Thursday, December 22, 2011

அன்பைத் தேடும் இதயம் புதிய தொடர் அறிமுகம்

வணக்கம் நண்பர்களே உங்கள் நண்பர்கள் தளத்தில் நாளை முதல் அன்பைத் தேடும் இதயம் என்ற ஒரு புதிய தொடர் ஆரம்பமாக இருக்கின்றது.இந்த தொடர் பற்றிய ஒரு அறிமுகம்.

அன்பைத் தேடும் இதயம்
இந்த மனித வாழ்க்கையில் மனிதர்களில் எத்தனை வேறுபாடுகள் ஏழை,பணக்காரன்,தாழ்ந்த சாதி,உயர்ந்த சாதி,பிரதேசவாதம்,மதங்களின் பெயரால் ஏற்படும் வேறுபாடுகள்,இப்படி பலவற்றை சொல்லாம் ஆனால் மனிதரில் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் காதல் என்ற ஒன்றை இந்த உலகில் பிறந்த ஓவ்வொறு மனிதர்களும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் சுவாசித்து இருப்பார்கள்.


இல்லை நான் யாரையும் காதலிக்கவில்லை என்று யாரும் சொல்லமுடியாது.ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஓருவரை பார்க்கும் போது அட இவர் நமது வாழ்க்கைத்துணையாக வந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து இருப்போம்.இதுதான் மனிதனின் மனம்.


இந்தத்தொடரின் மூலம் பலரை தங்கள் கடந்தகால காதல் நினைவுகளுக்குள் அழைத்துச்செல்லப்போகின்றேன்.அன்பைத்தேடும் இதயம் என்ற இந்தக்கதையின் மூலக் கதையை நான் 2005ம் ஆண்டு பாடசாலையில் படிக்கும் போது யதார்த்தம் என்ற பெயரில் எழுதினேன் ஆனால் அதை அப்போது பத்திரிகைகளுக்கு அனுப்பமுடியவில்லை.தற்போது இதை என் தளத்தில் தொடராக எழுதுவது மகிழ்ச்சி ஆனால் அப்போது எழுதிய கதையின் மூலக்கருவை மாத்திரம் எடுத்து தற்போது கொஞ்சம் மெருகூட்டி இந்த தொடரை தருகின்றேன்.

வாழ்க்கையுடன் போராடிக்கொண்டு இருக்கும் அதாவது மிகுந்த குடும்ப கஸ்டத்தில் இருக்கும் ஒரு இளைஞனுக்கு அவன் வசிக்கும் தெருவில் வசிக்கும் ஒரு அழகான பெண்மேல் காதல் வருகின்றது.தான் கஸ்டத்தில் இருக்கின்றேன் என்ற தாழ்வு மனப்பான்மை அவனது காதலுக்கு குறுக்கே நிற்கின்றது.இதனால் அந்தப்பெண்ணிடம் காதலை சொல்ல தயங்குகின்றான்.

வாழ்க்கையில் எதாவது சாதிக்கவேண்டும் என்ற நினைப்பில் இருக்கும் ஒரு எழைப்பையன் மனதில் காதல் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.உண்மையில் காதல் என்றால் என்ன? எதன் அடிப்படையில் காதல் வருகின்றது அழகைவைத்தா,அறிவைவைத்தா இல்லை பணத்தைவைத்தா இல்லை படிப்பை வைத்தா இல்லை எதையுமே எதிர்பாக்காமமே காதல் வருகின்றதா?


பல சுவாரஸ்ய நிகழ்வுகளையும் மனதை உருக்கும் உண்மை நிகழ்வுகளையும் கொஞ்சம் கற்பனை கலந்த காதல் கதைகளையும் உள்ளடக்கிய ஒரு கற்பனை காதல் காவியம் தான் அன்பைத்தேடும் இதயம் என்ற தொடர்.

இந்தக்கதையின் நாயகனாக கோகுலன் என்ற பாத்திரத்தை உருவாக்கியுள்ளேன் கோகுலன் ஈழத்தில் யுத்தம் நடந்த பிரதேசத்தில் வாழ்தவனாகவே குறிப்பிடடுள்ளேன்
இந்தக்கதையின் நாயகியாக காயத்திரி என்ற பாத்திரத்தை  உருவாக்கியுள்ளேன்.நான் இதுவரை உலகில் பார்த்த அழகான பெண்களின் ஓட்டு மொத்த உருவமாக காயத்திரி என்ற கற்பனை பாத்திரத்தை படைத்துள்ளேன்

இது நான் எழுதும் 4வது தொடராகும் இதற்கு முன் நான் எழுதிய தொடர்கள்.

1)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள்நினைவுகள்
முரளிதரன் பற்றி அவரது கிரிக்கெட் வாழ்கையின் ஒரு பகுதி பற்றி நான் எழுதிய ஒரு தொடராகும். 

2) மறக்க முடியாத பாடசாலை நாட்கள்
என் தளத்திற்கு பல வாசகர்களை அள்ளித்தந்த பெருமை இந்த தொடருக்கே சேரும் பல நண்பர்களை பெற்றுத்தந்த இந்த தொடர் பாடசாலைக்காலத்தில் எனக்கு ஏற்பட்ட காதல் பற்றிய எனது சொந்தக்கதையாகும்.

3)என் உயிர் நீ தானே
இது எங்கள் ஊரில் வாழ்ந்த நான் சிறுவயதில் பார்த்த ஒருவரின் உண்மைக்கதையாகும் இந்தத்தொடர் பெரிதாக வரவேற்பை பெறாவிட்டாலும் ஒரு சமூகத்தில் நான் பார்த்த ஒரு சம்பவத்தை அலசிய தொடர். 

எனது முன்னய இந்த தொடர்களில் இருந்து நான்காவதாக நான் எழுதும் அன்பைத்தேடும் இதயம் என்ற தொடர் முற்றிலும் வித்தியாசப்படும் காரணம் அவை மூன்றில் முதலாவது கிரிக்கெட் சம்மந்தமான தொடர்,இரண்டாவது  தொடரான பாடசாலை நாட்கள் என் சொந்தக்கதை, மூன்றாவது தொடரான என் உயிர் நீதானே எங்கள் ஊரில் வாழ்ந்த ஒரு அண்ணாவின் கதை.
ஆனால் என நான்காவது தொடர் சமூகத்தில் நான் பார்த்த  வேலைவாய்ப்பு இல்லாமல் கஸ்டப்படும் வாழ்க்கையுடன் போராடும் இளைஞர்களின் கதைகளின் உண்மைத் தொகுப்புக்களுடன் சேர்த்து கொஞ்சம் கற்பனையாக காதலை கலந்து சொல்லும் ஒரு கற்பனை காதல் காவியம். அதைவிட என் முன்னைய மூன்று தொடர்கள் எழுதும் போதும் புதிய பதிவராக இருந்தேன் தற்போது கொஞ்சம் அனுபவ பதிவராக இருப்பதால் முன்னைய தொடர்களைவிட பல மடங்கு சிறப்பாக இதை எழுத முடியும் என்று நினைக்கின்றேன்
எனவே உங்கள் ஆதரவுடன் நாளை இந்தத்தொடரின் முதல் பகுதி வருகின்றது.


எனது இந்த தொடருக்குறிய அழகிய படத்தை வடிவமைத்து தந்தது யார் என்று அதை பார்கவே புரிந்திருக்கும் ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் நிகழ்வுகள் வலைப்பதிவு ஒனர் நம்ம கந்தசாமிதான் இதை வடிவமைத்து தந்தார் கந்துவுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றிகள்.

முஸ்கி-இந்த புதிய தொடரை புதுவருடத்தில் இருந்து தொடங்கலாம் என்று தான் முதலில் நினைத்து இருந்தேன் பின்பு புதுவருட ஆரம்பத்தில் கொஞ்சம் நேரம் கிடைப்பதில் பிரச்சனை இருப்பதால் இன்னும் சில நாட்கள் தானே இருக்கு என்று ஆரம்பித்துவிட்டேன்

எனக்குத்தெரிந்ததை நான் எழுதுகின்றேன் அதற்கான அங்கிகாரம் உங்கள் கைகளில்
அன்புடன்
உங்கள்
கே.எஸ்.எஸ்.ராஜ்

Post Comment

29 comments:

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்,
புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்.
ராகுல் எனக்கு என்னமோ ஹிந்திப் பெயராக தோன்றுகின்றது.
ஆட்சேபனை இல்லை எனில் எம் ஊர் வாசம் சுமந்து வரப் போகும் கதைக்கு ஏற்றாற் போல ஒரு அழகிய தமிழ்ப் பெயரை வைக்கலாமே?

என் கருத்தினையும் பரிசீலனை செய்வீங்க என்று நினைக்கிறேன்.

Unknown said...

எழுதுங்க...எழுதுங்க...வாசிப்பம்லே!!

Mathuran said...

வாழ்த்துக்கள் பாஸ்...

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் மச்சான் சார்,
புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்.
ராகுல் எனக்கு என்னமோ ஹிந்திப் பெயராக தோன்றுகின்றது.
ஆட்சேபனை இல்லை எனில் எம் ஊர் வாசம் சுமந்து வரப் போகும் கதைக்கு ஏற்றாற் போல ஒரு அழகிய தமிழ்ப் பெயரை வைக்கலாமே?

என் கருத்தினையும் பரிசீலனை செய்வீங்க என்று நினைக்கிறேன்////

மிக்க நன்றி பாஸ் அதுக்கு என்ன ராகுல் என்ற பெயரை மாத்தினால் போச்சு

K.s.s.Rajh said...

@
மைந்தன் சிவா கூறியது...
எழுதுங்க...எழுதுங்க...வாசிப்பம்லே!////

நன்றி

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
வாழ்த்துக்கள் பாஸ்.////

நன்றி

Mathuran said...

ஓ றீமேக்கா... அப்போ சின்ன வயசிலயே தல எழுத ஆரம்பிச்சிட்டார் போல

K.s.s.Rajh said...

@மதுரன் கூறியது...
ஓ றீமேக்கா... அப்போ சின்ன வயசிலயே தல எழுத ஆரம்பிச்சிட்டார் போல
////
ஹி.ஹி.ஹி.ஹி அப்ப நான் பத்திரிகைகளுக்கு அனுப்ப எழுதிய கதையை பத்திரிகைகளில் வெளியிட சந்தர்பம் கிடைக்கவில்லை அந்தக்கதை அப்படியே என் மனதில் இருந்தது பாஸ் தற்போதய சூழலுக்கு ஏற்றவாரு பல விடயங்களை மாற்றியுள்ளேன்

K.s.s.Rajh said...

////நிரூபன் கூறியது...
வணக்கம் மச்சான் சார்,
புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்.
ராகுல் எனக்கு என்னமோ ஹிந்திப் பெயராக தோன்றுகின்றது.
ஆட்சேபனை இல்லை எனில் எம் ஊர் வாசம் சுமந்து வரப் போகும் கதைக்கு ஏற்றாற் போல ஒரு அழகிய தமிழ்ப் பெயரை வைக்கலாமே?

என் கருத்தினையும் பரிசீலனை செய்வீங்க என்று நினைக்கிறேன்///

ராகுலன் என்ற பெயரை மாற்றிவிட்டேன் பாஸ் நன்றி

Advocate P.R.Jayarajan said...

தொடருக்கு வாழ்த்துகள்... இணையத்தில் தொடர்கதைகள் மெல்ல அடியெடுத்து பார்க்கிறது... நல்ல விடயம்தான்..
எனது ஒரு தொடர்கதைக்கு வருகை தரவும், வாசிக்கவும் அழைப்பு விடுக்கின்றேன்...
மதனப் பெண் - jayarajanpr.blogspot.com

ஆகுலன் said...

ஓகே அண்ணே போடுங்க..வருகிறேன்..

கோகுல் said...

பதிவுலகின் தொடர் நாயகனாக மாறிட்டீங்க.வாழ்த்துகள்.தொடர்ந்து எழுதுங்க.

பால கணேஷ் said...

தயங்காம தொடரை ஆரம்பிங்க ராஜ்.. (100 மெம்பர் தொட்டுவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.)

குறையொன்றுமில்லை. said...

ராஜ் அன்பைத்தேடும் இதயத்துக்காக ஆவலுடன் காத்திருக்கேன் சீக்கிரமே தொடங்கவும். வாழ்த்துகள்.

Unknown said...

புதிய தொடருக்கு வாழத்துக்கள்!
தயக்கம் வேண்டாம்!

புலவர் சா இராமாநுசம்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...தொடர்கிறேன் ...

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!எழுதுங்கள்,படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!

தனிமரம் said...

வணக்கம் ராச்!
புதிய தொடருக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள். முடிந்தளவு நேரத்தில் பின்னூட்டத்துடன் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கின்றேன்!

MANO நாஞ்சில் மனோ said...

தொடருங்கள் மக்கா....!!!

Unknown said...

தொடரை தொடர்கிறேன் வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாரும் நமீதா குளிப்பதை பார்த்து ஜோள்ளுவார்கள்,ஆனால் நாஞ்சில்மனோ குளிப்பதை பார்த்து நமீதா ஜொள் விடுவதை போல கிராப்பிக்ஸ் செய்து அசத்தியவர் கந்தசாமி, படம் அருமை...!!!

சென்னை பித்தன் said...

ரெடியா இருக்கோம்.கலக்குங்க!

சக்தி கல்வி மையம் said...

இப் புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்..

M.R said...

வாழ்த்துக்கள் நண்பா ,தொடருங்கள் தொடர்கிறேன்

ஷைலஜா said...

புதிய தொடருக்கு வாழ்த்துகள் ராஜா..பராக் பராக் என வரவேற்கிறேன் தம்பி ராஜாவை!

சுதா SJ said...

பாஸ்.... அசத்துங்க..... கை கொடுக்க நாங்க இருக்கோம்...... நாளை வரும் தொடருக்கு இப்பவே நான் முதல் ஆளாய் படிக்க துண்டை போட்டு வைக்கிறேன்.... :)))

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை! தொடருங்கள்! நல்வாழ்த்துக்கள்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

N.H. Narasimma Prasad said...

நீங்கள் எழுதப்போகும் காதல் தொடர் கதைக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails