Friday, November 25, 2011

என்னைக்கவர்ந்த பிரபலங்கள்....இந்த வாரம் ஆளுமையின் சிகரம் யார் அவர்?


இந்தத்தொடர் மூலம் என்னைக்கவர்ந்த பிரபலங்கள் பற்றி அவர்கள் ஏன் என்னைக்கவர்ந்தார்கள் என்பது பற்றியும் பேசலாம் என்று நினைக்கின்றேன் ஓவ்வொறு வெள்ளிக்கிழமையும் இனி என்னைக்கவர்ந்த பிரபலங்கள் பற்றி பேசுவோம்....இந்தப்பகுதியில் கிரிக்கெட்,சினிமா,அரசியல்,போன்ற பல்வேறு துறைகளில் என்னைக்கவர்ந்த பிரபலங்கள் பற்றி பேச இருக்கின்றேன்.

ரசனை என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும் ஓருவருக்கு பிடிப்பவர்களை இன்னும் ஒருவருக்கு பிடிக்காது..ஒவ்வொறு மனிதனுக்கும் ஒவ்வொறு ரசனை.அந்த வகையில் என்னைக்கவர்ந்த பிரபலங்கள் பற்றி பேசும் தொடர் இது...

தொடர்ந்து ஓரே துறைபற்றி பேசாமல் மாறி மாறி ஓவ்வொறு வாரமும் பேசுவோம்.
என் வலைப்பதிவின் முதலாவது பதிவு இவரைப்பற்றிதான் எழுதினேன் அந்த வகையில் இது ஓரு செண்டிமென்டாக அமைந்துவிட்டது எனவே இவரில் இருந்தே ஆரம்பிக்கின்றேன்


இந்த வார பிரபலம்-செளவ்ரவ் கங்குலி




இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் வெற்றிகரமான கேப்டன் ரசிகர்களால் தாதா,கொல்கத்தா இளவரசன் என்று செல்லமாக அழைக்கப்படும் கங்குலி
எனது ஆல் டைம் பேவரிட் ஹீரோ இவரது அதிரடி தலைமைத்துவம் இவரது ஆளுமை திறன் என்னை சின்ன வயதில் இருந்தே இவரது தீவிர ரசிகனாக மாற்றியது.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு nanparkal/நண்பர்கள்(www.nanparkal.com)
1992ல் 20 வயதில் அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுக வீரராக கங்குலி விளையாடினார் அந்தப்போட்டிக்கு பிறகு கங்குலியை 4 வருடங்கள் இந்திய கிரிக்கெட் தேர்வாளர்கள் கண்டுகொள்ளவில்லை..காரணம் கங்குலி சொன்னாராம் நான் இங்கே கிரிக்கெட் விளையாடவே வந்திருக்கின்றேன் வீரர்களுக்க்கு தண்ணீர் பாட்டில் காவுவதற்கும் அவர்களுக்கு பணிவிடை செய்வதற்கும் வரவில்லை என்று எந்த ஒரு புதுமுக கிரிக்கெட் வீரராவது இப்படி அறிக்கை விடுவாறா...ஆனால் தாதா அறிக்கைவிட்டார்.


4 வருடங்களுக்குப்பிறகு 24 வயதில் 1996ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் டெஸ்ட் அறிமுகம் கிடைக்கின்றது அறிமுக டெஸ்ட்லிலே சதம் விளாசி தன் வரவை கிரிக்கெட் உலகிற்கு உணர்ந்தினார் தாதா இந்தபோட்டியில் தான் ராகுல் ராவிட்டும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது..ராவிட் 95 ஓட்டங்களைப்பெற்று ஆட்டம் இழந்தார்..

புகழ் பெற்ற லோட்ஸ் மைதானத்தில் சதம் அடிக்கவேண்டும் என்பது ஓவ்வொறு கிரிக்கெட் வீரரினதும் கனவாக இருக்கும் போது அறிமுக டெஸ்ட் போட்டியிலே சதம் விளாசினார் தாதா.அதற்கு அடுத்த போட்டியிலும் சதம் அடித்து மேலும் தன் வரவை உறுதி செய்தார்...
கங்குலியின் அறிமுக தொடர்களில் வாழ்த்தும் சச்சின்


இந்திய அணியின் கேப்டனாக இருந்த அசாருதீன் உட்பட சில வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கிவிட கடைசியில் சச்சின் இந்திய அணியின் கேப்டனாகிறார் ஆனால் சச்சின் அணித்தலைவர் பதவியில் சறுக்கிய போது அவரது தலைமையில் இந்திய அணி தோல்விகளை சந்தித்த போது சச்சின் தலைமைப்பதவியை ராஜினாமா செய்ய அந்த வாய்ப்பு கங்குலிக்கு வருகின்றது 2000ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற கங்குலி தனது தனித்துவமான திறமையால் உலக அரங்கில் இந்திய அணியை தூக்கி நிறுத்தினார் கங்குலியின் ஆக்ரோசமான தலைமைத்துவத்தை கண்டு எதிரணித்தலைவர்கள் அஞ்சினர்...இந்தக்காலப்பகுதியில் தான் கங்குலி என்ற பெயர் எனக்கு அறிமுகமானது..ஆனால் இவர்...ஆடிய முதலாவது டெஸ்ட்போட்டியை நான் பார்த்திருக்கேன் அப்போது கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் சரியாகத்தெரியாது இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு nanparkal/நண்பர்கள்(www.nanparkal.com)


2000ம் ஆண்டும் கங்குலி என்ற பெயர் எனக்கு அறிமுகமானது இவரது கம்பீரம் களத்தில் இவரது ஆளுமை என்பன என்னை வெகுவாக கவந்தது...என்னைப்பொறுத்தவரை நான் இவரது ஆட்டத்தைவிட இவரது தலைமைத்துவத்தில்தான் அதிகம் கவரப்பட்டேன்.
கங்குலி தலமையில் ஏராளமான வெற்றிகளை குவித்தது இந்திய அணி அதே நேரம் சில தோல்விகளையும் சந்தித்ததுதான். ஆனால் சில வெற்றிகள் வரலாற்றில் என்றும் நினைவில் நிற்பவை உதாரணமாக 2001 ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த கொல்கத்தா டெஸ்ட். ஸ்ரிவோக் தலைமையிலான அவுஸ்ரேலியா அணி தொடர்ச்சியாக 16 டெஸ்ட் வெற்றிகளை பெற்று எவறாலும் வெல்ல முடியாத அணியாக இந்தியா வந்த போது...அதற்கு முற்றுப்புள்ளிவைத்த பெறுமை கங்குலியையே சாறும் அந்தபோட்டியில் பலோ ஓன்னான இந்திய அணி இரண்டாவது இனிங்சில் சுதாகரித்து கொண்டது லக்ஸ்மன்,ராவிட்டின் இணைப்பட்டம் அவுஸ்ரேலிய அணியை கதிகலங்க வைத்தது ஸ்ரிவோவ் தன் வாழ்நாளில் அந்த போட்டியை மறக்க மாட்டார்...லக்ஸ்மன் 288 ஓட்டங்களை விளாசினார்...ஹர்பஜன் சிங் ஹட்ரிக் சாதனை படைத்தார் வெல்லமுடியாது என்று மார்தட்டிய அவுஸ்ரேலியா அணி மண்ணைக் கவ்வியது,இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு டெஸ்ட் வெற்றியை எந்த அணித்தலைவரின் கீழும் இந்திய அணி பெறவில்லை.


அந்தப்போட்டியில் இருந்து இன்றுவரை அவுஸ்ரேலிய அணிக்கு லக்ஸ்மண் வில்லன் தான்.2004ம் ஆண்டு பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் மண்கவ்வச்செய்து கங்குலி அணி டெஸ்ட்,ஒரு நாள் தொடர் இரண்டையும் கைப்பற்றியது பாகிஸ்தானில் வைத்து தொடரை வென்ற முதலாவது இந்திய அணித்தலைவர் கங்குலிதான்.அதைவிட கங்குலி தலையிலான இந்திய 2003ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கும் வந்தது.ஆனால் அவுஸ்ரேலியாவின் கேப்டன் ரிக்கிபொண்டிங்கும்,டேமியன் மார்டினும் இந்தியவின் வெற்றியை பறித்துவிட்டனர்.


49 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய தாதா அதில் 21 டெஸ்ட் போட்டிகளில் வெற்று பெற்றுக்கொடுத்துள்ளார் இது எந்த ஒரு இந்திய கிரிகெட் அணித்தலைவரும் செய்யாத சாதனையாகும் தற்போது இந்த சாதனையை தோனி நெருங்கிவருகின்றார் விரைவில் முறியடிக்கப்படலாம்.

கங்குலியின் பெருமை பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம் இந்திய அணியில் பல வீரர்களை உருவாக்கிய பெருமை கங்குலியை சாரும் சேவாக்,யுவராஜ்,லக்ஸ்மன்,சகிர்கான்,கைப்,ஹர்பஜன் சிங்,இர்பான் பதான்,தோனி.போன்ற சிறந்த வீரர்களை இந்திய அணியில் சரியாக அடையாளம் கண்டவர் கங்குலி.


கங்குலியில் பலம் அவரது ஆளுமையுடன் சேர்ந்த ஆக்ரோச குணம் அதுவே அவரது பலவீனமும் கூட மங்காத்தா படத்தில்அஜித் ஒரு வசனம் பேசுவார் ஓவர் காண்பிடண்ட் உடம்புக்கு ஆகாது பாட்னர் என்று. அது கங்குலிக்கு மிகவும் பொருந்தும்.
பயிற்சியாளர் கிரேக் சப்பலுடனான பிரச்சனைக்கு பின் இந்திய அணியில் இருந்து ஒரம் கட்டப்பட்ட கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என எல்லோறும் நினைத்த போது மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து ஓரு கலக்கு கலக்கிவிட்டு கெளரவமாக ஒவ்வு பெற்றார்.

கங்குலி அணியில் இருந்து நீக்கப்பட்ட உடன் அவரை பாகிஸ்தான் தொடரில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை மறக்கமுடியாது எனக்குத்தெரிய ஒரு கிரிக்கெட் வீர்ரை அணியில் சேர்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்பாட்டம் செய்தது அதுதான் என்று நினைக்கின்றேன்.


கங்குலி ஓய்வு பெற்றது அவரது ரசிகர்களுக்கு மிகவும் சோகம். நான் கங்குலியின் கடைசி டெஸ்ட் போட்டியை இதுவரை பார்கவில்லை இனியும் பார்கபோவதும் இல்லை ஆனால் அந்த கடைசிப்போட்டியில் இந்திய அணியின் தலைவராக இருந்த தோனி கங்குலியை அழைத்து போட்டியின் கடைசி நாளில் கடைசி நில மணிநேரங்கள் கங்குலியை அணித்தலைவராக செயற்பட சொன்னது தோனி கங்குலி மீதுவைத்திருந்த மதிப்பையும் கங்குலி இந்திய கிரிக்கெட்டிற்கு ஆற்றிய சேவையையும் கெளரவிப்பதாக இருந்தது.

தோனியின் இந்த செய்ற்பாட்டினால் என்னைப்போன்ற பல கங்குலி ரசிகர்களின் மனதில் தோனி மீதான மதிப்பு கூடியது என்றால் அது மிகையாகாது. நான் இந்தப்போட்டியை பார்க்காவிட்டாலும் தாதாவின் கடைசி   போட்டியில் அவரது தலைமைத்துவத்தை பார்க்க ஆசை இருந்ததால் அண்மையில் அந்த வீடியோவை பார்தேன் அதுவும் முழுமையாக பார்க மனசு வரவில்லை கவலையாக இருந்தது போட்டியின் கடைசி கட்டத்தை மட்டும்  பார்தேன்.


சர்வதேச கிரிக்கெட்டில் தாதாவின் கேப்டன்ஸிப் மற்றும் கடைசி போட்டியின் கடைசி நிமிடங்கள் வீடியோ இதோ

அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் தனது கடைசிப்போட்டியில் அணித்தலைவராக சில நிமிடங்கள் செயற்பட சொல்லி கெளரவம் வழங்கியது எனக்குத்தெரிய கங்குலிக்கு மட்டும் தான் என்று நினைக்கின்றேன் இந்த வகையில் தோனி பல கங்குலி ரசிகர்கள் மனதில் உயர்ந்து நிற்கின்றார்.


மனைவி மற்றும் மகளுடன் கங்குலி
சர்வதே கிரிக்கெட்டில் கங்குலி ஓய்வு பெற்றதும் அவரது ரசிகர்கள் பலருக்கு கிரிக்கெட் மேலே வெறுப்பு வந்தது எனலாம் பலர் கிரிக்கெட் போட்டிகள் பார்ப்பதையே நிறுத்திக்கொண்டனர்..அதில் நானும் ஒருவன்..பின்பு கங்குலி ஜ.பி.எல் போட்டிகளில் மீண்டும் ஆட வந்த பின்புதான் கிரிக்கெட் மீது மீண்டும் எனக்கு ஆர்வம் வந்தது..
கடந்த ஜ.பி.எல் போட்டியில் கங்குலியை ஏலத்தில் எந்த அணியும் எடுக்காததால் ஆரம்பத்தில் விளையாட முடியாமல் போனது 
பின்பு யுவராஜ்சிங் தலைமையிலான புனேவாரியஸ் அணியில் கங்குலி சேர்த்துக்கொள்ளப்பட்டார் அவர் முதல் போட்டியில் களம் இறங்கும் போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் இடம் பெற்றது அதாவது நீண்ட நாட்களுக்குப்பிறகு கங்குலியின் ஆட்டத்தை கண்ட ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் சென்று கங்குலியின் காலில் வீழ்ந்து வணங்கினார்.


கங்குலி காலில் வீழ்ந்து வணக்கும் ரசிகர்
இதைவிட ஒரு உதாரணம் தேவையில்லை கங்குலிமேல் ரசிகர்கள் வைச்சிருக்கும் அன்புக்கு.
லோட்ஸ் இல் சட்டையை கழற்றி சுத்தும் தாதா
இப்போது கங்குலி கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகிவிட்டதால் அவரது வர்ணனையை கேட்பதற்கே பல போட்டிகளை நான் பார்பதுண்டு.கங்குலியின் புகழ் கிரிக்கெட்டில் நிலைத்திருந்தாலும் சர்ச்சைகளில் பேர்போன ஒரு கிரிக்கெட் வீரர் உதாரணமாக இந்தியாவில் வைத்து ஒரு போட்டியை வென்றபின் இங்கிலாந்து வீரர் பிளிண்டொப் சட்டையை கழட்டி மைதானத்தை சுற்றி ஒடியதுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இங்கிலாந்தில் லோட்ஸ் மைதானத்தில் நடந்த ஒரு நாள் போட்டி ஒன்றில் மிகப்பெரிய இலக்கை துரத்தி இந்தியா வெற்றி பெற்றதும் கங்குலி தன் சட்டையை கழற்றி சுத்தினார்.இது பெரிய சர்ச்சயை கிளப்பினாலும் ஓவ்வொறு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முகத்திலும் அப்படி ஒரு சந்தோசம்.




தாதாவின் குணம் பலருக்கு பிடிப்பது இல்லை இதனால் பலபேருக்கு அவரை பிடிப்பது இல்லை ஆனால் அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவையை எவறும் மறந்துவிட முடியாது..கங்குலியை பலருக்கு பிடிக்காவிட்டாலும் அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவையை பலருக்கு பிடிக்கும்.
இப்போது இந்திய அணியில் ராவிட்,யுவராஜ் சிங்,சேவாக்,லக்ஸ்மன்,போன்ற வீரர்களைப்பிடித்தாலும் கங்குலியை போல யாரும் என்னைக் கவரவில்லை
என் ஆல் டைம் பேவரிட் ஹீரோ தாதா தான்.
அன்புடன்
ஒரு கங்குலி ரசிகன்
கே.எஸ்.எஸ்.ராஜ்


அடுத்தவாரம் என்னைக்கவர்ந்த இன்னும் ஒரு பிரபலம் பற்றி பேசுவோம் அவர்யார்? ஒரு தேசத்தின் விடிவெள்ளி இவர் பற்றி அடுத்தவாரம் பேசுவோம்


படங்கள் -கூகுள்
வீடியோ-You Tube


*********************************************************************************
மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சச்சினின் சொந்த ஊரான மும்பையில் நடைபெற்று வருகின்றது வழமைபோல் சச்சின் இதில் 100வது சர்வதேச சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர் பார்த்தார்கள் ஆனால் 94 ஓட்டங்களில் ஆட்டம் இழந்து இதிலும் ஏமாற்றிவிட்டார்...சச்சின் 90 களில் ஆட்டம் இழப்பது ஒன்னும் முதல் முறை இல்லை பலதடைவைகள் ஆட்டம் இழதுள்ளார் ஆனாலும் கடந்த உலகக்கோப்பை போட்டியில் சச்சின் ஒரு நாள் போட்டிகளில் 48வது சதம் அடித்த போது சர்வதேச போட்டிகளில் 99 வது சதத்தை எட்டினார்( ஒருநாள்-48,டெஸ்ட்-51)அதுக்கு பிறகு கடந்த பல மாதங்களாக அவர் 100வது சதம் அடிக்கவேண்டும் என்ற அவரது ரசிகர்களில் எதிர்பார்பு இருந்தது ஆனால் சச்சின் பல போட்டிகளில் விளையாடினாலும் அவரால் சதம் அடிக்கமுடியவில்லை இன்று சதத்திற்கு அருகில் வந்தும் 94 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தது அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் பெரும் கவலைதான்.
*********************************************************************************

Post Comment

27 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் கிரிக்கெட்...

MANO நாஞ்சில் மனோ said...

கிரிக்கெட்டுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்...

Unknown said...

தாதா பற்றி நல்லாவே எழுதி இருக்கீங்க..அவரின் காலம் ஒரு ராஜ்ஜியம்!

Unknown said...

கங்குலி பற்றி ஒரளவு அறியமுடிந்தது! நன்றி!

த ம ஓ 3

புலவர் சா இராமாநுசம்

ரைட்டர் நட்சத்திரா said...

கலங்கா வைச்சிட்டிங்கா நண்பரே

செங்கோவி said...

கிரிக்கெட்டா....நன்றி.

செங்கோவி said...

கிரிக்கெட்டா....நன்றி.

Yoga.S. said...

இரவு வணக்கம்,கிரிக்கெட்டா?(செங்கோவி கமென்ட் பார்க்க)அதெல்லாம் அந்தக் காலம்!

காட்டான் said...

நானும் வந்தேங்க...

Yaathoramani.blogspot.com said...

தொடர் பிரமாத மாகப் போகிறது
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7

சம்பத்குமார் said...


எனக்குள் நான் (பசுமையான பயோடேட்டடா)

கோகுல் said...

நாட்வெஸ்ட் வென்றவுடன் தாதா சட்டையை சுற்றி தன் மகிழ்வையும் திருப்பி அடித்தேன் பார்த்தாயா?என்ற தன் உணர்வையும் வெளிப்படுத்திய காட்சி என் மனதில் இன்றும் இருக்கிறது.அது போலவே அவரது இறுதிப்போட்டியில் அவர் தலைமை ஏற்ற அந்த சில நிமிடங்களும்.மறக்க முடியாதவை.

குறையொன்றுமில்லை. said...

கங்குலி பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

Yoga.S. said...

இன்று ஓர் பொன்னான நாள்! ஆம்,எங்கள் விடுதலைப் பேரொளி அவதரித்த நாள்!எல்லா நலனும் பெற்று நீடூழி வாழ வல்லானை வேண்டுவோம்!

Mathuran said...

கிரிக்கெட்டா... நான் அப்புறமா வாறன் பாஸ்

இராஜராஜேஸ்வரி said...

திறமையான பகிர்வு. பாராட்டுக்கள்..

Admin said...

உங்கள் தளத்திற்கு என் முதல் கருத்துரை மட்டுமல்ல எனது முதல் வருகையும் இதுதான்..கடந்த பத்தாண்டு கிரிக்கெட் பார்த்த பொழுதுகளும் கங்குலியை அணியை விட்டு விலக்கியபோது நான் பட்ட வருத்தமும் ஞாபகம் வந்துவிட்டது..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...தொடர்கிறேன் ...

சென்னை பித்தன் said...

தாதாவை மறக்க முடியுமா?நன்று.

M.R said...

தங்கள் ரசனை வாசித்தேன் நண்பா .தொடருங்கள் .

Rathnavel Natarajan said...

திரு சௌரவ் கங்கூலியைப் பற்றிய அருமையான பதிவு.

சுதா SJ said...

மச்சி நான் வரும் போது நீ கிரிக்கெட் போடுறே...... அவ்வ... அப்புறம் வாறன்... ஹீ ஹீ

சுதா SJ said...

என்னப்பா இது நான் தான் கிரிகெட் பார்த்து ஓடுறேன் என்றா செங்கோவி மது போன்றவர்களுமா??? அவ்வ

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி குறிப்பாக முதன்முதலில் இங்கு வந்த மதுமதி அவர்களுக்கு தொடர்ந்து வாருங்கள் பாஸ்

சக்தி கல்வி மையம் said...

இன்னும் அந்த லாட்ஸ் மைதானத்தில் கங்குலி சட்டையைக் கழற்றி சுற்றுன சுத்து இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது..

தா தா தெ கிரேட்..

தமிழ் அமுதன் said...

good post..!

Unknown said...

எனக்கு சச்சினைதான் பிடிக்கும் என்றாலும் அடுத்த இடத்தில் தாதாதான், பிரபலங்கள் என்றால் சர்ச்சை வருவது இயல்புதான்,கங்குலி சட்டையை கழற்றி சுழற்றியது தவறாக படவில்லை, பெரும்பாலோனோர் பழிவாங்குதல் என்ற பதத்தை எதிர்த்தாலும் நான் அதுக்கு எப்போதுமே அதிக பதில் காண விழைபவன்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails