Wednesday, November 30, 2011

சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரை போல வருமா

கடந்த சில நாட்கள் கொஞ்சம் மனதில் வலியிருந்தது எப்பவும் மனதில் இருக்கும் வலிகளை கண்டு நான் சோர்வது இல்லை காரணம் வலிகள் இருக்கும் போதுதான் தன் நம்பிக்கை பிறக்கின்றது.மனம் வலிகளை எதிர்த்து போராடுகின்ற போதுதான் வாழ்க்கை வலிமை பெறுகின்றது.

அப்படித்தான் சில மனக்கஸ்டங்களால் பதிவுலகில் கடந்தசில நாட்களாக சீராக இயங்கமுடியவில்லை நண்பர்களின் தளங்களுக்கும் வரமுடியவில்லை.
நண்பன் ஒருவன் கேட்டான் வா ராஜ் ஊர்ப்பக்கம் போய்ட்டு வருவோம் என்று சரி என்று எங்கள் ஊர்பக்கம் போனோம்...ஊருக்கு வந்ததும் மனதில் தானாக உட்சாகம் பிறந்தது கவலைகள் மறந்தது.

சும்மா இருக்கும் போது ஊருக்கு வருவதைவிட மனதில் கஸ்டம் இருக்கும் போது ஊருக்கு வருவதனால் சோகம் கூட சுகமாகின்றது.நான் மனதில் கஸ்டம் இருக்கும் போது எல்லாம் ஊர்பக்கம் போய்விடுவது வழமை..

பழய நண்பர்களைக்கண்டு அவர்களுடன் கதைபேசி.கடந்த கால ஞாபகங்களை பகிர்ந்து கொண்டு...ஊர் சுற்றினோம்...
நண்பர்களுடன் நட்பில் சந்தோச தருணங்கள்,படித்த பாடசாலை,
முதல் காதல்,எதிர்காலத்தை பற்றி சிந்திக்காது சந்தோசமாக திரிந்த பருவம்,ஆற்றில் குளிர்த்த நினைவுகள்,போன்ற பல சுவாரஸ்யங்கள் மீளவும் எங்கள் நினைவுகளில் வந்து போனது.

எங்கள் நண்பர்கள் வட்டத்தில் பலர் இப்போது இல்லை.தொழில் நிமித்தம் வேறு இடங்களில் இருப்பவர்கள்,வெளிநாட்டில் இருப்பவர்கள்,மண்ணுக்காக மரணித்தவர்கள்,என்று பலர் இப்போது இல்லை ஆனாலும் எப்படியும் ஊர்பக்கம் போனால் 7,8 நண்பர்களாவது ஒன்று கூடிவிடுவோம்.

பெரும்பாலும் பழயகதைகள் பற்றிதான் அரட்டை அடிப்போம் காரசாரமான விவாதங்கள் இருக்கும்.அதைவிட,அரசியல்,விளையாட்டு,சினிமா,போன்ற பல விவாதங்கள் சூடுபிடிக்கும்.

எங்கள் அரட்டைகளில் மிகமுக்கிய விவாதம் நம்ம பசங்களின் காதல் கதைகள் தான்..அந்தப்பொண்ணு இப்ப எங்க இருக்கின்றாள் இவன் லவ்விய பொண்ணு இப்ப எங்க அவள் கலியாணம் கட்டிட்டாளாம்.அவள் வெளிநாட்டில் இருக்காள்.இப்படி நம்ம பசங்களின் பள்ளிக்காதல் கதைகளில் அவர்கள் டாவடித்த எங்கள் கூட படித்த பொன்ணுங்களை பற்றி விவாதம் இருக்கும்.

அப்படித்தான் நம்ம பையன் டாவடித்த ஒரு பொண்ணு அவளுக்கு இப்ப கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கு வெளிநாட்டில் இருக்கின்றாள்.அவள் பற்றி விவாதம் எழுந்தது.அவளை ஓருதலையாக காதலித்த பசங்களை பட்டியல் போட்டால் அதற்கே தனிச்சங்கம் உருவாக்கலாம் அவ்வளவு பேர்.ஆனால் நான் அறிய அவள் யாரையும் காதலிக்கவில்லை.
சில நண்பர்கள் சொன்னார்கள் இல்லை அவள் அவனைகாதலித்தாள்,சிலர் அதுக்கு மறுப்பு தெரிவித்தார்கள் அப்படி இருக்காது அவள் ஏன் இவனை காதலிக்கின்றாள் என்று.இப்படி அவளைப்பற்றிவிவாதம் போகும் 

அடுத்து எங்கள் பசங்களில் ஒரு குணம் பெரும்பாலும் எங்கள் கூட படித்த பிரியாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது)பற்றிதான் அதிகம் கதைப்பார்கள்,பசங்க மட்டும் இல்லை கூடப்படித்த பொண்ணுங்களை கண்டாலும் அவர்கள் கதைமுதலில் பிரியாவை பற்றிதான் இருக்கும்...அப்படிதான் நம்ம நண்பன் ஒருத்தன் எங்கள் கூட படிச்ச ஒரு பொண்ணை கண்டுள்ளான் அவள்கூட கதைக்கும் போது அவள் சொன்னாளாம் பிரியா இங்கதான் இருக்காள் அவள் கூட நான் கதைக்கிறனான். என்று  நல்ல திட்டு கொடுத்து இருக்கான் எங்கள் கூட படிச்ச எவ்வளவு பிள்ளைகள்(பொண்ணுங்க)இருக்க ஏன் பிரியாவை பற்றி மட்டும் கதைக்கிற என்று.

எதோ பிரியாகூட கதைச்சால்(பேசினால்) இல்லை பிரியாவை எங்கையும் கண்டால் ஏதோ ஜஸ்வர்யா ராயுடன் கதைப்பதை போல நினைப்பு என் நண்பர்கள் சிலருக்கு.(ஒரு காலத்தில் நானும் பிரியாவை ஜொள்ளுவிட்டவன் தான்...அது ஒரு காலம் ஹி.ஹி.ஹி.ஹி).

பொண்ணுங்களை பற்றி கதைப்பது(பேசுவது)பசங்களுக்கு மிகவும் பிடித்த விடயம் தானே அதிலும் எங்கள் கூட படித்த பொண்ணுங்களை பற்றி பேசுவது நம்ம நண்பர்களுக்கு மிகவும் பிடித்த விடயம்..

நம்ம பசங்களுடன் மலரும் நினைவுகளில் மூழ்கி பழய கதை பேசும் போது மனதில் உள்ள கஸ்டங்கள் எல்லாம் தூர ஓடிவிடும் என்ன சொன்னாலும் எத்தனை சந்தோசம் இருந்தாலும் சொந்த ஊரில் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை போல ஓரு சந்தோசம் வேறு எதிலும் இல்லை...சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா?

ஆனாலும் ஊரிற்கு போகும் போது மனதில் ஒரு கவலை எங்களை அறியாமல் வந்துவிடுகின்றது யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள்...ஆனாலும் அதையும் மீறிய ஒரு சந்தோசம் அந்த மண்ணில் இருக்கு.....என் ஊர் எனக்கு சொர்க்கம் தான்.

முஸ்கி-சில பல காரணங்களால் படங்கள் இணைக்கமுடியவில்லை 

*********************************************************************************
நண்பர் அகசியம் வலைப்பதிவின் ஓனர் வரோ அவர்கள் காவியம் பாதி,கற்பனை பாதி என்று கலந்து சங்கிலிய மன்னன் பற்றி அழகான ஒரு சரித்திர தொடர் எழுதி வருகின்றார் சரித்திர கதைகளில் ஆவல் உள்ளவர்களை நிச்சயம் இந்தத்தொடர் கவரும் என்று நினைக்கின்றேன் ஆர்வம் உள்ள நண்பர்கள் படித்துப்பாருங்கள் இலக்கிய சுவைமிக்க அழகான தொடர்.
*********************************************************************************

Post Comment

72 comments:

கோகுல் said...

சொந்த ஊர் நிச்சயம் சொர்க்கம் தான்.
ஏதாவது மனக்கஷ்டத்தோட போனோம்னா நிச்சயம் அது இல்லாம தான் திரும்பி வருவோம்.
சொந்த ஊரிலே வாழும் வரம் பெற்றவர்களை பார்க்க பொறாமையாய் இருக்கும்.

MANO நாஞ்சில் மனோ said...

சொந்த ஊரிலே வாழும் வரம் பெற்றவர்களை பார்க்க பொறாமையாய் இருக்கும்.//

அவர்களுக்கு நம்மளை பார்த்தால் பொறாமையா இருக்குன்னு சொல்றாங்க ம்ம்ம்ம் அக்கறைக்கு இக்கரை பச்சை....!!!

அம்பலத்தார் said...

சரியாக சொன்னீர்கள் சொந்த ஊருக்கு நிகர் சொந்தஊர்தான்

Yoga.S. said...

வணக்கம் ராஜா,உங்களால் முடியும்!எங்களால் முடியுமா?அதுவும் என்போன்ற வயதானவர்கள்,நினைத்து,நினைத்து ஏக்கப் பெருமூச்சு விட்டே பாதி உயிர் போய்விடும் போலிருக்கிறது!இதில் வேறு அங்கே அப்படி,இங்கே இப்படியென்று அடித்து வேறு கொள்கிறார்கள்!அது ஏன் இப்போ?மனது ஆறி வந்திருக்கிறீர்கள்.பார்க்கலாம்,வழி திறக்காதா,என்ன?

அம்பலத்தார் said...

உண்மைதான் பலகாலங்களின்பின் தாயம் சென்று சொந்த உருக்குப் போனபோது சந்தோசத்தையும் தாண்டி ஒரு சோகம் ஒட்டிக்கொண்டது.

Mathuran said...

உண்மைதான் பாஸ்.. ஆயிரம்தான் இருந்தாலும் சொந்த ஊரைப்போல சந்தோசமான இடம் வேறு எங்கும் இல்லைத்தான்

SURYAJEEVA said...

பழகிய மனிதர்கள் இருப்பதால் சொந்த ஊர் என்றுமே சொர்க்கம் தான்... எனக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் இல்லை என்றாலும் இன்றும் காஞ்சிபுரம் என்னை அழைத்துக் கொண்டிருப்பதாகவே கருதுகிறேன்... காரணம் அங்குள்ள மனிதர்கள்

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

ஊரு விட்டு ஊரு வந்து சிக்கிக்கிட்டாதான் சொந்த ஊரோட அருமை புரியும்.
உங்கள் மனக்கஷ்டங்கள் முற்றும் தீர பிரார்த்தனைகள்.

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி!
அது சரி சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல் வராதுதான்.. 

படங்கள் இணைக்க முடியாததற்கு சில பல காரணங்கள் இருக்கின்றது என்கிறீர்களே அதுதான்யா பிரச்சனை.. புரிந்து கொள்கிறேன்..!!

Anonymous said...

ePq;f nrhd;dJ rupjhd;
ehDk; Aj;jk; Kbe;jgpd; vd; nrhe;j CUf;F NghapUe;Njd;
nuhk;g kfpo;r;rpah ,Ue;jJ
Mdhy; vj;jidNah khw;wq;fs;
mJ kl;Lk;jhd; Ntjid

தனிமரம் said...

வணக்கம் ராச்! 
தேடல் அதிகம் அதுதான் தொடர்ந்து வரமுடியவில்லை தனிமரம் மீது கோபம் இல்லைத்தானே!சொந்த ஊர் எப்போதும் செர்க்கம் தான் ஒவ்வொருத்தனுக்கும் .ஒரு தேசத்தில் இருந்து கொண்டே ஊருக்குப் போகும் சுகம் தனி என்றால் புலம் பெயர்ந்தவன் ஊருக்குப் போனால் இன்னும் எத்தனை உணர்வுகள் பெறுவான் !ம்ம் மீள எண்ணங்களை அசைபோடும் பதிவு 

 .

தனிமரம் said...

ஊருக்குப் போனாலும் பிரியா புலம்பல் மட்டும் நிக்கவில்லை !சரண்யாவிடம் போட்டுக்கொடுக்கனும் .அவ்வ்!

தனிமரம் said...

ஊருக்குப் போனது பெண்பார்க்க என்று யாரோ சொன்னார்கள் உண்மையா???ஹா ஹா ஹீ ஹீ

K.s.s.Rajh said...

@கோகுல்
////சொந்த ஊர் நிச்சயம் சொர்க்கம் தான்.
ஏதாவது மனக்கஷ்டத்தோட போனோம்னா நிச்சயம் அது இல்லாம தான் திரும்பி வருவோம்.
சொந்த ஊரிலே வாழும் வரம் பெற்றவர்களை பார்க்க பொறாமையாய் இருக்கும்.////

ஆம் பாஸ் உண்மைதான்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
சொந்த ஊரிலே வாழும் வரம் பெற்றவர்களை பார்க்க பொறாமையாய் இருக்கும்.//

அவர்களுக்கு நம்மளை பார்த்தால் பொறாமையா இருக்குன்னு சொல்றாங்க ம்ம்ம்ம் அக்கறைக்கு இக்கரை பச்சை....!!////

ஹா.ஹா.ஹா.ஹா...அதே அதே

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
சரியாக சொன்னீர்கள் சொந்த ஊருக்கு நிகர் சொந்தஊர்தான்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
வணக்கம் ராஜா,உங்களால் முடியும்!எங்களால் முடியுமா?அதுவும் என்போன்ற வயதானவர்கள்,நினைத்து,நினைத்து ஏக்கப் பெருமூச்சு விட்டே பாதி உயிர் போய்விடும் போலிருக்கிறது!இதில் வேறு அங்கே அப்படி,இங்கே இப்படியென்று அடித்து வேறு கொள்கிறார்கள்!அது ஏன் இப்போ?மனது ஆறி வந்திருக்கிறீர்கள்.பார்க்கலாம்,வழி திறக்காதா,என்ன?////

அதுவும் சரிதான் ஜயா வழி திறக்காதா என்ன?

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
உண்மைதான் பாஸ்.. ஆயிரம்தான் இருந்தாலும் சொந்த ஊரைப்போல சந்தோசமான இடம் வேறு எங்கும் இல்லைத்தான்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
suryajeeva கூறியது...
பழகிய மனிதர்கள் இருப்பதால் சொந்த ஊர் என்றுமே சொர்க்கம் தான்... எனக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் இல்லை என்றாலும் இன்றும் காஞ்சிபுரம் என்னை அழைத்துக் கொண்டிருப்பதாகவே கருதுகிறேன்... காரணம் அங்குள்ள மனிதர்கள்
////

ஆம் பாஸ் பழகிய மனிதர்களை என்றும் மறக்க முடியாது

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
ஊரு விட்டு ஊரு வந்து சிக்கிக்கிட்டாதான் சொந்த ஊரோட அருமை புரியும்.
உங்கள் மனக்கஷ்டங்கள் முற்றும் தீர பிரார்த்தனைகள்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
வணக்கம் ராசுக்குட்டி!
அது சரி சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல் வராதுதான்..

படங்கள் இணைக்க முடியாததற்கு சில பல காரணங்கள் இருக்கின்றது என்கிறீர்களே அதுதான்யா பிரச்சனை.. புரிந்து கொள்கிறேன்.////

நன்றி மாம்ஸ்

அப்படி நீங்களா புரிஞ்சு கொள்ளுங்கள் ஹி.ஹி.ஹி.ஹி....

K.s.s.Rajh said...

@ பெயரில்லா கூறியது...
ePq;f nrhd;dJ rupjhd;
ehDk; Aj;jk; Kbe;jgpd; vd; nrhe;j CUf;F NghapUe;Njd;
nuhk;g kfpo;r;rpah ,Ue;jJ
Mdhy; vj;jidNah khw;wq;fs;
mJ kl;Lk;jhd; Ntjid
/////

தங்கள் கருத்துரை புரியவில்லை வேறு எழுத்துருவில் இருக்கின்றது போல புரியவில்லை

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
வணக்கம் ராச்!
தேடல் அதிகம் அதுதான் தொடர்ந்து வரமுடியவில்லை தனிமரம் மீது கோபம் இல்லைத்தானே!சொந்த ஊர் எப்போதும் செர்க்கம் தான் ஒவ்வொருத்தனுக்கும் .ஒரு தேசத்தில் இருந்து கொண்டே ஊருக்குப் போகும் சுகம் தனி என்றால் புலம் பெயர்ந்தவன் ஊருக்குப் போனால் இன்னும் எத்தனை உணர்வுகள் பெறுவான் !ம்ம் மீள எண்ணங்களை அசைபோடும் பதிவு
/////

வாங்க பாஸ் வாங்க......

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
ஊருக்குப் போனாலும் பிரியா புலம்பல் மட்டும் நிக்கவில்லை !சரண்யாவிடம் போட்டுக்கொடுக்கனும் .அவ்வ்////

ஹி.ஹி.ஹி.ஹி..........

K.s.s.Rajh said...

@தனிமரம் கூறியது...
ஊருக்குப் போனது பெண்பார்க்க என்று யாரோ சொன்னார்கள் உண்மையா???ஹா ஹா ஹீ ஹீ
////

இப்படி யார் பாஸ் புரளியை கிளப்பிவிட்டது.....

Mohamed Faaique said...

நண்பர்கள் ஒன்று கூடினால், எல்லோரும் இதே மேட்ட்டரைத்தான் பேசுவோம் போலும்..

பொதுவாக நம்ம தலைப்புகளும் இதுவாகத்தான் இருக்கும்

Unknown said...

சொந்த ஊர் எப்போதுமே சொர்க்கம் தான் ராச்.. பிரிந்து இருப்பவர்களுக்கு அதன் வலி தெரியும். பழையதை நினைத்துக்கொள்வது எப்போதும் ஒரு சுகம் நல்லா சொல்லி இருக்கீங்க..

Anonymous said...

எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சொந்த ஊருக்கு போகும் போது மனதில் குதுகலம் தான்.... நன்றாக சொல்லியிருகீர்கள்..........

கவுண்டர் கலக்கல் வசனங்கள்................ ((பாகம் 1 )

பாலா said...

சரியாக சொல்லி இருக்கிறீர்கள். நம் ஊர் நமக்கு சொர்க்கம்தான். உங்கள் வலிகள் மறைந்து வாழ்க்கையில் வசந்தம் மலரட்டும்.

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்,

ஊரை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று கூடினால் என்ன நிகழும் என்பதனை அனுபவ வெளிப்பாடாக அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

ரசித்தேன்.

அப்புறம் பதிவுலகில் குழப்பமா?
என்ன சார் சொல்லுறீங்க;-)))))

நிரூபன் said...

இவ்வளவு காலத்தின் பின்னரும் நண்பிகள் பற்றிய அக்கறை குறையலையே...
ரொம்பத் தான் நேசிக்கிறீங்க போல;-)))

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப சரியா சொன்னே சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வரவே வராது.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உண்மை தான்

சுதா SJ said...

ராஜ் மனுஷனுக்கு கடுப்பேத்துறீங்க???? அவ்வ
பொறாமையா இருக்கு பாஸ்......... ஹும்..... கொடுத்து வச்சனீங்க ராஜ்

சுதா SJ said...

அந்த அழகிய இடத்தில் புகைப்படம் பகிராமை வருத்தமே ...... இருந்தாலும் உங்க நிலை புரியுது....... சரி விடுங்க பாஸ்.... ஒரு நாள் நேரே வந்தே உங்க இடத்தை பாத்திருவோம்....

KANA VARO said...

தம்பி, அடிக்கடி ஊர் ஊர் எண்டுறீயே! எங்கப்பா ஊரு பேரை காணாம்;.. இதுவும் சில பல காரணங்களுக்கா?

KANA VARO said...

அட! நம்ம சங்கிலியன் அறிமுகம்.. எதிர்பார்க்கவே இல்ல. தேங்க்ஸ் பா.. அப்பிடியே அந்த மூஞ்சி புத்தக இன்பாக்சையும் பார்..

M.R said...

உண்மை தான் நண்பா ,சொந்த இடம் ஆசுவாதம் தான்

பகிர்வுக்கு மிக்க நன்றி

K.s.s.Rajh said...

@Mohamed Faaique
////நண்பர்கள் ஒன்று கூடினால், எல்லோரும் இதே மேட்ட்டரைத்தான் பேசுவோம் போலும்..

பொதுவாக நம்ம தலைப்புகளும் இதுவாகத்தான் இருக்கும்////

ஹா.ஹா.ஹா.ஹா...எல்லா இடத்திலும் கிட்ட தட்ட பசங்க ஒரே மாதிரித்தான் பாஸ்

K.s.s.Rajh said...

@
ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...
சொந்த ஊர் எப்போதுமே சொர்க்கம் தான் ராச்.. பிரிந்து இருப்பவர்களுக்கு அதன் வலி தெரியும். பழையதை நினைத்துக்கொள்வது எப்போதும் ஒரு சுகம் நல்லா சொல்லி இருக்கீங்க////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
எனக்கு பிடித்தவை கூறியது...
எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சொந்த ஊருக்கு போகும் போது மனதில் குதுகலம் தான்.... நன்றாக சொல்லியிருகீர்கள்..........

கவுண்டர் கலக்கல் வசனங்கள்................ ((பாகம் 1 )
////நன்றி சகோ

K.s.s.Rajh said...

@ பாலா கூறியது...
சரியாக சொல்லி இருக்கிறீர்கள். நம் ஊர் நமக்கு சொர்க்கம்தான். உங்கள் வலிகள் மறைந்து வாழ்க்கையில் வசந்தம் மலரட்டும்.////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் மச்சான் சார்,

ஊரை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று கூடினால் என்ன நிகழும் என்பதனை அனுபவ வெளிப்பாடாக அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

ரசித்தேன்.

அப்புறம் பதிவுலகில் குழப்பமா?
என்ன சார் சொல்லுறீங்க;-))))////

நான் எங்க பாஸ் பதிவுலகில் குழப்பம் என்று சென்னேன் நான் எனக்கு மனதில் கஸ்டம் என்றுதான் சொன்னேன் ஏன் பாஸ் கோத்து விடுறீங்க....அவ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
இவ்வளவு காலத்தின் பின்னரும் நண்பிகள் பற்றிய அக்கறை குறையலையே...
ரொம்பத் தான் நேசிக்கிறீங்க போல;-)////

ஹா.ஹா.ஹா.ஹா..நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
ரொம்ப சரியா சொன்னே சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வரவே வராது////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
ரொம்ப சரியா சொன்னே சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வரவே வராது////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@ நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
உண்மை தான்
////
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
ராஜ் மனுஷனுக்கு கடுப்பேத்துறீங்க???? அவ்வ
பொறாமையா இருக்கு பாஸ்......... ஹும்..... கொடுத்து வச்சனீங்க ராஜ்
////
ஹி.ஹி.ஹி.ஹி நன்றி மாப்ள

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
அந்த அழகிய இடத்தில் புகைப்படம் பகிராமை வருத்தமே ...... இருந்தாலும் உங்க நிலை புரியுது....... சரி விடுங்க பாஸ்.... ஒரு நாள் நேரே வந்தே உங்க இடத்தை பாத்திருவோம்..////

ஹா.ஹா.ஹா.ஹா.வாங்க மச்சி வாங்க பார்த்திட்டா போச்சி

K.s.s.Rajh said...

@
KANA VARO கூறியது...
தம்பி, அடிக்கடி ஊர் ஊர் எண்டுறீயே! எங்கப்பா ஊரு பேரை காணாம்;.. இதுவும் சில பல காரணங்களுக்கா?/////

ஹா.ஹா.ஹா.ஹா...........

K.s.s.Rajh said...

@
KANA VARO கூறியது...
அட! நம்ம சங்கிலியன் அறிமுகம்.. எதிர்பார்க்கவே இல்ல. தேங்க்ஸ் பா.. அப்பிடியே அந்த மூஞ்சி புத்தக இன்பாக்சையும் பார்.////

நன்றி பாஸ் பாக்கிறன்

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
உண்மை தான் நண்பா ,சொந்த இடம் ஆசுவாதம் தான்

பகிர்வுக்கு மிக்க நன்றி
////

நன்றி பாஸ்

சக்தி கல்வி மையம் said...

பெரும்பாலும் சொந்த ஊர் சொர்க்கம்தான் அவைவருக்கும்..

பதிவின் முடிவில் மனதை நெகிழ வைத்து விட்டீர்கள்..

சென்னை பித்தன் said...

சொந்த ஊர் என்று ஒன்று இருந்தால் அது சொர்க்கம்தான்.

சி.பி.செந்தில்குமார் said...

சொர்க்கமே என்றாலும்.. நிஜமா அது நம்ம ஊர் போல் வராதுதான்

Yaathoramani.blogspot.com said...

உண்மைதான்
சொர்க்கமே என்றாலும் அது நமம ஊருபோல வருமா
என்பது சத்தியமான உண்மை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 14

K.s.s.Rajh said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@சென்னை பித்தன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@சி.பி.செந்தில்குமார்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@Ramani

நன்றி பாஸ்

முற்றும் அறிந்த அதிரா said...

அதுசரி ராஜ், நீங்க பிரியாவைச் சந்திச்சீங்களோ? சொல்லவேயில்லை அவ்வ்வ்வ்வ்வ்:))))....

Unknown said...

ஊர் நினைவுகள் எப்போதும் தனி சுகம்தானே,பல வலிகள் இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் எப்படியாவது ஊர் சென்று விடுவேன், ஊரில் பள்ளி நண்பர்களுடன் சைக்கிளில் ஊர் சுற்றுவதும், ஒட்டுகளில் இருந்து எல்லா விசயங்களை பேசுவது போன்ற சந்தோஷம் எங்கும் கிடைப்பதில்லை.

பொண்ணுகளை பற்றி அதுவும் படித்த பொண்ணுகளை பற்றி கதைப்பது எப்போதும் சுவாரஷ்யம்தான் இருந்தும் பழைய நினைவுகளை மீண்டும் நினைக்க தோன்றிவிடும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

K.s.s.Rajh said...

@athira
////
அதுசரி ராஜ், நீங்க பிரியாவைச் சந்திச்சீங்களோ? சொல்லவேயில்லை அவ்வ்வ்வ்வ்வ்:))))..////

ஹா.ஹா.ஹா.ஹா.என்ன ஒருதரும் கேட்கவில்லையே என்று நினைச்சேன் நீங்க கேட்டுட்டிங்க அக்கா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இல்லை அக்கா இல்லை...........

K.s.s.Rajh said...

@
M.Shanmugan கூறியது...
ஊர் நினைவுகள் எப்போதும் தனி சுகம்தானே,பல வலிகள் இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் எப்படியாவது ஊர் சென்று விடுவேன், ஊரில் பள்ளி நண்பர்களுடன் சைக்கிளில் ஊர் சுற்றுவதும், ஒட்டுகளில் இருந்து எல்லா விசயங்களை பேசுவது போன்ற சந்தோஷம் எங்கும் கிடைப்பதில்லை.

பொண்ணுகளை பற்றி அதுவும் படித்த பொண்ணுகளை பற்றி கதைப்பது எப்போதும் சுவாரஷ்யம்தான் இருந்தும் பழைய நினைவுகளை மீண்டும் நினைக்க தோன்றிவிடும்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
////

நன்றி பாஸ்

ராஜி said...

சொந்த ஊர் வாசம் மணக்குது உங்க பதிவில். வாழ்த்துகள் சகோ

ம.தி.சுதா said...

நண்பர்களில் பலர் வெளிநாடு, பலர் மண்ணுக்குள் என்ற இடத்திலேயே ஸ்தம்பித்து விட்டேன்...

நாம் இருக்கும் வரைக்கும் மனங்களில் இருப்பார்கள் தானே...

PUTHIYATHENRAL said...

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

இந்த மாதம் விகடன் யூத் விகடனில் உங்கள் பதிவு வந்துருகிறது வாழ்த்துகள்.............

Thusi said...

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மையே,
யுத்தத்தினால் நானும் என் சொந்த ஊரை வோட்டு பிரிந்தவள்,
உங்கள் வார்த்தைகள் என்னை சொந்த ஊரிட்கே சென்று வந்த உணர்வை ஏற்படுத்திவிட்டன.
நன்றி ராஜ்...........

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails