Friday, December 09, 2011

வீரேந்தர் சேவாக் ஒரு மாஸ்-என்னைக்கவர்ந்த பிரபலங்கள்

இன்றைய என்னைக்கவர்ந்த பிரபலங்கள் என்ற இந்த பகுதியில் இந்தவாரம் ஒரு சினிமாப்பிரபலம் பற்றி எழுதலாம் என்றுதான் இருந்தேன் ஆனால் நேற்றி இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதய கேப்டனும் அதிரடி நாயகனுமான வீரேந்தர் சேவாக் ஒரு நாள் போட்டிகளில் புதிய வரலாறு படைத்தார் எனவே என்னை மிகவும் கவர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் சேவாக் பற்றி அவரின் சாதனை பற்றி பேசுவோம்


சேவாக் ஒரு மாஸ்
ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டம் பெற்ற சச்சினின் சாதனை 1 வருடம் தான் நிலைத்து நின்றது கடந்த வருடம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் ஆட்டம் இழக்காமல் 200* ஓட்டங்களைப்பெற்றி ஓரு நாள் போட்டிகளில் இரட்டைச்சதம் பெற்ற முதல் வீரராக சாதனைப்படைத்தார் அதைவிட 13 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்த பாகிஸ்தானின் ஆரம்பதுடுப்பாட்ட வீரர் சயிட் அன்வரின் சாதனையையும் சச்சின் முறியடித்தார். சயிட் அன்வரின் ஓரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 1997ம் ஆண்டு சென்னையில் 194 ஓட்டங்களை விளாசினார் இந்த சாதனையை அதுக்கு பிறகு சச்சின்,கங்குலி,ஜெயசூர்யா,போன்ற பல ஜாம்பவான்கள் அருகே வந்தாளும் அதை முறியடிக்க முடியவில்லை.



2009 இல் ஸிம்மாவேயின் அதிகம் பிரபலம் இல்லாத கவென்ட்ரி சமப்படுத்தினார் அவர் பங்களாதேஸ்க்கு எதிராக 194* ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றுக்கொண்டார் ஆனால் அவரால் சயிட் அன்வரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பிருந்து மறுமுனையில் அவருடன் விளையாடிய வீரரின் கவனயீனத்தால் முடியவில்லை.

கடைசியில் சச்சின் தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த அண்டு முறியடித்தார்.ஆனால் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டம் பெற்ற சயிட் அன்வரின் சாதனை 13 ஆண்டுகள் நிலைத்திருந்தது அவர் ஓய்வு பெரும் வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை...அவரின் சாதனையை முறியடித்த சச்சினின் சாதனை 1 ஆண்டுதான் நிலைத்திருந்தது.சேவாக் நேற்று தகர்த்துவிட்டார்.



ஒரு நாள் போட்டிகளில் ஒரு போட்டியில் அதிக ஓட்டம் பெற்றவர்கள்
(புள்ளிவிபரம் -espncricinfo தளத்தில் பெறப்பட்டது)


PlayerRunsBalls4s6sSRTeamOppositionGroundMatch DateScorecard
V Sehwag219149257146.97Indiav West IndiesIndore8 Dec 2011ODI # 3223
SR Tendulkar200*147253136.05Indiav South AfricaGwalior24 Feb 2010ODI # 2962
CK Coventry194*156167124.35Zimbabwev BangladeshBulawayo16 Aug 2009ODI # 2873
Saeed Anwar194146225132.87Pakistanv IndiaChennai21 May 1997ODI # 1209
IVA Richards189*170215111.17West Indiesv EnglandManchester31 May 1984ODI # 264
ST Jayasuriya189161214117.39Sri Lankav IndiaSharjah29 Oct 2000ODI # 1652
G Kirsten188*159134118.23South Africav U.A.E.Rawalpindi16 Feb 1996ODI # 1049
SR Tendulkar186*150203124.00Indiav New ZealandHyderabad (Deccan)8 Nov 1999ODI # 1523
SR Watson185*961515192.70Australiav BangladeshDhaka11 Apr 2011ODI # 3150
MS Dhoni183*1451510126.20Indiav Sri LankaJaipur31 Oct 2005ODI # 2290
SC Ganguly183158177115.82Indiav Sri LankaTaunton26 May 1999ODI # 1463
ML Hayden181*1661110109.03Australiav New ZealandHamilton20 Feb 2007ODI # 2527
IVA Richards181125167144.80West Indiesv Sri LankaKarachi13 Oct 1987ODI # 457
H Masakadza178*167174106.58Zimbabwev KenyaHarare18 Oct 2009ODI # 2912
PR Stirling177134215132.08Irelandv CanadaToronto7 Sep 2010ODI # 3042


நேற்று இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் 4 காவது முறையாக 400 ஓட்டங்களைக்கடந்தது நேற்று இந்திய அணி பெற்ற 418 ஓட்டங்கள் இந்திய அணி சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பெற்ற அதி கூடிய ஓட்டங்களாகும் இதற்கு முன் இலங்கைக்கு எதிராக 414 ஓட்டங்களைப்பெற்றதே இந்திய அணியின் அதிக படியான ஓட்டங்கள்.

சர்வதேச ரீதியில் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைபெற்ற அணி என்றசாதனை இலங்கை அணிவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது நெதர்லாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்ற 443 ஓட்டங்கள்தான் ஒரு நாள் போட்டிகளில் ஒரு அணி பெற்ற அதி கூடிய ஓட்டங்கள் ஆகும்.

ஒரு நாள் போட்டிகளில் 400 ஓட்டங்களுக்கு மேல் பெறப்பட்ட சந்தர்ப்பங்கள்
(புள்ளிவிபரம் -espncricinfo.தளத்தில் இருந்து பெறப்பட்டது)


TeamScoreOversRRInnsOppositionGroundMatch DateScorecard
Sri Lanka443/950.08.861v NetherlandsAmstelveen4 Jul 2006ODI # 2390
South Africa438/949.58.782v AustraliaJohannesburg12 Mar 2006ODI # 2349
Australia434/450.08.681v South AfricaJohannesburg12 Mar 2006ODI # 2349
South Africa418/550.08.361v ZimbabwePotchefstroom20 Sep 2006ODI # 2420
India418/550.08.361v West IndiesIndore8 Dec 2011ODI # 3223
India414/750.08.281v Sri LankaRajkot15 Dec 2009ODI # 2932
India413/550.08.261v BermudaPort of Spain19 Mar 2007ODI # 2542
Sri Lanka411/850.08.222v IndiaRajkot15 Dec 2009ODI # 2932
New Zealand402/250.08.041v IrelandAberdeen1 Jul 2008ODI # 2727
India401/350.08.021v South AfricaGwalior24 Feb 2010ODI # 2962


நேற்றய போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது முதலில் துடுப்பெடுத்து ஆடிய இந்திய அணி சேவாக்கின் இரட்டைச்சதத்துடன் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 418 ஓட்டங்களைக்குவித்தது.பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 265 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

சேவாக்கின் சாதனை
சேவாக் 170 ஓட்டங்களைப்பெற்று இருந்த போது மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் சமி சேவாக் கொடுத்த கேட்சை தவறவிட்டுவிட்டார் அதை பயன் பயன் படுத்திய சேவாக் அதிரடியாக சாதனை படைத்தார்

மேற்கிந்தியத் தீவுகளின் ரஸ்ஸல் வீசிய 44-வது ஓவரில் பவுண்டரியை அடித்து இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார் சேவாக். 140 பந்துகளில் 6 சிக்ஸர், 23 பவுண்டரி உதவியுடன் அவர் 200 ரன்களை எட்டினார்.
 149 பந்துகளைச் சந்தித்த சேவாக் 7 சிக்ஸர், 25 பவுண்டரிகளுடன் 219 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டியில் 8,000 ரன்களையும் நேற்று கடந்தார்.8000 ரன்களை எட்டிய 6-வது இந்திய வீரர் சேவாக். சச்சின், கங்குலி, திராவிட், அசாருதீன், யுவராஜ் சிங் ஆகியோர் 8000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள மற்ற வீரர்கள்.இதில் சச்சின்,கங்குலி,ராவிட் ஆகியோர் 10000 ம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்



கேப்டனாக சாதனை
ஓரு நாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து அதிக ஓட்டம் குவித்த வீரர் என்ற சாதனையையும் சேவாக் தன் வசம் எடுத்துக்கொண்டார்...இதற்கு முன் சனத் ஜெயசூர்யா இலங்கை அணியின் கேப்டனாக இருந்த போது இந்திய அணிக்கு எதிராக 189 ஓட்டங்களை விளாசியிருந்தார்,அதற்கு அடுத்த படியாக சச்சின் இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது நியூஸ்லாந்துக்கு எதிராக 186 ஓட்டங்களை பெற்றிருந்தார்.நேற்று சேவாக் கேப்டனாக 219 ஓட்டங்களைப்பெற்று புதிய வரலாறு படைத்தார்.



ஏற்கனவே சேவாக்குற்கு கேப்டனாக ஒரு பெருமையுள்ளது அதாவது 2006 ம் ஆண்டு இந்திய அணி தனது முதலாவது சர்வதேச 20 ஓவர் போட்டியை விளையாடிய போது இந்திய அணியின் கேப்டனாக செயற்பட்டவர் சேவாக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என் பார்வையில் சேவாக்
இந்திய அணியில் நான் மிகவும் ரசிக்கும் ஒரு வீரர் சேவாக். இந்திய அணியின்  அதிரடிக்கேப்டன் கங்குலி இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பில் பல வீரர்களை உருவாக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் சேவாக்கை ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக மாற்றிய பெருமை கங்குலியைத்தான் சாரும்.

2004 பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் விளாசும் போது சேவாக் 295 ஓட்டங்களைப்பெற்று இருந்த போது சிக்ஸ்சர் அடித்து 300 ஓட்டங்களை கடந்தார்..அதே போல நேற்று ஓரு நாள் போட்டியில் 197 ஓட்டங்களைப்பெற்று இருந்த போது பவுண்டரி அடித்து 200 ஓட்டங்களைக்கடந்தார்.இந்த தைரியம் எந்த கிரிக்கெட் வீரருக்கு வரும்? ஆனால் இதான் சேவாக்கின் சிறப்பம்சம்

ஓரு நாள் போட்டிகளில் சேவாக் இரட்டை சதம் அடிப்பார் என்று நான் எதிர்பார்த்து இருந்தேன் அதே போல அடித்துவிட்டார்.சச்சின் ஓரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த போது பலர் சொல்லி இருந்தார்கள் டெஸ்ட் போட்டிகளில் பிரைன்லாராவின் உலக சாதனையான 400* ஓட்டங்கள் சாதனையை சச்சின் முறியடிப்பார் என்று ஆனால் சச்சின் அதை முறியடிப்பது என்பது எவ்வளவு தூரம் சாத்திய மாகும் என்று எனக்குத்தெரியவில்லை.சச்சின் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஒரு முச்சதத்தை கூட பெற்றதில்லை அவரது அதிக பட்ச ஸ்கோர் 248*தான்
சச்சின் தற்போது நீண்ட இனிங்சுகள் விளையாடுவதும் குறைவடைந்துள்ளது
ஆனால் சச்சின் எப்ப எந்த சாதனை படைப்பார் என்று யாருக்கு தெரியும் என்றாலும் லாராவின் 400 ஓட்டங்கள் சாதனையை சச்சின் முறியடிப்பது கஸ்டம் தான்.

சேவாக் இரண்டு முறை டெஸ்டில் முச்சதம் அடித்திருக்கின்றார்.டெஸ்ட்லில் பல அதிரடி இனிங்ஸ்களை விளையாடும் சேவாக் பிரைன் லாராவின் 400* ஓட்டங்கள் உலக சாதனையை முறியடித்தாலும் ஆச்சரியம் எதுவும் இல்லை தற்போது அந்த சாதனையை முறியடிக்க கூடிய வீரர்களுள் சேவாக் முன்னிலையில் இருக்கின்றார்.என்றால் மிகையாகாது.

இன்னும் சேவாக் கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைக்கவேண்டும் என்று ஒரு ரசிகனாக அவரை வாழ்த்துகின்றேன்.

படங்கள்-கூகுள் தேடலில் பெறப்பட்டவை
*********************************************************************************
அடுத்தவாரம் என்னைக்கவர்ந்த பிரபலங்களில் என்னைக்கவர்ந்த ஒரு சினிமாப் பிரபலம் பற்றி பார்ப்போம்
*********************************************************************************
முஸ்கி-கடந்த சில நாட்கள் நண்பர்களின் தளங்களுக்கு சீராக வர முடியவில்லை இன்று எல்லோறின் தளங்களுக்கும் வருகின்றேன் 

Post Comment

29 comments:

ஆகுலன் said...

சேவாக்கின் தாண்டவம் உச்ச கட்டம்......

Victor said...

When Sachin made 200, Sehwag played that game.
http://www.espncricinfo.com/ci/engine/match/441828.html

பால கணேஷ் said...

சேவாக்கின் விளையாடும் ஸ்டைல் ஆரம்ப காலங்களில் டெண்டுல்கரின் ஸ்டைலில் இருந்தது. பின்னர் சற்று மாற்றிக் கொண்டார். ஒருநாள் போட்டி, டெஸ்ட் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல் விளாசித் தள்ளும் அவர் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். மேலும் பல சாதனைகளை அவர் படைக்க ராஜ் உடன் சேர்ந்து நானும் வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.

சம்பத்குமார் said...

வீரே(ர)ந்திர சேவாக் இந்தியனின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் சென்றுவிட்டார்.

சாதனை படைத்த அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா..

மென் மேலும் சாதனைகள் படைப்பார்.

கோகுல் said...

வீறு கொண்டு எழுந்தார் நேற்று சேவாக்.
லாராவின் சாதனையை தகர்க்க இவருக்கு சாத்தியமே.

அவரது அதிரடியால் பல முக்கிய கட்டங்களில் ஆட்டமிழப்பது மட்டுமே இவரது பலவீனம்.
ஆனா சேவாக்னாலே அதிரடி தானே.அது இல்லாம அவரது ஆட்டத்தை பாக்க நல்லாயிருக்காது.

kaialavuman said...

இது போன்ற அதிரடி மட்டையாளர்களின் பலமே அவர்களின் hand-eye coordination தான். சேவாகின் footwork தான் அவர் பலவீனம் என்று கூறுவார்கள். ஆனால், அதுவே cut விளையாடுவதற்கு நிறைய நேரம் தருகிறது என்று நினைக்கிறேன். அவர் அதிரடியாக விளையாடினாலும் மற்றவர்களிடம் இருந்து அவரை வேறு படுத்துவது அவரின் அதிரடிகள் offside-ல் இருப்பதுதான். சாதாரணமாக அதிரடி ஆடுபவர்கள் leg-sideல் தான் பலமாக அடிப்பார்கள்; அதனால் cross-bat விளையாடி ஆட்டமிழ்ப்பார்கள். ஆனால் சேவாக் பொதுவாக சுழல் பந்தை தான் leg-sideல் ஆடுவார். அதுகூட அவர் நீண்ட innings ஆடுவதற்கு காரணமாக இருக்கிறது போலும்.

Unknown said...

தரவுகள் எழுதும்போது சரியாக ஆராய்ந்து தேடி எழுதுங்கள். சச்சின் இரட்டை சதம் அடித்த போட்டியில் சேவாக் விளையாடி 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.அத்துடன் சச்சின் தற்போது அதிகபட்சமாக 248* கொண்டிருப்பதால் லாராவின் சாதனையை முறியடிப்பது கடினம். சேவாக் முச்சதம் பெற்றிப்பதால் முறியடித்தால் ஆச்சரியம் இல்லை என்பது இவ்வளவு கிரிக்கெட் பார்த்த நீங்கள் சொல்லவது நகைப்புக்கூரியது. டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் ஒன்றா? சேவாக் நின்று நிலைத்து ஆடமாட்டார். ஆனால் சேவாக் நிட்கும் நேரம் முழுவதும் விளாசி செல்வதால்தான் பின்னுக்கு வரும் வீரர்கள் இலகுவாக விளையாட முடிகிறது.நான் ஒரு சச்சின் ரசிகன்தான்.இதை யோசித்து பாருங்கள்இப்போது ஜெட் விமானம் எல்லாம் வந்தாலும் விமானத்தை கண்டு பிடித்த ரைட் சகோதரகளுக்குதானே பெருமை அது போலதான் இரட்டைசதம்மும். சேவாக்இன் பெரிய பலவீனம் கிரீஸ்சீல் நின்ற படியே எல்லா பந்துகளையும் விளையாடுவது. கால் எடுத்து வைத்து விளையாடுவது இல்லை.

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்மந்தமே இல்லை, மும்பையில் சச்சின் ஹோட்டல்ல போயி குடும்பமா சாப்பிடுவதொடு சரி ஹி ஹி...

சென்னை பித்தன் said...

நேற்றைய ஆட்டம் இன்னும் மனதிலேயே நிற்கிறது ;இப்போது உங்கள் பதிவு வேறு.நல்ல தகவல்களுடன் நல்ல பகிர்வு.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் பதிவை படித்தவுடன் இன்னொருமுறை Match-யை பார்த்த மாதிரி உணர்ந்தேன்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

சி.பி.செந்தில்குமார் said...

கிரிக்கெட் பார்க்கமாட்டேன். இண்ட்ரஸ்ட் இல்லை

சி.பி.செந்தில்குமார் said...

பதிவில் உழைப்பு தெரிகிறது. நல்ல பகிர்வு

சக்தி கல்வி மையம் said...

புள்ளி விவரங்களுடன் விரிவான அலசல்..

இந்தப் பதிவுக்கான உங்கள் உழைப்புக்கு ஹாட்ஸ் ஆப்..

K.s.s.Rajh said...

நண்பர்களே சச்சின் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த போட்டியில் சேவாக் விளையாடவில்லை என்று தவறுதளாக குறிப்பிட்டு விட்டேன்
தவறுக்கு மன்னிக்கவேண்டும் திருத்திக்கொள்கின்றேன்

K.s.s.Rajh said...

@
M.Shanmugan கூறியது...
தரவுகள் எழுதும்போது சரியாக ஆராய்ந்து தேடி எழுதுங்கள். சச்சின் இரட்டை சதம் அடித்த போட்டியில் சேவாக் விளையாடி 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.அத்துடன் சச்சின் தற்போது அதிகபட்சமாக 248* கொண்டிருப்பதால் லாராவின் சாதனையை முறியடிப்பது கடினம். சேவாக் முச்சதம் பெற்றிப்பதால் முறியடித்தால் ஆச்சரியம் இல்லை என்பது இவ்வளவு கிரிக்கெட் பார்த்த நீங்கள் சொல்லவது நகைப்புக்கூரியது. டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும் ஒன்றா? சேவாக் நின்று நிலைத்து ஆடமாட்டார். ஆனால் சேவாக் நிட்கும் நேரம் முழுவதும் விளாசி செல்வதால்தான் பின்னுக்கு வரும் வீரர்கள் இலகுவாக விளையாட முடிகிறது.நான் ஒரு சச்சின் ரசிகன்தான்.இதை யோசித்து பாருங்கள்இப்போது ஜெட் விமானம் எல்லாம் வந்தாலும் விமானத்தை கண்டு பிடித்த ரைட் சகோதரகளுக்குதானே பெருமை அது போலதான் இரட்டைசதம்மும். சேவாக்இன் பெரிய பலவீனம் கிரீஸ்சீல் நின்ற படியே எல்லா பந்துகளையும் விளையாடுவது. கால் எடுத்து வைத்து விளையாடுவது இல்லை////

தகவலுக்கு நன்றி பாஸ்

பாஸ் முதலில் வடிவாக படித்து பாருங்கள் நான் சொன்னவிடயம் சச்சின் இதுவரை ஒரு முச்சதம் கூட பெற்றது இல்லை அவர் நீண்ட இனிங்சுகள் விளையாடவோ இல்லை அதிரடியாக டெஸ்டில் சேவாக்கை போலவே தற்போது ஆடுவது இல்லை எனவேதான் நான் அப்படி குறிப்பிட்டேன்..ஆனால் சேவாக் அதிரடியாக முதல் நாளிளே ஓட்டங்களைக்குவிக்க கூடியவர் தற்போது சச்சினுடன் ஓப்பிடும் போது பிரைன்லாராவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு சச்சினைவிடவும் சேவாக்கிற்கே அதிகள்..அதைத்தான் சுட்டிக்காட்டியுள்ளேன் அதைவிட நான் இதில் சச்சினை குறைத்து எந்த கருத்தையும் சொல்லவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்...சச்சின் என்ன நேரத்தில் என்ன சாதனை செய்வார் என்று என்ன தெரியும் என்று ஒரு வசனம் இணைத்துள்ளேன் வாசித்து பாருங்கள்....

K.s.s.Rajh said...

@ஆகுலன்
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ Victor கூறியது...
When Sachin made 200, Sehwag played that game.
http://www.espncricinfo.com/ci/engine/match/441828.html
////

தகவலுக்கு நன்றி பாஸ் திருத்திவிட்டேன்

K.s.s.Rajh said...

@
கணேஷ் கூறியது...
சேவாக்கின் விளையாடும் ஸ்டைல் ஆரம்ப காலங்களில் டெண்டுல்கரின் ஸ்டைலில் இருந்தது. பின்னர் சற்று மாற்றிக் கொண்டார். ஒருநாள் போட்டி, டெஸ்ட் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல் விளாசித் தள்ளும் அவர் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். மேலும் பல சாதனைகளை அவர் படைக்க ராஜ் உடன் சேர்ந்து நானும் வாழ்த்துவதில் மகிழ்கிறேன்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சம்பத் குமார் கூறியது...
வீரே(ர)ந்திர சேவாக் இந்தியனின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் சென்றுவிட்டார்.

சாதனை படைத்த அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா..

மென் மேலும் சாதனைகள் படைப்பார்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
வீறு கொண்டு எழுந்தார் நேற்று சேவாக்.
லாராவின் சாதனையை தகர்க்க இவருக்கு சாத்தியமே.

அவரது அதிரடியால் பல முக்கிய கட்டங்களில் ஆட்டமிழப்பது மட்டுமே இவரது பலவீனம்.
ஆனா சேவாக்னாலே அதிரடி தானே.அது இல்லாம அவரது ஆட்டத்தை பாக்க நல்லாயிருக்காது////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
வேங்கட ஸ்ரீனிவாசன் கூறியது...
இது போன்ற அதிரடி மட்டையாளர்களின் பலமே அவர்களின் hand-eye coordination தான். சேவாகின் footwork தான் அவர் பலவீனம் என்று கூறுவார்கள். ஆனால், அதுவே cut விளையாடுவதற்கு நிறைய நேரம் தருகிறது என்று நினைக்கிறேன். அவர் அதிரடியாக விளையாடினாலும் மற்றவர்களிடம் இருந்து அவரை வேறு படுத்துவது அவரின் அதிரடிகள் offside-ல் இருப்பதுதான். சாதாரணமாக அதிரடி ஆடுபவர்கள் leg-sideல் தான் பலமாக அடிப்பார்கள்; அதனால் cross-bat விளையாடி ஆட்டமிழ்ப்பார்கள். ஆனால் சேவாக் பொதுவாக சுழல் பந்தை தான் leg-sideல் ஆடுவார். அதுகூட அவர் நீண்ட innings ஆடுவதற்கு காரணமாக இருக்கிறது போலும்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
எனக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்மந்தமே இல்லை, மும்பையில் சச்சின் ஹோட்டல்ல போயி குடும்பமா சாப்பிடுவதொடு சரி ஹி ஹி////

ஹா.ஹா.ஹா.ஹா.........

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
நேற்றைய ஆட்டம் இன்னும் மனதிலேயே நிற்கிறது ;இப்போது உங்கள் பதிவு வேறு.நல்ல தகவல்களுடன் நல்ல பகிர்வு////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
பகிர்வுக்கு நன்றி ////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சி.பி.செந்தில்குமார் கூறியது...
பதிவில் உழைப்பு தெரிகிறது. நல்ல பகிர்வு////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
புள்ளி விவரங்களுடன் விரிவான அலசல்..

இந்தப் பதிவுக்கான உங்கள் உழைப்புக்கு ஹாட்ஸ் ஆப்.////

நன்றி பாஸ்

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்,

ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எனுன் சாதனையினைத் தனதாக்கிக் கொண்ட சேவாக்கினை நாமும் வாழ்த்துவோம்.
ஆதாரங்கள், புள்ளி விபரங்களோடு நல்லதோர் அலசலை சேவாக் பற்றி கொடுத்திருக்கிறீங்க.

ம.தி.சுதா said...

அதிரடி ஆட்டக்காரர்களிலேயே செவாக் வித்தியாசமானவர்..

அவரது சாதாரண தடுப்பட்டம் கூட ஒரு உதைப்பு அடியை ஒத்ததாகவே இருக்கிறது...

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails