Sunday, November 13, 2011

காதல் கடிதத்தின் உருக்கமான கடிதம்

அன்புள்ள காதலர்களுக்கு வணக்கம்
நான் தான் காதல் கடிதம் இன்று உங்களால் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நான். ஒரு காலத்தில் காதலர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்துள்ளேன். எத்தனை காதலர்களின் காதல்கள் என்னால் வாழ்து இருக்கின்றது, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.





ஆனால் இன்று என்னை காதலர்கள் பயன்படுத்துவது இல்லை இப்பவெல்லாம் நான் உங்களுக்கு வேண்டாதவனாகிவிட்டேன்.இப்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் என்னை யாரும் கண்டு கொள்வது இல்லை.இப்போது நீங்கள் குறும்செய்திவாயிலாகவும்(sms),மின் அஞ்சல்(E-mail) வாயிலாகவும் தொலைபேசி மூலமாகவும் இப்படி பலமுறைகளில் உங்கள் காதல்களை பகிர்ந்து கொள்கின்றீர்கள்.என்னை திருப்பியும் பார்பது இல்லை ஆனால் என்னை போல் உங்கள் காதல்களை அவைகளால் பகிர்ந்து கொள்ள முடியுமா?
நிச்சயமாக இல்லை.


என்னுள் உங்கள் காதலை எழுதி அதை உங்கள் காதலர்களிடம் சேர்ப்பதற்கு உங்கள் நண்பர்களிடமோ அல்லது உங்கள் காதலர்களின் நண்பர்களிடமோ.கொடுத்து அதற்கு பதில் வரும் வரை உங்கள் மனதின் தவிப்பை அதில் உள்ள சந்தோசத்தை.உங்களால் தொலை பேசியில் குறும் செய்திகளில்(sms),காதலை வெளிப்படுத்துவதில் இருக்கின்றதா?.


ஆனாலும் மாற்றம் ஒன்றுதான் இவ் உலகில் மாறாத ஒன்று. எனவே மாறிவரும் தொழில்நுட்ப உலகில் நீங்கள் என்னை மறந்து ஆச்சிரியம் இல்லை.  சில காதலர்கள் என்னை இப்போதும் பயன்படுத்துகின்றனர் இதனால் எனக்குள் கொஞ்சம் சந்தோசம் இருக்கின்றது .ஆனால் வரும் காலத்தில் நான் முழுமையாக மறக்கப்பட்டுவிடுவேன்.நீங்கள் என்னை முழுமையாக மறந்தாலும்,பயன்படுத்தாவிட்டாலும் உங்கள் காதல்கள் வாழ எப்போதும் வாழ்த்திக்கொண்டே இருப்பேன்.


அன்புடன் 
உங்களால் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுக்கொண்டிருக்கும் 
காதல் கடிதம்


முஸ்கி-மீள்பதிவு 


Post Comment

14 comments:

ADMIN said...

வருத்தப்படாதீர்கள் காதல் கடிதங்களே..!! நீங்கள் இன்னும் மறக்கப்படவில்லை..!!

கால மாற்றத்திற்கு ஏற்ப வடிவம் மாறியிருக்கிறீர்கள்..!!

Email, sms,chat... இதுபோன்ற நவீன தொழில்நுட்பத்திற்கு மாறியிருக்கிறீர்கள்.. அவ்வளவே..!!

காலச்சக்கரத்தின் சுழற்சியில் நீங்கள் மூதாதையர்க்ளாக மாறிவிட்டீர்கள்.!

காதல் இருக்கும் வரை இந்த கடிதப்போக்குவரத்து ஏதாவது ஒரு நவீன வழிமுறையில் நடந்துகொண்டுதான் இருக்கும்..!!

ADMIN said...

எனக்கு பதிவு பிடித்திருக்கிறது.. இன்ட்லியில் இணைத்துவிட்டேன்.. நேரமிருக்கும்போது இங்கு வாங்க!! நிறைய பயன்மிக்க பதிவுகள் இங்கு இருக்கிறது. வந்து பயன்பெற அழைக்கிறேன்..

இலவச ஆன்லைன் பிடிஎப் கோப்பு உருவாக்க , மாற்றம் செய்ய(Theni)

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

Mohamed Faaique said...

ஸ்கூல்’அ சுயசரிதை எழுதிய அனுபவமோ???

நல்லாயிருக்கு....

சக்தி கல்வி மையம் said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது நண்பரே...

M.R said...

காதல் கடிதமே காதல் இருக்கு "கடிதம் "
மறந்து விட்டார்கள் என்று வருத்தமா
இங்கு " மனிதம் " மறந்ததர்கே கவலையில்லாமல் இருக்கிறார்கள் .
"கடிதம்" மறந்ததற்கா கவலைப் படுவார்கள் .

M.R said...

tamil manam 3

அனைத்திலும் வாக்களித்தேன்

MANO நாஞ்சில் மனோ said...

காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா என்று இனி கேக்கமுடியாது, எஸ் எம் எஸ் மெயிலில் வசந்தம் புண்ணாக்கு புளியங்காய் எல்லாம் வந்துச்சான்னு கேக்கலாம் ஹா ஹா ஹ ஹா...!!!

தனிமரம் said...

காதல் கடிதம் எப்படி பேசும் என்ற உங்கள் கற்பனை நல்லத்தான் இருக்கு. நண்பா.

சென்னை பித்தன் said...

கா.க. வின் மனக்குறை நல்லா இருக்கு.கால மாற்றம்.என் செய்வது?!

அம்பலத்தார் said...

சுவாரசியமான கடிதம்.

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
காதல் கடிதங்களின் பால் கொண்டுள்ள
உண்மையான காதலை
மிக அழகாகச் சொல்லிப் போகிறது
தங்கள் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

இப்போதெல்லாம் காதலே மாறிப்
போச்சு சகோ
பாபம் அஞ்சல் அழுது பயனில்லை!
நன்று நன்றி!

புலவர் சா இராமாநுசம்

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி!

அந்த காலத்தில் காதலர்களை மாட்டி வைச்சதும் இந்த காதல் கடிதங்கள்தான்.. ஹி ஹி ஆனா என்ன இருந்தாலும் பழைய காதல் கடிதங்களை மறுபடி வாசிக்கும் அந்த சுகம் நவீன தொழில் நுட்பங்களில் இல்லைதான் !!!

நிரூபன் said...

ஹி...ஹி....

என்னம்மா ஜோசிக்கிறாக்க!

மச்சி கற்பனை கலக்கல்!
வித்தியாசமான முறையில் கடிதத்தின் உணர்வுகளைச் சொல்லியிருக்கிறீங்க.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails