Wednesday, December 21, 2011

கங்குலி பாடிய தமிழ் பாடல்கள்

குட்டிச்சுவர்க்கம் வலைப்பதிவின் ஓனர் ஆமினா அக்கா ஒரு தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருந்தார் அதன் தலைப்பு நீயின்றி நானா?(தொடர்பதிவு) அதாவது இதில் ஒரு கதை எழுதி அதுக்கு பொருத்தமான பாடல்களை சேர்கவேண்டும் இதுதான் அந்த தொடர் பதிவின் சாராம்சம்.எனக்கு சிறுகதை எல்லாம் எழுத வராது.எனவே என் ஸ்டைலில் ஒரு பதிவு எழுதி அதுக்கு பொருத்தமான பாடல்களை இணைக்கின்றேன் என்னை தொடர் பதிவுக்கு அழைத்த ஆமினா அக்காவுக்கு நன்றி.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)



அதாவது நம்ம தாதா கங்குலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நாம் நினைத்தால் அதுக்கு பொருத்தமான பாடல்கள் எதை இணைக்கலாம் என்று ஒரு கற்பனை கலந்த சுவாரஸ்ய பதிவுதான் இது.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் 1992 ல் அறிமுக மாகி ஒரு போட்டியில் விளையாடிய பின் நான் இங்கே கிரிக்கெட் விளையாடவே வந்திருக்கேன்12வது வீரராக ஏனைய வீரர்களுக்கு பணிவிடை செய்ய இல்லைஎன்று அதிரடி அறிக்கை விட்டு 4 வருடங்கள் கிரிக்கெட் தேர்வாளர்கள் இவரை கண்டு கொள்ளவில்லை பின் 1996 இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகி தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக சதம் அடித்த போது

பாடல்-ராஜா கைய வைச்சா அது ராங்கா போனதில்லை


இந்திய அணியின் கேப்டனான போது
பாடல்-ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை 


இந்திய அணியின் கேப்டனாக அதிரடி வெற்றிகள் குவித்த போது குறிப்பாக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொண் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அவுஸ்ரேலிய அணியின் தொடர் வெற்றிக்கு ஆப்புவைத்த அந்த கொல்கத்தா டெஸ்ட் வெற்றியின் போதும்,எதிரணித்தலைவர்கள் கங்குலியின் தலைமைத்துவத்தை கண்டு அஞ்சிய போது
பாடல்-ராஜா ராஜாதி ராஜா நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா


கிரேக் சப்பலுடனான மோதலின் பின் இந்திய அணியின் கேப்டன் பதிவியில் இருந்து நீக்கக்பட்ட செய்தி வந்த போது கங்குலியிடம் அவர் வளர்த்துவிட்ட வீரர்களே சம்பிரதாயத்துக்கு கூட அவரிடம் பேசவில்லையாம்
பாடல்-ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சு கிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்துருச்சு நாலும் புரிஞ்சுருச்சு.நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி.


இந்திய அணியில் இருந்து ஓரம் கட்ட பட்ட பின் கங்குலியை மறு படியும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது
பாடல்-சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது நீங்கெல்லாம் என்மேல வைச்ச பாசம்

மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து மீள்வருகை மன்னாக அதிரடி ஆட்டம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்த போதும்.மீண்டும் பழய தாதாவாக சிறப்பாக விளையாடிய போது.
பாடல்-புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது வேட்டைக்காரன் வரவை பாத்து


சிறப்பாக விளையாடிக்கொண்டு இருக்கும் போதே கெளரவமாக ஓய்வு பெற்ற போது அவரால் இந்திய அணியில் வளர்த்து எடுக்கபப்ட்ட வீரர்களும் ஏனையவர்களும் அவரது ரசிகர்களும் கங்குலி இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டிய போது
பாடல்-நன்றி சொல்லவே உனக்கு வார்தை இல்லையே என்(ம்)மன்னவாஇது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)


முஸ்கி-தாதாவை கலாய்பதற்காக இந்த பதிவு எழுதப்டவில்லை இந்த பதிவில் தாதாவை கலாய்த்து ஒரு வரிகூட வரவும் இல்லை. நான் ஒரு தீவிர தாதா ரசிகன் என்பதை தாதா ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்கின்றேன்

வீடியோக்கள்-youtube
படம்-கூகுள்
*********************************************************************************
ஆமினா அக்கா அழைத்த நீயின்றி நானா?(தொடர்பதிவு)  தொடர் பதிவுக்கு நான் எவரையும் அழைக்கவில்லை பதிவர்கள் யாரும் சிறுகதை ஒன்று எழுதி அதுக்கு பொருத்தமான பாடலை இணைத்து பதிவு எழுதவிரும்பினால் யார் என்றாலும் தொடருங்கள்
*********************************************************************************

Post Comment

24 comments:

Anonymous said...

பாட்டு தெரிவு சூப்பர் .......
நானும் தாதா ரசிகை தான்......



வாங்க வாழ்த்துங்க

செல்லக் குட்டி பிறந்தநாள்

Unknown said...

பாடலைச் சூழ்நிலைக்கு ஏற்ப
தரமு பிரித்துத் தந்துள்ளீர்
நன்று!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

பாட்டுக்கள் அருமையா தேர்வு பண்ணி இருக்கீங்கோ ஜுப்பர் பதிவு!

ஆகுலன் said...

தாதா தாதா தான்...பாடல்கள் அருமை...

Mathuran said...

பாட்டெல்லாம் சூப்பர் பொருத்தம் பாஸ்..

எவ்வளவு ரைம் எடுத்திச்சு

சி.பி.செந்தில்குமார் said...

பாடல் தேர்வுகள் அருமை. எல்லாமே நச்சுன்னு இருக்கு

சம்பத்குமார் said...

வணக்கம் நன்பா..

கங்குலியின் வாழ்க்கைப் பயணம் பற்றிய பதிவு அருமை

பாடல்கள் அனைத்தும் சரியான் தேர்வு

அதிலும் ஊரத்தெரிஞ்சுக்கிட்டேன் பாடல் மிகப் பொருத்தம்

நன்றி நண்பா
நட்புடன்
சம்பத்குமார்

ஆமினா said...

தாதாவுக்கே சுக்சுவேஷன் சாங்க்கா :-)

அவரின் வளர்ச்சி முதல் வீழ்ச்சியில் அவருக்கு ஆறுதலாய் கூட நிற்காதவர்கள் வரை அனைத்து விஷயங்களும் இன்று தான் கேள்விபடுகிறேன்

வாழ்த்துகள்
தொடர்ந்தமைக்கு மிக்க நன்றி தம்பி

M.R said...

பொருத்தமான பாடல்கள் தான் அருமை நண்பா

த.ம 6

MANO நாஞ்சில் மனோ said...

அந்த ஊரை தெரிஞ்சிகிட்டேன் உலகம் புருஞ்சிகிட்டேன் பாட்டு செம பொருத்தமா இருக்குய்யா...!!!

kaialavuman said...

ஒரு ’நக்மா’ பட பாடல்கள் கூடவா இல்லை!!! :)

காட்டான் said...

அருமையாதான்யா பாடல் தேர்வுகள் இருக்கு.. 
வாழ்த்துக்கள் ராசுக்குட்டி..!!

Unknown said...

இடையில வேட்டைக்காரன் பாட்டை போட்டு கலக்கிட்டாப்லே!

Unknown said...

இடையில வேட்டைக்காரன் பாட்டை போட்டு கலக்கிட்டாப்லே!

சக்தி கல்வி மையம் said...

பாடல்களை தேர்ந்தெடுத்தது, அதை சூழ்நிளைக்களுக்கேர்ப்ப மாத்தியது அருமை..

Admin said...

கற்பனை ரசிக்க வைத்தது..
வாழ்த்துகள்.

வரவை எதிர்பார்க்கிறேன்..

செத்தபின்புதான் தெரிந்தது..

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமாக யோசித்ததும் அதற்கு தகுந்தார்ப்போல
பாடலைதேர்வு செய்து கொடுத்திருப்பதும்
மனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்
த.ம 9

சுதா SJ said...

கிரிகெட் பதிவா?? அவ்வ.....
பாஸ் பாடல் தெரிவுகள் அருமை..... எல்லா பாடைகளும் சூப்பர் மச்சான்

Anonymous said...

நல்ல தேர்வுகள் அப்பூ......

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!உங்களுக்குத்தான் தெரியுமே?பகிர்வுக்கும்,ஆமினாவுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்!

நாகா ராம் said...

பாடல் தேர்வுகள் மிக அருமை :-)

நிரூபன் said...

மச்சான் சார்,
கங்குலியின் வாழ்க்கைக்கு ஏற்றாற் போல கிரிக்கட்டையும் சினிமாவையும் இணைத்து சிட்டுவேசன் பாடல்களைக் கொடுத்திருக்கிறீங்களே... அருமை பாஸ்.

K.s.s.Rajh said...

@
வேங்கட ஸ்ரீனிவாசன் கூறியது...
ஒரு ’நக்மா’ பட பாடல்கள் கூடவா இல்லை!!! ////

ஹி.ஹி.ஹி.ஹி நம்ம தலைய நாமலே ஏன் கலாய்கனும் என்றுதான் போடவில்லை அவ்வ்வ்

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails