Thursday, December 15, 2011

விஜய்-அஜித்-யார் படம் பெஸ்ட் ஒரு பார்வை( தொடர் பதிவு)

அகசியம் வலைப்பதிவின் ஓனர் வரோ அண்ணன் அவர்கள் ஒரு தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருந்தார். அதாவது அஜித்,விஜய் நடித்த படங்களில் மிகவும் கவர்ந்த அஜித் படம் ஒன்றை பற்றியும் விஜய் படம் ஒன்றைப்பற்றியும் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார். நான் கிட்டதட்ட விஜய்,அஜித் நடித்த எல்லாப்படங்களும் பார்த்திருக்கின்றேன் அதில் சிறந்த ஒன்றை தேர்வு செய்து எழுதுவது கடினம் ஆனாலும் இன்றுவரை இருவரின் படங்களில் மனசில் நிற்கும் இரண்டு படங்களை பற்றி எழுதுகின்றேன்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுத்த பதிவு(www.nanparkal.com)

முஸ்கி-நான் அஜித்துக்கோ இல்லை விஜய்க்கோ ரசிகன் இல்லை என்பதை முதலில் தெளிவாக சொல்லிவிடுகின்றேன்

அமர்க்களம்
1999 ம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான படம் இதில் அஜித்,ஷாலினி,ரகுவரன்,நாசர்,ராதிகா,வையாபுரி,சார்லி,ரமேஸ் கண்ணா,அம்பிகா,பொண்ணம் பலம்,போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்தது.
ஒளிப்பதிவு-வெங்கடேசன்,படத்தொகுப்பு-சுரேஸ் அர்ஸ்,தயாரிப்பாளர்-வெங்கடேஷ்வராலயம் (V.சத்யநாராயணா, V.சிமந் குமார்)

அஜித்தின் திரையுலக வாழ்க்கையிலும்,நிஜ வாழ்க்கையிலும் இந்தப்படம் அவருக்கு சிறப்பானது ஆம் இந்தப்படத்தில் நடித்த போதுதான் ஷாலினிக்கும் அஜித்துக்கும் காதல் மலர்ந்துஇது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுத்த பதிவு(www.nanparkal.com)
அஜித்தித் நெக்கட்டிவ் ரோல்களில் நடிக்கும் படங்கள் பெரிதும் பேசப்படுவது உண்டு அந்த வகையில் இதிலும் ஒரு நெக்கட்டிவ் ரோலில் அசத்தியிருப்பார்அஜித்.

சூப்பர் ஸ்டார் மட்டும்தான் இடைக்கிடையில் நெக்கட்டிவ் ரோல்களில் கலக்கும் ஒரு ஹீரோ.எனக்குத்தெரிய அவருக்கு பிறகு அஜித் மட்டும் தான் சமநேரத்தில் நெக்கட்டிவ் ரோல்களில் கலக்கும் ஒருவர் தீனா,வாலி,அமர்க்களம்,முதல் தற்போதய மங்காத்தா வரை அஜித் நெக்கட்டிவ் ரோல்களில் நடிக்கும் படங்கள் பேசப்படுகின்றது..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுத்த பதிவு(www.nanparkal.com)
 சரி அமர்களம் படத்துக்கு வருவோம் பரத்வாஜ் இசையில் S.P.B யின் கணீர் குரலில் அற்புதமான பாடல்கள் நிறைந்த படம் குறிப்பாக மேகங்கள் என்னைத்தொட்டு போவதுண்டு,சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்,இந்த இரண்டு பாடல்களும் அந்தக்காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தவை


மேகங்கள் என்னைத்தொட்டு போவதுண்டு பாடல் 


அதைவிட ஷாலினி ஒரு பாடலைப் பாடியிருப்பார் தன் சொந்தக்குரலில் பாடவேண்டும் என்ற ஆசையை உள்ளடங்கிய சிறப்பான பாடல் அது.


வீடியோவில் பாருங்க அமர்க்களம் படத்தில் ஷாலினி சொந்தக்குரலில் பாடி நடித்த பாடல்


அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் அமர்க்களம் படம் நிச்சயம் ஒரு மையில் கல் தான் என்னை கவர்ந்த அஜித் படங்களுள் இதுவும் ஒன்று.

பூவே உனக்காக

விஜய் நடித்த மெகா ஹிட் படங்களில் இதுவும் ஒன்று 1996 விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த இந்தபப்டத்தில் விஜய்,சங்கீதா(நடிகை சங்கீதா)அஞ்சு அரவிந்,சார்ளி,நாகேஸ்,எம்.என்.நம்பியார்,மலேசியா வாசுதேவன்,போன்ற பலர் நடித்திருந்தார்கள்,நடிகர் முரளி நடிகர் முரளியாக கெளரவ வேடத்தில் நடித்திருந்தார் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடி இருப்பார்
இசை எஸ்.ஏ.ராஜ்குமார்,

குழந்தை நட்சத்திர மாக நடிக்கத்தொடங்கி பல படங்களில் கதாநாயகியாக நடித்த ஒரு சிறந்த நடிகை பிறகு தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்

விக்ரமன் படங்களில் எப்பவும் குடும்பம் பற்றிய பார்வை அழகாக இருக்கும்.அந்த வகையில் பூவே உனக்காக படமும் இரண்டு குடும்பங்களின் வாழ்கை முறையை காட்டியிருப்பார் அதனுல் மென்மையான ஒரு காதல் சோகத்தை புகுத்தி அற்புதமான திரைக்கதை வடித்திருப்பார்.இளைய தளபதி விஜயின் நடிப்பு பேசப்படும் படங்கலுள் பூவே உனக்காகவும் ஒன்று காரணம் விஜயை பிடிக்காத ரசிகர்களுக்கு பூவே உனக்காக படம் பிடிக்கும் பூவே உனக்காக படத்தை விஜய் படம் என்று சொல்வதை விட விக்ரமன் படம் என்றே சொல்லாம்


1996ஆம் ஆண்டு இலங்கை,இந்தியா,பாகிஸ்தான்,போன்ற நாடுகளில் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகிய போதும் மக்கள் ரசனை கிரிக்கெட் பக்கம் திரும்பி இருந்தாலும் பெப்ரவரி 14ம் திகதி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமான போதும் பெப்ரவரி 15ம் திகதி படம் வெளியாகி தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வரவை அதிகரித்து வெற்றி வாகை சூடிய படம் பூவே உனக்காக.


இந்தப்படத்தில் வரும் ஆனந்தம் ஆனந்தம் பாடும் பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த காலத்தால் மறக்க முடியாத பாடல். பாடலாசிரியர் பழனி பாரதி எழுதிய இந்த பாடல் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் உன்னிக்கிஷ்ணன் குரலில் பலரின் மனதை கொள்ளை கொண்ட பாடல் இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுத்த பதிவு(www.nanparkal.com)
பூவே உனக்காக படத்தில் கிளைமாக்ஸில் வரும் ஆனந்தம் ஆனந்தம் பாடல் வரிகள்

விஜய் நடித்த சிறந்த படங்களுல் பூவே உனக்காகவும் ஒன்று
என்னை மிகவும் கவர்ந்த படங்களுள் பூவே உனக்காகவும் உள்ளடங்கும்


இந்தப்பதிவை தொடர அழைப்பது-பதிவர்களான வேடந்தாங்கல் கருன்,மற்றும் துஷ்யந்தன்(இரண்டு பேரைத்தான் அழைக்கவேண்டும் என்பது வரோ அண்ணன் சொல்லியிருந்தார் எனவே நீங்களும் இரண்டு பேரை மாத்திரம் அழையுங்கள்)

படங்கள்-கூகுள் 
வீடியோ-youtube

Post Comment

37 comments:

சரியில்ல....... said...

இரண்டுமே எனக்கு பிடித்த படங்கள் தான். சிறப்பான பதிவு... வாழ்த்துக்கள்.

சரியில்ல....... said...

அத்தோடு வடையும் எனக்கே!

பால கணேஷ் said...

இந்த இரண்டு படங்களும் என் ஃபேவரைட் லிஸ்டிலும் உண்டு. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் ராஜ்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சரியான ரூட்....

தொடருங்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

நல்ல திறனாய்வு!

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!நன்றாக எழுதியி (விமர்சித்தி)ருக்கிறீர்கள்!வாழ்த்துக்கள்!

ரைட்டர் நட்சத்திரா said...

interesting

K.s.s.Rajh said...

@
சரியில்ல....... கூறியது...
இரண்டுமே எனக்கு பிடித்த படங்கள் தான். சிறப்பான பதிவு... வாழ்த்துக்கள்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சரியில்ல....... கூறியது...
அத்தோடு வடையும் எனக்கே////

ஆமா வடை உங்களுக்குத்தான்

K.s.s.Rajh said...

@
கணேஷ் கூறியது...
இந்த இரண்டு படங்களும் என் ஃபேவரைட் லிஸ்டிலும் உண்டு. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் ராஜ்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
சரியான ரூட்....

தொடருங்கள்
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
நல்ல திறனாய்வு!
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
வணக்கம்,ராஜ்!நன்றாக எழுதியி (விமர்சித்தி)ருக்கிறீர்கள்!வாழ்த்துக்கள்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ கார்த்தி கேயனி கூறியது...
interesting
////

நன்றி பாஸ்

சக்தி கல்வி மையம் said...

நல்ல படங்களின் தேர்வு..

நானும் தொடர முயற்சிக்கிறேன்..

ராஜி said...

இரண்டு படங்களும் எனக்கு பிடித்த படங்களே. பகிர்வுக்கு நன்றி தம்பி

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
நல்ல படங்களின் தேர்வு..

நானும் தொடர முயற்சிக்கிறேன்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ ராஜி கூறியது...
இரண்டு படங்களும் எனக்கு பிடித்த படங்களே. பகிர்வுக்கு நன்றி தம்பி
////

நன்றி அக்கா

கோகுல் said...

எல்லாம் ஓகே ஆனா யார் படம் பெஸ்ட்டுனு சொல்லலையே?

நாராயண!நாராயண!

Anonymous said...

இரண்டுமே மிக நல்ல படங்கள்..... எவ்ளோமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம்


இந்த மாதம் விகடன் யூத் விகடனில் உங்கள் பதிவு(சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரை போல வருமா) வந்துருகிறது வாழ்த்துகள்.............

பிரணவன் said...

சகா இரண்டு படங்களும் அருமையான காதல் திரைப்படங்கள். பூவே உனக்காக திரைப்படத்தில் வரும் வசனங்கள், மிகவும் அழுத்தமாக இருக்கும். . .

தனிமரம் said...

உண்மையில் அமர்க்களம் படத்தில் ரகுவரனின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது அவரைப்போல் அந்தப்பாத்திரத்தை உள்வாங்கி யாரும் செய்து இருக்கமுடியாது. அதே போல் அஜித்  நடிப்பு மிகவும் ரசிக்க வைக்கும் காதலில் வலி என்றாலும் சாலினியை உதாசீனம் செய்யும் காட்சி என இயல்பாக நடித்திருப்பார்.வைரமுத்துவின் வரிகள் பாராட்டவேண்டும்.சத்தம் இல்லாத தனிமை அவரின் கவிதைத் தொகுப்பில் வந்த வரிகள் அதன் பின் பாடல் ஆக்கியதாக  அறிந்தேன்!

தனிமரம் said...

நல்ல இயக்குனர் நல்ல நடிகரை உருவாக்க முடியும் என்பதை நிறுவியவர் விக்ரமன். பூவே உனக்கா அவர் சில தோல்விப்படத்தின் பின் இயக்கிய படம் தன் இருப்பை உறுதி செய்ய வேண்டிய நேரத்தில் தன் இயல்பான கூட்டனியுடன் (முரளி அவருடன் நல்ல புரிந்துனர்வு கொண்டவர் ஆரம்பம் முதல் ) களம் இறங்கியவர் வெற்றிப்படம் பூவே உனக்காக. பழனிபாரதியின் ஆங்கிலம் கலக்காத பாடல்கள் பல அதில் மச்சினிச்சி வர நேரம், சொல்லாமலே யார்பார்த்தது எனக்கு மிகவும் பிடித்தது அக்காலத்தில் .ஆனந்தம் பாடலில் சித்திராவின் குரல் இன்னும் சிறப்பு அதே போல மீசை முருகேஸ் நடிப்பு எனக்கு அதிகம் பிடிக்கும் அந்தப்படத்தில். என்றும் விக்ரமன் குடும்பத்தை சீர்குழைய விட்டது இல்லை அவர் படங்களில் நல்ல முயற்ச்சி சகோதரா!

தனிமரம் said...

மறக்க முடியாதது ஆற்றில் சார்லி செய்யும் இயற்கைக் குளியல் ஆற்றில் (உள்)உடுப்பு தொலைந்து அவதிப்பட்ட அனுபவம் எனக்கும் உண்டு .

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு நன்றி சகோ ...

சுதா SJ said...

மச்சி விகடனில் உங்க பதிவு களை கட்டுது வாழ்த்துக்கள்

சுதா SJ said...

மச்சி இரண்டு படங்களையும் அருமையா விமர்சித்து இருக்கீங்க.... ரெண்டும் எனக்கு புடித்த படங்கள்.... அப்புறம் சங்கீதா பற்றிய நினைவு அருமை... நன்றாக நடிக்க தெரிந்த நடிகைகளில் சங்கீதாவுக்கு தனி இடமுண்டு... அவரின் சீதனம் படம் பார்த்தீங்களா??? எனக்கு ரெம்ப புடிச்ச படம்.

சுதா SJ said...

தொடர் பதிவுக்கு என்னையும் கோர்த்து விட்டுட்டீங்களா??? அவ்வ்வ்வ்

தேங்க்ஸ் ராஜ்.... விரைவிலேயே எழுதுறேன்... :)

அன்புடன் நான் said...

பகிர்வுகள் இரண்டும் அருமை.

முற்றும் அறிந்த அதிரா said...

ராஜ், நீங்க அஜித்துக்கோ இல்ல விஜய்க்கோ ரசிகன் இல்லை என்பது எனக்கு எப்பவோ தெரியுமே:)) ஏன் எனக் கேட்கிறீங்களா?... வாணாம் விட்டிடுங்க சொன்னா முறைப்பீங்க மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))

முற்றும் அறிந்த அதிரா said...

ஆனந்தம் ஆனந்தம் பாடும் பாடலை ஆராலுமே மறக்க முடியாது, நோ சான்ஸ்ஸ்ஸ்ஸ்:))

ம.தி.சுதா said...

விஜயின் படங்களில் அதிக அழுத்தமான கதையை கொடுத்த படங்களில் பூவே உனக்காகவும் ஒன்று...

அஜித்தின் முரட்டுத் தனமான ரொமாண்டிக்கை இப்படத்தில் ரசித்தேன்..

நன்றி ராஜ்...

N.H. Narasimma Prasad said...

தல, தளபதி நடித்த இந்த இரண்டு படங்களுமே எனக்கு மிகவும் பிடித்த படங்கள். பகிர்தலுக்கு நன்றி நண்பரே.

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

Unknown said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails