Monday, November 28, 2011

பிறந்த நாள் எப்படி கொண்டாடுவார்கள்!!

வணக்கம் இது ஒரு மொக்கை பதிவு,முழுவதும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் அல்ல
நம்ம ஈழத்துப் பதிவர் ஒருவருக்கு வரும் 1-12-2011 இல் பிறந்த நாள் வருது அதை வைத்து அவர் எப்படி பிறந்த நாள் கொண்டாடுவார்கள் எப்படி நம்ம பதிவர்கள் வாழ்த்துவார்கள் என்று ஒரு மொக்கை....ஓக்கே ரெடி ஸ்டாட்....
நம்ம பதிவர் முதல் இரவு அதாவது பிறந்தநாளுக்கு முந்திய இரவு என்று சொல்ல வாரன். முதல் இரவில் அட பிறந்த நாளுக்கு முந்திய இரவில் இரவு(அதிகாலை)இரண்டு மணிவரை முழுச்சிருந்து பேஸ்புக்கில் சக பதிவர்களுடன் கும்மிக்கொண்டு இருக்கார்.... இரவு 3(அதிகாலை)மணிக்குத்தான் நித்திரைக்குச்சென்கின்றார்...

அதிகாலையில் 5 மணிக்கு எல்லாம். மனைவிவந்து அவரை தட்டி எழுப்புகின்றார் சாரி சாரி பதிவரின் அப்பாவின் மனைவி அதாவது பதிவரின் அம்மா வந்து தட்டி எழுப்புகின்றார் மகன் எழும்படா இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் இன்னைக்காவது எழும்பி குளி....சும்மா போங்கம்மா குளிரில் எவனும் குளிர்ப்பானோ இல்லை குளித்தால் குளிர் போயிடுமா
இதற்கு பதிவரின் அம்மா இதுக்குதான் சொல்லுறது தம்பி கண்டபடி டீ.ஆர் படம் பாக்காத எண்டு அவரை மாதிரியே அடுக்கு மொழியில் பேசுகின்றாய் சரி டீயை குடிச்சிட்டு சீக்கிறம் எழும்பு பெட்காப்பியை அருகில் வைத்துவிட்டு தாய் சென்று விடுகின்றார்.

பிரபல பதிவர் ஹன்சிகாவின் கனவுக்கண்ணன் ஜடியாமணி அன்பளிப்பாக வழங்கிய ஹன்சிகாவின் பாவாடையை அனைத்த படி படுத்திருந்த பதிவருக்கு...எழும்ப மனம் வரவில்லை இருந்தாலும் இன்றைக்காவது குளிர்போம் எத்தினை நாளைக்குத்தான் பதிவர் துஷி பிரான்சில் இருந்து அனுப்பிய பாடி ஸ்ப்ரேயை(Body spray)யையே குளிக்காது பயன் படுத்துவது.எனவே எழுந்து குளிர்க போகின்றார்.

பாத் ரூமில் ஒட்டிவைத்திருக்கும் ஹன்சிகா படத்தை பார்க பதிவருக்கு வெட்கம் வெட்கமாக வந்தது எனவே ஹன்சிகாவின் மேல் அதாவது ஹன்சிகாவின் படத்தின் மேல் டவலை போட்டு மூடிவிட்டு..குளிர்க ஆரம்பிக்கின்றார்..

குளிர்த்து முடிச்சிட்டு வீட்டுக்குள் வந்தார்(பிறகு எங்க வருவாங்க)சூடாக இருந்த 16 இட்டலியை புள்கட்டு கட்டிவிட்டு... புத்தாடை அணிந்து... புதுமாப்பிளை போல வெளியில் கெளம்பினார் பதிவர்...
கோயிலுக்குப்போய் சாமியை கும்பிட்டு.கோயிலுக்கு வெளியில் காத்திருந்தார்... யாருக்காக...காத்திருந்தார் அவரின் பிகரின் வரவுக்கு... பதிவரின் லவ்வரும் வரவே ஏன் இவ்வளவு லேட்டு நான் எம்புட்டு நேரம் காத்திருந்தேன் என்று தெரியுமா என்று வழமையாக காதலர்கள் போடும் பிட்டை போட்டார்.

லவ்வரும் சாரிடா ஹப்பி பர்த்டே டா(Happy birthday da)என்று ஒரு பூவை கொடுக்குது அதை வாங்கிய பதிவர் மனசுக்குள் நினைக்கின்றார் இவளுக பிறந்த நாளுக்கு மட்டும் சுடிதார்,சல்வார்,என்று நாம வேண்டி கொடுக்கிறம் ஆனால் இவளுக மட்டும் வெறும் பூவைக்கொடுத்து சமாளிக்கிறாள்களே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

லவ்வரும் என்ன யோசனை கிளம்பலாமா என்று சொல்ல சுயநினைவுக்கு வந்த மதுரன் தனது மோட்டார் சைக்கிளில் லவ்வரை ஏற்றிக்கொண்டு கஜுரினா பீச்(Beach) நோக்கி செல்கின்றனர்...இடையில் அதாவது போகும் வழியில் ராபிக் போலிஸ் மறிக்கின்றார்.
ராபிக் போலிஸ்-மல்லி கொய்த யன்ன?லைசன் தினவத? மே கெள்ளோ (H)கவ்த? (எங்கே போறீங்க?)
என்று சகோதர மொழியில் ராபிக் போலிஸ் கேட்ட

பதிவர்-என்னது கொய்யாப் பழம் புடுங்கவா அதுக்கு ஏன் லைசென்ஸ்? இவளை நான் எங்க கொல்றன் இவள் தான் என்னைக் கொல்றாள்.
ராபிக் போலிஸ்-அது இல்லை மல்லி சிங்கள தன்ன? (சிங்களம் தெரியுமா?)
பதிவர்-என்ன நான் வெண்ணையா? யார பார்த்து என்ன சொல்லுறீங்க?
ராபிக் போலில் -அது இல்லை மல்லி சிங்களம் தெரியாதா? எங்க போறீங்க லைசன்ஸ் இருக்கா இது யாரு?

பதிவர்-அப்புடி கேளுங்க அதைவிட்டு விட்டு வெண்ண, கொயாப்பழம் என்று எல்லாம் பேசுறீங்க என்று லைசன்ஸ்சை எடுத்து ராபிக் போலிசிடம் நீட்டு கின்றார்
ராபிக் போலிஸ்-மல்லி இது லைசன்ஸ் இல்லே இது கிரடிட் கார்ட். ட்ரைவிங் லைசன்ஸ் எடுங்க?
பதிவர்-சாரி சார் இந்தாங்க என்று லைசன்ஸ்சை கொடுக்கின்றார்
லைசன்ஸ் எல்லாம் சரியா இருக்கிறதா எனப் பார்த்து சரி என்று அனுப்புகின்றார் போலீஸ் ஆப்பிசர்.

பதிவர் பீச் நோக்கிப் போகின்றார். அப்ப பதிவரின் லவ்வர் கேட்கின்றார் ரொம்ப ஹெடேக்கா (Headache)இருக்கு வீட்டுக்கு போவோம் என்று பதிவருக்கு என்ன சொல்வது என்று புரியலை அது என்ன கெட்ட ஏஜ்சா? எனக்கு நல்ல ஏஜ் தான்(நல்ல வயசுதான்)அட மக்கு நான் ஹெட்டேக் அதாவது தலையிடி என்று சொன்னேன். ...(பதிவர் மனசுக்குள் நினைக்கின்றார் எங்களுக்கு ஹெட்டேஜ் என்றால் தலையிடி என்று தெரியாதா?ரூட்ட மாத்தலாம் என்றால் விடமாட்டாள் போல)சரி போவம் உனக்கு இல்லை எனக்குத்தான் தலையிடி என் பிறந்த நாள் அதுவுமா உன் கூட வந்தேன் பார் பீஜ்க்கு போகனும் என்று.

பதிவர் திரும்ப லவ்வரை ஏற்றிக்கொண்டு அவளது வீட்டிற்கு சற்று தள்ளி இறக்கிவிட்டு தன் வீட்டுக்கு வருகின்றார் வந்து சரி சகபதிவர்கள் என்ன வாழ்த்து சொல்லியியிருக்காங்க பார்போம் என்று கம்பியீட்டரை ஆன் பண்ணுகின்றார்.

அங்கே வாழ்த்துகள்
ஜடியாமணி: பலநூறு பிரபலங்கள் அவதரித்த, டிசம்பர் 1 ம் நாளில் பிறந்து, எம் இதயம் நுழைந்து, உயிரில் கலந்த ( நன்றி - வைரமுத்து ) அன்பு நண்பன், ஆருயிர் தோழன், ஹன்சிகாவின் பாவாடையை கஞ்சி போட்டு, கசங்காமல் காவல் காக்கும் காவல் தெய்வம், முன்னுக்கு மட்டும் போதாது பின்னுக்கும் இரண்டு வேண்டும் என்று அடம்புடிக்கும் அன்பு நண்பன் மதுரனுக்கு எனது சார்பாகவும், நிரூபனின் மூன்றாவது மனுசியின் (மனைவியின்) சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

காட்டான் மாமா-வணக்கம் மருமோனே ஏன்?ஏன்யா இந்த கொலை வெறி... இவ்வளவு நீண்ண்ண்ட பதிவை வாசிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்திடும்போல..?.. சரி சரி என்ர அடுத்த மருமோனுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!

கந்தசாமி-மதுரனுக்கு வாழத்துக்கள்...

துஷி-பிறந்த நாள் அன்றாவது நான் கொடுத்த பாடி ஸ்ப்ரேயை(Body spray)யை பயன் படுத்தாமல் குளிர்த அன்பு நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வரோ-மது முதலில் ஹன்சியின் பாவாடையை ஜடியாமணியிடம் கொடு அப்பறம் நான் வாழ்த்து சொல்லுறன்

இப்படி பல சில பதிவர்கள் வாழ்த்து சொல்ல பிறந்த நாள் கொண்டாடும் மதுரனுக்கு ஓரு சந்தேகம் இந்த நண்பர்கள் தளத்தின் ஓனர் ராஜ் எங்க ஒரு வாழ்த்தும் சொல்லாம இருக்கான் என்று தேடுகின்றார் அப்பதான் இந்தப்பதிவு அவர் கண்ணில் பட வாசித்துவிட்டு தலைதெறிக்க ஓடுகின்றார்....
(யாவும் கற்பனை)

வரும் 1-12-2011 அன்று பிறந்த நாள் கொண்டாடும் சகபதிவர் சிறகுகள் வலைப்பதிவின் ஓனர் அன்பு நண்பர்; இளம் பெண்களின் கனவு நாயகன், சிந்தனை சிற்பி,பதிவுலக ஹீரோ, அருமை நண்பர் மதுரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவரின் பிறந்த நாளுக்கு பிறந்த நாள் பரிசாக இந்த பதிவு...ஹி.ஹி.ஹி.ஹி...
*********************************************************************************
விளக்கம்--சகோதர மொழி-சிங்களம்

மல்லி கொய்த யன்ன?லைசன் தினவத? மே கெள்ளோ (H)கவ்த?
தம்பி எங்க போறீங்க லைசன்ஸ் இருக்கா இந்த பொண்ணு யார்?
மல்லி சிங்கள தன்ன?
தம்பி சிங்களம் தெரியாது
கஜூரனா பீச்/ கஜூரனா பீச்-ஈழத்தில் யாழ்பாணத்தில் உள்ள ஒரு கடற்கரை
*********************************************************************************
டிஸ்கி: நண்பர்களே இன்று சொந்த ஊர்ப்பக்கம் செல்வதால் இன்று நண்பர்களின் தளங்களுக்கு வரமுடியாமைக்கு வருந்துகின்றேன். அத்துடன் இந்தப்பதிவுக்கு கும்மி வைங்க நாளை வருகின்றேன்.

Post Comment

35 comments:

K.s.s.Rajh said...

நண்பர்களே முடிந்தால் யாரவது உடான்ஸ்,உலவு போன்ற திரட்டிகளில் இணைத்துவிடுங்கள்

பாலா said...

என் சார்பிலும் வாழ்த்துக்கள்

isaianban said...

நானும் இனிய நண்பர் அவர்களுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

இந்த இனிய பதிவை வெளியிட்டமைக்கு நண்பர் ராஜ் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்...

ராஜி said...

என் வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க சகோ

Unknown said...

பதிவு போட்டு கலாய்த்ததால் பிறந்தநாள் விருந்து நிப்பாடிடுடாராம்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

பிறந்தநாள் காணும் பையன இப்படியா மான பங்கப் படுத்துறது, அதுவும் பப்லீக்ல... அவருக்கும் உங்களுக்கும் நமது வாழ்த்துக்கள்..

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

ஆமா ஒரு சின்ன டவுட்டு, யாழ்பாணத்துல ட்ராபிக் போலிஸ் எதுக்கு சிங்களத்துல பேசுறாரு? ஸ்டைலுக்கா? இல்ல உண்மையிலேயே அங்க அப்புடித்தான் நடக்குமா?
மொக்க பதிவிலும் லாஜிக் எதிர்பார்ப்போர் சங்கம்.

Anonymous said...

மதுரனுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்!

Yoga.S. said...

வணக்கம்,ராசா!பிறந்த நாளுக்கு மதுரனுக்கு நல்ல பரிசு கொடுத்திருக்கிறீர்கள்!துஷி நேற்றே வாழ்த்துப் பதிவு போட்டு விட்டார்!பையன்(மதுரன்)பாவமில்லையா?என்னால் முடிந்தால்,புதுவருட விற்பனை முடிந்த பின் இங்கே மலிவு(சேல்-sale)விலையில் வாசனை திரவியங்கள் விற்பனை செய்வார்கள்,வாங்கி யாரிடமாவது கொடுத்து அனுப்புகிறேன்!(கப்பு தாங்கலடா சாமி!)உங்களுக்கும் ஒன்று அனுப்புகிறேன்!-யோகா.எஸ்.-Fr.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அய்யா சாமி...
முடியல எனனால...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மதுரவனுக்கு நானும் வாழ்த்து சொல்றேங்க....

சக்தி கல்வி மையம் said...

என்னது மதுரனுக்கு பிறந்த நாளா.. ஏன் சார்பாகவும் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க..

Yoga.S. said...

Dr. Butti Paul கூறியது...

ஆமா ஒரு சின்ன டவுட்டு, யாழ்பாணத்துல ட்ராபிக் போலிஸ் எதுக்கு சிங்களத்துல பேசுறாரு? ஸ்டைலுக்கா? இல்ல உண்மையிலேயே அங்க அப்புடித்தான் நடக்குமா?////வணக்கம் டாக்டர்! தமிழ் மக்களின் பூர்வீக இடமான வடக்கு,கிழக்கு மாகாணங்கள் சிங்கள இராணுவம் மற்றும் பொலிசாரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.உங்களுக்குத் தெரியும் தானே?2009- மே க்குப் பின்னர்,இருந்த கொஞ்சம் சுதந்திரமும் பறிக்கப்பட்டு மக்கள் நடைப்பிணமாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

மதுரவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா என்னா ஒரு கற்பனை...... நான் ஹன்ஷிகாவைச் சொன்னேன்:)).

எய்ட்ஸ் தினத்தில், பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் நண்பருக்கு என் வாழ்த்துக்கள்... அதுதான் டிஷம்பர் 1ஸ்ட்டு:).

கஜூனா பீஜ்.... சூப்பர் 2001 இல் ஒருதடவை குளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது... மிக அருமையான பீஜ்...

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

சூப்பரா மதுரனைக் கலாய்ச்சிருக்கிறீங்க.

ரசித்தேன்.

நிரூபன் said...

உங்களோடு இணைந்து மதுரனை நானும் வாழ்த்துகிறேன்.

ஆமா எனக்கு என்னது, மூனு மனுசியா?
முடியலை.....................


கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...

மச்சான் சார், ஹன்சிகா பாவாடை உண்மையான ஹன்சியோட பாவாடையா?

இல்லே நம்ம ஊரு கச்சான்காரியின் பாவாடையா என்பதை செக் பண்ணினீங்களா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

பிறந்த நாள் வாழத்துக்கள்!
(யாருக்கு..?)

புலவர் சா இராமாநுசம்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள்.

SURYAJEEVA said...

ரசிக்க முடியவில்லை... இருந்தாலும் வித்தியாசமான முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.. பிறந்த நாள் காணும் பதிவருக்கும் வாழ்த்துக்கள்..

K said...

யோவ், மச்சான் சார், முக்கிய இடத்துல சென்சார் பண்ணிட்டீங்க! அதான், பீச்சுக் போய் என்ன நடந்திச்சுன்னு எழுதலியே! அங்க மதுரன் சும்மாவா இருந்திருப்பார்? போயிருந்தால்?

K said...

என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தமைக்கு நன்றி மச்சான் சார்!

K said...

மச்சான் சார், ஹன்சிகா பாவாடை உண்மையான ஹன்சியோட பாவாடையா?

இல்லே நம்ம ஊரு கச்சான்காரியின் பாவாடையா என்பதை செக் பண்ணினீங்களா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ////////

அடீங், கொய்யாலே! அது ஒரிஜினல் ஹன்சிகாவின் பாவாடைதான்! நான் மதுரனுக்கு கொடுத்துவிட்டேன் என்ற பொறாமையா?

அதான் சொன்னேனே, ஹன்சிகாவின் இன்னொரு பாவாடையும் என்னிடம் இருக்கு, அதை வேண்டுமானால் உனக்குத் தருகிறேன்! ஒகே வா?

K said...

உங்களோடு இணைந்து மதுரனை நானும் வாழ்த்துகிறேன்.

ஆமா எனக்கு என்னது, மூனு மனுசியா?
முடியலை.....................


கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ////////

யோவ், நான் அப்பவே சொன்னேன்! மூணு மனிசியைக் கட்டாதே என்று.....!!! இப்ப முடியல என்றால் என்ன அர்த்தம்???

தமிழ்வாசி பிரகாஷ் said...

மதுரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பதிவிட்ட ராசாக்கு நன்றி.... உம் பதிவு கற்பனையா இருந்தாலும் மதுரன் பிறந்தநாள் உண்மைதானே...

நம்ம தளத்தில்:
எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு

சுதா SJ said...

ராஜ் செமையா கலாச்சுட்டீங்க போங்க....
ரெம்ப ரசித்தேன்... மதுதான் பாவம்.... அவ்வவ்

சுதா SJ said...

அந்த சென்ட் மேட்டர் உனக்கும் தெரிஞ்சு போச்சா ராஜ்????? அவ்வவ்

சுதா SJ said...

நிருவுக்கு மூன்று மனைவி இருப்பதை போகும் இடமெல்லாம் பகிரங்கப்படுத்தும் மணியை வண்மையாய் கண்டிக்கிறேன்.... அண்ணன் நிரு நாலாவது மனைவி தேடும் இந்த நேரத்தில் இப்படி உளறி அவர் ஆசையில் மண் போடலாமா?????????? அவ்வ

Anonymous said...

பிறந்த நாள் காணும் பதிவருக்கு வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

இன்று போல் என்றும் வாழ்க.!
நம்ம தளத்தில்:"மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?"

இராஜராஜேஸ்வரி said...

மதுரனுக்கு
மதுரமான பிறந்தநாள் வாழ்த்துகள்..

அம்பாளடியாள் said...

மதுரனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்தும் உரித்தாகட்டும் .நன்றி சகோ உங்கள் பகிர்வுக்கு .......

K.s.s.Rajh said...

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
டாக்டர் உங்கள் கேள்விக்கு பதிலை யோகா ஜயா சொல்லியுள்ளார் பாருங்க நன்றி யோகா ஜயா....

ம.தி.சுதா said...

பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் ஓகே தாள் எமக்கான படி எங்கே ஒரு கேக்கை தந்து ஏமாற்ற முடியுமா?

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails