Wednesday, November 16, 2011

மழலை உலகம் மகத்தானது(என் பார்வையில் தொடர் பதிவு)

தற்போது வலையுலகில் மழலை உலகம் மகத்தானது என்று தொடர்பதிவுகளை பதிவர்கள் எழுதிவருகின்றார்கள்.
தொடர் பதிவு என்றால் என்ன என்று அறியாத பதிவர் இல்லாத வாசகர்களுக்காக சின்ன விளக்கம்.ஒரு பதிவர் தன் தளத்தில் ஒரு பதிவை எழுதி அதே பதிவை இன்னும் ஓரு பதிவரின் பார்வையில் எழுதச்சொல்லி அழைப்பது தொடர் பதிவாகும்.


அந்தவகையில் மழலை உலகம் மகத்தானது என்ற தலைப்பில் பதிவர்கள் எழுதிவரும் தொடர் பதிவை என்னையும் எழுதும்படி
 LAKSHMI மேடம் அழைத்திருந்தார்..
அவர் எழுதிய பதிவை படிக்க இங்கே-மழலை உலகம் மகத்தானது

நம்மையும் ஒரு பதிவரா மதிச்சு அழைத்திருக்கின்றாரே என்று ரொம்ப பெருமையா இருக்கு இதற்கு முன் நண்பர் வேடந்தாங்கல் கருன் ஓரு தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார்..


சரி மழைலை உலகம் மகத்தானது என்ற தலைப்பின் என்ன எழுதுவது என்று யோசிக்கும் போது இங்கதான் பிரச்சனை...ஏன் என்றால் இதற்கு முன் இந்த பதிவை எழுதிய பதிவர்கள் பலர் குடும்பஸ்தர்கள் அனுபவரீதியாக பலதை உணர்ந்தவர்கள் எனவே குழந்தைகள் பற்றியும்,குழந்தை வளர்ப்பு பற்றியும் குழந்தைகளை எவ்வாறு வளர்க்கவேண்டு என்பது பற்றியும் பலர் எழுதியிருந்தார்கள் நானும் வாசிச்சு கமண்ட்டும் ஓட்டும் போட்டுவிட்டு வந்தேன்.ஆனால் என்னை எழுத அழைத்த போது என்ன எழுதுவது என்று புரியவில்லை எனவே என் ஸ்டைலில் இந்த தலைப்பில் எழுதுகின்றேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்

மழலைகள் உலகம் மகத்தானது இது பற்றி ஒரு மழலையிடம் எழுதச்சொன்னால் என்ன எழுதுவேன் 22 வயது இளைஞனான என்மனதில் வருவதை எழுதுகின்றேன்...என் மழலை பருவம் மிகவும் துயரமானது துன்பமானது.காரணம் எங்கள் நாட்டில் நான் பிறக்கமுன்பே யுத்தம் இருந்தது நான் பிறந்த பின்பும் யுத்தம் இருந்தது.யுத்ததில்லேயே பிறந்து யுத்ததிலேயே வளர்ந்தவன்...எனது அம்மா சொல்வார் 1வயதிலையே என்னை தூக்கிக்கொண்டு இடம் பெயர்ந்தார்களாம் அதுதான் நான் சந்தித்த முதலாவது இடப்பெயர்வு.

யுத்தவிமானங்களின் ஓசைகளையும்,வெடிகுண்டு சத்தங்களையும் மரணஓலங்களையும்,தான் என் வயதை ஒத்த மழலைகளிடம் பரிசளித்தது குருதிக்கறைபடிந்த எனது மண்.இது எங்கள் மண்ணின் சாபக்கேடு எனவே எனது மழலைக்காலம் பற்றி பேசினால் இந்தப்பதிவு சோகமயமாகிவிடும் .
ஆதலால் பொதுவாக பேசுவோம்.

நான் பொதுவாக இந்த சமூதாயத்தில் பார்க்கும் ஓருவிடயம் பெரும்பாலும் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தங்கள் எதிர்பார்ப்பை திணிப்பது..இது மிகவும் தவறான ஓரு செயற்பாடு..ஓரு குழந்தைக்கு எதில் ஆர்வம் உண்டோ அதில் அவனை ஊக்கப்படுத்தவேண்டு.அப்பதான் வாழ்க்கையில் சாதிக்கமுடியும்
சச்சின் டெண்டுல்கர் என்ற ஜாம்பவானை சின்னவயதில் அவரது தாய்,தந்தை கிரிக்கெட்வேணாம் படிப்பை கவனி என்று தடுத்திருந்தால் இன்று உலகம் போற்றும் ஒரு கிரிக்கெட் நட்சத்திரம் கிடைத்திருப்பாரா.16 வயதில் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனபோது அவரது படிப்பை தொடரமுடியவில்லை ஆனாலும் பெற்றோர் அவரை ஊக்கப்படுத்தினர்.ஓரு வேளை சச்சினின் பெற்றோர் அவரை கிரிக்கெட் வேணாம் படிகிறவழியைப்பார் என்று சொல்லியிருந்தால் இன்று ஓரு சச்சின் என்ற ஓரு நபரை எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்?

(குழந்தை பருவத்தில் சச்சின்&தற்போது சச்சின்)
விளையும் பயிரை முளையிளேயே தெரியும் என்பார்கள் அது இதுதானோ?
சச்சினுக்கு எதில் ஆர்வம் என்று சரியான இனம் கண்ட அவரது பெற்றோர் அவரை ஊக்கப்படுத்தியதால் தான் இன்று அவரது புகழ் உலகெங்கும் பரவியிருக்கின்றது.இன்னும் பலநூறு ஆண்டுகளுக்குப்பின்னும் கிரிக்கெட்டில் அவர் புகழ் நிச்சயம் இருக்கும்.

எனக்கும் கூட சின்னவயதில் ஒரு கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்று ஒரு ஆசையிருந்தது ஆனால் எங்கள் நாட்டின் யுத்தசூழ்நிலையால் கனவாகவே போய்விட்டது அதுவேறு கதை அதற்காக எதிர்காலத்தில் எனக்கு பிறக்கும் மகன் மீதும் நான் அந்த எதிர்பார்ப்பை திணித்தால் அது மிகவும் தவறானது


அதாவது ஒருவர் டாக்டர் ஆக அசைப்படுகின்றார் அவரது ஆசை நிறைவேறவில்லை எனவே.தன் பிள்ளையை டாக்டராக்க ஆசைப்படுவது தவறில்லை....ஆனால் அவரது பிள்ளைக்கு டாக்டர் படிப்பின் மீது ஆர்வத்தை தூண்டவேண்டுமே தவிர நீ கட்டாயம் டாக்டராகத்தான் ஆகவேண்டும் என்று எமது விருப்பத்தை திணிக்கக்கூடாது.ஓரு வேளை அந்தக்குழந்தைக்கு வேறு துறைகளில் ஆர்வம் இருந்தால் எமது விருப்பத்தை விட்டு விட்டு குழந்தைக்கு எந்தத்துறையில் ஆர்வமோ அதில் ஊக்குவிக்கவேண்டும்

எனவே அன்பான பெற்றோர்களே மழலை உலகம் மிகவும் மகத்தான சந்தோசமான பருவம் அது. மழலைகள் மீது உங்கள் எண்ணங்களை திணிப்பதைவிட அவர்களுக்கு எந்தத்துறையில் ஆர்வம் இருக்கின்றது என்று ஊக்கப்படுத்தினால்...ஓரு சச்சின் இல்லை ஆயிரம் சச்சின் டெண்டுல்கர்கள் உருவாகுவார்கள்.

பொதுவாகவே பள்ளியில் சேர்க்கும் போதே பிள்ளைகள் மீது பெற்றோரின் எண்ணம் நீ டாக்டர் ஆகவேண்டும், இஞ்சினியர் ஆகவேண்டும்.இதான் பெரும்பாலான பெற்றோர்களின் கருத்தாக இருக்கும்....கொஞ்சம் படிப்பில் அந்தக்குழந்தையின் கவனம் சிதறினாலும் அவர்களை திட்டி தீர்க்கும் பல பெற்றோர்களை இந்த சமூகத்தில் நான் பார்த்திருக்கின்றேன்.
குழந்தையின் கவனம் படிப்பில் சிதறுகின்றதா என்ன காரணம் என்று ஆராயுங்கள் அதை சரிசெய்ய முயலுங்கள் அதைவிட்டு விட்டு..அவர்களை திட்டாதீர்கள்.

எனவே அன்பானவர்களே பிள்ளைகள் மீது நீங்கள் எதிர்பார்புவைப்பது தவறு இல்லை ஆனால் அவர்கள் மீது அதை திணிக்காதீர்கள்.

எதோ சமூகத்தில் நான் பார்த்த விடயங்களை வைத்து என் கருத்தை எழுதியுள்ளேன்...தவறு இருந்தால் பெரியவர்களே மன்னிக்கவும்....நானே குழந்தைதான் எனக்கு குழந்தைவளர்ப்பு பற்றி ஒன்றும் தெரியாது...

சரி நானும் யாரையாவது எழுத அழைக்கவேண்டுமே எனவே இந்தப்பதிவை தொடர அழைப்பது நிரூபன்,செங்கோவி,நாஞ்சில் மனோ,தனிமரம்,
(இதில் காட்டான் மாமாவையும் அழைக்கின்றேன் நேரம் இருந்தால் எழுதுங்க மாம்ஸ்)


என்னை அழைத்தது மாதிரி என் வயதை ஒத்த நம்ம பதிவர்களை அழைப்போம் என்று பார்த்தேன் பிறகு என்னை மாதிரி அவங்களும் இந்தப்பதிவை எழுத திண்டாடக்கூடாது என்பதால் திருமணமான நம்ம அண்ணன்களை தொடர அழைத்திருக்கின்றேன்....அப்ப நிரூபனை ஏன் அழைத்தாய் என்று கேட்டால் அவர் விதிவிலக்கு....ஹி.ஹி.ஹி.ஹி.....


இன்றையதகவல்-நம்ம முன்னால் உலக அழகி ஜஸ்வர்யா ராய்க்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாம்.(ரொம்ப முக்கியம் பாரு)

Post Comment

60 comments:

Yaathoramani.blogspot.com said...

தையும் வலுக்கட்டாயமாகத் திணிக்கவேண்டாம் என்கிற
மிகச் சரியான கருத்தை முன் வைத்துப் போகும்
உங்கள் தொடர் பதிவு அருமை.வாழ்த்துக்கள்
த.ம 2

பால கணேஷ் said...

-நீங்கள் சொன்ன கருத்து அருமை ராஜ். இதையே கருவாக வைத்து நான் நான்காண்டுகளுக்கு முன் எழுதிய சிறுகதையை இன்று என் பதிவில் வெளியிட்டுள்ளேன்... உங்களின் பதிவையும் மிக ரசித்தேன். நன்றி.

செங்கோவி said...

அனுபவம் இல்லையென்றாலும், அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்..

செங்கோவி said...

என்னையும் கோர்த்துவிட்டாச்சா...ரைட்டு...எழுதிடுவோம்.

செங்கோவி said...

நிரூவுமா?

அவருக்குக் கல்யாணம் ஆகலியே..ஒருவேளை அவருக்கு குழந்தை மட்டும் இருக்குதோ?

சம்பத்குமார் said...

அழகாய் அருமையாய் எழுதியுள்ளீர்கள் நண்பரே..

அதிலும் நாம் என்னவாக நினைத்தோமோ அதை நம் குழந்தைகளிடம் திணிக்கவேண்டாம்..

அருமை நண்பரே..

கடைசியில் இன்று பிறந்த பிரபலத்தின் குழந்தையையும் இணைத்துவிட்டீர்கள் போல..

சி.பி.செந்தில்குமார் said...

kகுட் ஒன்

குறையொன்றுமில்லை. said...

ராஜ் சூப்பரா சொல்லிட்டீங்க . நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

ராஜி said...

குழந்தைகளை எப்படி வளர்க்கனும், எப்படி வளர்க்க கூடாதுன்னு தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா என்னையும் மாட்டிவிட்டுட்டாங்களே....!!! நானே ஒரு பச்சைபுள்ளையாச்சே ம்ம்ம்ம் முயற்சி பண்ணுறேன்....!!!

kaialavuman said...

எப்போது ஆயத்தம் செய்யப் போகிறீர்கள். அட, நேரடியாக குழந்தைக்கு அல்ல, திருமணத்திற்கு.

தனிமரம் said...

மழலைகளுக்கு வழிகாட்டுக்கங்கள் வலிந்து திணிக்காதீர்கள் என்ற பார்வையைத் தாங்கி வந்த பதிவு சிறப்பானது சகோ!

தனிமரம் said...

என்னையும் ஒரு பதிவாளராக தொடர் எழுத அழைத்தற்கு நன்றி சகோ மீள்வருகையின் போது நிச்சயம் எழுதுகின்றேன்.

முற்றும் அறிந்த அதிரா said...

ராஜ் உங்கள் பார்வையில் அழகாகச் சொல்லிட்டீங்க.

“என் மழைக்காலம் மிகவும் துன்பமானது துயரமானது”

ரீஈஈஈஈஈஈஈஈஈஈஈச்சர் ஓடிவாங்க... மழைக்காலமாம்.....

விடமாட்டமில்ல:)))))

முற்றும் அறிந்த அதிரா said...

என்னாது நிரூபன் இன்னும் திருமணம் முடிக்கவில்லையா?:))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

அப்போ ஏதோ கூப்பிடுறாராமே... மாம்பழம்... மானே தேனே... என்னவோ எல்லாம் காத்துவாக்கில அடிபட்டுதே:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி!
தொடர் பதிவை லஷ்சுமியம்மாவின் வேண்டுகோளை ஏற்று எழுதி இருக்கீங்க.. அருமை!!

அது சரி ஏன்யா என் மீது உனக்கு இந்த கொலை வெறி..!! ஹி ஹி தெரியும்தானே என்னுடைய நிலமை நேரமில்லாமல் ஓடுகிறேன்.. நீ அழைத்த மற்றவர்கள் ஏழுதட்டும் ஒரு வாசகனாக அந்த பதிவுகளை பார்க்க காத்திருக்கிறேன்.. நேரம் இருக்கும்போது கட்டாயம் எழுதுகிறேன். அழைப்புக்கு நன்றி!!

K.s.s.Rajh said...

@Ramani
////தையும் வலுக்கட்டாயமாகத் திணிக்கவேண்டாம் என்கிற
மிகச் சரியான கருத்தை முன் வைத்துப் போகும்
உங்கள் தொடர் பதிவு அருமை.வாழ்த்துக்கள்
த.ம 2////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@நீங்கள் சொன்ன கருத்து அருமை ராஜ். இதையே கருவாக வைத்து நான் நான்காண்டுகளுக்கு முன் எழுதிய சிறுகதையை இன்று என் பதிவில் வெளியிட்டுள்ளேன்... உங்களின் பதிவையும் மிக ரசித்தேன். நன்றி.////

வாசித்தேன் பாஸ் நன்றி

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
அனுபவம் இல்லையென்றாலும், அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.////
ஹா.ஹா.ஹா.ஹா.எதோ நான் சமூகத்தில் பார்த்த விடயங்களை வைத்து எழுதினேன் பாஸ் நன்றி

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
என்னையும் கோர்த்துவிட்டாச்சா...ரைட்டு...எழுதிடுவோம்////

உங்களால் இந்தப்பதிவை சிறப்பாக எழுதமுடியும் பாஸ்

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
நிரூவுமா?

அவருக்குக் கல்யாணம் ஆகலியே..ஒருவேளை அவருக்கு குழந்தை மட்டும் இருக்குதோ?/////

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@
சம்பத் குமார் கூறியது...
அழகாய் அருமையாய் எழுதியுள்ளீர்கள் நண்பரே..

அதிலும் நாம் என்னவாக நினைத்தோமோ அதை நம் குழந்தைகளிடம் திணிக்கவேண்டாம்..

அருமை நண்பரே..

கடைசியில் இன்று பிறந்த பிரபலத்தின் குழந்தையையும் இணைத்துவிட்டீர்கள் போல.////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ சி.பி.செந்தில்குமார் கூறியது...
kகுட் ஒன்
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
ராஜ் சூப்பரா சொல்லிட்டீங்க . நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
ராஜி கூறியது...
குழந்தைகளை எப்படி வளர்க்கனும், எப்படி வளர்க்க கூடாதுன்னு தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி
////

எனக்கு குழந்தை வளர்பு பற்றி எதுவும் தெரியாது மேடம் நான் சின்னப்பையன் என்னை இந்த தொடர் பதிவை எழுத அழைத்த போது என்ன எழுதலாம் என்று யோசித்தேன் அப்பறம் சமூகத்தில் நான் பார்த்தவிடயங்களை வைத்து எழுதினேன் அது உங்களைப்போன்ற வாசகர்களை கவர்ந்தது மிகவும் சந்தோசமாக இருக்கு.
நன்றி மேடம்
தொடர்ந்து வாங்க

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
ஆஹா என்னையும் மாட்டிவிட்டுட்டாங்களே....!!! நானே ஒரு பச்சைபுள்ளையாச்சே ம்ம்ம்ம் முயற்சி பண்ணுறேன்....////

ஹா.ஹா.ஹா.ஹா நானே எழுதும் போது நீங்கள் எழுத முடியாதா என்ன சிறப்பாக ஒரு பதிவை எதிர்பாக்கின்றோம்(கோத்துவிட்டாச்சு)

K.s.s.Rajh said...

@
வேங்கட ஸ்ரீனிவாசன் கூறியது...
எப்போது ஆயத்தம் செய்யப் போகிறீர்கள். அட, நேரடியாக குழந்தைக்கு அல்ல, திருமணத்திற்கு////

ஹா.ஹா.ஹா.ஹா.இப்பதானே 22 ஆகுது பாஸ் இன்னும் கொஞ்சவருசம் போகட்டும்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
மழலைகளுக்கு வழிகாட்டுக்கங்கள் வலிந்து திணிக்காதீர்கள் என்ற பார்வையைத் தாங்கி வந்த பதிவு சிறப்பானது சகோ////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
என்னையும் ஒரு பதிவாளராக தொடர் எழுத அழைத்தற்கு நன்றி சகோ மீள்வருகையின் போது நிச்சயம் எழுதுகின்றேன்./////

நன்றி பாஸ் நான் நீங்கள் தற்காலியமாக பதிவுலகில் இருந்து விலகுவதாக எழுதிய பதிவை பார்க்கவில்லை....

மீள்வருகையின் போது எழுதுங்கள் வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
ராஜ் உங்கள் பார்வையில் அழகாகச் சொல்லிட்டீங்க.

“என் மழைக்காலம் மிகவும் துன்பமானது துயரமானது”

ரீஈஈஈஈஈஈஈஈஈஈஈச்சர் ஓடிவாங்க... மழைக்காலமாம்.....

விடமாட்டமில்ல:)))///

நன்றி மேடம் எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டியதுக்கு திருத்திவிட்டேன்

கோகுல் said...

வணக்கம் மச்சி நலமா?
வலைப்பக்கம் வந்து கொஞ்சம் நாளாச்சு.

வந்தது தொடர்பதிவு ஆரம்பம் மகிழ்ச்சி.
பலவித அனுபவங்கள் கிடைக்கபோகின்றன.

உணவு ஊட்டுவதற்க்கும் திணிப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான் கருத்துகளுக்கும்.சரியா சொன்னிங்க.

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
என்னாது நிரூபன் இன்னும் திருமணம் முடிக்கவில்லையா?:))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

அப்போ ஏதோ கூப்பிடுறாராமே... மாம்பழம்... மானே தேனே... என்னவோ எல்லாம் காத்துவாக்கில அடிபட்டுதே:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))////

மேடம் எங்களிடம் ஒரு பொருள் இல்லை என்கிறபோதுதான் அதை பற்றி அதிக எதிர்பார்பு இருக்கு

அதே போலதான் கல்யாணம் ஆகாத பேச்சுலர் பசங்களிடம் கல்யாணத்தை பற்றி அதிக எதிர்பார்பு இருக்கும் அப்படிதான் நிரூபன் பாஸும் போல...ஹி.ஹி.ஹி.ஹி.ஹி...

கோகுல் said...

கடைசியா சொல்லியிருப்பது கலக்கல்.(அப்பாடா தப்பிச்சாச்சு)

கோகுல் said...

நிறுபனுக்கு விதி விலக்கு என சொல்லியிருப்பதை பார்த்தால்.............
அப்படியா?
கிளப்பிவிட்டாச்சு .வரட்டுமா?

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
வணக்கம் ராசுக்குட்டி!
தொடர் பதிவை லஷ்சுமியம்மாவின் வேண்டுகோளை ஏற்று எழுதி இருக்கீங்க.. அருமை!!

அது சரி ஏன்யா என் மீது உனக்கு இந்த கொலை வெறி..!! ஹி ஹி தெரியும்தானே என்னுடைய நிலமை நேரமில்லாமல் ஓடுகிறேன்.. நீ அழைத்த மற்றவர்கள் ஏழுதட்டும் ஒரு வாசகனாக அந்த பதிவுகளை பார்க்க காத்திருக்கிறேன்.. நேரம் இருக்கும்போது கட்டாயம் எழுதுகிறேன். அழைப்புக்கு நன்றி!////

ஆம் மாம்ஸ் என்னையும் ஒரு பதிவாராக மதிச்சு அழைத்தமைக்காக உடனே எழுதிவிட்டேன் நேற்றே வெளியிட்டு இருப்பேன் நேற்று ஒரு பதிவு போட்டதால் வெளியிடவில்லை அதைவிட அவங்க நேற்றுதான் அழைத்திருந்தாங்க அதான் உடனே எழுதினாலும் இன்று வெளியிட்டேன்.

அப்பறம் உங்களை தொடர அழைத்தது
உங்கள் மகளின் சுயம்பரத்தில் உங்களை கூல் பண்ணத்தான்.ஹி.ஹி.ஹி.ஹி.......

ஷைலஜா said...

நீங்களே மழலைபோல இருக்கு ஆனா யாழ் குழலை விட இனிமையா எழுதி இருக்கீங்களே(ஐஸ் இல்ல:))) !!!!

K.s.s.Rajh said...

@கோகுல்
////
வணக்கம் மச்சி நலமா?
வலைப்பக்கம் வந்து கொஞ்சம் நாளாச்சு.

வந்தது தொடர்பதிவு ஆரம்பம் மகிழ்ச்சி.
பலவித அனுபவங்கள் கிடைக்கபோகின்றன.

உணவு ஊட்டுவதற்க்கும் திணிப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான் கருத்துகளுக்கும்.சரியா சொன்னிங்க.////

வாங்க பாஸ் நான் நலம்.நீங்கள் எப்படி
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
கடைசியா சொல்லியிருப்பது கலக்கல்.(அப்பாடா தப்பிச்சாச்சு)/////
உங்களையும் தொடர் பதிவு எழுத அழைப்போம் என்று நினைச்சேன் அப்பறம் இந்த பதிவு எழுத நான் பட்ட துன்பம் நீங்க படக்கூடாது என்பதால் அழைக்கவில்லை திருமணமான நம்ம அண்ணன்களை அழைத்தேன்.....

பேச்சுலர் பசங்க நமக்கு குழந்தை வளர்பு பற்றி என்ன தெரியும் பாஸ்

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
நிறுபனுக்கு விதி விலக்கு என சொல்லியிருப்பதை பார்த்தால்.............
அப்படியா?
கிளப்பிவிட்டாச்சு .வரட்டுமா?/////

ஹா.ஹா.ஹா.ஹா.அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சி என்று ஒரு புரளி கெளம்புது அதையா சொல்லுறீங்க.

சத்ரியன் said...

அருமையாகத்தான் எழுதியிருக்கீங்க, ராஜ்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கருத்துக்களை முன் வைத்து எழுதிவிட்டு எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்றீங்க! அருமையான பதிவு!

SURYAJEEVA said...

அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்... ஒவ்வொரு குழந்தைகளின் ஏக்கமும் பிரதிபலித்தது உங்கள் எழுத்துக்களில்

பாலா said...

என்னையும் எழுத கூப்பிட்டிருக்காங்க. நானும் என்ன எழுதுறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன். சச்சின் படம் சூப்பர்.

சென்னை பித்தன் said...

நல்ல கருத்துள்ள பதிவு.

சக்தி கல்வி மையம் said...

உணவு - வித்தியாசம் கருத்து அசத்தல்..

சாகம்பரி said...

நல்ல பகிர்வு நன்றி. நல்ல் எதிர்கால அப்பா. வாழ்த்துக்கள்.

K.s.s.Rajh said...

@ஷைலஜா
////
நீங்களே மழலைபோல இருக்கு ஆனா யாழ் குழலை விட இனிமையா எழுதி இருக்கீங்களே(ஐஸ் இல்ல:))) !!!////

ஹா.ஹா.ஹா.ஹா..நான் சமூகத்தில் பார்த்த விடயங்களைவைத்து எழுதினேன் மேடம் நன்றி தொடர்ந்து வாருங்கள்

K.s.s.Rajh said...

@
சத்ரியன் கூறியது...
அருமையாகத்தான் எழுதியிருக்கீங்க, ராஜ்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
thalir கூறியது...
அருமையான கருத்துக்களை முன் வைத்து எழுதிவிட்டு எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்றீங்க! அருமையான பதிவு/////

வாங்க பாஸ் என்ன நீண்ட நாட்களுக்குப்பிறகு நன்றி பாஸ்....

K.s.s.Rajh said...

@
suryajeeva கூறியது...
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்... ஒவ்வொரு குழந்தைகளின் ஏக்கமும் பிரதிபலித்தது உங்கள் எழுத்துக்களில்/////

நன்றி பாஸ்.....

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
என்னையும் எழுத கூப்பிட்டிருக்காங்க. நானும் என்ன எழுதுறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன். சச்சின் படம் சூப்பர்////

அதானே பாஸ் குழந்தை வளர்பு பற்றி நமக்கு என்ன தெரியும்

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
நல்ல கருத்துள்ள பதிவு////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
உணவு - வித்தியாசம் கருத்து அசத்தல்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சாகம்பரி கூறியது...
நல்ல பகிர்வு நன்றி. நல்ல் எதிர்கால அப்பா. வாழ்த்துக்கள்/////

ஹா.ஹா.ஹா.ஹா....நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@suryajeeva

தலைவரே நான் எழுதிய தொடர் முடிந்துவிட்டது நேரம் கிடைக்கும் போது என் தளத்தில் அனைத்து பதிவுகளும் என்று முகப்பில் இருக்கின்றது அதை கிளிக்செய்து பாருங்கள் என் உயிர் நீ தானே என்ற லேபிலில் அனைத்து பாகங்களும் இருக்கின்றது....இதை ஏன் சொல்கின்றேன் என்றால் நீங்கள் முன்பு தொடர் முடிந்ததும் சொல்லச்சொன்னீர்கள் அதான் பாஸ்

Unknown said...

பதிவு அருமை வாழ்த்துக்கள்!

M.R said...

அழகாய் சொல்லி இருக்கீங்க நண்பா

ம.தி.சுதா said...

மழலை என்பது எப்போதும் ஒரு சொர்க்கம், இன்ப உலகம் என்பதற்கு மேலானது... அதை அருமையாகப் பகிர்ந்துள்ளிர்கள்...

ஏனையவரின் பதிவையும் முடிந்தால் படிப்பேன்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான, அருமையான, அசத்தலான் பதிவு. படங்களும் அருமை. மிகவும் திருப்தியாக உள்ளது. பாராட்டுக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

தமிழ்மணம்: 2

அன்புடன் vgk

Anonymous said...

குழந்தைகள் எப்பொழுதும் நம்மை அழ வைபதில்லை .........

நானும் என் குழந்தை பற்றி எழுதியுள்ளேன் நேரம் இருந்தால் என் பதிவுக்கும் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்

http://pidithavai.blogspot.com/2011/11/blog-post_24.html

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails