Wednesday, November 02, 2011

வலிகள் நிறைந்த வாழ்க்கை தன்நம்பிக்கை பெண் கங்கா

நான் சின்னவயதில் எங்கள் ஊரில் கண்ட ஓரு அக்காவின் சோகக்கதைதான் இது..அவர் பெயர் கங்கா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
பல விவசாயிகளின் வயல்களில் வேலைசெய்து செய்து தமது குடும்பத்தை ஓட்டும் ஓரு கூலித்தொழிலாளியின் மகள்தான் கங்கா நல்ல அழகானவர்.
மூன்று பெண் சகோதரிகளும்,ஓரு சகோதரனும் இவருக்கு உண்டு.
சகோதரன் திருமணம் செய்து வேறு இடத்துக்கு போய்விட்டார்



கங்கா ஓருவரை காதல் திருமணம் செய்து அந்த ஊரிலையே இருந்தார்...அவரது கணவர் இவரில் மிகவும் பாசமானவர் என்று ஊர்களில் கதைத்து கேள்விப்பட்டுள்ளேன்....அப்போது எல்லாம் கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கை பெரும் போராட்டம் தான்.
காரணம் ...யுத்த மழை பொழிந்து கொண்டிருந்த காலம் அது..பெரும்பாலும் ஊர்களில் வயல்களில் வேலைகள் இருக்காது..இதனால்...ஓவ்வொறு நாளும் உழைத்தால் தான் சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் பல குடும்பங்களின் பாடு பெரும் கஸ்டம்தான்.


இந்த நிலையில் பலர் புலிகளிடம் பங்கர் வெட்டுவது போன்ற வேலைகளுக்குச் சண்டை நடைபெரும் இடங்களுக்குச்செல்வதுண்டு.அதற்கு அவர்களுக்கு சம்பளமும் கிடப்பதனால்..பல குடும்பங்களின் உழைப்பாளிகள் இந்த வேலைக்குத்தான் போவார்கள்.அப்படி போன கங்காவின் கணவர் படமாகத்தான்(போட்டோ) திரும்பி வந்தார்...
நிறைமாத கர்பிணியான கங்கா அக்காவுக்கு அப்ப ஓரு 22 வயசுதான் வரும் அந்த வயதில் கணவனை இழந்த பெண்ணின் நிலை எப்படியிருக்கும்.

சில மாதங்களில் கங்கா அக்காவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது..தந்தையின் முகத்தை அறியாத அந்தக்குழந்தையின் எதிர்காலம் எப்படியிருக்கும்
 22 வயதில் விதவைக்கோலம் கங்காவுக்கு
எங்கள் மண்ணில் இப்படி எத்தனை பெண்களின் வாழ்க்கையை யுத்தம் பறித்துக்கொண்டது.


கங்காவின் கணவர் தங்களிடம் வேலைக்கு வந்து இறந்தனால் புலிகளினால் மாதம் மாதம் 2000 ரூபா..உதவித்தொகை அந்த குழந்தைக்கு வழங்கப்பட்டது.
கங்கா அக்கா அந்தப்பணத்தை செலவு செய்யாமல் குழந்தையின் பெயரில் வங்கியில் சேமித்தார்....வயல்களில் கிடைக்கும் வேலைகளைச்செய்து வாழ்க்கையை ஓட்டினார்...கங்காவின் தந்தை,தாய்,சகோதரிகள் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள்..

ஓரு பெண் தனியாக இருந்தால் அவளை காமக்கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆண்கள் சமூதாயத்திற்கு வன்னி மண் ஓன்றும் விதிவிலக்கு இல்லை..ஊரில் பல ஆண்கள் கங்காவை தவறான கண்ணோட்டத்துடன் அணுகினார்கள் அவளை கேலிசெய்வதும் தங்கள் இச்சைக்கு இணங்க வைப்பதும் அவர்களின் நோக்கம்.

கங்கா வாழ்த காணியில்..இருந்த பல குடும்பங்களில் பல பெண்கள் கணவன் இருக்க இன்னும் ஓருவருடன் செல்வது போன்ற பல முறையற்ற உறவுகள் போன்றன அவள் இருந்த காணியில் நடந்து கொண்டுதான் இருந்தது....
நான் எழுதும் என் உயிர் நீதானே தொடரில் சுதன் கதையில் வரும் காணியில் தான் கங்கா அக்கா இருந்தார்.அதில் பல விடயங்களை சொல்லியிருக்கின்றேன்.

ஆனாலும் பல ஆண்கள் கங்கா அக்காவுக்கு வலைவீசிய போதும் அவர் தன் நிலையில் இருந்து கொஞ்சமும் மாறவில்லை...அவர் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தார்..

ஊரில் பல பெண்களைப்பற்றி தவறாக பல கதைகள் வரும் கங்கா அக்காவை பற்றி ஓருவர் கூட தவறாக கதைத்தது இல்லை..

கங்கா அக்காவின் பெற்றோருக்கு மகள் 22 வயதில் விதைவையாகியது பெரும் கவலை எப்படியும் கங்கா அக்காவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள் ஆனால் கங்கா அக்கா மறுத்துவந்தார்.....
பின் 5 வருடம் கழித்து..ஓருவாறு கங்கா அக்கா மறுமணத்திற்கு சம்மதித்தார்..அப்போது நாட்டில் யுத்த மழை ஓய்ந்து சமாதானக்காலம் நிலவியது.


கங்கா அக்காவிக்கு இரண்டாவது திருமணம் நடந்தது...இரண்டாவது கணவரும் கங்கா அக்காவை நேசித்து அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கும் ஓருவராக இருந்தது கங்கா அக்காவுக்கு மிகவும் சந்தோசம்.தன் குழந்தையிடம் மிகவும் பாசமாக இருப்பது கங்கா அக்காவுக்கு அவர்மேல் அன்பு கூடியது.

இரண்டாவதாக திருமணம் செய்ததும்....அவரது குழந்தைக்கு வழங்கிவந்த உதவித்தொகையை புலிகள் நிறுத்திவிட்டனர்..ஆனாலும் கங்கா அக்கா அந்தப்பணத்தை செலவழிக்காமல் சேமித்தானால் ஓரு தொகுதிப்பணம் சேர்ந்துவிட்டது..அதை அவர் தன் குழந்தையின் .படிப்புக்கு செலவழித்தார்.அவரது இரண்டாவது கணவரும் ஓன்று சொல்லவில்லை குழந்தையின் படிப்புதான் முக்கியம் என்று சொல்லிவிட்டார்.

இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த கங்கா அக்காவின் வாழ்வில் விதி மீண்டும் விளையாடியது...ஆம் மீண்டும் யுத்த மேகங்கள் வன்னிமண்ணை சூழ்ந்தது....இம்முறை கடுமையான யுத்தமழை பொழிந்தனால் மக்கள் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்குச்சென்றனர்...இப்படி ஓவ்வொறு இடமாகச்சென்று பல வேதனைகளை சொல்லானா துன்பங்களை மக்கள் அனுபவித்தனர்..

பலரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய யுத்தம் கங்கா அக்காவின் வாழ்க்கையை மீண்டும் கேள்விக்குறியாக்கியது ஆம் இறுதியுத்தத்தில் அவரது இரண்டாவது கணவரின் உயிரையும் கங்கா அக்காவின் கண்முன்னே பறித்துக்கொண்டது.
தற்போது யுத்தம் முடிந்து இயல்பு நிலை திரும்பிவிட்டது

மீண்டும் பழய வாழ்க்கை கங்கா அக்காவுக்க்கு 30வயதுக்குள் இரண்டு முறை விதைவைக்கோலம் அவருக்கு...ஆனாலும் அவர் தன்நம்பிக்கையை இழக்காமல் வாழ்த்து வருகின்றார்...

தற்போது 5ம்(வகுப்பில்) தரத்தில் படிக்கும் கங்கா அக்காவின் மகள் படிப்பில் மிகவும் கெட்டிக்காரியாக விளங்குவது கங்கா அக்காவுக்கு பெரும் ஆறுதல்..கல்வியறிவு குறைந்த ஓரு சமூகத்தில் பிறந்த தன் குழந்தை கல்வியில் வெகுவாக முன்னேறவேண்டும் என்பது அவரது கனவாம்.அவரது கனவு நிச்சயம் அவரின் தன் நம்பிக்கையால் வெற்றி பெரும்.

இப்படி எத்தனையோ கங்காக்கள் எம் மண்ணில் இருக்கின்றார்கள்.


தன்நம்பிக்கையை இழக்காதவர்கள் எப்பவும் சோர்ந்து போவதில்லை.





Post Comment

42 comments:

ஆகுலன் said...

இப்படி எத்தனை பேரின் வாழ்க்கையை போர் பறித்து விட்டது...

அந்த குழந்தைக்கு வாழ்த்துக்கள்..வருங்காலத்தில் சிறப்பான முறையில் முன்னேறுவதற்கு...

சென்னை பித்தன் said...

கங்காவின் தன்னம்பிக்கை காரணமாக அவர் கனவு நிச்சயம் நனவாகும்!
நன்று.

பாலா said...

யுத்தம் என்பது ஒன்றே ஒன்றுதான். ஆனால் அதன் பின்னால் எத்தனை ஆயிரம் கண்ணீர் கதைகள்...

நீங்க கடைசியில் சொல்லி இருக்கும் வரிகள் மிகவும் பிடித்திருந்தது.

அப்புறம் சொல்லணும்னு தொனிச்சு. உங்க பதிவுக்ளை justify alignment செய்து வெளியிட்டால் மிக சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

Yaathoramani.blogspot.com said...

படிக்கவே மனம் பதறுகிறது
காலம் இனியாவது நல்வழி காட்டட்டும்
நிச்சயம் காட்டும்
த.ம 4

SURYAJEEVA said...

தலைவரே இந்த மாதிரி பதிவுகளை தான் உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்... இவை வரலாறுகளில் காணாமல் போய் விடும்.. நீங்கள் பதிந்ததால் உண்மை வரலாறு திரிக்கப் படாமல் இருக்கும்..

இராஜராஜேஸ்வரி said...

தன்னம்பிக்கை இழக்காத பகிர்வு!

சக்தி கல்வி மையம் said...

உத்தத்தில் பின்னே இன்னும் எத்துனை கண்ணீர் கதைகளோ?

ஜீவா அவர்கள் சொல்லுவது முற்றிலும் சரியே..

நிரூபன் said...

வணக்கம் மச்சி,
மனதைக் கனக்கச் செய்யும் பதிவு,
இப்படிப் பல கங்கா அக்காக்கள் எங்கள் ஊரில் வாழ்கிறார்கள் என்பது நிதர்சனம்
இதனைப் பதிவாக்கிய உங்களுக்கு நன்றி பாஸ்.

தனிமரம் said...

யுத்தம் தந்த வடுகள் அதிகம் சகோ! கங்கா போன்றோர் தன்நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டுயது காலத்தின் கட்டாயம்!

தனிமரம் said...

தாயின் கனவுகளை அந்தச் சிறுமி நிறைவேற்றனும் என்று பிரார்த்திக்கின்றேன்!

M.R said...

படித்தவுடன் மனம் கவலை கொண்டது நண்பா

MANO நாஞ்சில் மனோ said...

கண்ணில் கண்ணீர் மழை, ஆனாலும் கங்காவின் தன்னம்பிக்கைக்கு ஒரு ராயல் சல்யூட்.....

Shanmugam Rajamanickam said...

அருமை.

Yoga.S. said...

இதுபோல் இன்னும் ஆயிரமாயிரம் கங்காக்கள் எம் நிலத்தில் வாழ்ந்து?கொண்டிருக்கிறார்கள்.விடிவு கிட்ட வேண்டும்,கிட்டும்!

செங்கோவி said...

தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு..

முற்றும் அறிந்த அதிரா said...

பதிவு படித்ததும், மனம் மிகவும் கனத்துவிட்டது ராஜ்.

ஏன் தான், சிலரது வாழ்வில் திரும்பத் திரும்ப விதி விளையாடுகிறதோ?:(.

இதுக்குத்தான் பட்டகாலிலே படும், கெட்டகுடியே கெடும் என்பார்களோ?

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி..
கண்ணீரை வரவழைச்ச பதிவு.. யுத்தத்தின் மறுபக்கம்..!!!??

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ராஜ்,
மனதை தொட்ட பதிவு. இறுதியில்,
//தன்னம்பிக்கையை இழக்காதோர் என்றும் சோர்வதில்லை.//--அருமயான கருத்து. நன்றி சகோ.

K.s.s.Rajh said...

@பாலா
/////
பாலா கூறியது...
யுத்தம் என்பது ஒன்றே ஒன்றுதான். ஆனால் அதன் பின்னால் எத்தனை ஆயிரம் கண்ணீர் கதைகள்...

நீங்க கடைசியில் சொல்லி இருக்கும் வரிகள் மிகவும் பிடித்திருந்தது.

அப்புறம் சொல்லணும்னு தொனிச்சு. உங்க பதிவுக்ளை justify alignment செய்து வெளியிட்டால் மிக சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்/////

நன்றி பாஸ் இனி அப்படிச்செய்கின்றேன்

K.s.s.Rajh said...

@suryajeeva கூறியது...
தலைவரே இந்த மாதிரி பதிவுகளை தான் உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்... இவை வரலாறுகளில் காணாமல் போய் விடும்.. நீங்கள் பதிந்ததால் உண்மை வரலாறு திரிக்கப் படாமல் இருக்கும்./////

நன்றி பாஸ் இனி இப்படியான பதிவுகள் என் தளத்தில் வரும்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் மச்சி,
மனதைக் கனக்கச் செய்யும் பதிவு,
இப்படிப் பல கங்கா அக்காக்கள் எங்கள் ஊரில் வாழ்கிறார்கள் என்பது நிதர்சனம்
இதனைப் பதிவாக்கிய உங்களுக்கு நன்றி பாஸ்/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ கூறியது...
ஸலாம் சகோ.ராஜ்,
மனதை தொட்ட பதிவு. இறுதியில்,
//தன்னம்பிக்கையை இழக்காதோர் என்றும் சோர்வதில்லை.//--அருமயான கருத்து. நன்றி சகோ/////

நன்றி சகோ

K.s.s.Rajh said...

////
M.R கூறியது...
படித்தவுடன் மனம் கவலை கொண்டது நண்பா////

எங்கள் தேசத்தில் இப்படி பால் கதைகள் இருக்கு பாஸ்

K.s.s.Rajh said...

@ஆகுலன்
வாங்க பாஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு நன்றி

K.s.s.Rajh said...

@Ramani

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@இராஜராஜேஸ்வரி

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@தனிமரம்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@MANO நாஞ்சில் மனோ

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@சண்முகம்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@Yoga.S.FR

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@செங்கோவி

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@athira

ஆமாம் மேடம் நீங்கள் சொலவது சரிதான்

K.s.s.Rajh said...

@காட்டான்

நன்றி மாம்ஸ்

K.s.s.Rajh said...

@~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

நன்றி சகோ

சி.பி.செந்தில்குமார் said...

கனவு நனவாக வாழ்த்துக்கள்

Thozhirkalam Channel said...

நண்பர்களே உங்கள் பதிவுகளை மீண்டும் அனுப்புங்கள். முதலில் அனுப்பிய மின்னஞ்சல் முகவரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

//விவரங்கள் விரைவில்.. ///

இந்த தளம் புதிதாக ஆரம்பம் செய்ய உள்ளதால் சில முன்னோட்டங்களை நாங்கள் செய்து பார்க்க வேண்டியுள்ளது. எனவே தான் முழுமையான திட்ட விளக்கங்களை பிரசுரிக்கவில்லை. விரைவில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு.. ...

Unknown said...

Nan kan kalangiya pathivu
//தன்நம்பிக்கையை இழக்காதவர்கள் எப்பவும் சோர்ந்து போவதில்லை//
unmaiyana jevanulla varigal!

ம.தி.சுதா said...

எத்தனையோ மகளீரில் மனங்களுக்குள் இப்படியானவை அடக்கப்பட்டு விட்டது...

குறையொன்றுமில்லை. said...

கங்காவின் தன்னம்பிக்கை காரணமாக அவர் கனவு நிச்சயம் நனவாகும்!

அம்பாளடியாள் said...

நம்பிக்க ஊட்டும் பகிர்வு .அந்தக் கங்காவின் கனவுகளும்
அவள் மனம்போல் கிட்டட்டும் .
வாழ்த்துக்கள் சகோ அருமையான படைப்பிற்கு .ஒரு சின்ன வேண்டுகோள்
தமிழ் 10 ல் பாடல்பிரிவில் என் கவிதைகள் (என் கனவுக்களும்கூட )
காத்திருக்கும் பகுதியில் (தமிழ் 10 இணைக்கும் முன் நான் வெளியிட்ட
என் ஆரம்ப காலக் கவிதைகள் ) தொடராக இப்போது பிரசுரித்துள்ளேன் .
முடிந்தவரை அவைகளுக்கு உங்கள் கருத்தினையும் ஓட்டுக்களையும் அளித்து
என் ஆக்கங்கள் அனைவரையும் சென்றடைய உதவுமாறு அன்போடு
கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ உங்கள் ஒத்துளைப்புகளிற்கு .

K.s.s.Rajh said...

@அம்பாளடியாள்

அதுக்கென்ன மேடம் ஓட்டு போட்டுட்டா போச்சி

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails