Wednesday, November 23, 2011

சமூக அமைப்பில் வரதட்சனை ஓழியவேண்டும்

ஜந்து பெண்களைப்பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்று ஒரு பழமொழியை நம்மாளுகள் அந்தக்காலத்தில் சொல்லியிருப்பார்கள் இது ஏன் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் பெண்குழந்தை என்றால் அவளை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுக்கும் வரை தாய் தந்தைக்கு மிகவும் கஸ்டம். பொருளாதார ரீதியில் அதாவது வரதட்சனை என்ற ஒரு விடயம் மிகவு தாக்கம் செலுத்துவதால்.இப்படி ஒரு பழமொழியை சொல்லியிருக்கின்றார்கள் போலும் அந்தக்காலத்தில்.இது ராஜ் இன் ந
ண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு-nanparkal/நண்பர்கள்(www.nanparkal.com)
ஆனால் பொதுவாக பெண்குழந்தைகள் என்றால் தனக்கு பிறந்த அதிஸ்டம் அவர்கள் தங்கள் குடும்பத்தில் குலவிளக்கு என்று பலர் சொல்லுவதை பார்த்திருக்கின்றேன்..தன் தாயே தனக்கு மகளாக பிறந்திருக்கின்றாள் என்று சொல்லி பூரிப்படையும் பல தந்தைகளை நான் சமூகத்தில் கண்டு இருக்கின்றேன்..ஆனால் மகளுக்கு திருமணம் என்று வரும் போது அவர்கள் படும் கஸ்டம் வேதனையானது..காரணம் வரதட்சனை


சமூக அமைப்பில் இந்த வரதட்சனை என்ற ஒரு விடயம் முற்றிலும் ஒழியவேண்டும்...ஆடு,மாடுகளை விலை பேசி விற்பது போல கல்யாணம் என்ற போர்வையில் விற்கப்படும் மாப்பிளைகள் டாக்டர் மாப்பிளை என்றால் ஒரு ரேட்,இஞ்சினியர் மாப்பிளை என்றால் இன்னும் ஒரு ரேட்,அரச உத்தியோகம் என்றால் ஒரு ரேட் ,ஏனைய தனியார் கம்பனிகளில் வேலை செய்பவர்கள் என்றால் இன்னும் ஒரு ரேட்.வெளிநாட்டு மாப்பிளை என்றால் ஒரு ரேட் உயிரற்ற ஜடங்களை விற்பது போல ஆண்களை திருமண சந்தையில் விற்கின்றார்கள். அதிலும் தற்போது வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு மவுசு அதிகம்இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு-nanparkal/நண்பர்கள்(www.nanparkal.com)
அதைவிட வரதட்சனை வாங்கி கலியானம் செய்ததும் அந்த மாப்பிளைகள் செய்யும் பந்தா தாங்க முடியாது.எனக்குத்தெரிய ஒரு பெண் இருந்தால் அவளை ஒரு பையன் காதலித்தான் வாழ்கையில் வெகுவாக முன்னேரிக்கொண்டு இருந்த பையன் அவன்.அவள் அவனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை காரணம் தனக்கு வெளிநாட்டில் வாழவேண்டும் என்றும் வெளிநாட்டில் இருக்கும் ஒருவரைத்தான் திருமணம் செய்வதாகவும் அந்தப்பையனிடம் சொல்லியுள்ளாள்..

அவனும் அவளை உருகி உருகி காதலித்தான் பின் சில காலம் சென்றதும் 
அவன் வாழ்க்கையில் வெகுவாக உயர்ந்து நல்ல நிலையில் இருக்கின்றான்
இப்ப அந்த வெளிநாட்டு மாப்பிளைக்கு ஆசைப்பட்ட பெண் தன்னை காதலித்தவனை விட பொருளாதாரத்திலும் சரி கல்வியிலும் சரி குறைந்த நிலையில் உள்ள ஒருவனைத் பெரும் தொகை வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றாள். ஏன் வெளிநாட்டு மாப்பிளையை திருமணம் செய்யவில்லை என்றால் வெளிநாட்டில் பார்த்த மாப்பிளையின் பெற்றோர் வரதட்சனை அதிகமாக கேட்டார்களாம்.


அந்தப்பெண்ணின் தாய் சொன்னாராம் சரி வெளிநாட்டு மாப்பிளை இல்லை என்றால் என்ன கையில் இருக்கும் காசுக்கு ஏற்ற மாதிரி வரதட்சனை குடுக்க ஊரில் ஓரு சம்மந்தம் பார்ப்போம் என்று..இது என்ன வியாபாரமா ஓரு பொருள் விலை அதிகம் என்றால் அதற்கு பதிலா இன்னும் ஒரு பொருளை வாங்க.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு-nanparkal/நண்பர்கள்(www.nanparkal.com)
ஆனாலும் வரதட்சனை என்று ஒரு பைசா கூட வாங்காமல் திருமணம் செய்யும் ஆண்கள் வெளிநாட்டிலும் சரி உள்நாட்டிலும் சரி இருக்கின்றார்கள்..
எனக்குத்தெரிய ஈழத்தில் ஓரு கஸ்டப்பட்டுக்கொண்டு இருந்த ஒரு குடும்பத்தில் திருமணம் செய்த ஓரு வெளிநாட்டு மாப்பிளை அந்தக்குடும்பத்தின் பொருளாதாரத்தையும் உயர்ந்தி தன் மனைவியையும் நன்றாக மேலும் படிக்கவைத்து அவளுக்கு ஓரு நல்ல வேலையும் வாங்கிக்கொடுத்துள்ளார்..இன்று அந்தக்குடும்பம் சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கின்றது இத்தனைக்கு ஒரு பைசா கூட வரதட்சனையாக அவர் வாங்கவில்லை...இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு-nanparkal/நண்பர்கள்(www.nanparkal.com)
இதைவிட ஈழத்தில் போரினால் பாதிக்கபப்ட்ட பல விதைவைப்பெண்களை திருமணம் செய்து அவர்களுக்கு வாழ்க்கை கொடுக்கும் நல்ல உள்ளம் படைத்தஆண்களும் ஈழத்தில் இருக்கின்றார்கள். 

சரி பேசிச்செய்யப்படும் திருமணத்தில் தான் வரதட்சனை வாங்கப்படுகின்றது என்றால் காதல் திருமணத்தில் அதைவிட மோசம் காதலிக்கும் வரை கண்ணே மணியே முத்தே என்று கொஞ்சிவிட்டு திருமணத்தின் போது மணியும்,முத்தும் தந்தால் தான் தாலிகட்டுவேன் என்று அடம்பிடிக்கும் நபர்களும் உள்ளார்கள் இதை என்னவென்று சொல்வது.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு-nanparkal/நண்பர்கள்(www.nanparkal.com)
வரதட்சனை பற்றி நான் அடிக்கடி நான் சொல்லும் ஒருவிடயம்-
காசை வாங்கிக்கொண்டு பலருடன் போகும் பெண்களை சமூகத்தில் விலை மாது என்கின்றார்கள்.அப்ப இலட்சக்கணக்கில் காசை வாங்கிவிட்டு கலியாணம் என்ற போர்வையில் போகும் ஆண்களுக்கு என்ன பெயர்?
என்ன விலைமாது காசைவேண்டிவிட்டு பலருடன் போகின்றாள் இங்கே காசைவேண்டிவிட்டு ஒருத்தியுடன் போகின்றான் அவ்வளவுதான் வித்தியாசம்.

வரதட்சனை என்ற விடயம் சமூக அமைப்பில் இருந்து முற்றிலும் ஓழிக்கப்படவேண்டும் ஆனால் இது சாத்தியமாகுமா என்பது சந்தேகமே.

ஏதோ வரதட்சனை கொடுத்து நொந்து போன குடும்பத்தில் இருந்து நான் இதை பேசுகின்றேன் என்று நினைக்கவேண்டாம்,எனக்கு சகோதரிகள் யாரும் இல்லை..வரதட்சனை கொடுக்கவேண்டிய எந்தத்தேவையும் எனக்கு இல்லை நான் வாங்கபோவதும் இல்லை

ஆனாலும் சமூகத்தில் வரதட்சனை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள்,மற்றும் அவர்களின் தந்தை,சகோதரனின் குரலாக என் குரல் ஓலிக்கின்றது...

சிந்தியுங்கள் நண்பர்களே

இன்றைய தகவல்-ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகக்குறைந்த பந்தில் சதம் அடித்த சாதனையை 15 வருடங்களாக இன்றுவரை தன் வசம் வைத்திருக்கும் கிரிக்கெட் வீரர் பாகிஸ்தானின் அதிரடி மன்னன் ஷாகித் அப்ரடி 1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்தார் அபோது அவருக்கு வயது 16 மட்டுமே....

Post Comment

53 comments:

சி.பி.செந்தில்குமார் said...

கட்டுரையின் நோக்கம் ஓக்கே, ஆனா இப்போ எல்லாம் பெரும்பாலும் மாப்ளை வீட்டார்தான் வரதட்சனை தர்றாங்க, பொண்ணுக்கு டிமாண்ட்

சக்தி கல்வி மையம் said...

கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய விடயம்..

செங்கோவி said...

நியாயமான விஷயம் தான்..இதற்கு மாப்பிள்ளைகள் மட்டும் காரணம் அல்ல, பெரும்பாலும் பையனின் பெற்றோரே காரணம் என்பதே யதார்த்தம்..

Anonymous said...

பாஸ்... நல்ல விசயத்த கையிலெடுத்திருக்கிறீங்க. வரதட்சனை கொடுமை தமிழர்கள்டையே ஒழிக்கப்படவேண்டும்.

Anonymous said...

ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த நடைமுறை குறைந்துவருகிறது. புலம்பெயர் ஆண்களே முதலில் வரதட்சனை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள். இப்போது உள்ளூரிலும் சிலர் அதை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள்

Anonymous said...

//அதிலும் தற்போது வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு மவுசு அதிகம்//

எனக்கு தெரிந்து இப்போது வெளிநாட்டு ஆண்கள் யாரும் சீதனம் வாங்குவதில்லை.

Anonymous said...

//இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு-nanparkal/நண்பர்கள்(www.nanparkal.com)//

ஹி ஹி நல்லா யோசிக்கிறிங்கப்பு

வலையுகம் said...

என் அருமை நண்பரே
மிக நேர்த்தியான அருமையான பதிவு

வாழ்த்துக்கள் நண்பேரே

K.s.s.Rajh said...

@சி.பி.செந்தில்குமார்

////
கட்டுரையின் நோக்கம் ஓக்கே, ஆனா இப்போ எல்லாம் பெரும்பாலும் மாப்ளை வீட்டார்தான் வரதட்சனை தர்றாங்க, பொண்ணுக்கு டிமாண்ட்/////

ஹா.ஹா.ஹா.ஹா. இது வேற நடக்குதா பாஸ்

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய விடயம்.////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
நியாயமான விஷயம் தான்..இதற்கு மாப்பிள்ளைகள் மட்டும் காரணம் அல்ல, பெரும்பாலும் பையனின் பெற்றோரே காரணம் என்பதே யதார்த்தம்.////

ஆமா பாஸ் பெரும்பாலும் பையனின் பெற்றோர்கள் தான் காரணம்

K.s.s.Rajh said...

@
பெயரில்லா கூறியது...
பாஸ்... நல்ல விசயத்த கையிலெடுத்திருக்கிறீங்க. வரதட்சனை கொடுமை தமிழர்கள்டையே ஒழிக்கப்படவேண்டும்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
பெயரில்லா கூறியது...
ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த நடைமுறை குறைந்துவருகிறது. புலம்பெயர் ஆண்களே முதலில் வரதட்சனை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள். இப்போது உள்ளூரிலும் சிலர் அதை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள்////

உண்மைதான் பாஸ் புலம் பேர் ஆண்கள் பலர் வரதட்சனைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்கள் அது ஆரோக்கியமான விடயம் தான்

K.s.s.Rajh said...

@
பெயரில்லா கூறியது...
//இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து எடுத்த பதிவு-nanparkal/நண்பர்கள்(www.nanparkal.com)//

ஹி ஹி நல்லா யோசிக்கிறிங்கப்பு
////

என்ன செய்வது கஸ்டப்பட்டு எழுதினால் சிலர் அதை காப்பி செய்துவிட்டு எங்கிருந்து எடுத்தது என்று ஒரு நன்றி கூட சொல்கின்றார்கள் இல்லை அதான் நாங்களே எங்கள் தளத்தின் முகவரியைக் குறிப்பிடுகின்றோம்..

K.s.s.Rajh said...

@
பெயரில்லா கூறியது...
//அதிலும் தற்போது வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு மவுசு அதிகம்//

எனக்கு தெரிந்து இப்போது வெளிநாட்டு ஆண்கள் யாரும் சீதனம் வாங்குவதில்லை////

யாரும் வேண்டவில்லை என்று ஓட்டு மொத்தமாக சொல்லமுடியாது சிலர் வேண்டுகின்றார்கள்.
பலர் பணமாக வேண்டுவதில்லை ஊரில் உள்ள சொத்துக்களை வரதட்சனையாக வேண்டுகின்றார்கள்

குறையொன்றுமில்லை. said...

இந்த வரதட்சிணை விஷயத்தில் இப்பல்லாம் நல்ல மாற்றம் வந்திருக்கு. பாராட்டப்படவேண்டிய விஷயம்தானே.

K.s.s.Rajh said...

@ஹைதர் அலி
////என் அருமை நண்பரே
மிக நேர்த்தியான அருமையான பதிவு

வாழ்த்துக்கள் நண்பேரே////

நன்றி நண்பா

Yoga.S. said...

காலை வணக்கம்!அருமையான சாட்டையடிப் பதிவு!இளைஞர்கள் புரிந்து கொண்டாலும்,பழசுகள் விடமாட்டார்களே?

Mohamed Faaique said...

வரதற்சனை உண்மையிலேயே கொடுமைதான்...

அரபு நாடுகளில் பெண்கள் அடக்கப் படிகிறார்கள் என்று வெளியில் இருந்து சப்தமிட்டாலும், அங்கு பெண் பிள்ளைகள் கிடைப்பதை பெருமையாக கருதுகின்றனர். அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்வதன்றால் வீடு, பணம், இன்னும் பல மணப் பெண்ணுக்கு குடுத்தாக வேண்டும். சுருக்கமாக சொன்னால் திருமணம் செய்ய வேண்டுமென்றால், அவன் முதுகெலும்புள்ள ஆணாக இருக்க வேண்டும்.

சென்னை பித்தன் said...

நல்ல பகிர்வு.இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாத விஷயம்.ஆனாலும் இப்போது இப்பிரச்சினை குறைந்தி ருப்பதாகவே நான் நினைக்கிறேன். முழுவதும் நீக்கப்பட வேண்டும்தான்.

Yaathoramani.blogspot.com said...

தற்போதைய சூழலில் அவசியம் தேவையான பதிவு
அருமையாக உதாரணங்களுடன் விளக்கி இருப்பது நிச்சயம்
படிப்பவர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள் த.ம 8

saidaiazeez.blogspot.in said...

இந்த கொடுமைக்கு மிக முக்கிய பொருப்பாளர்கள் பெற்றோர் அல்ல, பெற்றவளே மற்றும் அவள் வீட்டு பெண்களே!
என் அண்ணன் எதையும் வாங்காமல் திருமணம் செய்ய நினைத்தார். ஆனால் "வீட்டின் முதல் திருமணம். நீ வயை மூடு, நான் பார்த்துக்கொள்கிறேன்" எனறு அம்மா சொன்னார்கள். பிறகு என் திருமணத்தின் போது என் அம்மாவும் அக்காவும் கூறியது "நீ கடை குட்டிடா. இதுக்கு பிறகு நாம் எந்த வெசேஷத்த செய்யபோகிறோம். நீ வயை மூடு"
எப்படியெல்லாம் வாயை மூடுறாங்க! நாமளும் பூம் பூம் மாடு போல தலையை ஆட்டிக்கிட்டு போய் கல்யாணத்தையும் முடித்துக்கொள்கிறோம்.
இந்த விழிப்புணர்வு பெண்களிடம் தேவை. வரதட்சணை இல்லாமலே நான் திருமணம் முடிப்பேன், என்று முடிவெடுத்தால்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காலம்காலமாய் நம் நாட்டில் தங்கிவிட்ட மிகப்பெரிய அரக்கன்...


தங்களின் ஆதங்கம் அர்த்தமுள்ளது...

பாலா said...

நண்பரே அடிப்படை Value Education சரியாக கற்காதவரை இந்த மாதிரி பிரச்சனைகள் குறைய வாய்ப்பில்லை. வரதட்சணை வாங்க கூடாது என்பதுதான் என் கருத்தும்.

Unknown said...

இப்போ எல்லாம் பெரும்பாலான ஆண்கள் வரதட்சணையை விரும்புவதில்லை. அப்படியில்லாத பலர் பெற்றோரைக் கைகாட்டி எஸ்ஸாகி விடுகிறார்கள்!
ஆனால், இன்னொரு விஷயமும் இருக்கு!
இப்போ நீங்க பொண்ணு பார்க்கும்போது (நீங்க ஏற்கனவே பார்த்தத எல்லாம் சொல்லல..இது திருமணத்துக்கு :-) ) வரதட்சணை வேணாம் போன்னுமட்டும் போதும்னு சொல்லிப்பாருங்க..அப்புறம் பாருங்க பாஸ் என்னாவுதுன்னு! :-)

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது வெளிநாட்டு மாப்பிளைக்கு மவுசு அதிகமா...? யோவ் எங்க ஊர்ல வெளிநாட்டு மாப்பிளை'ன்னு சொன்னாலே காத தூரம் ஓடுகிறார்கள் தலைதெறிக்க, வேண்டாமுனுட்டு...!!!

பால கணேஷ் said...

இக்காலத்தில் வரதட்சணை வாங்கும் மோகம் பெருமளவு குறைந்து விட்டது. முற்றிலும் ஒழிய வேண்டும் என்றால் அது பெண்ணைப் பெற்றவர்களின் கையில்தான் உள்ளது. என்ன ஆனாலும் சரி, வரதட்சணை தந்து பெண்ணைத் திருமணம் செய்துதர மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தால் சாத்தியம். கல்யாணம் கண்டிப்பாகச் செய்தே ஆக வேண்டுமா ராஜ்? இல்லாவிட்டால் பெண் என்ன அழுகிப் போய் விடுவாளா? பெண்ணைப் பெற்றவர்கள்தான் இதற்கு முடிவுகாண வேண்டும் என்பது என் கருத்து...

Unknown said...

சரியா சொன்னீங்க

முற்றும் அறிந்த அதிரா said...

மிக அருமையான தகவல். ஆனால் எப்பூடித்தான் கத்தினாலும்... கேட்பவர்களுக்கு மட்டுமே கேட்கும்.

நீங்கள் சொன்னது உண்மையே... காதலித்துவிட்டும் வரதட்சணை கேட்கிறார்கள் அவர்களை எல்லாம் எங்கே பிடித்துத் தள்ளிவிடுவது....

சிலர் வெளிநாட்டில் ஒன்றை இரகசியமாக வைத்துக்கொண்டு, வரதட்சணைக்காகவே ஊரில் பேசிப் பெண் எடுக்கிறார்கள்... இப்படியும் இங்கு நடந்திருக்கு.

முற்றும் அறிந்த அதிரா said...

நினைவுக்கு வரும் கவிதைகள் சில...

“மணமகளே!!!
நீ ஏன்
தலை குனிந்திருக்கிறாய்?
பணம் கொடுத்து
வாங்கியிருக்கிறாய்
மணமகனை
அவர் குனியட்டும்
நீ நிமிர்ந்திரு”

+ + + + + + + + + + + + + + + + + +

“அன்று பல லட்சங்கள் வாங்கி
மணம் முடித்தவர் ...
இன்று பல மேடைகளில்
முழங்குகிறார்...
வரதட்சனை வேண்டாம் என ஏனெனில் அவர்...
3 பெண்களின் தந்தையாம்”

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி!
ஜீ சொன்னதைப்போல் சீதனம் வேண்டாம் என்றால் பெண்னை பெற்றவர்கள் மாப்பிளைக்கு"ஏதாவது"குறை இருக்கோன்னு சந்தேகப்படுகிறார்களாமே? உண்மையா? ஹா ஹா ஹா..):):)

Anonymous said...

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த நடைமுறை குறைந்துவருகிறது...

வேகநரி said...

வரதட்சனை என்ற கொடிய விடயத்துக்கெதிராக குரல் கொடுத்த இலங்கை தமிழன் K.s.s.Rajhவுக்கு வாழ்த்துக்கள்.

Mohamed Faaique கூறியது...
அரபு நாடுகளில் பெண்கள் அடக்கப் படிகிறார்கள் என்று வெளியில் இருந்து சப்தமிட்டாலும் அங்கு பெண் பிள்ளைகள் கிடைப்பதை பெருமையாக கருதுகின்றனர்.

படு பொய்களை தாங்க முடியவில்லை. பெரியவரே!அரபு நாடுகளில் பெண்களின் மதிப்பு என்ன என்பதை உலகம் அறியும். உண்மை என்ன என்பதை உலகம் பார்த்துக் கொண்டே இருக்கிறது.

K.s.s.Rajh said...

@Lakshmi
////
Lakshmi கூறியது...
இந்த வரதட்சிணை விஷயத்தில் இப்பல்லாம் நல்ல மாற்றம் வந்திருக்கு. பாராட்டப்படவேண்டிய விஷயம்தானே////

ஆம் மேடம் நிறைய மாற்றம் வந்திருக்கு ஆனால் முழுமையாக மாறவேண்டும்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
காலை வணக்கம்!அருமையான சாட்டையடிப் பதிவு!இளைஞர்கள் புரிந்து கொண்டாலும்,பழசுகள் விடமாட்டார்களே?////

ஆம் ஜயா இதான் நிலமை

K.s.s.Rajh said...

@Mohamed Faaique

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@சென்னை பித்தன்

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@Ramani
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@சைதை அஜீஸ்
////இந்த கொடுமைக்கு மிக முக்கிய பொருப்பாளர்கள் பெற்றோர் அல்ல, பெற்றவளே மற்றும் அவள் வீட்டு பெண்களே!
என் அண்ணன் எதையும் வாங்காமல் திருமணம் செய்ய நினைத்தார். ஆனால் "வீட்டின் முதல் திருமணம். நீ வயை மூடு, நான் பார்த்துக்கொள்கிறேன்" எனறு அம்மா சொன்னார்கள். பிறகு என் திருமணத்தின் போது என் அம்மாவும் அக்காவும் கூறியது "நீ கடை குட்டிடா. இதுக்கு பிறகு நாம் எந்த வெசேஷத்த செய்யபோகிறோம். நீ வயை மூடு"
எப்படியெல்லாம் வாயை மூடுறாங்க! நாமளும் பூம் பூம் மாடு போல தலையை ஆட்டிக்கிட்டு போய் கல்யாணத்தையும் முடித்துக்கொள்கிறோம்.
இந்த விழிப்புணர்வு பெண்களிடம் தேவை. வரதட்சணை இல்லாமலே நான் திருமணம் முடிப்பேன், என்று முடிவெடுத்தால்!////

எப்படியோ வரதட்சனை முழுவதும் ஒழிக்கப்படவேண்டும் சகோ

K.s.s.Rajh said...

@கவிதை வீதி... // சௌந்தர் //

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@பாலா

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ஜீ...
////
இப்போ எல்லாம் பெரும்பாலான ஆண்கள் வரதட்சணையை விரும்புவதில்லை. அப்படியில்லாத பலர் பெற்றோரைக் கைகாட்டி எஸ்ஸாகி விடுகிறார்கள்!
ஆனால், இன்னொரு விஷயமும் இருக்கு!
இப்போ நீங்க பொண்ணு பார்க்கும்போது (நீங்க ஏற்கனவே பார்த்தத எல்லாம் சொல்லல..இது திருமணத்துக்கு :-) ) வரதட்சணை வேணாம் போன்னுமட்டும் போதும்னு சொல்லிப்பாருங்க..அப்புறம் பாருங்க பாஸ் என்னாவுதுன்னு! :-////

ஆமா பாஸ் இப்ப நிலைமை அப்படித்தான் வரதட்சனை வேணாம் என்று சொன்னால் அவனில் ஏதோ குறைபாடு இருப்பதாக நினைக்கின்றார்கள் என்ன கொடுமை சரவணன்

K.s.s.Rajh said...

@MANO நாஞ்சில் மனோ

////என்னாது வெளிநாட்டு மாப்பிளைக்கு மவுசு அதிகமா...? யோவ் எங்க ஊர்ல வெளிநாட்டு மாப்பிளை'ன்னு சொன்னாலே காத தூரம் ஓடுகிறார்கள் தலைதெறிக்க, வேண்டாமுனுட்டு...!////

இங்க மவுசு அதிகம் பாஸ்

K.s.s.Rajh said...

@கணேஷ்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@athira

////மிக அருமையான தகவல். ஆனால் எப்பூடித்தான் கத்தினாலும்... கேட்பவர்களுக்கு மட்டுமே கேட்கும்.

நீங்கள் சொன்னது உண்மையே... காதலித்துவிட்டும் வரதட்சணை கேட்கிறார்கள் அவர்களை எல்லாம் எங்கே பிடித்துத் தள்ளிவிடுவது....

சிலர் வெளிநாட்டில் ஒன்றை இரகசியமாக வைத்துக்கொண்டு, வரதட்சணைக்காகவே ஊரில் பேசிப் பெண் எடுக்கிறார்கள்... இப்படியும் இங்கு நடந்திருக்கு.////

ஆமாம் மேடம் இப்படியான விடயங்கள் முற்றிலும் சமூக அமைப்பில் இருந்து நீக்கப்படவேண்டும்

K.s.s.Rajh said...

@athira
////நினைவுக்கு வரும் கவிதைகள் சில...

“மணமகளே!!!
நீ ஏன்
தலை குனிந்திருக்கிறாய்?
பணம் கொடுத்து
வாங்கியிருக்கிறாய்
மணமகனை
அவர் குனியட்டும்
நீ நிமிர்ந்திரு”

+ + + + + + + + + + + + + + + + + +

“அன்று பல லட்சங்கள் வாங்கி
மணம் முடித்தவர் ...
இன்று பல மேடைகளில்
முழங்குகிறார்...
வரதட்சனை வேண்டாம் என ஏனெனில் அவர்...
3 பெண்களின் தந்தையாம்”////

கவிதை அருமை மேடம்
திருந்தாத ஜென்மங்கள் இதுகள் ஊருக்குத்தான் உபதேசம்

K.s.s.Rajh said...

@காட்டான்
ஹா.ஹா.ஹா.ஹா. ஆமா மாம்ஸ் நிலமை அப்படித்தான் இருக்கு

K.s.s.Rajh said...

@ரெவெரி
////இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த நடைமுறை குறைந்துவருகிறது...///

ஆமாம் குறைந்து வருகின்றது முற்றிலும் நீங்கவேண்டும்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@thequickfox

நன்றி சகோ

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
மிக நீண்ட நாளைக்குப் பின்னர் உங்கள் வலையினை இன்று எட்டிப் பார்த்தேன்.

அருமையான கட்டுரையினை, சமூகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்திருக்கும் ஒரு மனிதனின் உணர்வாகப் படைத்திருக்கிறீங்க.
வாழ்த்துக்கள்.

கோகுல் said...

நல்லதொரு பதிவு பாஸ் ,

காதல் திருமணங்களில் மட்டுமே வரதட்சனை இல்லாமல் இருப்பது சாத்தியமாகிறது இன்றைக்கு.
இப்பல்லாம் யாரும் கேட்பதில்லை என்பது வெறும் பேச்சளவில் தான் இருக்கிறது!
உங்கள் முடிவுக்கு ஒரு சல்யூட்.

Unknown said...

சமூகத்துக்கு தேவையான விடயம், இதை வாசித்து ஒருதராவது திருந்தினால்தான் நன்மை.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails