Wednesday, December 28, 2011

இந்த வருடம்,சினிமா,பதிவுலகம்,கிரிக்கெட்,என்னை கவர்ந்தவை

2011 வருடம் முடிய இன்னும் 3 நாட்களே இருக்கின்றன.புதிய வருடம் 2012 வரவேற்க நாம் தயாராகிக்கொண்டு இருக்கின்றோம் இந்த 2011 ம் ஆண்டில்  எனக்கு மிகவும் பிடித்த சினிமா,கிரிக்கெட்,பதிவுலகம்,போன்றவற்றில் என்னை கவர்ந்த மனதை பாதித்த விடயங்களை இந்த பதிவின் மூலம் அலசுவோம்.

சினிமா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் டாப்-5

  • ஆடுகளம்
  • அவன் இவன்
  • மங்காத்தா
  • சிறுத்தை
  • மாப்பிளை
சினிமா உலகில் மகிழ்ச்சியான விடயம்
அறிமுகமான காலம் தொட்டு நான் ரசித்துவரும் நடிகரான தனுஷ்க்கு தேசிய விருது கிடைத்தமை.
சினிமா உலகில் மனதை பாதித்த விடயம்
என் அபிமான நடிகரும் பாடகருமான மலேசியா வாசுதேவனின் மரணம்

மலேசியா வாசுதேவன்
கிரிக்கெட்
மகிழ்ச்சியான விடயம்

  • என் அபிமான கிரிக்கெட் வீரர்கள் பலரை நேரில் பார்த்தமை
      குறிப்பாக கிரிக்கெட்டில் கங்குலிக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த வீரரான அதிரடி மன்னன் அப்ரிடியை பார்தமை.
    • ஒரு நாள்போட்டிகளில் சேவாக் இரட்டை சதம் விளாசி சச்சினின் சாதனையை தகர்த்தமை
    • சச்சின் என்ற ஜாம்பவானுக்காக உலககோப்பையை வெல்வோம் என்று கூறி உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியமை.
    • டெஸ்ட் அந்தஸ்து தற்காலியமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ஸிம்பாவே அணிக்கு மீண்டும் ஜ.சி.சி டெஸ்ட் அந்தஸ்த்து வழங்கியமை
    கிரிக்கெட்டில் மகிழ்சியான விடயங்கள் நிறைய இருக்கு எல்லாவற்றையும் சொல்ல பதிவு போதாது

    கிரிக்கெட்டில் மனதை பாதித்த விடயங்கள்
    • இலங்கை அணி உலகக்கிண்ண இறுதி போட்டியில் தோல்வியடைந்தமை
    • முரளி தனது கடைசி போட்டியான உலகக்கிண்ண இறுதி போட்டியில் ஒரு விக்கெட்டையும் கைபற்றாமல் போனமை
    • சங்கக்கார இலங்கை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியமை
    கிரிக்கெட்டில் இந்த வருடம் மிகவும் உணர்வு பூர்வமான ஒரு சம்பவம் நடந்தது 
    தாதாவின் காலில் வீழ்ந்து வணக்கும் ரசிகர்
    அதாவது இந்திய அணியின் முன்னால் தலைசிறந்த கேப்டன் நம்ம தாதா கங்குலியை.இந்த வருடம் நடந்த ஜ.பி.எல் போட்டிகளில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை பின் யுவராஜ் சிங் தலைமையிலான புணே வாரியஸ் அணி கங்குலியை தங்கள் அணிக்காக விளையாட அழைத்தது புணே வாரியஸ் அணிக்காக கங்குலி முதல் போட்டியில் விளையாடிய போது நீண்ட நாட்களுக்கு பிறகு தாதாவின் ஆட்டத்தை பார்த ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்து கங்குலியின் காலில் வீழ்ந்து வணங்கினார்.கங்குலி மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் பாசத்துக்கு இதைவிட ஒரு உதாரணம் தேவையில்லை.

    பதிவுலகில்
    மகிழ்சியான விடயம்-நிறைய சொல்லாம் எல்லாமே மகிழ்ச்சிதான்

    இந்த வருடம் பதிவுலகில் சக பதிவர்களின் பதிவுகளில் படித்ததில் மிகவும் பிடித்த பதிவுகள் 
    இது மிகவும் கடினமான ஒன்று காரணம் பல பதிவர்களின் பல பதிவுகளை படித்து இருக்கின்றேன் ஆனாலும்.என்னை மிகவும் கவர்ந்த இரண்டு பதிவுகளை சொல்கின்றேன்.
    1)கவிதை வீதி செளந்தர் அண்ணன் அவர்கள் எழுதிய ”படுக்கை அறை வெளிப்படாத அனுபவங்கள் என்னும் கவிதை மிகவும் பிடித்த பதிவாக சொல்வேன்.அவரது கவிதையை வாசிக்க-இங்கே கிளிக்

    2)நாஞ்சில் மனோ அண்ணன் எழுதிய-”என் வாழ்க்கையில் என்னை தேடி வந்த காதல் புயல் சூறாவளியாக.....!!!!!” இந்த பதிவை நான் வாசிக்கும் போது அண்ணன் மனோ அவர்கள் எனக்கு அறிமுகம் இல்லை. இந்த பதிவை வாசித்த பின்புதான் நான் இவரின் தளத்தின் வாசகனானேன்.இவரின் பதிவை வாசிக்க இங்கே கிளிக்

    3)நான் எழுதிய பதிவில் மிக மிக எனக்கு பிடித்த பதிவு 

    பதிவுலகில் சாதித்தது-பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை நிறைய நண்பர்களை சம்பாதித்து இருக்கேன் இதை விட வேறு எந்த சாதனையும் தேவையில்லை எனக்கு.
    அதைவிட மதிப்பிற்குறிய புலவர் இராமாநுசம் ஜயா,சென்னை பித்தன் பாஸ்,யோகா ஜயா,காட்டான் மாம்ஸ் ,அம்பலத்தார் ஜயா,லக்ஸ்மி மேடம் போன்ற பெரியவர்கள் என் எழுத்துக்களை வாசித்து என்னை பாராட்டியமை,சிலருக்கு இது மிகைப்படுத்த பட்டதாக தோன்றினாலும் பெரியவர்களின் ஆசியை பெற்றதை நான் என் எழுத்துக்களுக்கும்,எனக்கும் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாகவே கருதுவேன்

    பதிவுலகில் மிகுந்த மகிழ்சி அடைந்த தருனம்-என் பதிவுகள் விகடன் குழுமம் உட்பட பல இடங்களில் அங்கிகாரம் பெற்றபோதும்.அதைவிட பன்னிக்குட்டி ராமசாமி,சி.பி.அண்ணன்,ஓட்டவடை நாராயணன் போன்ற நான் பதிவுலகில் பெரிதும் ரசித்த பல பதிவர்கள். முதன் முதலில் என் பதிவுகளுக்கு வந்து கமண்ட் போட்ட போதும்,

    பதிவுலகில் நன்றி சொல்ல விரும்புவது- என் தளத்தின் பதிவுகளை தவறாமல் படிக்கும் வாசகர்களுக்கும்,அதைவிட தொடர்ந்து என் பதிவுகளை தவறாமல் படித்து(ஹி.ஹி.ஹி.ஹி)கருத்துரைகள் கூறி என்னை ஊக்கபப்டுத்தும் சக பதிவர்கள் ,மற்றும் என் பதிவுகளை பலரிடம் கொண்டு சேர்க்கும் திரட்டிகள்.
    என்னையும் பதிவராக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த வருடம்
    பெரிதாக எந்த மாற்றமும் நடை பெறவில்லை வழமை போல என்றைக்காவது ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையுடன் போராடிக்கொண்டு இருக்கேன்..

    புதுவருடம் பற்றி 
    புதுவருடத்தில் வாழ்கை சிறப்பாக இருக்கும்.என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்கின்றேன்.


    அனைத்து நண்பர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    உங்கள்
    கே.எஸ்.எஸ்.ராஜ்


    Post Comment

    33 comments:

    நிரூபன் said...

    வணக்கம் மச்சான் சார்,

    சுவையான தொகுப்பு.
    சினிமா, பதிவுலகம், கிரிக்கட் என வித்தியாசமாக அலசியிருக்கிறீங்க.

    K.s.s.Rajh said...

    ////நிரூபன் கூறியது...
    வணக்கம் மச்சான் சார்,

    சுவையான தொகுப்பு.
    சினிமா, பதிவுலகம், கிரிக்கட் என வித்தியாசமாக அலசியிருக்கிறீங்க////

    வாங்க பாஸ் நன்றி பாஸ்

    குறையொன்றுமில்லை. said...

    சுவாரசியமான பதிவு ராஜ்.

    கவிதை வீதி... // சௌந்தர் // said...

    அட என்னப்பா என்னையும் வெட்கப்பட வைக்கிற...

    இந்த வருடத்தில் எப்போ எழுதிய என்னுடைய கவிதை ஒருவரால் மறக்கப்படாமல் நினைவுக்கூர்வது என்பது மிகவும் அபூர்வமானது....

    அந்த வகையில் என் கவிதை உயிரோடு இருக்கிறது என்பதற்க்கு சான்றாகிறது...

    தற்போது என் கவிதைக்கு கிடைத்த அங்கீகாரம் என்பது தமிழ்மணத்தைவிட பெரிய விருது கிடைத்த மகிழ்ச்சியை எற்படுத்துகிறது...

    மிக்க நன்றி ராஜ்...

    கவிதை வீதி... // சௌந்தர் // said...

    மலேசியா வாசுதேவன் மறைவு மிகவும் வேதனை அடைந்தவனில் நானும் ஒருவன்...

    பெத்து எடுத்தவதான் என்னையும் தத்துக்கொடுத்துபுட்டா...

    என்ற பாடல் என் வாழ்நாளில் அதிகமுறை கேட்டப்பாடல்...

    Unknown said...

    வரிசைப்படுட்த்தி சொல்லிய விதம் அருமை நன்றி!

    கவிதை வீதி... // சௌந்தர் // said...

    தங்களை கவர்ந்த படங்களில் உள்ள களவாணி படம் 2010-ல் வந்தது..

    ஒரு வேளை அதை இந்த ஆண்டு தான் பார்த்தீர்களா...?

    கவிதை வீதி... // சௌந்தர் // said...

    தங்களுக்கு என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    K.s.s.Rajh said...

    @
    Lakshmi கூறியது...
    சுவாரசியமான பதிவு ராஜ்////

    நன்றி மேடம்

    K.s.s.Rajh said...

    ////
    கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
    அட என்னப்பா என்னையும் வெட்கப்பட வைக்கிற...

    இந்த வருடத்தில் எப்போ எழுதிய என்னுடைய கவிதை ஒருவரால் மறக்கப்படாமல் நினைவுக்கூர்வது என்பது மிகவும் அபூர்வமானது....

    அந்த வகையில் என் கவிதை உயிரோடு இருக்கிறது என்பதற்க்கு சான்றாகிறது...

    தற்போது என் கவிதைக்கு கிடைத்த அங்கீகாரம் என்பது தமிழ்மணத்தைவிட பெரிய விருது கிடைத்த மகிழ்ச்சியை எற்படுத்துகிறது...

    மிக்க நன்றி ராஜ்..////

    அந்த கவிதைய நீங்கள் முதன் முதலாக எழுதிய போது நான் வாசிக்கவில்லை பின் மீள்பதிவாக போட்ட போதுதான் நான் வாசித்தேன் அப்படியே மனதில் நின்ற கவிதை பாஸ் கவிதை வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    K.s.s.Rajh said...

    @
    கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
    மலேசியா வாசுதேவன் மறைவு மிகவும் வேதனை அடைந்தவனில் நானும் ஒருவன்...

    பெத்து எடுத்தவதான் என்னையும் தத்துக்கொடுத்துபுட்டா...

    என்ற பாடல் என் வாழ்நாளில் அதிகமுறை கேட்டப்பாடல்..////

    ஆம் பாஸ் அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் பேரிழப்புதான்

    K.s.s.Rajh said...

    @
    விக்கியுலகம் கூறியது...
    வரிசைப்படுட்த்தி சொல்லிய விதம் அருமை நன்றி////

    நன்றி பாஸ்

    K.s.s.Rajh said...

    @
    கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
    தங்களை கவர்ந்த படங்களில் உள்ள களவாணி படம் 2010-ல் வந்தது..

    ஒரு வேளை அதை இந்த ஆண்டு தான் பார்த்தீர்களா...////

    அட ஆமா பாஸ் இந்த வருட ஆரம்பத்தில் பார்தேன் அதனால் சின்ன குழப்பம் தகவலுக்கு நன்றி பாஸ் திருத்திவிட்டேன்

    K.s.s.Rajh said...

    @
    கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
    தங்களுக்கு என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.////

    நன்றி பாஸ்

    MANO நாஞ்சில் மனோ said...

    ஆஹா என்னையும் பழைய மலரும் நினைவுக்கு கொண்டு போயிட்டீங்களே ஹா ஹா ஹா ஹா மிக்க நன்றி மக்கா...!!!

    MANO நாஞ்சில் மனோ said...

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், நிச்சயம் புது வருடத்தில் உங்கள் வாழ்க்கையில் ஒளி பிறக்கும், எழுதி வச்சிக்கோங்க, மறக்காமல் அதைப்பற்றியும் நான் வாழ்த்துனதையும் புது வருஷ கடைசியில சொல்லணும் சரியா...?

    Unknown said...

    ஹிஹி நல்ல காலம் பிடித்த படங்கள் ஒரு வரியில தந்திட்டீங்க நீங்களாச்சும் :P

    ராஜி said...

    இந்த பதிவின் மூலம் தங்கள பற்றி மேலும் அறிய முடிந்தது. நன்றி தம்பி

    சக்தி கல்வி மையம் said...

    உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    Yaathoramani.blogspot.com said...

    மிக அழகாக ஒரு வருடத்தில் பாதித்த நிகழ்வுகளை
    தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்
    அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    த.ம 8

    முத்தரசு said...

    பல்சுவை அலசல் - சுவை.

    உங்களுக்கும், உங்களின் நண்பர்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    Anonymous said...

    அருமையான தொகுப்பு.. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டில் நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்க ஆண்டவனை வேண்டுகிறேன் .

    Yoga.S. said...

    வணக்கம்,ராஜ்!என்னையும் ஒரு மனிதனாக மதித்து,என் பெயரையும் சேர்த்துக் கொண்டமைக்கு முதற்கண் நன்றிகள்!கூடவே வரப்போகும் புத்தாண்டில் பதிவுலகில் மட்டுமல்ல,மற்றும் அனைத்து விடயங்களிலும் சாதனை புரிந்து வெற்றி பெற எல்லாம் வல்லவனிடம் சிறியோன் வேண்டுகிறேன்!புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    சுதா SJ said...

    ராஜ்.... நல்ல தொகுப்பு.....
    அப்புறம்.... என்னது உங்களுக்கு மாப்பிளை படம் புடிக்குமா?????? அவ்வ்வவ்வ்

    சுதா SJ said...

    பரவாயில்லையே.... ராஜுக்கு கடந்த ஆண்டு நல்லாவே போயிருக்கு போல :))))

    அடுத்த ஆண்டு இன்னும் நல்ல நல்ல அனுபவங்கள் கிடைக்க என் வாழ்த்துக்கள்.

    காட்டான் said...

    வணக்கம் ராசுக்குட்டி..!
    வேலைப்பளு காரணமாக உன்னுடைய பதிவுகளை படித்து ஓட்டு போடுவதோடு சரி.. இன்றும் அப்படி எஸ்கேப் ஆகலாம் என்று பார்த்தா நீ என்னுடைய பெயரையும் சேர்த்து நன்றி சொல்லி இருக்கிறாய் ஹி ஹி அதுதான்யா இந்த பின்னுட்டம் நன்றி நன்றி !!.. வரும் வருடம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்..!!

    Anonymous said...

    இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..

    M.R said...

    அழகான அருமையான சுவாரஸ்யம் நிறைந்த தொகுப்பு நண்பா

    த.ம 12




    ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

    ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

    சி.பி.செந்தில்குமார் said...

    தங்களை பற்றிய பகிர்வுக்கு நன்றி பாஸ்

    தனிமரம் said...

    வணக்கம்,ராஜ்!என்னையும் ஒரு மனிதனாக மதித்து,என் பெயரையும் சேர்த்துக் கொண்டமைக்கு முதற்கண் நன்றிகள்!கூடவே வரப்போகும் புத்தாண்டில் பதிவுலகில் மட்டுமல்ல,மற்றும் அனைத்து விடயங்களிலும் சாதனை புரிந்து வெற்றி பெற எல்லாம் வல்லவனிடம் சிறியோன் வேண்டுகிறேன்!புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    //யோகா ஐயா என்னையும்  பதிவுலகில் வழிநடத்தும் ஒரு மூத்தவர் அவரையும் நீங்கள் இணைத்துக்கொண்டதற்கு என் சார்பிலும் நன்றிகள் ராச்!
    முன்கூட்டிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இனி எல்லாம் சுகமாய் நடக்க எம் பெருமானை பிரார்த்திக்கின்றேன்!

    ஷைலஜா said...

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! நினைத்தது நிறைவேற ஆசிகள்!

    Anonymous said...

    புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    எல்லாத்தயும் ஒரே இடத்தில் தந்தமைக்கு நன்றி...

    கிரிக்கெட் மொக்கைஸ்..::.. 3

    K.s.s.Rajh said...

    அனைவருக்கும் நன்றி நண்பர்களே

    இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

    கிரிக்கட் நண்பர்கள்
    Related Posts with Thumbnails