும் அடுத்தவன் வலையில சீரியஸும் எழுதுறது தான் இப்ப பாஷன் போல! பகிர்வுக்கு நன்றி துசி அண்ட் கிஸ்..

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்
////வணக்கம் நண்பா....
பதில் கமெண்ட்ஸ் போட்டதுக்கு ரெம்ப தேங்க்ஸ் பாஸ்...
எனக்கு எக்கு நேரமில்லை....புரிந்துகொண்டமைக்கு தேங்க்ஸ்...சாரி
நன்பேண்டா../////
அட இதுல என்ன இருக்கு பாஸ்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
யோவ்.... என்னது போற்றல்கள் எல்லாம் துஸிக்கா???
ஆஹா... உங்க எண்ணம் புரியுது பாஸ்.... திட்டினாலும் எல்லாம் துஷிக்குதான் என்று சொல்லாம சொல்லுறீங்க இல்ல??? அவ்வ்வ்வ்

ஹா ஹா
/////
தெரிஞ்சிடுச்சா தெரிஞ்சிடுச்சா எல்லாறுக்கு தெரிஞ்சிடுச்சா சரி விடு.....

K.s.s.Rajh said...

@
ராஜி கூறியது...
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டின்னு ஒரு பழமொழி இந்துக்களில் உண்டு. அதுப்போன்ற கதைதான் இதுவும்
////

நன்றி சகோ

K.s.s.Rajh said...

@
Arun Ambie கூறியது...
நல்வாழ்விற்கு தேவையான
நல்ல கருத்துக்கள்!! வாழ்த்துகள்////

நன்றி பாஸ் தொடர்ந்து வாருங்கள்

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
மிகவும் நியாயமான பதிவு...வாழ்த்துகள் துஷ்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
நல்ல முயற்சி,நல்ல பகிர்வு////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ ரெவெரி கூறியது...
கோகுல் கூறியது...
நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அது நமக்குள் வைத்துக்கொள்ள வேணும்.அதை பிறரிடம் திணிப்பதிலும் மாற்றுக்கருத்து கொண்டோரின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் செயல்களும் ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.

நறுக்கென்ற கருத்தை பகிர்ந்த இருவருக்கும் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.
//
Amen////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
//யோவ்.... என்னது போற்றல்கள் எல்லாம் துஸிக்கா???//

சொம்பை நெளிச்சா, துஷ் சொம்பு மட்டும் நெளியட்டும்னா...நல்ல ஐடியா கிஸ்ராஜா////

ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@
KANA VARO கூறியது...
யோவ்! எனக்கு ஐஞ்சு வருசமா சனி உச்சந்தலையில குடிகட்டி படுத்திருக்கு நீ வேற////என்னது சர்மி ஜஞ்சு வருசமா உங்களுடம் குடியிருக்கா?அது யாரு பாஸ்?
அவ்வ்வ்வ்வ்வ்..........

K.s.s.Rajh said...

@
KANA VARO கூறியது...
எந்த மதம் தாக்கப்பட்டாலும் அது கண்டனத்துக்கு உரியதே!////

உண்மைதான் பாஸ்

K.s.s.Rajh said...

@
KANA VARO கூறியது...
தன் வலையில மொக்கையும் அடுத்தவன் வலையில சீரியஸும் எழுதுறது தான் இப்ப பாஷன் போல! பகிர்வுக்கு நன்றி துசி அண்ட் கிஸ்////

ஆமா ஆமா அதுதான் இப்ப பாஷன்

M.R said...

நல்ல கருத்து

த.ம 14

ம.தி.சுதா said...

மிகவும் சிந்திக்கிகத் தூண்டிய பதிவ...

மதம் என்பது மனிதனால் வந்தது இறைமை என்பதே என்றும் இயற்கையானது அது ஒன்று தான் எங்கும் உள்ளது...

இருவருக்கும் நன்றிகள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)

நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record

சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்

Gobinath said...

சூப்பர் பாஸ். பின்னிட்டிங்க.

Anonymous said...

நண்பரே,

நிதியானந்தா விசயத்திலும் மற்ற விஷயங்களிலும் நீங்கள் சொல்வதை ஒப்புகொள்கிறேன். ஒருதலைபடச்மாகவே இந்தியாவில் மதம் விமர்சிக்கப்படுகிறது. உண்மைதான்.

(நீங்கள் இந்து என்பதால் இந்து நம்பிக்கைகளை எடுத்துகொண்டிருக்கிறேன். தவறாக கருதாதீர்கள். முஸ்லீமாக இருந்தால், முஸ்லீம் நம்பிக்கைகளை எடுத்துகொண்டிருப்பேன்)

நீங்கள் சனிப்பெயர்ச்சிக்கு விளக்கு
போடுவது ஒரு வகை நம்பிக்கை.

மற்றொன்று விதவைப்பெண்ணுக்கு மொட்டையடித்து மூலையில் உட்காரவைப்பது இன்னொரு வகை நம்பிக்கை.

முதல் நம்பிக்கையால் உங்களுக்கு நல்லது உண்டு. உங்களுக்கு நல்ல விஷயம் நடக்க வேண்டும் என்று ஏதோ செய்கிறீர்கள். உங்களுக்கு திருப்தி உண்டாகிறது.

இரண்டாவது நம்பிக்கையால் ஒரு பெண்ணின் வாழ்வு சீர்குலைகிறது. அவளது எதிர்காலம் அழிக்கப்படுகிறது.

முதலாவது நம்பிக்கை இன்னமும் தொடர்கிறது. அதனை தடுக்கவே முடியாது. தடுக்க வேண்டிய தேவையும் இல்லை.

இரண்டாவது நம்பிக்கையை விமர்சிக்காமல் அந்த வழக்கம் தமிழ்நாட்டில் நின்றிருக்கவே நின்றிருக்காது. இன்றைக்கும் எந்த இந்து பெண்ணுக்கும் அப்படி வாழ்வு மறுக்கப்படுவதில்லை. அதற்கு காரணம் விமர்சிக்கபப்ட்டதுதான். அதனை பார்த்து சிந்தித்து அந்த நம்பிக்கைகளை இந்துபெருமக்கள் மாற்றிகொண்டதுதான். பாராட்டுகிறேன்.

இதே போல இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகியவற்றில் இருக்கும் மூடப்பழக்கங்கள் அடக்குமுறைகளையும் எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

வேகநரி said...

ஒருதலைபடச்மாகவே இந்து மதம் விமர்சிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் K.s.s.Rajh க்கும், கட்டுரையாளருக்கும் எனது பாராட்டுக்கள்.
இஸ்லாமிய சகோதரர் இப்னு ஷகிரின் கருத்துக்கள் மிக நியாயமானவை.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails