Wednesday, November 16, 2011

நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா பாடலும் என் நண்பனும்

நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா இந்தப்பாடல் ஓரு காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல் சகலகலா வல்லவன் படத்தில் இடம் பெற்ற இந்தப்பாடலில் சில்க் ஸ்மிதாவின் நடனம் அந்தக்காலத்தில் பலரின் தூக்கத்தை கெடுத்திருக்கும்...தலைமுறைகளை தாண்டிய ஹிட் பாடல்.இந்தப்படம் வெளிவந்த போது நான் பிறக்ககூட இல்லை.



சில்க்ஸ்மிதா
சரி நான் இப்ப இந்தப்பாடலை பற்றி சொல்லவில்லை இந்தப்பாடலை பாடி பல்பு வாங்கிய நம்ம நண்பன் ஓருவனை பற்றிய சுவாரஸ்யமான சம்பவம் சொல்கின்றேன்

வன்னியில் அப்போது எல்லாம் திரைப்படங்களை சென்சார் செய்தே வெளியிடப்படுவது வழக்கம்...ஆபாசமாக காட்சிகள்,பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் போன்றவற்றை தணிக்கை செய்தே புலிகள் வெளியிடுவார்கள்.
இதனால் படங்களில் வரும் பல பாடல்கள் தணிக்கை செய்யப்பட்டுவிடும்.உதாரணத்துக்கு..நேத்து ராத்திரி எம்மா டைப்பாடல்கள் பகவதி படத்தில் வரும் கை கை கை வைக்கிறா,போன்ற பாடல்கள்.

ஆனாலும் நம்ம ஆளுகள் என்ன செய்வாங்கனா அப்போது சமாதான காலம் ஆகையால் அரசகட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் போது படச்சீடிக்களை வாங்கிவருவது உண்டு...புலிகளின் சோதனைகளில் சிக்காமல் அவர்களுக்கு தண்ணி காட்டிவிட்டு பல திரைப்படங்களின் சீடிக்களை கொண்டுவந்து விடுவார்கள்.
தணிக்கை செய்யாத திரைப்படங்களை பார்த்தால் கடும் தண்டனை வழங்கப்படும்..ஆனாலும் நம்மாளுகள் பார்த்து கொண்டுதான் இருப்பார்கள்.

சரி விடயத்துக்கு வருவோம்..நம்ம நண்பன் ஓருத்தன் உயர்தரம் படித்துக்கொண்டு இருந்த போது....ஒரு நாள் பாடசாலையில் நண்பர்களுடன் நூலகத்துக்கு செல்லும் போது நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சிதே யம்மா
பாட்டை பாடியிருக்கின்றான் இவன் பாடிய நேரம் ஓரு டீச்சரும் கரெக்டா வந்துட்டாங்க...டீச்சர் நினைச்சுட்டா தன்னை பாத்துதான் பாடுறான் என்று.உடனே பாடசாலை துணை முதல்வரிடம் கம்ளைண்ட் பண்ணிட்டா

எங்க துணைமுதல்வர் மிகவும் கண்டிப்பானவர் அதே நேரம் நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர் பசங்களுடன் ஜாலியாக பேசுவார்...ஏதும் குழப்படி செய்தால் அன்பாக கண்டிப்பார்.

துணைமுதல்வர் பாட்டுபாடிய நண்பனை அழைத்து கேட்டார்
அவர்-ஏன் கிருபா பாட்டுப்பாடினியா
நண்பன் - ஆம் சேர்(சார்)
அவர்-ஏன் டீச்சரை பாத்து பாடின
நண்பன் -நான் டீச்சரை பாத்து பாடலை சேர்(சார்) நான் பாடவும் டீச்சரும் கரெக்டா வந்துட்டாங்க அதனால அவங்களைப்பார்த்து பாடினதா நினைச்சுட்டாங்க
அவர்-சரி அப்படி என்ன பாட்டு பாடின(டீச்சர் பாட்டு பாடினதாகத்தான் சொல்லியிருக்கா என்ன பாட்டு என்று சொல்லவில்லை)

நண்பன் -நேத்து ராத்திரி எம்மா தூக்கம் போச்சுதே எம்மா..

அவர்-ஏன் கிருபா ஓரு டீச்சரை பார்த்து இப்படி பாடலாமா இது ஓரு மாணவனுக்கு அழகா

நண்பன் -சத்தியமா நான் டீச்சரை பார்த்து பாடலை சேர்(சார்)

அவர்-அப்ப ஏன் திடீர் என்று அந்தப்பாட்டை பாடின

நண்பன் -அது இரவு சகலகலா வல்லவன் படம் பார்த்தேன் சேர்(சார்)அதான் பாட்டு வாயில் வந்திடுச்சி

அவர்-ஏன் பொய் சொல்லுற அந்தப்பாட்டை எப்படி தணிக்கை செய்யாமல் விடுவாங்க நம்ம ஊரில் தனிக்கை செய்திருப்பாங்களே

நண்பன் -இல்லை சேர்(சார்) கள்ளச்சீடி தணிக்கை செய்யாத சீடி

அவர்-அப்ப தணிக்கை செய்யாத சீடி பார்த்ததுக்கு நான் உனக்கு தண்டனை தரமுடியாது அதுக்குறியவங்களிடம் சொல்வோம்
சார் இப்படி சொன்னதும் நண்பன் சரண்டர்

நண்பன் -சேர் தணிக்கை செய்யாத சீடி பார்த்ததை சொல்லிடாதீங்க ப்ளீஸ்
நான் டீச்சரிடம் மன்னிப்பு கேட்கின்றேன்...நீங்க என்ன தண்டனை என்றாலும் தாங்க

அவர்-எனக்குத்தெரியாத உங்களைப்பற்றி நானும் உங்கள் வயதில் இருந்து வந்தவன் தான் போய் டீச்சரிடம் மன்னிப்பு கேள்.டீச்சர் மன்னித்தால் ஓக்கே இல்லை என்றால் இரண்டு நாள் பாடசாலையில் இருந்து சஸ்பெண்ட்

இவனும் டீச்சரிடம் போய் விடயத்தை சொல்லி உங்களை பார்த்து பாடவில்லை டீச்சர் நான் பாடும் போது நீங்க கரெக்ட்டா வந்திட்டீங்க என்று மன்னிப்பு கேட்டு இருக்கான் டீச்சரும் இவனை மன்னிச்சுட்டாங்க சஸ்பெண்ட் பண்ணவேனாம் என்று துணைமுதல்வரிடமும் சொல்லியிருக்காங்க
அதுக்குப்பிறகு அந்த டீச்சர் எங்களிடம் நல்ல மாதிரி..எங்களை எங்க கண்டாலும் இதை சொல்லியே கலாய்ப்பார் என்ன இண்டைக்கு பாட்டு பாடலையா என்று அந்த நண்பனை மட்டும் இல்லை எங்கள் நண்பர்களில் யாரைக்கண்டாலும் கலாய்ப்பார்.

எனக்கு இந்தப்பாடலை கேட்கும் போது எல்லாம் அந்த நண்பனின் ஞாபகம் தான் வரும் இப்பகூட இந்தசம்பவத்தை சொல்லி நாங்கள் அவனை கலாய்ப்பதுண்டு

இதோ நேத்து ராத்திரி யம்மா ஷாங் நீங்களும் ஒருக்கா கேட்டுட்டு போங்க




வீடியோ-youtube.
படம்-கூகுள்

Post Comment

38 comments:

Yaathoramani.blogspot.com said...

நல்ல சுவாரஸ்யமான பதிவு
கணொளியில் பாடல் கேட்டேன்
வெகு நாள் கழித்துக் கேட்டாலும்
கேட்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கு
த.ம 1

பால கணேஷ் said...

ஹா... ஹா. நல்ல அனுபவம். என் நண்பன் ஒருவன் ‘யாமறிந்த பெண்களிலே உஷா போல் இனிமையானவளை எங்கும் கண்டதில்லை’ என்று பாரதியார் பாடலை உல்டா பண்ணிப் பாடி, ‘யாமறிந்தன்னா... உனக்கு எத்தனை பெண்கள்டா பழக்கம்?’ என்று அவளிடம் அடி வாங்கினான். அது நினைவுக்கு வருது. சூப்பர் ராஜ்!

செங்கோவி said...

ஆழ்ந்த கருத்துச் செறிவுள்ள அருமையான பாடல்..அதைப் பாடியதற்கா பிரச்சினை? என்ன அநியாயம்...

K.s.s.Rajh said...

@Ramani

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கணேஷ் கூறியது...
ஹா... ஹா. நல்ல அனுபவம். என் நண்பன் ஒருவன் ‘யாமறிந்த பெண்களிலே உஷா போல் இனிமையானவளை எங்கும் கண்டதில்லை’ என்று பாரதியார் பாடலை உல்டா பண்ணிப் பாடி, ‘யாமறிந்தன்னா... உனக்கு எத்தனை பெண்கள்டா பழக்கம்?’ என்று அவளிடம் அடி வாங்கினான். அது நினைவுக்கு வருது. சூப்பர் ராஜ்////

ஹி.ஹி.ஹி.ஹி....எல்லா இடத்திலும் இப்படி பல கூத்துக்கள் நடக்கும் பாஸ்

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
ஆழ்ந்த கருத்துச் செறிவுள்ள அருமையான பாடல்..அதைப் பாடியதற்கா பிரச்சினை? என்ன அநியாயம்.////

ஆமா பாஸ் ஹி.ஹி.ஹி.ஹி.........

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

ஆஹா, நம்ம நண்பர் ஒருவருக்கு கூட இப்படி ஒரு வரலாறு இருக்கு, ஆனா வேற பாடல். அது ஒரு இந்தி பாடல். ஹி ஹி..

தனிமரம் said...

பாடல் அருமை இசை ராஜாவின் ராஜாங்கத்தில் வந்தது இந்தப்படம் வந்தகாலகட்டத்தில் பல நல்ல படங்கள் பலதை பின் தள்ளி மீளவும் மசாலாப்படத்தை எடுக்க காரணமானவர்கள் ஏவி எம் என்று பின்னாலில் ஒரு இயக்குனர் வருத்தப்பட்டுக் கூறிய படம் .நண்பர்கள் இப்படி பாடும் போது ஆசிரியர்கள் ஏதிர்பாராமல் வருவதும் சிலர் ஆசிரியர்களை கலாய்ப்பதுக்கும் சில பாடல்களைப் பாடுவது பள்ளி வாழ்வில் சுவாரசியமான சம்பவங்கள்!

தனிமரம் said...

நான் படத்தின் பாடல்களை முழுமையாகப் பார்த்த நேரத்தில் அவர்களின் தணிக்கை முறைவரவிலை பின் காலமாற்றம் அது தேவையாக இருந்ததும் மறுப்பதற்குஇல்லை

தனிமரம் said...

உண்மையில் அந்தப்பாடலைப் பாடியது நண்பனா? நீங்களா?ஹீ ஹீ

K.s.s.Rajh said...

@Dr. Butti Paul
////
ஆஹா, நம்ம நண்பர் ஒருவருக்கு கூட இப்படி ஒரு வரலாறு இருக்கு, ஆனா வேற பாடல். அது ஒரு இந்தி பாடல். ஹி ஹி.////

அட எல்லா இடத்தைலையும் பசங்களின் லொள்ளு ஒரே மாதிரிதான் போல

ஆமா என்ன டாக்டரே உங்கள் தளத்தில் கமண்ட் போடமுடியாமல் இருக்கு என்ன பிரச்சனை

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
பாடல் அருமை இசை ராஜாவின் ராஜாங்கத்தில் வந்தது இந்தப்படம் வந்தகாலகட்டத்தில் பல நல்ல படங்கள் பலதை பின் தள்ளி மீளவும் மசாலாப்படத்தை எடுக்க காரணமானவர்கள் ஏவி எம் என்று பின்னாலில் ஒரு இயக்குனர் வருத்தப்பட்டுக் கூறிய படம் .நண்பர்கள் இப்படி பாடும் போது ஆசிரியர்கள் ஏதிர்பாராமல் வருவதும் சிலர் ஆசிரியர்களை கலாய்ப்பதுக்கும் சில பாடல்களைப் பாடுவது பள்ளி வாழ்வில் சுவாரசியமான சம்பவங்கள்////

ஆம் பாஸ் மிக அருமையான படம்

பள்ளி வாழ்வில் எல்லாம் சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
நான் படத்தின் பாடல்களை முழுமையாகப் பார்த்த நேரத்தில் அவர்களின் தணிக்கை முறைவரவிலை பின் காலமாற்றம் அது தேவையாக இருந்ததும் மறுப்பதற்குஇல்லை////

ஆம் பாஸ் பின்னாலில் தான் அது வந்தது அதுவும் தேவைதான்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
உண்மையில் அந்தப்பாடலைப் பாடியது நண்பனா? நீங்களா?ஹீ ஹீ
/////

அட நண்பன் தான் பாஸ்
நானாக இருந்தால் நான் என்று சொல்லியிருப்பேன் எவ்வளவோ சொல்றம் இதை சொல்ல மாட்டமா?

"ராஜா" said...

நானும் இதே மாதிரி ஒருமுறை பாட்டுபாடி பள்ளிகூடத்தில் பல்ப் வாங்கியிருக்கேன் ... ஆனால் பாட்டுதான் வேற , ஏதோ ஒரு ராம்கி படத்தில் வரும் "டீச்சரம்மா உங்க பாடம் சரியில்லை" என்ற பாடல் , முதல் நாள் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் அந்த பாடலை கேட்டதால் வந்த வினை.. உச்சி வெயிலில் மணலில் முட்டிக்கால் போட்டது அப்படியே ஞாபகத்தில் உள்ளது...

குறையொன்றுமில்லை. said...

ராஜ் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கேன் நேரம் கிடைக்கும் போது தொடரவும்

Unknown said...

ஹா ஹா ஹா..

நல்ல அனுபவம் தான் சுவாரசியம்..

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி!

படவா நீதான் அந்த பாட்டை பாடியிருப்பாய் பதிவுலக வழக்கப்படி நண்பன் என்று போட்டியா?

MANO நாஞ்சில் மனோ said...

இருந்தாலும் உங்க நண்பருக்கு குசும்பு கூடுதல்தான், நல்லகாலம் பாட்டுல ஆ ஊ'ன்னு வரும் சத்தத்தை பாடாமல் விட்டாரே ஹி ஹி....!!!

K.s.s.Rajh said...

@"ராஜா"
////
"ராஜா" கூறியது...
நானும் இதே மாதிரி ஒருமுறை பாட்டுபாடி பள்ளிகூடத்தில் பல்ப் வாங்கியிருக்கேன் ... ஆனால் பாட்டுதான் வேற , ஏதோ ஒரு ராம்கி படத்தில் வரும் "டீச்சரம்மா உங்க பாடம் சரியில்லை" என்ற பாடல் , முதல் நாள் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் அந்த பாடலை கேட்டதால் வந்த வினை.. உச்சி வெயிலில் மணலில் முட்டிக்கால் போட்டது அப்படியே ஞாபகத்தில் உள்ளது..////
அட எல்லா இடத்திலையும் இந்த மேட்டரில பல்புதானா?ஹி.ஹி.ஹி.ஹி...........

K.s.s.Rajh said...

@
ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...
ஹா ஹா ஹா..

நல்ல அனுபவம் தான் சுவாரசியம்////

நன்றி பாஸ் என்ன என் அனுபவம் இல்லை.....

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
ராஜ் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கேன் நேரம் கிடைக்கும் போது தொடரவும்////

உங்கள் கமண்டை பார்த்ததும் பதிவை எழுதிவிட்டேன் மேடம் நாளைக்கு வெளியிடுகின்றேன் நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
வணக்கம் ராசுக்குட்டி!

படவா நீதான் அந்த பாட்டை பாடியிருப்பாய் பதிவுலக வழக்கப்படி நண்பன் என்று போட்டியா?
/////

ஹி.ஹி.ஹி.ஹி...உண்மையாக நான் இல்லை மாமா என் நண்பன் தான் நான் என்றால் கண்டிப்பாக நான் என்று சொல்லிருப்பேன்..

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
இருந்தாலும் உங்க நண்பருக்கு குசும்பு கூடுதல்தான், நல்லகாலம் பாட்டுல ஆ ஊ'ன்னு வரும் சத்தத்தை பாடாமல் விட்டாரே ஹி ஹி....!!/////

ஆமா பாஸ் அவன் கொஞ்சம் குசும்புக்காரன் தான் நல்ல காலம் அந்த சத்தத்தை பாடவில்லை...ஹி.ஹி.ஹி.ஹி....

ரைட்டர் நட்சத்திரா said...

இனிமே அந்த பாட்டை கேட்ட உங்க நினைப்பும் , உங்கள் நண்பர் நினைப்புதான் வரும்

சக்தி கல்வி மையம் said...

ஒரு நல்ல பழைய பாடல் . நினைவூட்டியதற்கு நன்றிகள்..

இருந்தாலும் அந்த பாட்டு கேட்கும் பொது உங்க நண்பர் ஞாபகம் வரும் இனி..

பாலா said...

நல்ல நினைவுகள். ஆனால் உங்க நண்பர் ரொம்ப நல்லவர். இப்படியா உளறுவார்?

சென்னை பித்தன் said...

மறக்க முடியாத சம்பவம்தான்!

K.s.s.Rajh said...

@கார்த்தி கேயனி

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
ஒரு நல்ல பழைய பாடல் . நினைவூட்டியதற்கு நன்றிகள்..

இருந்தாலும் அந்த பாட்டு கேட்கும் பொது உங்க நண்பர் ஞாபகம் வரும் இனி.////

ஹா.ஹா.ஹா.ஹா.நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
நல்ல நினைவுகள். ஆனால் உங்க நண்பர் ரொம்ப நல்லவர். இப்படியா உளறுவார்?////

ஆம் பாஸ் அவன் ஒரு உளறுவாயன்

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
மறக்க முடியாத சம்பவம்தான்////

நன்றி ஜயா

kaialavuman said...

நல்ல சுவாரசியமான பதிவு.

Unknown said...

உண்மைதான் இப் பாடல்
அந்த காலத்தில் பட்டிதொட்டி எங்கும்
ஒலித்தது!

புலவர் சா இராமாநுசம்

”தளிர் சுரேஷ்” said...

ரொம்ப இண்டரஸ்டிங்கா இருக்கே!

Unknown said...

டீச்சர் பரவாயில்லை... இல்லையெனில் என்னவாயிருக்கும்?
நல்ல நகைச்சுவை.

ஷைலஜா said...

என்னது நேத்துராத்திரி யம்மா பாடுவந்தப்போ பொறக்கவே இல்லையா ராஜா?:) நகைசுசுவையா எழுதினதை ரசிச்சேன் சின்னத்தம்பி ராஜா!

K.s.s.Rajh said...

@ஷைலஜா

////
என்னது நேத்துராத்திரி யம்மா பாடுவந்தப்போ பொறக்கவே இல்லையா ராஜா?:) நகைசுசுவையா எழுதினதை ரசிச்சேன் சின்னத்தம்பி ராஜா////

ஆம் அக்கா அந்தப்படம் வந்தது 82ம் ஆண்டு நான் பிறந்தது 89 ம் ஆண்டு.

நன்றி அக்கா

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails