Monday, November 14, 2011

என்றும் நினைவில் நிற்கும் ஓரு நண்பியும் நானும்

என் நட்பு வட்டாரத்தில் பெண்கள் பெரிதாக இல்லை என் கூட பாடசாலையில் படித்த சிலர் பேர் தொலைபேசியில் கதைப்பார்கள்,சிலர்,பேஸ்புக்கில் அவ்வப்போது சட் பண்ணுவார்கள் .தற்போது என் வலைப்பதிவை படித்து பல பொண்ணுங்க என்னுடன் நண்பர்களாகிவிட்டார்கள் அது வேற கதை




படிக்கும் போதும் பொண்ணுங்களிடம் அவ்வளவு நட்பாக இருந்தது இல்லை அவர்களுடன் எதாவது விவாதம் செய்து கொண்டே இருப்பேன்..
நான் விவாதிக்காவிட்டாலும் பொண்ணுகளே எதாவது ஓரு விவாதத்தை கொண்டுவருவார்கள்..நம்ம ராசி அப்படி...

அப்படி என்கூட விவாதம் செய்யும்,என்கூட அடிக்கடி சண்டை போடும் என்கூடப்படித்த ஓரு நண்பி பற்றிய பதிவுதான் இது...

தர்சினி என்கூட 8 ம் வகுப்பில் இருந்து உயர்தரம் வரை படித்தவள்...பேரழகி என்று சொல்லமுடியாவிட்டாலும் அழகான பெண்தான்...இவளுக்கு எனக்கும் பாடசாலையில் ஓரே சண்டைதான்...பொதுவாக நம்ம பசங்க பொண்ணுங்களுக்கு ஓரு பட்டப்பெயர்வைத்துதான் கூப்பிடுவார்கள்...அதே போல இவளுக்கும் ஓரு பெயர்வைத்திருந்தார்கள்..எல்லோறும் அந்தப்பெயரைவைத்துதான் இவளை அழைப்பார்கள்.நான் இவளுக்கு ஓரு பெயர் வைத்திருந்தேன் ரீமாசென்.

11ம் வகுப்பில் எங்களின் வகுப்பாசிரியரை எங்கள் வகுப்பில் பல பசங்களுக்கு பிடிப்பது இல்லை..காரணம் வகுப்பில் பசங்க என்ன கதைத்தாலும் வகுப்பாசிரியருக்கு தெரிந்துவிடும்....சில பசங்க எங்கள் கூட சேர்ந்து கதைத்துவிட்டு ஆசிரியரிடம் போட்டுக்கொடுத்துவிடுவாங்க...இதனால் ஆசிரியரிடம் போட்டுக்கொடுக்கும் பசங்க மேல எங்களுக்கு கொஞ்சம் காண்டு(கோபம்).சிலவேளைகளில் பொண்ணுங்களும் ஆசிரியரிடம் போட்டுக்கொடுப்பதுண்டு.

ஓரு நாள் எங்கள் தமிழ் பாட ஆசிரியர் வரவில்லை என்ற படியால் அந்த பாடவேளைக்கு அதிபரிடம் அனுமதிவாங்கி கிரிக்கெட் விளையாட போய்விட்டோம்.பொண்ணுங்கள் சிலர் நூலகத்துக்கு போய்விட்டார்கள் சில பொண்ணுங்க வகுப்பில் இருந்தாங்க..

நானும் இன்னும் ஓரு நண்பனும் கிரிக்கெட் விளையாடாமல் வகுப்பில் வந்து இருந்தோம்.காரணம் .அப்போது பிரியா மேல் காதல் இருந்த காலம்.எனவே பிரியா எப்படியும் வகுப்பில்தான் இருப்பாள் என்று எனக்கு தெரியும் நான் விளையாடாமல் வகுப்பில் வந்து இருந்துவிட்டேன்..கூட துணைக்கு நண்பன் அழைத்து வந்தேன்...ஹி.ஹி.ஹி.ஹி...

அப்போது தர்சினி வகுப்பில் வந்து சொன்னால் ராஜ் ஓருத்தரையும் விளையாடவேண்டாமாம் வகுப்பில் வந்து இருக்கட்டாம் போய் சொல்லிட்டு வா என்றாள்..அவள் என்கிட்ட சொன்னதுக்கும் ஓரு காரணம் இருக்கு அப்ப நான் தான் வகுப்பின் லீடர் ஆனாலும் பதிலுக்கு நான் கேட்டேன் ஏன் நீங்க போய் சொல்லவேண்டியதுதானே ஏன் என்கிட்ட சொல்லுறீங்க...
அதற்கு அவள் எங்கள் வகுப்பாசிரியர் தான் சொன்னவர்.என்று சொன்னாள் .நானும் பதிலுக்கு அவர் என்கிட்ட சொல்லவில்லை உங்கள் கிட்டதானே சொன்னார் நீங்களே போய்ச்சொல்லுங்க என்று..

தர்சினியும் கோபமாக நீ ஏன் வகுப்பில் இருக்கிற என்று எனக்குத்தெரியும்...என்று கோபமாக சொல்லிவிட்டு போய்விட்டாள்.
அவள் நேர வகுப்பாசிரியரிடம் போய் போட்டுக்கொடுத்துவிட்டாள்.
சார் கோபமாக வகுப்புக்கு வந்தார்..தர்சினியிடம் சொன்னார் போய் விளையாடிக்கொண்டிருக்கும் எல்லோறையும் கூட்டிவா என்று அவளும் போய் எல்லோறையும் கூட்டிட்டு வந்தாள்.

வகுப்பாசிரியர் என்னை எழுப்பிவிட்டு செமயாக பேசினார்(திட்டினார்)
அதிபரிடம் அனுப்பிவிட்டார்..பின்னாலே வகுப்பாசிரியரும் வந்து அதிபரிடம் சேர் இவன் நான் வகுப்புக்கு எல்லோறையும் வரச்சொல்ல சொல்லமுடியாது என்று சொன்னானாம் என்று போட்டுக்கொடுத்தார்...

அதிபர் வகுப்பாசிரியரை அனுப்பிவிட்டு என்னிடம் கேட்டார் என்ன நடந்தது என்று நான் சொன்னேன் இல்லை சேர்(சார்)தலையிடி என்று படுத்திருந்தேன் அப்ப தர்சினி வந்து வகுப்பாசிரியர் சேர்(சார்)எல்லோறையும் கூட்டிட்டு வரச்சொன்னாதாக சொன்னாங்க எனக்கு சரியான தலையிடி அதான் நீங்களே போய் கூட்டிட்டு வாங்க என்று சொன்னன் அதைத்தான் அவள் வகுப்பாசிரியரிடம் போய் சொல்லிவிட்டாள் என்று அதிபரிடம் சொல்லி மன்னிப்பு கேட்டேன்.

அதிபரும் சரி இனி இப்படி செய்யாதே என்று சொல்லி மன்னித்து அனுப்பிவிட்டார்...

இப்படி எனக்கும் அவளுக்கும் பாடசாலைக்காலங்களில் ஓரே சண்டைதான் எதாவது ஓரு விடயத்தில் பிரச்சனை வந்துவிடும்...

உயர்தரத்தில் படிக்கும் போது நான் ஓரு கதை எழுதிக்கொண்டு இருந்தேன் ஓரு நாள் நண்பன் ஓருத்தன் அதை எடுத்து வகுப்பில் எல்லோறிடமும் காட்டிவிட்டான்
அதை படித்துவிட்ட தர்சினி சொன்னாள் ஏன் ராஜ் உனக்கு வேறவேலை இல்லையா தூக்கிப்போட்டுவிட்டு பிரயோசனமாக ஏதும் வேலை இருந்தால் பார் என்று..என் முதலாவது கதைக்கு வந்த முதல் விமர்சனம் அது.
அதுக்கு பிறகு நான் அந்தக்கதையை எழுதி பலரிடம் காட்டியபோது நல்லா இருக்கு பத்திரிகைகளில் அனுப்பு என்று சொன்னார்கள்..பல காரணங்களால் அனுப்பமுடியாமல் போய்விட்டது.அதுக்கு பிறகு பல சிறுகதைகளை பத்திரிகைக்கு எழுதி அனுப்பியிருக்கின்றேன்..சில பிரசுரம் ஆகியிருக்கும் சில பிரசுரம் ஆகவில்லை ஆனாலும் நான் எழுதிய முதல் கதை என்மனதில் இருக்கின்றது விரைவில் என் தளத்தில் அதை தொடராக எழுதுகின்றேன்...

இப்படி இருக்கும் போது பாடசாலையில் தலைமை மாணவ தலைவர்களை தெரிவு செய்வது வழமை உயர்தர வகுப்பில் இருக்கும் மாணவர் தலைவர்களில் அவர்கள் எவ்வளவு காலம் மாணவர் தலைவராக இருந்தார்கள்..அவர்களின் செயற்பாடுகள்,போன்றவற்றை வைத்து ஆண்களில் ஓரு தலைமை மாணவர் தலைவரையும்,பெண்களில் ஓரு தலைமை மாணவதலைவரையும் தெரிவு செய்வார்கள்.

அப்படி தெரிவின் போது சில ஆசிரியர்களின் புதிதாக உயர்தரத்திற்கு மட்டும் எங்கள் பாடசாலைக்கு வந்த இருவரை தலைமை மாணவ தலைவர்களாக தெரிவு செய்து உத்தியோக பூர்வமாக அறிவித்தும் விட்டார்கள்.அவர்கள் இருவரும் கலைப்பிரிவில் படிக்கும் புதிதாக வந்த மாணவர்கள்

எங்கள் வர்தக பிரிவில் இருந்து தர்சினியும்,இன்னும் ஓரு பையனும்,போட்டியில் இருந்தும் அவர்களை தெரிவு செய்யவில்லை.
இதனால் நாங்கள் அதிபரிடம் இந்த தெரிவுக்கு எதிராக முறையிட்டேம்.
அதிபரும் எங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டார் ஆனால் ஆசிரியர்கள் தெரிவு செய்துள்தால் இருவரையும் மாற்றினால் அது அழகில்லை எனவே ஓருவரை மாற்றலாம்..ஆண்களுக்கான தலைமை மாணவ தலைவரை மாற்றலாமா இல்லை பெண்களுக்கான தலைமை மாணவ தலைவரை மாற்றலாமா என்று சொல்லுங்கள் என்றார்...

இந்தக்கோரிக்கையை அதிபரிடம் கொண்டு சென்ற எங்களுக்கு ஆண்களுக்கான தலைம மாணவத்தலைவரை மாற்றுவதில் விருப்பம் இல்லை காரணம் அப்படி மாற்றினால் அடுத்தாக அனுபவத்தின் அடிப்படையில் நியமிக்கவேண்டும் என்றால் எங்கள் வர்த்தக பிரிவில் படிக்கும் நண்பனைத்தான் நியமிக்கவேண்டும்.அவன் கொஞ்சம் பந்தா காட்டும் பேர்வழி எனவே இவனை விட ஆசிரியர்கள் தெரிவு செய்த நண்பனே மேல்.எனவே பெண்களுக்கான தலைமை மாணவ தலைவரை மாற்றி...அதற்கு தர்சினியை நியமிக்குமாறுஅதிபரிடம் கூறினோம்.
அதிபரும் தர்சினி நீண்டகாலமாக பாடசாலையில் மாணவதலைவராக இருந்துவந்ததால் எந்த மாற்றுக்கருத்தும் சொல்லாமல் தர்சினியை பெண்களுக்கான தலைமை மாணவதலைவராக நியமித்தார்..

இந்த விடயத்தை அதிபரின் கவனத்துக்கு கொண்டு போனதில் முன் நின்று செயற்பட்டவன் நான் என்பதால்.தர்சினிக்கு முன்பு பெண்களுக்கான தலைமை மாணவ தலைவராக ஆசிரியர்களால் தெரிவு செய்யப்பட்ட அந்த கலைப்பிரிவு நண்பி என்னுடன் அதற்குப்பிறகு கதைப்பது இல்லை...பாடசாலைக்காலம் முழுவதும் அவள் என்னுடன் கதைக்கவில்லை அண்மையில் கண்டு கதைத்தேன்.

தர்சினிக்கு பெரும் சந்தோசம் என்னிடம் வந்து கதைத்தாள்
ராஜ் உன்னுடன் எவ்வளவு சண்டை பிடித்திருகின்றேன் வகுப்பில் நீ செய்யும் பல சேட்டைகளை ஆசிரியர்களிடம் போட்டுக்கொடுத்திருக்கின்றேன் ஆனால் நீ எனக்கு ஆதரவாக கதைத்துள்ளாய்..மன்னிச்சுக்கொள் என்றாள்

நான் தர்சினியை பார்த்து சொன்னேன் அட என்ன நீங்க நாங்கள் எல்லாம் நண்பர்கள் இந்த பாடசாலைக்காலம் முடிந்ததும் ஓவ்வொறுவரும் ஓவ்வொறு திசையில் போய்விடுவோம்...ஆனால் எமது நினைவுகள் மட்டும் எம்முடன் இருக்கும் அதிலும் பலரை மறந்துவிடுவோம் எனவே நண்பர்கள் என்றால் சண்டை இருக்கும் சந்தோசம் இருக்கும்.சோகம் இருக்கும் வலிகள் இருக்கும்..அப்பதான் நட்பு இனிக்கும் என்று ஓரு பிட்டை போட்டேன்
அதுக்கு பிறகு பாடசாலைக்காலம் முடியும் வரை என்னுடன் அவள் ஓரு நாள் கூட சண்டை போட்டது இல்லை.

மனிதவாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை நாம் சந்திப்போம் அதில் பலரை நாம் மறந்துவிடுவோம் சிலரை வாழ்நாளில் மறக்கமுடியாது அப்படி என் நினைவுகளில் என்றும் நிற்கும் ஓரு நண்பி தர்சினி.

இன்று அவள் இந்த உலகில் இல்லை எங்கள் மண்ணுக்காக மரணித்த உறவுகளில் அவளும் கலந்துவிட்டாள்.அவளுக்கு இந்த பதிவு சமர்ப்பனம்


முஸ்கி-பதிவில் உள்ள படம் நடிகை ரிமா சென் உடையது பதிவுக்கும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை


பிந்திய இணைப்பு-பிரியா என்று ஓரு பெயரை குறிப்பிட்டுள்ளாய் ஆனால் அவள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று சிலர் கேட்டார்கள் பிரியா பற்றி நான் ஓரு தொடரே எழுதியுள்ளேன் படிக்காதவர்ககள் இதை கிளிக்பண்ணிபடிங்க-நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்க முடியாத பாடசாலை நாட்கள்.
இந்த இணைப்பில் இறுதிப்பகுதி உள்ளது. ஏனைய 7 பகுதிகளையும் அந்த பதிவின் இறுதியில் இணைத்துள்ளேன் பாருங்கள்

Post Comment

46 comments:

சம்பத்குமார் said...

புரிந்து கொண்ட ஆழமான நட்பினை அழகாக பதிவிட்டுள்ளீர்கள்..

சுவாசிக்க சுவாசிக்க அருமையாய் தான் இருந்தது..

ஆனால் கடைசிவரியில் மனம் கணக்க செய்துவிட்டீர்கள் நண்பரே..

ஆகுலன் said...

அண்ணே நான் உங்களது தொடர் பதிவுகள் வசிப்பது இல்லை காரணம் தொடர்ந்து வசிக்க வேண்டும் என்பதால்..... நேரம் சரியாக கிடைக்காமை..தவறாக நினைக்க வேண்டாம்...

ஆகுலன் said...

இந்த பதிவு அருமை என்னவோ தெரியவில்லை எனக்கும் உந்த மாதிரி பல அனுபவங்கள் உண்டு ,,,,,நீங்கள் எழுதும்போது அந்த அனுபவங்களை நினைவு படுத்த கூடியதாக உள்ளது....

ஆகுலன் said...

இறுதியில் மனதை கலங்க வைத்து விட்டீர்கள்....

குறையொன்றுமில்லை. said...

நல்ல நட்பையும் நல்லநண்பர்களைப்பற்றியும் சொல்வதே சுகமான அனுபவம்தான்.

அம்பலத்தார் said...

தற்போது என் வலைப் பதிவைப் படித்து பல பொண்ணுங்க என்னோட நண்பராயிட்டாங்க.
அடேங்கப்பா கிஸ் என்னா றீல்வுடுறார்

K.s.s.Rajh said...

@சம்பத் குமார்

////
சம்பத் குமார் கூறியது...
புரிந்து கொண்ட ஆழமான நட்பினை அழகாக பதிவிட்டுள்ளீர்கள்..

சுவாசிக்க சுவாசிக்க அருமையாய் தான் இருந்தது..

ஆனால் கடைசிவரியில் மனம் கணக்க செய்துவிட்டீர்கள் நண்பரே.////

நன்றி பாஸ் என்ன செய்வது எங்கள் மண்ணின் கதைகளை சொன்னால் சோகமும் அதனுடன் ஒட்டிக்கொள்கின்றது

K.s.s.Rajh said...

@
ஆகுலன் கூறியது...
அண்ணே நான் உங்களது தொடர் பதிவுகள் வசிப்பது இல்லை காரணம் தொடர்ந்து வசிக்க வேண்டும் என்பதால்..... நேரம் சரியாக கிடைக்காமை..தவறாக நினைக்க வேண்டாம்.////

அட இதுல என்ன தம்பி இருக்கு நேரம் கிடைக்கும் போது வாங்க உங்கள் தளத்திலும் பதிவுகள் போடுங்க

K.s.s.Rajh said...

@ஆகுலன் கூறியது...
இந்த பதிவு அருமை என்னவோ தெரியவில்லை எனக்கும் உந்த மாதிரி பல அனுபவங்கள் உண்டு ,,,,,நீங்கள் எழுதும்போது அந்த அனுபவங்களை நினைவு படுத்த கூடியதாக உள்ளது.////

கிட்ட தட்ட ஓரே நாங்கள் வயது நண்பர்கள் என்பதால் அப்படி இருக்கு போல

அம்பலத்தார் said...

அப்ப தர்சினி நண்பி, இப்ப ஹன்சி.... இதுக்கிடையிலை அந்த பிரியா என்ன ஆனா?

K.s.s.Rajh said...

@
ஆகுலன் கூறியது...
இறுதியில் மனதை கலங்க வைத்து விட்டீர்கள்...////

என்ன செய்வது பாஸ் எல்லாம் எங்கள் மண்ணின் வலிகள்

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
நல்ல நட்பையும் நல்லநண்பர்களைப்பற்றியும் சொல்வதே சுகமான அனுபவம்தான்////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@அம்பலத்தார்
////தற்போது என் வலைப் பதிவைப் படித்து பல பொண்ணுங்க என்னோட நண்பராயிட்டாங்க.
அடேங்கப்பா கிஸ் என்னா றீல்வுடுறார்////

அட உண்மைதான் பாஸ் நம்புங்க......

K.s.s.Rajh said...

@அம்பலத்தார்
////அப்ப தர்சினி நண்பி, இப்ப ஹன்சி.... இதுக்கிடையிலை அந்த பிரியா என்ன ஆனா?////

அட பிரியா பற்றி ஒரு தொடரே எழுதியுள்ளேன் நீங்கள் அப்ப எனக்கு அறிமுகம் ஆகவில்லை பாஸ் அதனால் வாசிக்கவில்லை போல

மேலே பதிவில் உங்கள் கேள்விக்குத்தான் பிந்திய இணைப்பு என்று அந்த தொடரை இணைத்துள்ளேன் பாருங்கள்

தனிமரம் said...

பாடசாலை நாட்களில் வரும் நட்புக்கள் கருத்துமோதல் பிரிவுகள் என எப்போதும் சுகமான சுமையே பள்ளி நினைவுகளை மீள அசைபோட வைக்கின்ற பதிவு.

தனிமரம் said...

உயர்தரத்தில் தரப்படும் மாணவர் தலைவர் பதவி ஒரு முள்கிரீடம் ஆனாலும் இதை தெரிவு செய்யும் போது ஆசிரியர்கள் செய்யும் அரசியல் கொஞ்சம் ஓவர் மாணவர்களிடையே பிரிவினையை வளக்கும் என்பதை அறியாதோர் .
என் நண்பன் ஒருவதுக்கு கிடைக்க வேண்டிய மாணவர் தலைவர் பதவியை ஒரு ஆசிரியர் பிரதேசவாதம் கிளப்பி அப்பதவியை கொடுக்காத போது அந்த கோபத்தில் பின்னாலின் கிடைத்த சிறந்த மாணவன் பரிசிலை இன்று வரை வாங்க நண்பனையும் பார்த்திருக்கின்றேன்.

Yaathoramani.blogspot.com said...

நட்பு குறித்த அருமையான பதிவுகளில் இதுவும் ஒன்று
படித்து முடிக்கையில் மனம் கனம் கொண்டது
த.ம 6

சக்தி கல்வி மையம் said...

மனதை நெகிழச் செய்த பதிவு..

படித்தவுடன் மனதை கணக்க வெச்சிடீங்களே சகோ..

MANO நாஞ்சில் மனோ said...

மனதுக்கு சுகம் தரும் அனுபவங்கள்....!!!

பாலா said...

நண்பரே உங்கள் வாழ்வில் ஏகப்பட்ட கதைகள். ஏகப்பட்ட நினைவுகள். ஆனால் அவை அனைத்துமே தொண்டையில் அடைத்துக்கொண்டு விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் செய்து விடும் நினைவுகள் என்னும்போது உண்மையிலேயே கண்கள் கலங்குகின்றன. கண் முன்னே ஓடி ஆடி விளையாடிய நண்பர்களை அகாலத்தில் இழப்பது என்பது எவ்வளவு கொடுமையானது என்று நினைத்து பார்ப்பதற்கே மனம் அஞ்சுகிறது.

K.s.s.Rajh said...

@தனிமரம்
////பாடசாலை நாட்களில் வரும் நட்புக்கள் கருத்துமோதல் பிரிவுகள் என எப்போதும் சுகமான சுமையே பள்ளி நினைவுகளை மீள அசைபோட வைக்கின்ற பதிவு.////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
உயர்தரத்தில் தரப்படும் மாணவர் தலைவர் பதவி ஒரு முள்கிரீடம் ஆனாலும் இதை தெரிவு செய்யும் போது ஆசிரியர்கள் செய்யும் அரசியல் கொஞ்சம் ஓவர் மாணவர்களிடையே பிரிவினையை வளக்கும் என்பதை அறியாதோர் .
என் நண்பன் ஒருவதுக்கு கிடைக்க வேண்டிய மாணவர் தலைவர் பதவியை ஒரு ஆசிரியர் பிரதேசவாதம் கிளப்பி அப்பதவியை கொடுக்காத போது அந்த கோபத்தில் பின்னாலின் கிடைத்த சிறந்த மாணவன் பரிசிலை இன்று வரை வாங்க நண்பனையும் பார்த்திருக்கின்றேன்////

ஆம் பாஸ் பல இடங்களில் இப்படி பிரச்சனை இருக்குதான்

K.s.s.Rajh said...

@ Ramani கூறியது...
நட்பு குறித்த அருமையான பதிவுகளில் இதுவும் ஒன்று
படித்து முடிக்கையில் மனம் கனம் கொண்டது
த.ம -6 ////
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
மனதை நெகிழச் செய்த பதிவு..

படித்தவுடன் மனதை கணக்க வெச்சிடீங்களே சகோ.////

என்ன பண்ணுறது பாஸ் மனிதவாழ்க்கையில் பல வலிகளை தாங்க வேண்டியுள்ளது....

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
மனதுக்கு சுகம் தரும் அனுபவங்கள்....!!////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@பாலா\

////நண்பரே உங்கள் வாழ்வில் ஏகப்பட்ட கதைகள். ஏகப்பட்ட நினைவுகள். ஆனால் அவை அனைத்துமே தொண்டையில் அடைத்துக்கொண்டு விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் செய்து விடும் நினைவுகள் என்னும்போது உண்மையிலேயே கண்கள் கலங்குகின்றன. கண் முன்னே ஓடி ஆடி விளையாடிய நண்பர்களை அகாலத்தில் இழப்பது என்பது எவ்வளவு கொடுமையானது என்று நினைத்து பார்ப்பதற்கே மனம் அஞ்சுகிறது/////

என்ன பண்ணுவது பாஸ்
எங்கள் வாழ்க்கை வலிசுமக்கும் வாழ்க்கையாகிவிட்டது

சென்னை பித்தன் said...

த.ம.9

அருமையான நினைவு கூரல்.

M.R said...

சுவாரஸ்யமாக படித்து வந்தேன் ,கடைசியில் படித்ததும் மனம் கனத்து போனது

முற்றும் அறிந்த அதிரா said...

சுவாரஸ்யமான பதிவாக இருந்து முடிவில் மனம் கனக்கும் பதிவு.

ஓ அது ரீமா சென் னின் படமோ? நல்லவேளை நீங்க சொன்னமையால்தான் தெரியும்:))))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))

முற்றும் அறிந்த அதிரா said...

பிரியா பற்றி ஏற்கனவே சொல்லிட்டீங்களோ? நான் நிட்சயம் வாசிக்கோணும் இப்போ நேரமில்லை படிக்க.....

அதுசரி இப்படியெல்லாம் மரம்ஏற விட்ட அணில்களைப்:))) பப்ளிக்கில புலம்பி என்ன செய்யப்போறீங்க?.. எதுக்கும் பொம்பிளை பகுதிக்கு இந்த புளொக்கை காட்டிப்போட்டு மேற்கொண்டு தொடருங்க சம்பந்தப்பேச்சை:))))

Unknown said...

மாப்ள சில நட்புகள் மறக்க இயலாது...பகிர்வுக்கு நன்றி!

KANA VARO said...

தர்ஷினி எண்ட பெயரில எனக்கும் ரெண்டு மூண்டு நண்பிகள் இருக்கினம்

K.s.s.Rajh said...

@சென்னை பித்தன்

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
சுவாரஸ்யமாக படித்து வந்தேன் ,கடைசியில் படித்ததும் மனம் கனத்து போனது/////

என்ன பண்ணுவது பாஸ் வலிகள் நிறைந்த வாழ்க்கை

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
சுவாரஸ்யமான பதிவாக இருந்து முடிவில் மனம் கனக்கும் பதிவு.

ஓ அது ரீமா சென் னின் படமோ? நல்லவேளை நீங்க சொன்னமையால்தான் தெரியும்:))))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))////

ஏன் மேடம் ரிமா சென்னை தெரியாதா...ஹி.ஹி.ஹி.ஹி...

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
பிரியா பற்றி ஏற்கனவே சொல்லிட்டீங்களோ? நான் நிட்சயம் வாசிக்கோணும் இப்போ நேரமில்லை படிக்க.....

அதுசரி இப்படியெல்லாம் மரம்ஏற விட்ட அணில்களைப்:))) பப்ளிக்கில புலம்பி என்ன செய்யப்போறீங்க?.. எதுக்கும் பொம்பிளை பகுதிக்கு இந்த புளொக்கை காட்டிப்போட்டு மேற்கொண்டு தொடருங்க சம்பந்தப்பேச்சை:)))/////

ஹி.ஹி.ஹி.ஹி.......
என் சந்தோசங்கள்,சோகங்களின் கிறுக்கல்கள்தான் என் எழுத்துக்கள்.....

K.s.s.Rajh said...

@
விக்கியுலகம் கூறியது...
மாப்ள சில நட்புகள் மறக்க இயலாது...பகிர்வுக்கு நன்றி////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
KANA VARO கூறியது...
தர்ஷினி எண்ட பெயரில எனக்கும் ரெண்டு மூண்டு நண்பிகள் இருக்கினம்/////

இருக்கட்டும் இருக்கட்டும்

மாப்ள் நீங்க போட்ட இன்னும் ஓரு கமண்ட் வெளியிட முடியவில்லை மன்னிக்கவும்....புதிதாக என் வலைப்பதிவை படிப்பவர்கள் அதை படித்தால் அவர்களுக்கு சஞ்சலம் ஏற்படும் அல்லவா அதனால் வெளியிடவில்லை

பால கணேஷ் said...

நட்பைப் பற்றிய நெகிழ்வான பதிவு. கதை என்று எழுதி யாரிடமாவது காட்டினால் கிடைக்கும் ‘இதை விட்டுட்டு வேற வேலையப் பாருப்பா...’ என்ற விமர்சனத்தை நீங்களும் சந்தித்திருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. (வொய் பிளட்...? சேம் பிளட்?) நல்லதொரு பகிர்விற்கு நன்றி ராஜ்!

அம்பாளடியாள் said...

அடடா உங்கள் நட்பைப்பற்றி நீங்கள் சொன்னதைக் கேட்டவுடன் எங்கள் கடந்த காலத்திற்கு சென்றுவரும் வாய்ப்பை உருவாக்கிவிட்டீர்கள் அழகிய ஆக்கத்தினால் .வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு ........

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நலமாக இருக்கிறீங்களா?

உண்மை நட்பின் ஆழத்தினை, பிரதியுபகாரம் கருதாது நீங்கள் செய்த சேவையின் பயனினை விளக்கும் நல்லதோர் அனுபவக் கதையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

தர்சினிக்கு என் அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கிறேன்!

Anonymous said...

சுவாரஸ்யமாக படித்தேன்...கடைசியில் படித்ததும் மனம் கனத்து போனது...

பிரணவன் said...

தர்ஷ்னியுடனான பயணத்தை இப்படி முடிச்சுடிங்களே சகா. . .அவங்களுக்கு என் அஞ்சலியை சமர்ப்பிக்கின்றேன். . .

”தளிர் சுரேஷ்” said...

கடைசியில் சோகமான முடிவாகிவிட்டதே! பள்ளிக் காலநினைவுகளை கிளப்பிவிட்ட பதிவு!

Unknown said...

//////தற்போது என் வலைப் பதிவைப் படித்து பல பொண்ணுங்க என்னோட நண்பராயிட்டாங்க. //

அண்ணே நம்பிட்டோம் நம்பிட்டோம், கிஸ் ராஜ் என்றா பொன்னுக வருவாங்கள்தானே,

பதிவு அருமை,தங்களின் இந்த பதிவு என்னுடைய பாடசாலை வாழ்விலும் 90% பொருந்தி போகிறது.ஆனாலும் என்ன வருத்தமோ விளயாட அதிபரிடம் கேட்டு சென்றாலோ,ஓடினாலோ ஒரு நாளும் வகுப்பில் இருப்பதில்லை. தங்களை போலவே எனக்கும் ஒரு நண்பி இருந்தால் ஒரு முறை அழுது பெரிய நாடகமே போட்டாள். இறுதியாக கதைத்த போதும் சும்மா ஏதாவது சண்டை.

Gowri said...

நட்ப்பின் விளக்கம் அறுமை நண்பா...but dharshni யின் பிரிவு தான் மனதை கலங்க வைத்தது...

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails