Tuesday, December 13, 2011

தனிமையில் இனிமை காண முடியுமா?

என் தனிமையின் சோகங்கள்,சந்தோசங்களை கொட்டும் இடம் தான் எனது இந்த நண்பர்கள் வலைப்பதிவு.நான் வலைப்பதிவு எழுத வந்த போது என் நண்பர்கள் யாரும் அதை ஊக்குவிக்கவில்லை ஏன் உனக்கெல்லாம் இந்த வேலை என்று தூற்றினார்கள் இப்ப கூட என் நண்பர்கள் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் இது எல்லாம் ஒரு வேலையா பிரயோசனமாக எதையாவது செய் என்கின்றார்கள்

ஆனால் என் எழுத்துக்கள் இன்று உலக அரங்கில் வாசிக்கப்படுகின்றது இந்த வலையுலகம் நிறைய நண்பர்களைத்தந்துள்ளது என் சோகத்தையும் மகிழ்ச்சியையும் இங்கே பகிர்ந்து கொள்ளும் போது என் மனம் ஆறுதல் அடைகின்றது.இந்த வலையுலகம் எனக்கு நிறைய நண்பர்களைத்தந்தது அவர்களை நண்பர்கள் என்று சொல்வதை விட உறவுகள் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்.

மனதில் நிறைய வலியிருந்தாலும் அதை எல்லாம் மனதிலே போட்டு புதைத்துவிட்டு என் எழுத்துக்கள் மூலம் என் தளத்திற்கு வரும் வாசகர்களை திருப்திபடுத்தி வந்துள்ளேன்.சில நேரங்களில் என்னையும் மீறி வலிகள் என் வாழ்க்கையில் வந்துவிடுகின்ற போது மனம் மிகவும் வலிக்கும்.பட்ட காலிலே படும் என்பார்கள் கெட்ட குடியே கெடும் என்பார்கள் இந்த பழமொழியின் அர்த்தத்தை நான் என் வாழ்க்கையில் உணர்ந்து கொண்டுள்ளேன்.


மனதில் கஸ்டம் இருக்கும் போது எழுத்தில் கவனம் செலுத்த முடியவில்லை
எனவே தான் கடந்த சில நாட்களாக வலையுலகில் சீராக இயங்க முடியவில்லை இதனால் வலையுலகைவிட்டு சில நாட்களுக்கு ஒதுங்கி இருப்போம் என்று கூட நினைத்தேன்.ஆனால் என்னை ஆதரித்து என் எழுத்துக்களுக்கு அங்கிகாரம் வழங்கிய உங்களை விட்டு பிரிய மனம் வரவில்லை இதனால் என்ன கஸ்டம் மனதில் இருந்தாலும் என் எழுத்துக்களை ரசிக்கும் உங்களுக்காக நான் தொடர்ந்து எழுதுவேன் இனி சீராக என் தளத்தில் பதிவுகள் வரும் என்பதனை அன்புடன் அறியத்தருகின்றேன்.

சரி இந்த பதிவின் மூலம் என்னை பற்றி சிலவிடயங்களை உங்களுக்குச்சொல்கின்றேன்


எனக்கு மிகவும் பிடித்த இடம்-என் ஊர்(அது எது என்று கேட்கப்படாது)

எனக்கு மிகவும் பிடித்த கலர்-கருப்பு


எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர்-பிடல்காஸ்ட்ரோ


எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்-கங்குலி


எனக்கு மிகவும் பிடித்த நடிகர்-ரஜனிகாந்


எனக்கு மிகவும் பிடித்த நடிகை-இந்த பட்டியல் நீளம் ஆனால் ஒருவரை சொல்லனும் என்றால் அது ஜஸ்வர்யா ராய் தான்


எனக்கு மிகவும் பிடித்த உடை-கருப்பு ஜுன்ஸ்,கருப்பு டீ சேட்,


பிடித்த வாசகம்-உன் வாழ்க்கை உன் கையில்



பிடித்த உணவு-அம்மாவின் கையால் சாப்பிடும் எந்த உணவும் எனக்குப்பிடிக்கு அது கஞ்சியாக இருந்தாலும் சரி வெரும் தண்ணீராக இருந்தாலும் சரி


பிடித்த திரைப்படங்கள்-ஜோதாஅக்பர்,சங்காய் எக்ஸ்பிரஸ்(சீன மொழி படம்)இது ஒரு மிகசிறந்த நகைச்சுவைப்படம்,தமிழ் படங்களில் பிடித்தது என்றால் இந்த பட்டியல் நீளம் என்பதால் இதில் சொல்ல இடம் காணாது ஆனால் இரண்டு படத்தை கூறுகின்றேன் வெண்ணிலா கபடிக்குழு,அழகர் சாமியின் குதிரை(இந்த படங்களில் தான் நம்ம அபிமான நடிகை சரன்யா மோகன் ஹீரோயினாக நடித்து இருக்காங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்)


கடவுள் பற்றி-நான் நேரில் பாத்துள்ளேன் நமக்கு யார் மேல் மரியாதை இருக்கோ தன் நலம் கருதாது நமக்காக பாடுபம் எல்லோறும் நமக்கு கடவுள்தான் கல்லாய் இருக்கும் கடவுளைவிட இவர்களை கடவுள் என்று சொல்லாம்


காதல்-சந்தித்த பொழுதுகளில் என்னை சிந்திக்கவிடாமல் தீண்டிச்சென்ற அழகிய தென்றல் ஆனால் இதுவரை கிடைக்காத எட்டாக் கனி ஒரு பெண்ணை திகட்ட திகட்ட காதலிக்க ஆசை(ஒருத்தியும் சிக்கிறாள் இல்லை அவ்வ்வ்வ்வ்)



திருமணம்-எனக்காக ஒருத்தி பிறக்காமலா இருப்பாள் அவளை சந்திக்கும் போது என் 30 வது வயதுக்கு பிறகு திருமணம் செய்வேன்(30 வயதுக்கு பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும் என்பது என் எண்ணம்)


பலம்-எந்த சூழலையும் தைரியமாக எதிர் கொள்ளும் மனநிலை


பலவீனம்-எல்லோறையும் இலகுவில் நம்பிவிடுவேன்


என் பார்வையில் பெண்கள்-உலகிற்கே ஒளிதரும் தெய்வங்கள் 


என் பார்வையில் ஆண்கள்-அப்பாவிகள்(ஹி.ஹி.ஹி.ஹி.......)


முஸ்கி-என் தளம் கடந்த சில நாட்கள் ஓப்பின் ஆவதில் பிரச்சனையாக இருக்கு சரி பண்ணவும் என்று எனக்கு தெரிவித்த நண்பன் துஷிக்கும்,மதிப்புக்குறிய யோகா ஜயாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்,அதிலும் துஷி என்னிடம் பேஸ்புக்கில்,போன்ற தனிப்பட்ட ரீதியில் தொடர்பில் இருப்பவர்.ஆனால் யோகா ஜயா பேஸ்புக்கிலோ இல்லை தனிப்பட்ட ரீதியில் தொடர்பில் இல்லை ஆனாலும் அவர் நண்பர்களின் தளங்கள் மூலம் என் தளம் ஓப்பின் ஆகவில்லை என்று கூறி எனக்கு அந்த விடயத்தை அறியத்தந்தார்.இந்த அன்புக்கு என்ன வென்று சொல்வது இதுதான் என் எழுத்தின் மூலம் நான் சம்பாதித்த உங்கள் அன்பு உறவுகளே.


என் எழுத்துக்கள் பற்றி உங்கள் கருத்துக்களை கருத்துரையில் சொல்ல முடியாத வாசகர்கள் மேலே என் தளத்தில் தொடர்புக்கு என்று ஒரு பக்கம் இருக்கு பாருங்கள் அதன் மூலம் என்னை தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் அதைவிட nanparkal@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் என்னைத்தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்களாம்.


அன்புடன்
உங்கள்
கே.எஸ்.எஸ்.ராஜ்
************************************************************************************************************
இதையும் கொஞ்சம் வாசியுங்கள்-ஈழத்து பதிவர்கள் ஒன்றினைந்து ஈழத்தின் கலை கலாச்சாரம் சம்மந்தமான விடயங்களை சொல்வதற்காகவும் ஈழத்து மொழிநடைகள் வாயிலாக உங்களை மகிழ்விக்கவும் ஈழவயல் என்ற ஒரு தளத்தை ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றார்கள்.எங்களை எல்லாம் பதிவுலகில் வளர்த்துவிட்ட நீங்கள் இந்த முயற்சியையும் கைதூக்கிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் ஆதரவுடன்  இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளார்கள் அங்கே இருக்கும் பதிவர்கள் எல்லாம் உங்களுக்கு நன்கு அறிமுகமான பதிவர்கள் தான்.ஈழத்தின் மொழி நடையில் அற்புதமான பல சிறந்த சுவாரஸ்யமான பதிவுகளை அங்கே படிக்கலாம் ஈழவயல் தளத்துக்கு செல்ல இங்கே கிளிக்-ஈழவயல்
************************************************************************************************************


இது ச்ச்சும்மா சரன்யா சரன்யா என்னா அழகுப்பா அவ்வ்வ்வ்வ்வ்வ்


Post Comment

32 comments:

பிரெஞ்சுக்காரன் said...

எல்லாவற்றையும் படித்தேன் மச்சான் சார்! என்ன சோகம் ஐயா உங்களுக்கு? துள்ளிக்கொண்டு திரிகிற 22 வயதில அப்படி என்னதான் சோகம்?

மச்சான் சார் உங்களுக்கு சோகம் என்றதும் எனக்கும் கவலையா இருக்கு! இயல்பாகவே நான் எதற்குமே கவலைப்படுவதில்லை! நான் பல உளவியல் பயிற்சிகள் எடுத்திருக்கிறேன்! எத்தனையோ பேரை சோகத்தில் இருந்து மீட்டிருக்கிறேன்!

பலரது தன்னம்பிக்கைகளைத் தட்டி எழுப்பி, அவர்களை மகிழ்ச்சியான மனிதர்களாக மாற்றியிருக்கிறேன்!

என்னுடைய மச்சான் சார் உங்களுக்கு சோகம் என்றால் நான் சும்மா இருக்கலாமோ?

மச்சான் சார் சோகத்தையும் துன்பத்தையும் விட்டுத் தள்ளுங்கள்! விட முடியாவிட்டால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்! இது சீரியஸ்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதல்ல இந்த கருப்பு கலரை விரும்புவது, கருப்பு கலர் டிரைஸ் போடுரதை விடுங்க தம்பி...

அதை அப்படியே பச்சைக்கலரா மாத்திப்பாருங்க.. அப்போ பாருங்க உங்க வாழ்க்கையை...

சீக்கிறம் ஒரு பெண்ணைப்பார்த்து லவ் சொல்லுங்க அப்பத்தான் உங்க ஓவர் பீலிங் சரியாகும்...

(நாங்க மட்டும் என்ன இளிச்சவாயன்களா காதல் மாட்டிக்கிட்டு அவஸ்தை படுறதுக்கு)


யான் பெறற் இன்பம் பெருக இவ்வையகம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
மச்சான் சார் சோகத்தையும் துன்பத்தையும் விட்டுத் தள்ளுங்கள்! விட முடியாவிட்டால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்! இது சீரியஸ்!
//////////



ஆஹா... உங்களை இன்பத்தை காட்டுறதுக்கு ஆள் வந்தாச்சி ராஜா...

சம்பத்குமார் said...

வணக்கம் சகோ

நல்ல உரைநடையில் அருமையாய் பதிவிடும் திறமை உங்களிடம் இருக்கையில்..

சோகம் எதற்கு..?

விட்டுத்தள்ளுங்க சகோ..நீங்க தொடர்ந்து எழுதுங்க..பெர்சனலா சோகம் இருந்தாலும் அதை துடைத்தெரியும் உங்கள் எழுத்துக்கள்..

விண்ணாணம் விநாசியார்! said...

வணக்கம் மோனை,
எப்பிடிச் சுகமாய் இருக்கிறீரே?

விண்ணாணம் விநாசியார்! said...

ஐயோ ராசா என்ன கப்பல் கவிழ்ந்து போச்சே?
கவலை வேண்டாம் மோனை, சந்தோசமாக இருங்கோ! காலம் கை கூடும் போது வாழ்க்கையும் கனியும்!

பால கணேஷ் said...

சரியாப் போச்சு... எனக்கு இருக்குற கஷ்டங்களையெல்ம் கேட்டால் பயந்துடுவீங்க. எல்லாத்தையும் ஓரம் தள்ளி வெச்சுட்டுத்தான் வலையுலகில உலவிக்கிட்ருக்கேன் ராஜ். இங்க மத்தவங்களோட பழகறது எனக்கு தெம்பைத் தருது. நீங்க சின்னப்பையன் (என்னைவிட) இன்னும் உற்சாகமா வரணும். சரியா...

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்குறீங்க...வாழ்க வளமுடன்.
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

kaialavuman said...

Cheer up ராஜா.
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கு சிரிக்காத் நாளில்லையே”னு விட்டுத் தள்ளுங்க.

திருமணத்திற்கு 30 வய்து ஆக வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். [22 வயது நிச்சயமாகக் குறைவுதான்; ஆனாலும் 3-4 வருடங்களுக்குப் பின், அதற்கான காலம் / வாய்ப்பு, 30க்கு முன்னமே, வந்தால் வயதைக் காரணம் காட்டித் தள்ளிப் போடாதீர்கள்].

சோகம் நம் ஆக்கங்களை அழித்து சுயபச்சாதாபத்தில் கொண்டு சேர்த்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மற்றபடி அறிவுரை(!!!) கூறுவது போல் இருந்தால் மன்னிக்கவும்.

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!எழுதுவது ஒரு கலை.அதிலும் பலரின் ஆதரவை இப்போது பெற்றிருக்கும் உங்களுக்கு,சில தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருப்பதென்பது இயற்கையே!சோகங்களை மறந்து விட்டு இது போன்ற மேலும் பல பதிவுகள் உங்களிடமிருந்து வர வேண்டும்!இயற்கையை ரசிப்பது,வேறு பணிகளில் கவனத்தை செலுத்துவது ஆறுதல் தரும்! நன்றி ராஜ்!

Anonymous said...

தளம் அழகாக இருக்கு பாஸ்..டிசைனிங் நிரூபனா? அவற்ற கைவண்ணம் போல தான் இருக்கு?

Anonymous said...

///பெண்கள் - உலகுக்கே ஒளி தரும் கண்கள் /// ஏன்யா அவளு பெரிய பல்ப்புகளை கட்டிக்கொண்டா திரியினம்...)

ராஜி said...

நேத்து என் பிளாக் படிச்சுட்டு கமெண்ட் போட்டிருக்கும் போதே நினைச்சேன் இப்படி எதாவது பதிவு வரும்ன்னு.
என் ஒரு பதிவுக்கே சோர்ந்து போய்ட்டால் எப்படி தம்பி?

ராஜி said...

ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..,
ன்னு ஆட்டோகிராஃப் பாட்டை செல்போன்ல ரிங்டோனா வச்சுக்கோங்க. இல்லாட்டி ஒஸ்தி படம் பாருங்க. இவ்வளவு கேவலமா நடிச்ச சிம்புவே அடுத்த படத்துக்கு தயாராகும்போது, நாம ஏன் அடுத்த் இலக்கை நோக்கி போகக்கூடாதுனு தன்னம்பிக்க வரும் தம்பி

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

MANO நாஞ்சில் மனோ said...

சோகங்கள் இல்லாத மனிதர்கள் இல்லை நண்பா, அதை பரிகரிச்சு வாழ்க்கையை ஜெயிப்போம் வா..

வானமா எல்லை இல்லவே இல்லைன்னு பாடுங்க, திருமலை பாட்டை...!!!

லாரன்ஸ் விஜய் நடனமும் பாட்டின் வேகமும் மனதிற்கு உற்ச்சாகம் கொடுப்பவை...!!!

சக்தி கல்வி மையம் said...

வாழ்க்கையை ஈசியா எடுத்துக்கங்க மாப்ள..

"வீட்டுக்கு வீடு வாசற்படி"

M.R said...

சோகம் ,கவலை நம்மை புடம் போடும் நண்பா

கவலைய மறக்கவும்
சந்தோசத்தில் சிறக்கவும்

எனக்கு பிடித்த நடிகை

ஐஸ்வர்யா ராய்

அப்ப சரண்யா ! ஹி ஹி ஹி

ஆகுலன் said...

உங்களது ரசனைகள் அருமை..

"வளையாத நதியும் இல்லை ..
வலிக்காத வாழ்க்கையும் இல்லை.."

கோகுல் said...

வாழ்க்கை வாழ்வதற்கே.

எனக்கு தெரிந்த வரை நீங்க தெளிவாத்தான் சிந்திக்கறீங்கன்னு நினைக்கிறேன் .

Unknown said...

பதிவு தங்களைப் பற்றிய சில விபரங்களைத் தெரிவித்தன!

புலவர் சா இராமாநுசம்

குறையொன்றுமில்லை. said...

உங்களைப்பற்றி தெரிந்து கொண்டேன் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி முன்னேறுங்கள். வாழ்த்துக்கள். ஆசிகள்.

ஷைலஜா said...

குழந்தை ராஜா பெண்களைப்பத்தி சொன்னதை ரசிச்சேன்,,,என்ன இப்போ பெரிய வயசாயிடிச்சாம் உங்களுக்கு எல்லாம் நல்லாசாதிப்பீங்க...பிரமாதமான இயல்பான எழுத்து நடை இருக்கு...லேசான நகைச்சுவை உணர்வு இருந்தாலேபோதும் அவங்கள புத்திசாலிம்பாங்க நீங்க அதி புத்திசாலியா தெர்யறீங்க(ஐஸ் இல்ல:))

Mohamed Faaique said...

பாஸ்,.. உங்க முந்தைய பதிவு எனக்கும் திறக்கவில்லை. பொதுவாக இப்படி இருந்தால் ஈமெயிலில் தெரிவித்து விடுவேன். ஆபீஸில் ஆணி அதிகம், இணைய வேகம் ரொம்ப கம்மி.. அதனால அறிவிக்க முடியல..

பாஸ்.. யாருக்குமே!! பதிவுலகத்துக்கு வெளியுல பாராட்டு கிடையாது.. திட்டுதான் விழுது..என்னையக் கூட எவ்ளோ கேவலமா திட்டினானுங்க தெரியுமா??? அதையே ஒரு பதிவா போடலாம்’னு இருக்கேன். ஏதோ நம்ம சந்தோசத்துக்காக எழுதுறோம். அவ்ளோதான்..

சுதா SJ said...

யோவ்.... என்னைய்யா இது?? யாருக்கு இல்லை கவலை.... வலிக்காமல் வாழ்க்கை இல்லை நண்பா.... நாங்க இருக்கோம் கவலையை விடுங்கோ..... என்ஜாய் மக்கா

சுதா SJ said...

உங்க பலவீனம்தான் எனக்கும் மச்சி.... அதனால்தான் எனக்கு அதிக சிக்கல்களும் வருது.... அதை மாற்ற முயற்சி செய்யுங்க ( நானும் மாற்ற முயற்சிக்கிறேன்... முடியுது இல்லையே... அவ்வ)

சுதா SJ said...

தளம் ரெம்ப அழகா இருக்கு பாஸ்.... சூப்பர்

சுதா SJ said...

நம்ம தேவயானியை விட்டுடியே சகலை.... :(

சுதா SJ said...

மச்சி.... உனக்கான தேவதை சீக்கிரமே வருவா........ சோ திகட்ட திகட்ட காதலிக்க வாழ்த்துக்கள் :)

Unknown said...

மாப்ள கவலைகளை ஒதுக்கித்தள்ளுங்கள்...இல்லையேல் அது உங்களை ஒதுக்கி விடும்...எப்பவுமே மனசை சந்தோஷமாக வைத்துக்கொள்ள முயற்சியுங்கள்...எதோ சொல்லனும்னு தோணிச்சி...நன்றி!

K.s.s.Rajh said...

என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கு அனைவருக்கும் நன்றி நண்பர்களே

ம.தி.சுதா said...

ராஜ் விரும்பியோ விரும்பாமலோ சிலது எமை நெருங்கியே தீருகிறது என்ன செய்வது...

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails