Monday, December 12, 2011

சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டால் சின்னக்குழந்தையும் சொல்லும் ரஜனிகாந் என்று

இன்று(December-12) சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் அவர்களின் 62வது பிறந்த நாளாகும்.அவருக்கு நண்பர்கள் தளம் சார்பாகவும் அதன் வாசகர்கள் சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்



நான் எந்த ஒரு நடிகருக்கும் தீவிரமான ரசிகன் இல்லை எல்லா நடிகர்களின் படங்களையும் விரும்பி பார்ப்பேன் ஆனால் என்னிடம் உனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகரின் பெயரை கூறு யாருக்கு நீ ரசிகன் என்றால் கண்டிப்பாக நான் சொல்வது சூப்பர் ஸ்டாரின் பெயர்தான்.



கருப்பாக இருப்பவர்கள் சினிமாவில் சாதிக்க முடியாது என்று நிலவிய ஒரு மாயயை தமிழ் சினிமாவில் தகர்த்து தன் அற்புதமான நடிப்பால் அதிரடி ஸ்டைலால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தில் வீற்றிருக்கின்றார் சூப்பர் ஸ்டார்.


உலகம் முழுவதிலும் ஏன் தமிழே தெரியாத பல மக்கள் கூட சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களாக இருக்கின்றார்கள் குறிப்பாக ஜப்பானில் சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்கள் அதிகம்.


அபூர்வராகங்கள் படத்தில் சின்ன ஒரு காட்சியில் தோன்றிய போது யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் இந்த இளைஞன் கொஞ்சகாலத்தில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக அமருவார் என்று
இன்று புகழின் உச்சிக்கு சென்றாலும் எளிமைக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் உண்மையில் ரியல் ஸ்டார் தான்..


என்னை மிகவும் கவர்ந்த சூப்பர் ஸ்டாரின் படங்கள் சில
(இந்தப்பட்டியலில் சூப்பர்ஸ்டார் நடித்த அனைத்து படங்களும் வரனும் பதிவு நீளமாகிவிடும் என்பதால் சிலதை மட்டும் குறிப்பிடுகின்றேன்)

  • பாட்ஷா
  • படையப்பா
  • சந்திரமுகி
  • தில்லுமுல்லு
  • மாவீரன்
  • ஆறில் இருந்து அறுபது வரை
  • முள்ளும் மலரும்
  • எங்கேயோ கேட்ட குரல்
  • ஜானி
  • முரட்டுக்காளை
  • கழுகு
  • மாப்பிளை
  • படிக்காதவன்
  • விடுதலை
  • பில்லா
  • நல்லவனுக்கு நல்லவன்
  • பாபா
  • எந்திரன்
  • அண்ணாமலை
  • பாண்டியன் IPS
  • மூன்று முகம்
  • ராஜாதி ராஜா
  • தர்மதுரை
  • ஊர்க்காவலன்
  • தர்மத்தின் தலைவன்
  • அருணாச்சலம்
  • 16 வயதினிலே(இது கமல்சார் படம் சூப்பர் ஸ்டார் வில்லனாக நடித்த படம்)
  • மூன்று முடிச்சி(இது கமல்சார் படம் சூப்பர் ஸ்டார் வில்லனாக நடித்த படம்)
  • அபூர்வராகங்கள்(இதுவும் கமல் சார் படம் சூப்பர் ஸ்டார் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருப்பார் இதுதான் அவரின் முதல் படம் )
  • தளபதி
  • மன்னன்

இந்தப்பட்டியலை இத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன் ஏன் என்றால் சூப்பர் ஸ்டார் வில்லனாக நடித்தால் என்ன,ஹீரோவாக நடித்தால் என்ன அவர் ஒரு சின்ன காட்சியில் நடித்தாலே அந்தப்படம் பிடித்துவிடுகின்றது..இதுதான் சூப்பர் ஸ்டாரின் வெற்றி.ஓவ்வொறு சினிமா ரசிகனின் மனதிலும் சூப்பர் ஸ்டார் அமர்ந்திருக்கின்றார்..அவருக்கு அவரின் ரசிகனாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்புடன்
ஒரு ரஜனி ரசிகன்
கே.எஸ்.எஸ்.ராஜ்

*********************************************************************************

*********************************************************************************
படங்கள் கூகுள்
வீடியோ-youtube

Post Comment

27 comments:

பால கணேஷ் said...

சூப்பர் ஸ்டாருக்கு ராஜ் உடன் சேர்ந்து என் வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் நேற்று சுப்ரமணிய பாரதி என்ற அப்பாவிக் கவிஞனின் பிறந்ததினம் என்பதையும் நினைவுபடுத்திக் கொண்டு அவரையும் வாழ்த்துகிறேன். சரியா ராஜ்?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

Unknown said...

வாழ்த்துக்கள்!

குறையொன்றுமில்லை. said...

நல்ல ரசனையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

குணத்தில் அல்லாவிட்டாலும், மக்கள் மனதில் எம்ஜியாருக்கு அப்புறம் ரஜினிதான், வாழ்த்துக்கள்...!!!

ராஜி said...

என் வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க சகோ

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்..

M.R said...

அவருக்கு உங்களுடன் சேர்ந்து என்னுடைய வாழ்த்துக்களும்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பரே!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரஜினியின் என்னை கவர்ந்த படம் பாட்ஷா...

பகிர்வுக்கு நன்றி

விண்ணாணம் விநாசியார்! said...

வணக்கம் ராசா!
நல்லா இருக்கீங்களே?
உங்கட வீட்டில உள்ள எல்லோரும் எப்பிடி இருக்கீனை மோனை?
ஒரே ரஜினி வாசம் அடிக்குது இஞ்சாலைப் பக்கம்!
சும்மா அந்த மாதிரிப் பதிவினைத் தந்திருக்கிறீர்.

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி!
நானும் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...))

ம.தி.சுதா said...

ரஜனியை பொறுத்த வரை தமிழ் சினிமாவில் யாருமே எட்ட முடியாத ஒரு நட்சத்திரம்..

அவர் மட்டும் அந்தப் பட்டத்திற்கு உரியவர் இனி யாராலும் அதை கைப்பற்ற முடியாது...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
நடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்

கோகுல் said...

தளபதி,ஜானி,முள்ளும்மலரும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை!

சி.பி.செந்தில்குமார் said...

என் வாழ்த்துக்களும்

சுதா SJ said...

மச்சி.... உங்களுடன் சேர்ந்து நானும் ரஜனியை வாழ்த்துகிறேன் :)

சுதா SJ said...

ரஜனியை புடிக்காதவங்க இருக்காங்களா??? ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜனி மட்டுமே...

சுதா SJ said...

எனக்கு ரஜனியின் படங்களுள் அபூர்வ ராகங்கள்தான் புடிக்கும் :)
நீங்கள் குறிப்பிட்ட படங்களும் அசத்தல்தான்

சுதா SJ said...

மச்சி.... உங்கள் தளம் அடிக்கடி திறக்காமல் மக்கர் பண்ணுது, இது எனக்கு மட்டுமோ என்று நினைச்சேன், ஆனால் எல்லோருக்கும் போல் ... மதுவின் பதிவில் யோகா பாஸ் உங்கள் தளம் திறக்குது இல்லை என்று புலம்பி இருக்கார்.... ஹா ஹா.... மச்சி.... என்ன பிரச்சனை என்று பார்த்து சரி பண்ணுங்கோ :)

Yoga.S. said...

இப்போது தெரிகிறது,நன்றி ராஜ்!

K.s.s.Rajh said...

////
Yoga.S.FR கூறியது...
இப்போது தெரிகிறது,நன்றி ராஜ்////

என்ன பிரச்சனை என்று தெரியவில்லை ஜயா இப்ப டெம்ளேட் மாத்தினேன்.ஆனாலும் பிரச்சனை இருக்குத்தான் என்ன காரணம் என்று கண்டறிந்து சரி செய்கின்றேன்

Yoga.S. said...

ரஜனி பற்றிய தகவல்கள் அருமை!சிவாஜி ராவை ரஜனியாக மாற்றிய கே.பாலசந்தர் பற்றியும் ஒரு வார்த்தை குறிப்பிட்டிருந்தால் நிறைவாக இருந்திருக்கும்!

K.s.s.Rajh said...

@
கணேஷ் கூறியது...
சூப்பர் ஸ்டாருக்கு ராஜ் உடன் சேர்ந்து என் வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் நேற்று சுப்ரமணிய பாரதி என்ற அப்பாவிக் கவிஞனின் பிறந்ததினம் என்பதையும் நினைவுபடுத்திக் கொண்டு அவரையும் வாழ்த்துகிறேன். சரியா ராஜ்?////

கடந்த சில நாட்கள் இந்த பக்கம் வரமுடியவில்லை பாஸ் இல்லாட்டி பாரதியார் பற்றி கண்டிப்பாக எழுதியிருப்பேன்...திரும்பி வரும் போது ரஜனியின் பிறந்த நாள் எனவே அது பற்றி எழுதினேன் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

////
Yoga.S.FR கூறியது...
ரஜனி பற்றிய தகவல்கள் அருமை!சிவாஜி ராவை ரஜனியாக மாற்றிய கே.பாலசந்தர் பற்றியும் ஒரு வார்த்தை குறிப்பிட்டிருந்தால் நிறைவாக இருந்திருக்கும்////

ரஜனி பற்றி முழுமையான பதிவு ஒன்று எழுதவேண்டும் என்பது என் விருப்பம் ஜயா அந்த பதிவில் விரிவாக குறிப்பிடுகின்றேன் நன்றி ஜயா

K.s.s.Rajh said...

கருத்துரை இட்ட அனைவருக்கும் நன்றி நண்பர்களே

N.H. Narasimma Prasad said...

நான் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பிறந்த பலருக்கு பிடித்த நடிகர் தலைவர் தான். அருமையான பதிவு நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

முற்றும் அறிந்த அதிரா said...

ராஜ், நேற்று எனக்கு பின்னூட்டம் போட முடியாமல் போச்சுது, தெரியவேயில்லை comment box. பின்பு வேறு எங்கேயோ போய் ஒரு பின்னூட்டம் போட்டேன், பார்த்தீங்களோ தெரியாது.

அன்புடன்
ஒரு ரஜனி ரசிகன்
கே.எஸ்.எஸ்.ராஜ்////

அப்போ ஹன்ஷிகா ரசிகன்?????:))

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails