Saturday, January 21, 2012

ஆடை அணியாமல் பெண்கள் அழகில்லையா?ஆடை அணிவதால் தான் அழகாக தெரிகின்றார்களா?பட்டிமன்றத்தில் பேசி பல்பு வாங்கிய நண்பனும் நானும்.

வணக்கம் நண்பர்களே தலைப்பு கொஞ்சம் விவகாரமாக இருக்கு என்று நினைக்கிறீங்களா? பதிவை வாசிக்காமல் யாரும் தவறாக எண்ணவேண்டாம் பதிவை படியுங்கள் தவறாக ஒன்றும் இல்லை.ஹி.ஹி.ஹி.ஹி....

நான் உயர்தரம் படித்துக்கொண்டு இருந்த சமயம்.எங்கள் பாடசாலையில் ஒரு விழாவில் பட்டிமன்றம் நடத்துவோம் என்று ஒரு ஆசிரியர் முடிவெடுத்தார்.எனவே உயர்தர மாணவர்களான எங்களிடம் வந்து பட்டி மன்றம் ஒன்று செய்யவேண்டும் அதற்கு பொருத்தமான தலைப்பை எல்லோறும் எழுதித்தாருங்கள் அதில் இருந்து ஒன்றை தேர்வு செய்து பேசுவோம் என்றார்.ஆனால் கல்வி சம்மந்தப்பட்டதக இல்லாமல் தலைப்புக்கள் பொதுவானவையாக சுவாரஸ்யமான தலைப்புக்களாக இருக்க வேண்டும் என்றார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

எல்லோறும் பல தலைப்புக்கள் எழுதிக்கொடுத்தனர்.நானும் அறிவியலின் வளர்ச்சி நன்மையா தீமையா? அதிகமாக செலவளிப்பது ஆண்களா பெண்களா? என்ற இரண்டு தலைப்புக்கள் எழுதிக்கொடுத்தேன் இதில் எனது இரண்டாவது தலைப்பு தெரிவு செய்யப்பட்டது அதிக செலவாளிகள் ஆண்களா?பெண்களா?.எங்கள் வகுப்பில் இருந்து பட்டிமன்றத்துக்கான தலைப்பு தெரிவு செய்யப்பட்டமையால் எங்கள் வகுப்பையே அந்த தலைப்பில் பட்டி மன்றத்தில் கலந்து கொள்ளும் படி ஆசிரியர் அறிவிருத்தினார்.


எனவே எங்கள் வகுப்பில் இருந்து தமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று பொண்ணு தலைமையில் இரண்டு பெண்களும்.என் நண்பன் சிறி தலைமையில் நானும் இன்னும் ஒரு பையனும் பட்டிமன்றம் பேச வெளிக்கிட்டோம். தீவிர தயார் படுத்தலின் பின்(அப்படி எல்லாம் ஒன்றும் தயார் படுத்தவில்லை பட்டிமன்றம் தயார் செய்கின்றோம் என்று பொண்ணுங்களிடம் கடலை போட்டோம் அவ்வளவுதான் அவ்வ்வ்வ்வ்).இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
பட்டி மன்றம் தொடங்கியது எதிரணித்தலைவி தமி வந்து கிழி கிழி என்று எங்கள் அணியை கிழித்துவிட்டு போனார்.அதில் அவர் ஒன்றை சொன்னார்.ஆண்கள் குடித்து கும்மாளம் அடிக்கவும் அதிக பணத்தை செலவு செய்கின்றார்கள் என்று ஒரு கருத்தை சொல்லிவிட்டு போனார்.


இதில் இன்னும் ஒன்றை சொல்லவேண்டும் எம்மை பட்டிமன்றம் தயார் செய்யச்சொன்ன ஆசிரியர்தான் பட்டிமன்றத்தின் நடுவர்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
நம்ம நண்பன் போய் தன் பங்கிற்கு விளாசு விளாசு என்று விளாசுனான். பய புள்ள சும்மா இருக்க கூடாது போட்டான் பாருங்க ஒரு போடு. அதாவது எதிரணித்தலைவி ஆண்கள் குடித்துபதற்கு அதிக பணத்தை செலவு செய்கின்றார்கள் என்ற கருத்துக்கு பதிலளித்தான்.பயபுள்ள என்ன சொல்லிச்சினா? குடியை பற்றி பேசுகிறியே தமி.. அதில் உள்ள சுவை தெரியுமா? ஒரு துளி அருந்திப்பாருங்கள் அதன் சுவை புரியும்.சரி சரி இப்ப அருந்தாவிட்டாலும் கலியாணம் கட்டி குழந்தை பிறந்த போது வீட்டில் ஒரு மூடி சாரயம் தருவார்களே அப்பவாவது சுவைத்துப்பார்ப்பீர்கள் தானே. அப்ப தெரியும் அதன் அருமை. என்று பயபுள்ள உணர்சி வசப்பட்டு பேசிப்புடிச்சி.(எங்கள் ஊரில் எல்லாம் குழந்தை பிறந்தால் பத்தியம் என்று சொல்லப்படுகின்ற உணவுகள் தான் தாயிற்கு வழங்குவார்கள் அதாவது மிளகாய் தூள் போடாத உணவுகள்,அதில் ஒரு மூடி சாராயமும் கொடுப்பார்கள்).


சரி இதோட விட்டானா இன்னும் ஒரு பிட்டை போட்டான்.உயிரினங்களில் பாருங்க.மயில்களில் ஆண் மயில் தான் அழகு,கோழி இனத்தில் சேவல்தான் அழகு,மாடுகளில் காளைதான் அழகு. அதே போல மனிதரிலும் நாங்கள் ஆண்கள் இயற்கையிலே அழகு. எங்களுக்கு அழகுசாதன பொருற்கள் தேவையில்லை. உங்களுக்குத்தான் பேர் அன் லவ்லி.அந்த லவ்லி இந்த லவ்லி என்று ஆயிரத்து எட்டு அழகு சாதன பொருற்கள் வருது அதுக்கு அதிக பணத்தை செலவு செய்கின்றீர்கள்.என்று சொன்னான்.


அதுக்கு குறுக்கிட்ட நடுவர் தம்பி மனித இனத்தில் மட்டும் விதி விலக்கு பெண்கள் தான் அழகு என்று சொனார். நம்ம பய விட்டானா நடுவரின் கருத்துக்கு ஒரு கருத்து சொன்னான் நடுவர் அவர்களே சரி உங்கள் கருத்துப்படியே மனித இனத்தில் பெண்கள் தான் அழகு என்று வைத்துக்கொள்வோம் அதுக்கு என்ன காரணம் தெரியுமா? நடுவரும் ஆவலுடன் வாயை பொழந்து கொண்டு என்னா?சொல்லு தம்பி என்றார். நம்ம பையன் போட்டான் பாருங்க ஒரு பிட்டு நடுவர் அவர்களே மனித இனம் மட்டும் தான் ஆடை அணிகின்றது.அதனால் தான் பெண்கள் அழகாக் தெரிகின்றார்கள்.ஆடைகள் தான் பெண்களை அழகாக காட்டுகின்றன.ஆடை இல்லை என்றால் அவர்கள் அழகு இல்லை என்று பயபுள்ள விளாசிபுடுச்சி.
அரங்கத்தில் கைதட்டல் பாதி சிரிப்பொலிகள் மீதி நடுவரோ மூச்சியை கடுப்பாக வைத்துக்கொண்டு எங்களை முறைத்துப்பாக்கின்றார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

நான் அப்படியே அரங்கத்தில் அமர்ந்திருந்த ஏனைய ஆசிரியர்களை பாக்கின்றேன். எல்லோறும் முறைந்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். எங்கள் வகுப்பாசிரியர் எங்களை விழுங்குவது போல பார்த்துக்கொண்டு இருந்தார்.எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.ஒருவாறு நண்பன் தனது வீர தீர வாதத்தை முடித்துக்கொண்டு வந்தான்.நான் அவனிடம் கேட்டேன் ஏண்டா இப்படி எல்லாம் பேசின அடுத்து என் முறை வரும் போது நான் தானே இதுகளை சமாளிச்சு பேசனும் என்றேன். அவனும் கூலாக ஒரு பிரச்சனையும் இல்லை உன்னால் சமாளிக்க முடியும். ஏதாவது சமாளிச்சு பேசு என்றான்.நானும் என்ன பேசுவது என்று மனதினுள் நினைத்துக்கொண்டு இருந்தேன்.அப்ப எதிரணியில் பேசவந்த அடுத்த பேச்சாளரான பொண்ணு நம்ம நண்பனையும் எங்கள் அணியையும் கிழி கிழி என்று கிழிச்சிடுச்சி நம்ம நண்பனின் பேச்சுக்கு விளக்கமும் கேட்டுச்சி.அடுத்து என் முறை.

நான் போனேன் ரொம்ம கூலாக சொன்னேன் நடுவர் அவர்களே உங்கள் கருத்துக்கு நமது நண்பன் சொன்ன அதாவது மனித இனத்தில் மட்டும் பெண்கள் அழகு என்று நீங்க சொன்னதுக்கு. பதில் வழங்கிய நண்பர் சிறி சொன்ன மனித இனம் மட்டும் தான் ஆடை அணிகின்றது அதனால் தான் பெண்கள் அழகாக இருக்கின்றார்கள் என்ற கருத்தை தவறாக எல்லோறும் புரிந்து கொண்டு விட்டீர்கள். நான் சரியாக விளக்கம் சொல்கின்றேன் என்றேன்.நடுவரும் என்னா சொல்லு என்றார்.


நான் போட்டேன் பாருங்க ஒரு பிட்டை அதாவது உலகில் உள்ள ஆடைவடிவமைப்பாளர்கள் பெரும்பாலாணவர்கள் ஆண்கள்தான்.

மிக பண்டைய காலத்தில் பெண்கள் மார்புக் கச்சை(Bra)அணிவதில்லை. அதை தன் காதலிக்காக கண்டு பிடித்தவர் ஒரு ஆண் தான்.அதேபோல இன்று உள்ள ஆடை வடிவமைப்பில் பெரும்பாலும் ஆண்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் எனவே ஆண்கள்! பெண்கள் அழகாக தெரியவேண்டும் என்பதற்காக வித வித மான ஆடைகளை வடிவமைக்கின்றார்கள். அதற்காக நிறைய பணம் செலவளிகின்றது எனவே அந்த செலவு பெண்களுக்காகத்தான் செலவளிகின்றது எனவே ஆடைகளுக்கு அதிகம் செலவளிப்பது பெண்கள் தான்.பெண்கள் தங்களை அழகாக காட்டிக்கொள்ள விதம் விதமான ஆடைகளை தேர்வு செய்கின்றனர் அதனால் அவர்கள் அழகாக தெரிகின்றனர் இதைத்தான் என் நண்பன் சுருக்கமாக சொன்னான் என்று பிட்டை மாத்தி போட்டேன்.ஒருவாறு சமாளித்துவிட்டேன் என்ற திருப்தி என்னிடம்


அரங்கத்தில் ஒரே கரவோசம் கடுப்பாக இருந்த ஆசிரியர்கள் எல்லோரும் கூலானார்கள்.

ஆனால் நடுவர் சொன்னார் பிரமதமான விளக்கம்யா ஆனால் ஒரு துளி சாராயம் அருந்திப்பாருங்கள் அதில் உள்ள ருசி தெரியும் என்றானே உங்கள் நண்பன். அது எப்படி அருந்திய அனுபவம் உண்டா? என்று நக்கலாக நடுவர் கேட்டார்.

அதுக்கும் நான் ஒரு பிட்டை போட்டேன் பாருங்க நடுவர் அவர்களே.நெருப்பு சுடும் என்பது எல்லோறுக்கும் தெரியும்,அதற்காக அதை தொட்டு உணரத்தேவையில்லை. தேன் இனிக்கும் என்று எல்லோறுக்கும் தெரியும். அதற்காக அதை சுவைத்து பார்த்துதான் உணரனும் என்ற தேவையில்லை.அது போல தான் இதுவும் என்று அடுக்கினேன். நடுவரும் போதுமடா உன் விளக்கம் நன்றாகத்தான் உன் நண்பனை காப்பாற்றிவிட்டாய். இப்படி நண்பர்கள் இருந்தால் விளங்கிடும் என்று நகைச்சுவையாக கூறினார்.

அந்த பட்டிமன்றத்துக்கு பிறகு அப்படி பேசிய நண்பனும் அதுக்கு விளக்கம் நானும் பாடசாலையில் பப்ளிசிட்டியாகிவிட்டோம்.
பல ஆசிரியர்கள் சொனார்கள் தம்பி ராஜ் உன் சமாளிப்பு வாதம் நன்றாக இருந்தது நன்றாக வருவாய் என்று

ஆனால் எங்கள் மண்ணின் சாபக் கேடான யுத்தம் சீரழித்தது எங்கள் கல்வியை மட்டும் இல்லை கலை,விளையாட்டு போன்ற எங்கள் ஏனைய திறன்களையும் தான்.யுத்தம் என்ற ஒன்று மட்டும் வராவிட்டால் எங்கள் வாழ்வு எப்படியோ சிறப்பாக அமைந்திருக்கும் என்ன செய்வது.கடந்த காலங்கள் கடந்து போகட்டும் இனியாவது எங்கள் வாழ்கை சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் என்னை போல வாழ்ந்து கொண்டு இருக்கின்ற எத்தனை பேர் எங்கள் மண்ணில் இருக்கின்றார்கள்.என்றோ ஒரு நாள் எங்கள் வாழ்க்கையில் ஒளிபிறக்கும் என்ற நம்பிக்கையுடன்.

150வது பதிவு
இது என் 150வது பதிவாகும் பல நூறு பதிவுகள் எழுதிய பெரிய பெரிய பதிவர்கள் எல்லாம் இருக்கும் இந்த பதிவுலகில் 150பதிவுகள் ஒன்றும் பெரிய எண்ணிக்கை இல்லை. ஆனாலும் நானெல்லாம் பதிவுலகில் வருவேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. பதிவர் லோசன் அண்ணா அவர்களின் கிரிக்கெட் பதிவுகளை படித்த போது.எனக்கும் கிரிக்கெட்டில் கொஞ்சம் ஆர்வம் இருந்தால் நானும் எனக்குத்தெரிந்ததை எழுதலாம் என்ற ஆவலில் ஆரம்பித்துதான் என் நண்பர்கள் தளம்.ஆரம்பத்தில் கிரிக்கெட் பதிவுகளையே அதிகம் எழுதி வந்த நான் அதற்கு பிறகு பலதரப்பட்ட விடயங்களை கலந்து கட்டி எழுத ஆரம்பித்தேன்.இன்று எனக்கும் பதிவுலகில் ஒரு அங்கிகாரம் வழங்கிய வாசகர்கள்,நண்பர்கள்,திரட்டிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.நான் இன்னும் பதிவுலகில் எவ்வளவோ தூரம் பயணிக்க வேண்டி இருக்கு. இன்னும் நான் ஒன்றும் பெரிதாக எழுதவில்லை.இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கு. 

எனக்கு வருவதை நான் எழுதுகின்றேன் அதற்கான அங்கிகாரம் உங்கள் கைகளில்.

படங்கள்-கூகுள்

Post Comment

58 comments:

முத்தரசு said...

தலைப்பு:

எப்படி எல்லாம் சமாளிப்பு

பாலா said...

நூற்றைம்பதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த தலைப்பில் எல்லா இடங்களிலும் வாதங்கள் எழுவதுண்டு. அது கடைசியில் இப்படித்தான் முடியும். ஆனால் அவற்றுக்கு நீங்கள் அளித்த விளக்கங்கள் மிக அருமை.

K.s.s.Rajh said...

@மனசாட்சி

ஹி.ஹி.ஹி.ஹி.அது ஒரு காலம் சகோ
நன்றி

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
நூற்றைம்பதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த தலைப்பில் எல்லா இடங்களிலும் வாதங்கள் எழுவதுண்டு. அது கடைசியில் இப்படித்தான் முடியும். ஆனால் அவற்றுக்கு நீங்கள் அளித்த விளக்கங்கள் மிக அருமை////

மிக்க நன்றி பாஸ் என் தளத்தை உங்கள் தளத்தில் நீங்களும் படிக்கலாம் என்ற பகுதியில் முதன் முதலில் இணைத்து எனக்கு ஒரு அங்கிகாரம் வழங்கியது நீங்கள் தான்.இது சின்ன விடயமாக தோன்றினாலும் ஆரம்பத்தில் என் தளத்துக்கு வந்த வாசகர்களில் பெருந்தொகையானவர்கள் உங்கள் தளத்தின் ஊடாகவே வந்தார்கள்.இதை என் 50வது பதிவில் குறிப்பிட்டும் உள்ளேன்.
என் பதிவுலக பயணத்தில் உங்களுடனான நட்பு மிக மிக அளப்பெரியது.

நன்றி பாஸ்

கோகுல் said...

எவ்ளோ பெரிய தலைப்பு.......

நல்ல நண்பனாகவும், சமயோசிதமாகவும் செயல்பட்டிருக்கீங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல சமாளிப்பு... (ஆமா அந்த பட்டிமன்றத்துக்கப்புறம் நிறைய டெவலப்மெண்ட்ஸ் ஆகி இருக்குமே, அது தனிப்பதிவா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

150-க்கு வாழ்த்துகள்... இனி நல்லதே நடக்கும் நண்பரே...!

Yoga.S. said...

நூற்றைம்பது பதிவுகள் கண்ட பதிவுலக ராஜ்,வணக்கம்,முதற்கண் வாழ்த்துக்கள்!!!அப்புறம்,பட்டிமன்றத்தில்சமாளிபிகேஷன் செய்து பெயர்(பல்ப்?) வாங்கியதற்கும் வாழ்த்துக்கள்!!!!ஆடை.............................!சரி,சரி பிழைத்துப் போங்கள்!!!!ஹி!ஹி!ஹி!!!!

துளசி கோபால் said...

150 க்கு இனிய பாராட்டுகள்.

Mohamed Faaique said...

என்னமா சமாளிச்சு இருக்கீங்க பாஸ்... செம... பொதுவா பட்டி மன்றத்துல பேசி முடிந்த பிறகுதான்,அய்யோ, அப்படி பேச இருந்ததே!!! இப்படி பேச இருந்ததே’னு தோணும்,.. நீங்க மேடைலயே அடித்து விளையாடி இருக்கீங்க...

Admin said...

பல ஆசிரியர்கள் சொன்னதைப்போலதான் நானும் சொல்கிறேன்..உங்களின் சமாளிப்பு வாதம் சிறப்பு..நன்றாக வருவீர்கள் வாழ்த்துகள்..வாசித்தேன் வாக்கிட்டேன்..நன்றி.

நீ யாரெனத் தெரியவில்லை

K.s.s.Rajh said...

@கோகுல்

தலைப்பை ஆடையில்லாமல் பெண்கள் அழகு இல்லையா என்றுதான் வைப்போம் என்று இருந்தேன் பிறகு யாரும் செம்பை நெளித்துவிடுவார்கள் என்றுதான் முழுவதுமாக தலைப்பை வைத்தேன் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நல்ல சமாளிப்பு... (ஆமா அந்த பட்டிமன்றத்துக்கப்புறம் நிறைய டெவலப்மெண்ட்ஸ் ஆகி இருக்குமே, அது தனிப்பதிவா?)
////

ஹி.ஹி.ஹி.ஹி ஏன் தலைவா ஏன்?
அதுக்கென்ன இன்னும் ஒரு பதிவு போட்டா போச்சி

K.s.s.Rajh said...

@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
150-க்கு வாழ்த்துகள்... இனி நல்லதே நடக்கும் நண்பரே...////

நன்றி தல

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
நூற்றைம்பது பதிவுகள் கண்ட பதிவுலக ராஜ்,வணக்கம்,முதற்கண் வாழ்த்துக்கள்!!!அப்புறம்,பட்டிமன்றத்தில்சமாளிபிகேஷன் செய்து பெயர்(பல்ப்?) வாங்கியதற்கும் வாழ்த்துக்கள்!!!!ஆடை.............................!சரி,சரி பிழைத்துப் போங்கள்!!!!ஹி!ஹி!ஹி!!!////

ஹி.ஹி.ஹி.ஹி...நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
துளசி கோபால் கூறியது...
150 க்கு இனிய பாராட்டுகள்.
////

நன்றி சகோ

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
என்னமா சமாளிச்சு இருக்கீங்க பாஸ்... செம... பொதுவா பட்டி மன்றத்துல பேசி முடிந்த பிறகுதான்,அய்யோ, அப்படி பேச இருந்ததே!!! இப்படி பேச இருந்ததே’னு தோணும்,.. நீங்க மேடைலயே அடித்து விளையாடி இருக்கீங்க...
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ மதுமதி கூறியது...
பல ஆசிரியர்கள் சொன்னதைப்போலதான் நானும் சொல்கிறேன்..உங்களின் சமாளிப்பு வாதம் சிறப்பு..நன்றாக வருவீர்கள் வாழ்த்துகள்..வாசித்தேன் வாக்கிட்டேன்..நன்றி.

நீ யாரெனத் தெரியவில்லை
////

நன்றி பாஸ்

ஹாலிவுட்ரசிகன் said...

உங்க நண்பன் கில்லாடி பாஸ். அவ்வளவு சீக்கிரமா ஆசிரியருக்கு பதிலடி கொடுத்த அவருக்கு பாராட்டுக்கள். அதை நல்லா சமாளித்த உங்களுக்கும் பாராட்டுக்கள்.

150 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

K said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மச்சான் சார்! இன்னும் இன்னும் எழுதுங்க! உங்களால முடியும்!

ஹா ஹா ஹா பட்டி மன்றம் செம பம்பல்! அதென்ன, சிறி என்று பையன் பெயரைப் போட்டிருக்கீங்க! பொண்ணோட ஒரிஜினல் பேர போடாமல் தமி என்று மாத்தி இருக்கீங்க! இத நாங்க ஒத்துக்க மாட்டோம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

CS. Mohan Kumar said...

நல்லா சமாளிசிருக்கீங்க

Congrats for 150 !

ராஜி said...

150 பதிவுக்கு வாழ்த்துக்கள் தம்பி

ராஜி said...

நல்லாதான் சமாளிச்சு இருக்கீங்க.

ராஜி said...

.கடந்த காலங்கள் கடந்து போகட்டும் இனியாவது எங்கள் வாழ்கை சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் என்னை போல வாழ்ந்து கொண்டு இருக்கின்ற எத்தனை பேர் எங்கள் மண்ணில் இருக்கின்றார்கள்.என்றோ ஒரு நாள் எங்கள் வாழ்க்கையில் ஒளிபிறக்கும் என்ற நம்பிக்கையுடன்.
>>>>
வாழ்க்கையில் எது இழந்தாலும் நம்பிக்கையோடு முயன்றால் வெற்றி கிட்டும். அதனால் நம்பிக்கையை கைவிடாதே தம்பி

ம.தி.சுதா said...

சுப்பர் பொயிண்ட சகோ பெண்கள் ஆடையை வைத்துத் தான் அழகை மேம்படுத்துகிறார்கள்... அதிலும் சேலை போல அழகைக் கூட்டும் எந்த ஆடையும் உலகத்தில் வடிவமைக்கப்படவில்லை..

அந்த நண்பனுக்கு வாழ்த்துச் சொன்னதாக சொல்லுங்கள்...

சசிகுமார் said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ராஜ்...... வெகு சீக்கிரமே இந்த நிலையை அடைந்து உள்ளீர்கள் என நினைக்கிறேன்....

MaduraiGovindaraj said...

150 க்கு வாழ்த்துக்கள் பட்டிமன்றம் மிக பிரமாதம்

மண்ணின் சாபக்கேடுன்னு வருத்தப்பட்டு எழுதிக்கொண்டு இருதீங்க "நாளை நமதே" கவலைபடாதே சகோதரா

MaduraiGovindaraj said...

நாங்களும் பட்டிமன்றம் நடதுவோம்ல

நாஞ்சில் சம்பத் பட்டி மன்றம்

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்,
முதலில் 150வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் நல்ல பதிவுகளை, ஊர் வாசனையுடன் கலந்து தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

நிரூபன் said...

மச்சான் சார், லாஜிக் அடிப்படையில் நீங்க முன் வைத்திருக்கும் விவாதங்களைக் கேட்கையில் சீப்பு சீப்பா வருதுங்கோ.

சூப்பரா கலக்கியிருக்கிறீங்க.

நிரூபன் said...

நெருப்பு சுடும், தேன் இனிக்கும். கொய்யாலே...சான்ஸே இல்லை...

பத்தியத்திற்கு சாராயம் குடுப்பது ஊரில பொண்ணுங்கள் பெரிசாகின காலந் தொட்டே தொடங்கி விடும்,
அதுவும் பச்சை முட்டையினுள் சாராயம் அல்லது நல்லெண்ணெய் மிக்ஸ் பண்ணி கொடுப்பார்கள்..

குடுத்து வைச்சவளுங்க மச்சான்சார்.

முற்றும் அறிந்த அதிரா said...

முதலில் உங்கள் 150 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ராஜ். மென் மேலும் நல்ல பதிவுகளைத் தர வாழ்த்துகிறேன்.

முற்றும் அறிந்த அதிரா said...

நல்லாத்தான் நடாத்தியிருக்கிறீங்க பட்டிமன்றத்தை....

“ஆண்கள் இயற்கையில் அழகு” என நண்பன் சொன்னாரோ?... அவ்வ்வ்வ்வ்:)) என்னிடம் ஒரு உண்மைச் சம்பவம் இருக்கு... ஆனா, முடிந்தால் ஒரு நாளைக்கு எழுதுகிறேன்:).

துரைடேனியல் said...

செம பட்டிமன்றம்தான் போங்க. ஆளுக்கொரு பிட்டைப் போட்டு கலகலப்பாக்கிட்டிங்க இல்ல...கலக்கல். ஆனால் யுத்தம் உங்கள் மக்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டது என்ற வரிகள் என்னை ரொம்ப டச் செய்து விட்டது சகோ. அருமையான பதிவு.

துரைடேனியல் said...

150 வது பதிவுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோ.

தமஓ 10.

K.s.s.Rajh said...

@ஹாலிவுட்ரசிகன்
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி கூறியது...
150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மச்சான் சார்! இன்னும் இன்னும் எழுதுங்க! உங்களால முடியும்!

ஹா ஹா ஹா பட்டி மன்றம் செம பம்பல்! அதென்ன, சிறி என்று பையன் பெயரைப் போட்டிருக்கீங்க! பொண்ணோட ஒரிஜினல் பேர போடாமல் தமி என்று மாத்தி இருக்கீங்க! இத நாங்க ஒத்துக்க மாட்டோம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
////

ஹா.ஹா.ஹா.ஹா. பொண்ணுங்க பெயர் எப்பவும் ரகசியம்தான் அவ்வ்வ்வ்வ்

நன்றி மச்சான் சார்

K.s.s.Rajh said...

@
மோகன் குமார் கூறியது...
நல்லா சமாளிசிருக்கீங்க

Congrats for 150 !
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ ராஜி கூறியது...
.கடந்த காலங்கள் கடந்து போகட்டும் இனியாவது எங்கள் வாழ்கை சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் என்னை போல வாழ்ந்து கொண்டு இருக்கின்ற எத்தனை பேர் எங்கள் மண்ணில் இருக்கின்றார்கள்.என்றோ ஒரு நாள் எங்கள் வாழ்க்கையில் ஒளிபிறக்கும் என்ற நம்பிக்கையுடன்.
>>>>
வாழ்க்கையில் எது இழந்தாலும் நம்பிக்கையோடு முயன்றால் வெற்றி கிட்டும். அதனால் நம்பிக்கையை கைவிடாதே தம்பி
////

மிக்க நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@
♔ம.தி.சுதா♔ கூறியது...
சுப்பர் பொயிண்ட சகோ பெண்கள் ஆடையை வைத்துத் தான் அழகை மேம்படுத்துகிறார்கள்... அதிலும் சேலை போல அழகைக் கூட்டும் எந்த ஆடையும் உலகத்தில் வடிவமைக்கப்படவில்லை..

அந்த நண்பனுக்கு வாழ்த்துச் சொன்னதாக சொல்லுங்கள்...
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சசிகுமார் கூறியது...
150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ராஜ்...... வெகு சீக்கிரமே இந்த நிலையை அடைந்து உள்ளீர்கள் என நினைக்கிறேன்....
////

ஆம் பாஸ் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கோவிந்தராஜ்,மதுரை. கூறியது...
150 க்கு வாழ்த்துக்கள் பட்டிமன்றம் மிக பிரமாதம்

மண்ணின் சாபக்கேடுன்னு வருத்தப்பட்டு எழுதிக்கொண்டு இருதீங்க "நாளை நமதே" கவலைபடாதே சகோதரா
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் மச்சான் சார்,
முதலில் 150வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் நல்ல பதிவுகளை, ஊர் வாசனையுடன் கலந்து தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
////
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
மச்சான் சார், லாஜிக் அடிப்படையில் நீங்க முன் வைத்திருக்கும் விவாதங்களைக் கேட்கையில் சீப்பு சீப்பா வருதுங்கோ.

சூப்பரா கலக்கியிருக்கிறீங்க.
////

ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
நெருப்பு சுடும், தேன் இனிக்கும். கொய்யாலே...சான்ஸே இல்லை...

பத்தியத்திற்கு சாராயம் குடுப்பது ஊரில பொண்ணுங்கள் பெரிசாகின காலந் தொட்டே தொடங்கி விடும்,
அதுவும் பச்சை முட்டையினுள் சாராயம் அல்லது நல்லெண்ணெய் மிக்ஸ் பண்ணி கொடுப்பார்கள்..

குடுத்து வைச்சவளுங்க மச்சான்சார்.
////
ஹி.ஹி.ஹி.ஹி. ஆமா பாஸ் கொடுத்துவைச்சவளுகள் தான் அவ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
முதலில் உங்கள் 150 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ராஜ். மென் மேலும் நல்ல பதிவுகளைத் தர வாழ்த்துகிறேன்////

நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
நல்லாத்தான் நடாத்தியிருக்கிறீங்க பட்டிமன்றத்தை....

“ஆண்கள் இயற்கையில் அழகு” என நண்பன் சொன்னாரோ?... அவ்வ்வ்வ்வ்:)) என்னிடம் ஒரு உண்மைச் சம்பவம் இருக்கு... ஆனா, முடிந்தால் ஒரு நாளைக்கு எழுதுகிறேன்:).
////
எழுதுங்க அக்கா படிப்போம்

K.s.s.Rajh said...

@துரைடேனியல் கூறியது...
செம பட்டிமன்றம்தான் போங்க. ஆளுக்கொரு பிட்டைப் போட்டு கலகலப்பாக்கிட்டிங்க இல்ல...கலக்கல். ஆனால் யுத்தம் உங்கள் மக்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டது என்ற வரிகள் என்னை ரொம்ப டச் செய்து விட்டது சகோ. அருமையான பதிவு.
////

என்ன பண்ணுவது பாஸ் எல்லாம் நாங்கள் வாங்கி வந்த வரம்

K.s.s.Rajh said...

@ துரைடேனியல் கூறியது...
150 வது பதிவுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோ.

தமஓ 10.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

Yaathoramani.blogspot.com said...

150 வது பதிவுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
பட்டி மண்டப விவாதம் படுசுவாரஸ்யம்
பள்ளி நாட்களிலேயே ஜமாய்த்துள்ளீர்கள்
அதுதான பதிவுலகிலும் ஜமாய்க்கிறீர்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 13

K.s.s.Rajh said...

@Ramani

நன்றி பாஸ்

பி.அமல்ராஜ் said...

வணக்கம் ராஜ்,

உங்கள் பட்டிமன்றமும் அருமை. அதில் உங்கள் சமாளிபிகேசனும் அருமை. அப்பவே உங்களால இப்படி பிட்டு போட எல்லாம் தெரிந்திருக்கிறதே. ஏதோ நண்பன காப்பாத்திட்டியள். தங்கள் 150 ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள். இன்னும் பல நூறு பயன்மிக்க பதிவுகளைத் தர எனது ,மனமார்ந்த வாழ்த்துக்கள்.

K.s.s.Rajh said...

@பி.அமல்ராஜ்

வாங்க பாஸ் மிக்க நன்றி பாஸ்

ஷைலஜா said...

150 பதிவுகளா க்ரேட் ராஜா. பட்டிமன்ற தலைப்பை முழுசா வச்சீங்களோ எங்ககிட்ட உதை வாங்காம பிழைச்சீங்களோ?:0 குறும்புதிலகம் போல்ருக்கே! ஆனா ரசிச்சேன் வாழ்த்துகள்!

K.s.s.Rajh said...

@ஷைலஜா

ஹி.ஹி.ஹி.ஹி அதுக்குத்தான் அக்கா தலைப்பு பெரிதாக இருந்தாலும் முழுமையாக எழுதினேன்.

நன்றி அக்கா

Athisaya said...

சும்மா சொல்லக்கூடாது..சமாளிப்பு சூப்பர்.வாழ்த்துக்கள்..பதிவுலகில் இன்னும் சாதிக்க....

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails